Search This Blog

Sunday, September 25, 2022

மாளவ்ய மற்றும் நீச்ச பங்க ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட காற்று வீசும் நடிகர் அஜித் குமார் ஜாதகம்

 மாளவ்ய மற்றும் நீச்ச பங்க ராஜ யோகத்தால் அதிர்ஷ்ட காற்று வீசும் நடிகர் அஜித் குமார் ஜாதகம்


நடிகர் அஜித் குமார் ஜாதககடக லக்கினமா அல்லது சிம்ம லக்கினமா?

நடிகர் அஜித் குமார் ஜாதகம் இங்கு தரப்பட்டுள்ளது. கடக லக்கினம் மற்றும் கடக ராசி. இவர் சிம்ம லக்கினம் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் , கடக லக்கினமே பலன் சொல்வதற்கு சரியாக வருகிறது .

சாமர யோகம்

லக்கினாதிபதி சந்திரன் லக்கனத்தில் ஆட்சி . சந்திரன் வலுப்பெற்றதால் , மனோதைரியம் , தாயின் ஆசீர்வாதம் ஜாதகருக்கு நிறையவே உண்டு. லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்தில் ஆட்சி பெற்றுள்ளதால் சாமர யோகம். அதாவது மன்னரை போல வாழும் யோகம் அமைந்துள்ளது.

ருசக யோகம்

7ம் இடத்தில 5 மற்றும் 10ம் அதிபதியான செவ்வாய் உச்சம் . உயர்தரமான ரூசக யோகம் அமையப்பெற்றுள்ளது. மேலும் 7ம் இடத்தில செவ்வாய் உச்சம் அடையப்பெற்றதால் மனைவியால் யோகம்.

நீசபங்க ராஜ யோகம்

புதன் நீசபங்க ராஜ யோகம் அடைந்து காணப்படுகிறார். 1992இல் புதன் திசை சுக்ரன் புத்தி சினிமாவிற்கு அவரை அறிமுகப்படுத்தியது. நீசபங்க ராஜ யோகம் பெட்ர புதன் தசையில் , கலைக்கு காரகரான சுக்கிரனின் புக்தியில் இவரின் கலைத்துறை வாழ்க்கை ஆரம்பித்தது.

மாளவ்ய யோகம்

சுக்கிரன் 9 ல் உச்சம் பெற்றதால் மாளவ்ய யோகம். சினிமா துறையில் பெயர் புகழ் , காசு சேர சுக்கிரன் பகவான் ஜாதகத்தில் வலு பெற வேண்டும். செல்வி ஜெயலலிதா ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் . தற்சமயம் சுக்கிர தசை நடப்பதால் பெயர் , புகழ் ,

10ல சூரியன் உச்சம் மற்றும் திக் பலம்

10ல சூரியன் உச்சம் மற்றும் திக் பலம் , தொழிலில் சாதனை , திரைத்துறையில் இன்னும் சாதிக்கூடிய ஆற்றல் ஆகியவற்றை ஏற்படுத்தும் ஜீவனஸ்தானமான 10இடத்தில சூரியன் உச்சம் மற்றும் திக் பலம் பெற்றதால் பெயர் புகழ் , தொழிலில் சாதனை புரிய முடிகிறது.

அரசியலில் நுழைவாரா?

2030சூரியன் திசை ஆரம்பம் காலம் இவருக்கு பிரபல யோகத்தை தரும். இவர் அரசியலில் நுழைவாரா என்ற கேள்விக்கு இல்லை என்று தான் பதில் .

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

May be an image of one or more people and text that says 'புதன் தூரியன் சுக்ரன் சனி மா சந்திரன் அஜித்குமார் கேது 01.05.1971 லக் பூசம் செவ் ராகு குரு (வ)'

No comments:

Post a Comment