நடிகர் விஜய் ஜாதகத்தில் சூரியன் சனி சேர்க்கை - தந்தை மகன் உறவில் விரிசலுக்கு காரணமா ?
எஸ். ஏ. சந்திரசேகர்
நடிகர் விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தும் மேலும் சுமார் 4, 5 படங்களில் வரிசையாக அவரை வைத்து நாயகனாக இயக்கியும் அவருக்கு சரியான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தார் அவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் எப்படி இயக்குநர் சிகரம் பாலசந்தர் முக்கிய நடிகர்களான கமல்ஹாசனுக்கும் மற்றும் ரஜினிகாந்திற் கும் சரியான அடித்தளத்தை ஏற்படுத்தி தந்தாரோ அது போல இவரது தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் விஜய்யை வைத்து நாயகனாக இயக்கியும் மற்றும் அதற்கு அடுத்தார் போல சிறந்த கதையம்சத்தை மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை தேர்தெடுக்கும் அடிப்படை பாடத்தை கற்றுத் தந்தும் வளர்த்தார்,
ஜோதிடத்தில் நவகிரகங்களுக் கிடையேயான உறவு மிக முக்கிய மானதாகப் பார்க்கப்படுகிறது. அதில் சூரியன் தந்தை என்றும், மகன் சனி என்றும் கூறப்படுகிறது. இந்த இரு கிரகங்களும் எதிரி கிரகங்களாக உள்ளன. அதாவது சனி பகவான் பிறந்ததும் அவரை சூரியன் ஒதுக்கியதாகப் புராண கதைகள் கூறுகின்றன.
சூரியன் சனி சேர்க்கை
சூரியன் சனி சேர்க்கை அல்லது பார்வை தந்தை மகன் உறவு பாதிக்க படும் என்கிறது ஜோதிட நூல்கள்.
தந்தை - மகன் உறவில் விரிசல்
சூரியன் - சனி இருவரும் எதிர் எதிர் கிரகங்கள் என்பதால் அவர்கள் இணைந்தால், அப்போது குடும்பத்தில் தந்தை - மகன் இடையேயான உறவில் பிரச்னை ஏற்படும். இருவரின் மனதளவில், உறவு சீராக இருக்காது.
பிரிவு
சூரியன் சனி சேர்க்கை பெட்ரா ஜாதகத்தினர் தந்தை - மகன் உறவில் பிரச்னையால் பிரிந்து இருப்பார்கள். அல்லது தந்தை - மகன் உறவு நன்றாக புரிந்தால் இருந்தாலும் அவர்கள் ஒன்றாக சேர்ந்து இல்லாமல் வெவ்வேறு இடங்களில் இருப்பார்கள்.
மகனின் ஆதிக்கம்
சனி ஆதிக்கம் பெற்ற மகரம், கும்பம் அல்லது சனியின் நட்பு கிரகமான சுக்கிரனின் துலாம் ராசியில் இருந்த அமைப்பு இருப்பின் மகனின் கை ஓங்கி இருக்கும்.
எப்படிப்பட்ட பிரச்னை ஏற்படும் ?
சூரியன் - சனி இணைவு எந்த பாவத்தில் இருக்கிறதோ அதைப் பொறுத்து பலன் ஏற்படும்.
4ம் இடத்தில்
அதாவது 4ம் இடத்தில் இணைந்தி ருந்தால் சொத்து சார்ந்த பிரச்னை கள் ஏற்படும்.
6ம் இடத்தில்
6ம் இடத்தில் சேர்க்கை இருந்தால் இருவரும் எதிரி போல இருப்பர்.
8ம் இடத்தில்
8ம் இடத்தில் இருந்தால் இருவரிடையே பிரிவு அதிகரித்து வழக்கு போடும் அளவிற்கு பிரச்னை தீவிரமாகும்.
நடிகர் விஜய் மற்றும் அவருடைய தந்தைக்கும் உறவில் விரிசல் விஜய் ஜாதகத்தில் உள்ள சூரியன் சனி சேர்க்கைதான் காரணம் .
தன் 80வது பிறந்த நாளை சமீபத்தி ல் கொண்டாடிய விஜய்யின் தந்தைக்கு (சந்திர சேகர்) விஜய் வாழ்த்து சொல்லவில்லை என்ற புகார் பரவியது அதற்கு விஜய்யின் ஜாதகத்தில் உள்ள சூரியன் +சனி இணைவு தான் காரணமா? தந்தை மகன் உறவை பாதிப்பதில் இந்த கிரக இணைவு பெரும் பங்காற்று கிறதா?
அசுர வளர்ச்சி
விஜயின் அப்பா சந்திர சேகர் இல்லை என்றால் என்று விஜய் இந்த அசுர வளர்ச்சி பெற்றுஇருக்க முடியாது .
அனால் சந்திர் சேகர் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என்று வற்புறுத்தியதால் விஜய்க்கும் அவரது தந்தைக்கும் உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
10ம் இடத்தில
விஜய் ஜாதகத்தில் 10ம் இடத்தில சூரியன் சனி சேர்க்கை ஏற்பட்டதால் , தொழில் ரீதியாக
தந்தைக்கும் மகனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டமைக்கு முக்கிய காரணம் என்று அறிந்து கொள்ளலாம்.
தந்தை மகன் உறவு மேம்பட செல்ல வேண்டிய கோயில் சுவாமி மலை
தமிழ் வருடங்கள் அறுபதையும் படிகளாகக் கொண்ட படைவீடு ‘சுவாமிமலை.’ தந்தை - மகன் பிரச்சினைக்குத் தீர்வு காணத் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment