Search This Blog

Sunday, September 25, 2022

நடிகை நயன்தாரா ஜாதகம் கேந்திர ஆதிபத்திய தோஷம் - என்ன பலன்களை தரும் ?


 
நடிகை நயன்தாரா ஜாதகம் கேந்திர ஆதிபத்திய தோஷம் - என்ன பலன்களை தரும் ?

செவ்வாய் சனி உச்சம் -உயர் தர தன யோகம்

நடிகை நயன்தாரா ஜாதகத்தில் 9ம் அதிபதி சனி 5ல் உச்சம் 11ம் அதிபதி செவ்வாய் 8ல் உச்சம். உயர் தர தன யோகம். இவர் தன்னுடைய பெற்றோர்களை பார்க்க கேரளா செல்லும் பொழுது , தனி விமானத்தில் செல்வதை வழக்கமாக கொண்டவர். மேலும் , சினிமா வட்டாரத்தில் ஒரு நம்பிக்கை - நயன்தாராவை வைத்து படம் எடுத்தால் நல்ல காசு கொட்டும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. இவையெல்லாம் இவர் ஜாதகத்தில் காண்டப்படும் தனயோகத்தால் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நீச்ச பங்க ராஜ யோகம்.

3ம் அதிபதி சனி 5ல் நீச்ச பங்க ராஜ யோகம். நீசம் பெற்ற கிரகம் நீச பங்கம் பெறும் போது மிகவும் வலுவான நிலையை அடைந்து அபரிமிதமான பலனைத் தருகிறது.மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஐப்பசி மாதம் சதயம் நட்சத்திரத்தில் சூரியன் நீசமான நிலையில் பிறந்தவர். தமிழ் ,தெலுங்கு , மலையாள சினிமா உலகில் இவர் கொடி கட்டி பறக்க நீச்ச பங்க ராஜ யோகம் உதவியது,

புனர்பூ தோஷம்

நயன்தாரா ஜாதகத்தில் சனி 7ம் பார்வையாக சந்திரனை பார்வை யிடுவது புனர் பூ தோஷத்தை ஏற்ப டுத்தி உள்ளது.இந்திரா காந்தி ஜாதகத்தில் புனர்பூ தோஷம் ஜாத கத்தில் சனியும், சந்திரனும் ஒன்றா க சேர்ந்து இருந்தால் அல்லது சனியின் பார்வையில் சந்திரன் இருப்பது அல்லது இருவரும் ஒரு அதிபதி நட்சத்திரத்தில் பயணி த்தால் அந்த ஜாதகம் புனர்பூ தோஷ ஜாதகம் ஆகும் புனர்பூ தோஷம் இருந்தால் கணவன் மற்றும் மனைவி இடயே கருது வேறுபாடு , பிரிவினை போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

7ம் இடத்தில் குரு ஆட்சி - கேந்திராதிபத்ய தோஷம்

ஒரு சுப கிரகம் கேந்திரத்திற்கு அதிபதி ஆகி கேந்திர வீட்டிலேயே ஆட்சி உச்சம் மூல திரிகோணம் பெறுவது கேந்திர ஆதிபத்திய தோஷம். நயன் தாரா ஜாதகத்தில் 7ம் அதிபதி யான குரு 7ம் வீட்டிலேயே ஆட்சி பெறுவது

கடுமையான கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். இந்த தோஷம் இவர்களின் திருமண வாழ்வை மிகவும் பாதிக்கும். இவர்கள் தோஷ சாம்யம் பார்த்து திருமணம் செய்து இருந்தால் பிரச்னை இருக்காது.

செல்வி ஜெயலலிதா ஜாதகத்தில் கேந்திராதிபத்ய தோஷம்

செல்வி ஜெயலலிதாவுக்கும் மிதுன லக்கினம் , 7ல் குரு ஆட்சி . கேந்திர ஆதிபத்திய தோஷம் . ஆகவே இவருக்கு திருமண வாழ்வு காணல் நீராகவே அமைந்தது. நயன்தா ராவின் திருமண வாழ்வு நல்லா இருக்க வேண்டும் என்பதுதான் என் பிரார்த்தனை .

நயன்தாராவின் ஜாதகத்தில் மற்ற சிறப்பு அம்சங்கள்

1. லக்கினத்தை குரு பார்ப்பதால் அழகியே தோற்றம் . சினிமாவில் கவர்ச்சி மற்றும் ஜனவசிகரம்.

2. 7ம் அதிபதி சனி 5ல் உச்சம் - திருமண வாழ்வுவில் சங்கடங்கள் வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை - தஞ்சாவூர் பொம்மை போன்று

3. நவாம்சத்தில் சூரியன் , செவ்வாய் , சுக்கிரன் , புதன் உச்சம் - 4 கிரஹங்கள் நவாம்சத்தில் உச்சம் பெற்றதால் , மஹாராணி போல் வாழ்கை .

4. திரைப்பட துறையில் வெற்றி பெற சுக்கிரன் ஜாதகத்தில் வலுப்பெற வேண்டும். ஆனால் நயன்தாரா ஜாதகத்தில் 5 ம் அதிபதியான சுக்கிரன் 6ல் மறைந்து காணப்பட்டாலும் , திரை துறையில் வெற்றி காணமுடிந்தது .

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க , ஜாமக்கோள் பிரசன்னம் மூலமாக உங்கள் அணைத்து பிரச்சனைக ளுக்கு தீர்வு காண.ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment