Search This Blog

Thursday, March 17, 2022

விருச்சிக ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2022 -2023- Rahu Kethu Tran...



விருச்சிக ராசி  ராகு கேது பெயர்ச்சி  பலன்கள் 2022 -2023

ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர்.

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகு கேது 12-4-2022 to 30-10-2023

விருச்சிக ராசியின் குணாதிசயங்கள்

விருச்சிக ராசி நேயர்கள் என்னதான் தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய முயற்சிகளில் விட்டு கொடுக்காமல் இறுதியில் வெற்றி பெறுவார்கள்.

பண வசதியைப் பொறுத்தவரை தேவையான அளவுக்கு இருக்கும்.

ஆடம்பரமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். 

இளமை பருவத்தில் கஷ்டப்பட்டாலும் நடு வயதில் நல்லபடியாக சம்பாதித்து வயோதிக வயதில் உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு சேமித்து வைப்பார்கள்.

தேள் போன்ற குணம் கொண்டவர்கள் என்பதால், குறும்புத் தனமும், விஷமத் தனமும் அதிகமிருக்கும். 

 பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். பிறருக்கு எதையும் விட்டு கொடுக்க மாட்டார்கள்.

வாழ்க்கையின் பிற்பகுதியில் பணவரவு, சேமிப்பு போன்றவை உண்டு

விருச்சிக ராசி நேயர்கள் முன் கோபக்காரர்கள். அவசரத்தில் வார்த்தையை கொட்டி விடுவார்கள் , பிறகு வருத்த படுவார்கள்.

மனைவி / கணவனால் யோகம் பெரும் ராசி நேயர்கள் இவர்கள்.

ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11,ஆகிய இடங்களில் அமரும் போது நல்ல பலனை தரக்கூடியவை.

ராகு கேதுவுக்கு  7 பார்வை விஷேசமானது.

 இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ,சிம்மம் ,கன்னி ,விருச்சிகம் , தனுசு , கும்பம் , மீனம் ராசிகளுக்கு நல்ல யோகத்தை தரும்.

ரிஷபம், மிதுனம் , கடகம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

இது நாள் வரை , விருச்சிக ராசி நேயர்கள் அனுபவிக்காத துன்பமே இல்லை என்றே சொல்லலாம். ஏழரை சனி , ஜென்ம ராசியில் கேது , களத்திர ஸ்தானமான 7ம் இடத்தில ராகு , மற்றும் 4ம் இடத்தில் இருந்ததால் , பல்வேறு சோதனைகள் , துன்பங்கள் ,துயரங்கள்  எல்லாம் விருச்சிக ராசி நேயர்கள் அனுபவித்து வந்தனர்.

இப்பொழுது , விருச்சிக ராசிக்கு  கோச்சரா ரீதியாக 12ல் கேது , 6ல் ராகு, 5ல் குரு , 3ல் சனி ஏப்ரல் மாதத்தில் சஞ்சரிக்க இருப்பதால் , மிக அற்புதான பலன்கள் விருச்சிக ராசி நேயர்களுக்கு நடை பெற இருக்கிறது. அநேக விருச்சிக ராசி நேயர்கள் பல கோடிகளை குவிக்க போகும் பொன்னான நேரம் இது.

மனதில்  தெம்பும் தைரியமும் வந்து சேரும் . இது நாள் தடை பெட்ரா  பணப்புழக்கம்  தற்சமயம் தாராள பணவரவு  ஏற்பாடாயிருக்கிறது.  ராகு கேது பெயர்ச்சி 2022 -23  விருச்சிக ராசி நேயர்களுக்கு மிகப்பெரிய வெற்றியை, பண வரவை  தரப்போகிறது.

இனி பிரச்சினைகள் தீரப்போகிறது.

திருமணம் கை கூடி வரும்.

நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைப்படும்.

உடலில் இருந்து வந்த சோம்பலும் , மனச்சோர்வும் நீங்கும்.

 சித்தர் சமாதிகளின் தரிசனம் உண்டாகும். தெய்வீக கனவுகள் வரும்



12ல் கேது என்ன பலன்களை தருவார்

ஒருவருக்கு வேலை கிடைப்பது, வேலை பறிபோவது, வாழ்க்கையைத் தலைகீழாக்கும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்கள், போன்றவற்றைக் கேதுதான் தருவார்.

சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் போன்றவற்றில் அமர்ந்தோ 8, 12 இடங்களுடன் தொடர்பு கொண்டோ இருக்கும் கேது ஒருவரை வெளிநாட்டில் நிரந்தரமாகக் குடியேற வைப்பா

கோச்சாரத்தில் 12ல் உள்ள கேது பகவான் தரும் பலன்கள்

ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். பிரயாணங்களின் மீது விருப்பம் கொண்டவர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு இருக்கும். சிலருக்கு கண்களில் பாதிப்பு உண்டாகும். மனதில் எப்போதும் துன்பங்களை கொண்டவர்கள். அலைபாயும் மனதை உடையவர்கள். மன அமைதியின்றி இருக்கக்கூடியவர்கள். வெளிநாடுகளில் வசிக்கக்கூடியவர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயமின்மை ஏற்படும். அனைத்து மக்களுடனும் பழகக்கூடியவர்கள்.

ராகுவின் நட்சத்திரம்

திருவாதிரை , ஸ்வாதி , சதயம் ஆகியவை ராகுவின் நட்சத்திரங்கள். சிவபெருமானுடைய ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை. நரசிம்மர் ஜென்ம நட்சத்திரம் ஸ்வாதி , வருணன் நட்சத்திரம் சதயம். ராகுவின் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆரோக்யமாக இருப்பார்கள். பலசாலிகள்

கோச்சாரத்தில் விருச்சிக ராசிக்கு 6ல் ராகு

ஒருவருடைய ஜாதகத்தில் ஆறாம் வீடு என்பது, கடன், வியாதி, உணவு பழக்கவழக்கம் வேலை  தாய்மாமனை குறிப்பது ஆறாம் வீடு. கோச்சாரத்தில்  ராகு 3, 6 மற்றும் 11 இந்த இடத்தில் இருந்தால் நன்மையை


தருவார்.

உங்கள்  எதிரிகள்  கை ஓங்கும். ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு நீங்கள் வெற்றியடைவீர்கள். .  நீங்கள் நினைத்ததை நிறைவேற்றி முடித்த பின்புதான், அடுத்த வேலைக்கு செல்வீர்கள்.

ஆறில் ராகு கோச்சாரதில் இருப்பதால் , பலவிதமான உடல் உபாதைகள் தொல்லை தரக்கூடும். வாயு தொல்லையால் கை கால் பிடிப்பு, தசை வலிகள் உண்டாகும்.இந்த ஜாதகருக்கு யோக தசை நடப்பில் இருந்தால் கெடுதல் குறையும். குறுக்கு வழியில் பணம் தேடி வரும். . தசை கெட்டு இருந்தால் ஜாதகர் படும் வேதனையை அளவிட முடியாது.

 சொந்த தொழில் மிகுந்த லாபத்தை கொடுக்கும் . உங்கள் தொழில்  பெரிய முன்னேற்றத்தை அடையும். மனைவியால் அதிகமான ஆதாயம் உங்களுக்கு கிடைத்திருக்கும். உங்கள் நண்பர்களினால் அதிக நன்மையே அடைவீர்கள்

6ல் ராகுவினால் ஏற்படும் பிரச்சனைகள்

பெண்களால் பிரச்சனைகளில் மாட்டி கொள்ளும் நிலை ஏற்படும். மனநல பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. உங்களுக்கு செரிமான பிரச்சனை கண்டிப்பாக இருக்கும். சிலருக்கு கடன் தொல்லை இருக்கும். எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அதில் சிக்கிக் கொள்ள மாட்டீர்கள். அதிலிருந்து தப்பிப்பதற்கான மார்க்கம் உங்களுக்கு தெரிந்து விடும்.உங்கள் ஜாதகத்தில் 6ல் உள்ள ராகு அனைத்திற்கும் தீர்வு கொடுப்பார்.

 


3ல் சனி

27-12-2023 சனி பெயர்ச்சி நடைபெறும்  .

ராசிக்கு 3, ஆம் வீடு சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை அளிப்பார்.


குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்


செய்யும் தொழில் வளர்ச்சியடையும். புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் கிடைக்கும். சனியால் கொடுக்கும் பதவி, சொத்துக்களை யாராலும் அசைக்க முடியாது.

 திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும். கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. சனி கொடுப்பதை பத்திரமாக பாதுகாத்து தான தர்மங்கள் செய்யுங்கள்.

கொடுத்த கடன்கள் வசூலாகும். பயணங்கள் வெற்றியை கொடுக்கும். மன நிம்மதி கொடுக்கும். உடல் நலத்தினால் கஷ்டப்பட்டவர்களுக்கு பாதிப்புகள் குறையும். இதுநாள் வரை நஷ்டங்களை ஏற்படுத்திய சனி இனி லாபங்களைத் தருவார்.
9-ம் இடத்தை
9-ம் இடத்தை, பாக்கிய ஸ்தானத்தைப் பார்க்கும்போது, வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.
திருமணம் கைகூடிவரும்.

தெய்வ அனுகூலம் கிட்டும். இதுவரை தடைபட்ட காரியங்கள் கைகூடும். வெற்றி தேடி வரும். வெளியூர் பயணம் அனுகூலம் ஆதாயம் தரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.

பிரமோஷன் வரவில்லை என்று ஏங்கியவர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்பு நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள்.



குரு 11ம் இடத்தை பார்ப்பதால்

 எதிர்பாராத பொருள்வரவு போன்ற சுப பலன்கள் ஏற்படும்.

பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடக்கூடுதல், புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும்

எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி , தைரியம் , திடீர் பண வரவு உண்டாகும்.

 வெளிநாடு சென்று உத்தியோகம் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

குருவருளால் குழந்தை பாக்கியம் கிட்டும்.

பூர்வீகச் சொத்து வகையில் இருந்துவந்த சிக்கல்கள் நீங்கி, அந்தச் சொத்து கைக்கு வரும்.

குரு ராசியை பார்ப்பதால்

உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

 பண வரவு அதிகரிக்கும். 

பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

பிரச்சனையில்லாத வாழ்வு மலரும்

வாழ்க்கை சுபீட்சமாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.

5-ல் குரு வரும் போது குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.

குல தெய்வ, இஷ்ட தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும்.

 பூர்வ புண்ணிய பலன் கிடைக்கும்.

கவுரவ பதவிகள் தேடி வரும்.

பூர்வீகம் தொடர்பான சர்ச்சைகள் முடிவுக்கு வரும்.

குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும்.

மகா பத்ம சர்ப்ப தோஷம்

ராகு 6லும் கேது 12ல் இருக்கப் பெற்றால் மகா பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படலாம். இதனால் அமைதியற்ற நிலை இருக்கும். பல இடையூறுகள் ஏற்படக் கூடிய சூழல் இருக்கும். 6ம் இடத்தில் ஏதேனும் ஒரு கோள் இருப்பின் அதைப் பொறுத்து அவருக்கு உடல் நலம் மேம்படுவதும், எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடும் அமைப்பு இருக்கும்.

பரிஹாரம்

நெல்லை மாவட்டத்தில் உள்ளது சங்கரநாராயணர் ஆலயத்தில் கோமதியம்மன் சந்நிதியின் புற்று மண் தீரா நோய் தீர்க்கும் மருந்தாக வழிபடப்படுகிறது.

 நாகர்கோவில் நாகராஜா கோவில் சர்ப்ப தோஷ பரிகார தலமாக விளங்குகிறது. ஆவணி ஞாயிறு நாளில் இங்கு சென்று வழிபடலாம்.

வாலாஜா பேட்டை தன்வந்திரி பீடத்தில் ராகு கேது ஒரே உருவத்தில் காட்சி தருகிறார். கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் தன்வந்திரி பீடத்தில் அஷ்ட கால பைரவரை வணங்குவதுடன் குலதெய்வ வழிபாட்டை மறக்காமல் செய்ய வேண்டும்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க

ஜாமக்கோள் ஆருடம் மூலம் பிரசன்னம் பார்க்க

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295 


No comments:

Post a Comment