மாந்தி தோஷ பரிகார பூஜை
திருமண தடை, தொழில் தடை, வியாபார தடை,காரியதடை,மன
குழப்பம்,மாற்றி மாற்றி பேசுதல், நிலையான மன நிலை இல்லாதாதவர்,உறவுகளை வெறுப்பவர் போன்ற
தாக்கம் இந்த மாந்தி ஏற்படுத்தும்.யாருக்கும் மாந்தி தோஷம் ஏற்படுவதில்லை.முற்பிறவி
கர்மத்தால் மட்டுமே மாந்தி தோஷம் ஏற்படும்.
எதனால் மாந்தி தோஷம் ஏற்படுகிறது
?
தங்கள் முன்னோர்கள் கோவில் நிலத்தில்
வீடு, கோவில் நிலத்தை அபகரித்தவர், கோவில் பணத்தை செலவு செய்தவர்கள் போன்ற காரணங்களால்
மாந்தி தோஷம் ஏற்படும் இதனால் பிற்காலத்தில் பிறக்கும் அவர்கள் குழந்தைகளுக்கு பிறவி
ஊனமாகவோ, மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள், வறுமையில் பிறந்த குழந்தைகள், பிறக்கும் போதே
பொற்றோர்களையும் முதாதையார்களையும் இழந்து நிற்பர், பூர்வீக சொத்தால்ஒரு ரூபாய் கூட
உதவாத நிலை,உறவுகள் பகை போன்ற ஜாதகத்தில் மாந்தி நின்றவர்கள் மேற்கூறிய பலன்களை அடையாமல்
இருந்தீருக்க வாய்ப்பில்லை.
உங்கள் ஜாதகத்தில் மாந்தி அல்லது
குளிக
தோஷம் உள்ளதா?
ஜென்ம சனி , அஷ்டம சனி அல்லது அர்த்தாஷ்டம
சனி நடைபெறுகிறதா ?
மாந்தி +சனி யுடன் இணைந்தால்
ஜாதகர் உலகவியல் இன்பத்தை அனுபவிப்பார்.
ஜாதகத்தில் 11ல் மாந்தி இருந்தால்
செல்வம் புகழ் வெகுமதி வாழ்வில் உயர்வு பெருந்தன்மை சமூக அங்கீகாரம் ஆகியவற்றை அளிப்பார்.
தீமைகள்
மாந்தி+சூரியன்
தந்தைவழி/முன் ஜென்மத்தில் ஜாதகர்
அரசு அல்லது தந்தைக்கு செய்த பாவத்தின் சாபத்தை குறிக்கும்..!
இந்த இணைவு ஜாதகரின்
மாந்தி+சந்திரன
மன அழுத்தத்தையும், இனம் புரியா பயத்தையும் தரும், தாய்வழி சாபம்
இந்த இணைவு தீடீர் மன அழுத்தத்தையும், இனம் புரியா பயத்தையும்
தரும், தாய்வழி சாபம் அல்லது முன் ஜென்மத்தில் கன்னிக்கு/தாய்க்கு செய்த பாவ செயலின்
சாபம்..!
மாந்தி+செவ்வாய்
விபத்து அல்லது ரத்த காயம் ஏற்படுத்தும், மற்றவரை காயம்
செய்யவும் தயங்காத குணத்தை தரும், அதிக கோபம் அல்லது அதிக கோழைத்தனத்தை தரும்..!
மாந்தி+புதன்
முன் ஜென்மத்தில் மனநிலை பாதித்தவர்/ஆசிரியர் இவர்களுக்கு
செய்த பாவத்தின் சாபம், இதனால் புத்தி தடுமாற்றம் அதிகமிருக்கும்..!
மாந்தி+சுக்கிரன்
மனைவி/பேராசையால் செய்த தவறுக்கு கிடைத்த சாபம், இதன்
பலன் பெண்களால் மன உளைச்சல், பிரிவு, சுக கேடு, வண்டி வாகன பழுது போன்றவை ஏற்படுத்தும்..!
மாந்தி+குரு
குரு நிலையில் இருந்தவரை அவமதித்த/நிராகரித்த சாபம்,
இதனால் இந்த ஜென்மத்தில் அதிக ஆன்மீக நாட்டம் கொடுத்து ஏமாற்றம், அல்லது ஆன்மீகத்தை
வெறுக்கும் நிலையை தரும், பொதுவாகவே இவர்களுக்கு கோயிலுக்கு சென்றால் ஆகாது..!
மாந்தி+சனி
பிரேத சாபம் முன் ஜென்மத்தில் ஒரு உயிரின் வலிக்கு/இழப்புக்கு
காரணமானதால் அதன் சாபம், முன்னோர்களின் ஆசி சுத்தமாக இல்லை எனலாம், இவர்களுக்கு கீழ்நிலை
தொடர்பு அதிகம் இருக்கும், மது/மாது பழக்கம் இருக்கலாம்..!
சூரியனுடன் இணைந்தால் தகப்பனை வெறுப்பான்.
சந்திரனோடு இணைந்தால் தாயாருக்குத்
துயர் தருவார்.
செவ்வாயோடு இணைந்தால் சகோதரத்தை இழப்பான்
புதனுடன் இணைந்தால் மனநலம் குன்றும்.
குருவுடன் இணைந்தால் நன்னடத்தை குறையும்
சுக்கிரனுடன் இணைந்தால் தரம் தாழ்ந்த
மனைவியுடன் வாழ்வான்
தரம் தாழ்ந்த பெண்கள் சேர்க்கையால் தன்னை அழித்துக் கொள்வான்.
திருவாலங்காடு.மாந்தீஸ்வரர்
கோயில்
காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான்
காட்சி தந்த தலம் வடாரண்யேஸ்வரர் கோவில் நடராஜப் பெருமானின் ஐந்து சபைகளில் இரத்தின
சபையாகத் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜ பெருமான்
காட்சி தந்த தலம் திருவாலங்காடு. இத்தலத்தில் இறைவனின்
காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார்.
ஊர்த்துவ
தாணடவம்
திருவாலங்காட்டில் உள்ள நடராஜ தாண்டவம்
ஊர்த்துவ தாணடவம் என்று சொல்லப்படும்.வலக்காலை உடம்புடன் ஒட்டி உச்சங்கால் வரை தூக்கி
நின்றாடும் நாட்டியம் இதுவாகும். இத்தலத்து நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல்
தனது பாதத்தை செங்கு த்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடாமல் உடலின் முன்பக்கத்தில்
முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன் சுமார் நான்கு அடி உயரமுள்ள
இந்த திரு உருவத்தைக் காண நம் மெய் சிலிர்க்கும்
மாந்தீஸ்வரர்
ஜாதகத்தில் 9,10,11 ஆகிய இடங்களை தவிர
1,2,3,4,5,6,7,8,12 போன்ற இடங்களில் மாந்தி இருந்தால் தோஷம் ஆகும்.இந்த
கோயிலில் உள்ள மாந்தீஸ்வரருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலம், அஷ்டம சனி,
அர்த்தாஷ்டம சனி, ஜன்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். மேலும், திருமணத்
தடை நீங்கி விரைவில் திருமணமும் நடைபெறும். கடன் தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.
மாந்தீஸ்வரருக்கு
பரிகார பூஜை
இக்கோயில் சனி பகவானின் மகன் மாந்தீஸ்வரர்
இறைவனை நோக்கி தவம் புரிந்து தோஷத்திலிருந்து விடுபட்டார் ஆதலால் இக்கோயிலில் மாந்தீஸ்வரருக்கு
பரிகார பூஜை செய்தால் அனைத்து விதமான சனி தோஷங்களிலும் இருந்து விடுபடலாம் .
சனிக்கிழமை காலை, 6:30 மணி முதல்,
காலை, 10:30 மணி வரை நடைபெறும்
வாரந்தோறும் சனிக்கிழமை காலை,
6:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை நடைபெறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெறும்.சனிக்கிழமைகளில்
காலை நேரத்தில் மட்டும் நடைபெறுகிறது. சில ஆண்டுகளாக,
மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது
எப்படிப்
போவது?
சென்னை - அரக்கோணம் ரயில் பாதையில்
உள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் கோவில்
உள்ளது. ரயில் நிலையத்தில் இருந்து ஆட்டோ வசதிகள் உண்டு. திருவள்ளூரில் இருந்து அரக்கோணம்
செல்லும் பேருந்தில் சென்று திருவாலங்காடு நிறுத்தத்தில் இறங்கினால் கோவில் மிக அருகிலேயே
இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து 18 கி.மி. தொலைவிலும், அரக்கோணத்தில் இருந்து
14 கி.மி. தொலைவிலும் திருவாலங்காடு தலம் உள்ளது
ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment