Search This Blog

Monday, January 23, 2023

சனி பகவான் அஸ்தங்க பலன்கள் -41 நாட்கள் சனி பகவான் அஸ்தங்கம் அடையும் நிலை 24-01-2023 முதல் 5-3-2023 எந்த ராசி / லக்கினக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் ?

 சனி பகவான் அஸ்தங்க பலன்கள் -41 நாட்கள் சனி பகவான் அஸ்தங்கம் அடையும் நிலை 24-01-2023 முதல் 5-3-2023 எந்த ராசி / லக்கினக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் ?

அஸ்தங்கம் என்றால் என்ன ?

அஸ்தங்க பாகை

சூரியனை நெருங்கும் ஒவ்வொரு கிரகத்திற்கும் தனி தனியே அஸ்தங்க தூரம் பாகை அளவில் இருந்தாலும் , சூரியனோடு 5° குள் கிரகம் பாதிக்கவே செய்யும். சூரியனோடு 3° பாகைகுள் நெருங்கும் கிரகம் கடுமையாக வலுஇழந்து போகும்.

சூரியனோடு 10° மேல் விலகி இருந்தால் கூட அந்த அஸ்தங்க நிலை பெரிதாக பாதிப்பது இல்லை. 5° குள் இணையும் கிரகமும் அதனினும் கூடுதலாக 1° பாகையில் சூரியனோடு இணையும் கிரகமும் கடுமையாக பாதிக்கவே செய்கிறது.

அஸ்தங்கம் பெற்ற கிரகம் சூரியனோடு எவ்வளவு பாகை நெருங்கி உள்ளதோ , அதற்கு ஏற்ப அந்த கிரக காரகமும் ஆதிபத்திய மும் பாதிக்க செய்யும்.

செவ்வாய் குரு புதன் சுக்ரன் சனி

சூரியனுக்கு முன் பின் ஆக நெருங் கும் , செவ்வாய் குரு புதன் சுக்ரன் சனி ஆகிய 5 கிரகமும் அஸ்தங்க தோசத்தை பெறுவார்கள். தோசம் என்றால் குறை என்று பொருள்.

24-01-2023 முதல் 5-3-2023

24-01-2023 முதல் 5-3-2023 வரை மொத்தம் 41 நாட்கள் சனி பகவா ன் சூரியனுடன் நெருங்கி இருந்து அஸ்தங்க நிலை அடைகிறார்.

இந்த தை மாதம் 10ம் தேதி சனி பகவான் மேற்கில் அஸ்தங்கம் அடைகிறார் மாசி மாதம் 21 ம் தேதி கிழக்கில் அஸ்தங்கம் நிவர்த்தி அடைகிறார்.

எல்லா ராசி காரர்கள் இந்த கால கட்டத்தில் சனி பிரீதி செய்து கொள்வது நலம்.

சனி அஸ்தங்கம் அடைந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார்?

சனி பகவான் அஸ்தங்கம் உடல் நிலை பாதிப்புகளை தருவார். ஜாதகர் சுறு சுறுப்பாக இருக்க மாட்டார்

சனி சூரியனுடன் சேர்ந்து அஸ்தங்கம் அடையும் போது

1.அதீத சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்.,

2,எவருடனும் அவ்வளவு சீக்கிரமாக நெருங்கி பழகாமல், எச்சரிக்கை யுடன் இருக்க வேண்டும்,

3.உடல் வலியினால் அவதிப்பட நேரிடும்

4.தொடைக்கு கீழே உள்ள உடல் உறுப்பில் பலம் குன்றி இருக்க நேரிடும் மற்றும் பல.,

ஒவ்வரு லக்கினத்திற்கு / ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் ?

1. மேஷ லக்கினத்திற்கு/ ராசிக்கு 10,11ம் அதிபதி ஆவதால் தொழில்/ வேலை மூலமாக வருமானம் உண்டு .தொழில் , மற்றும் வேலை யில் வரும் லாபம் பாதிப்பு ஒரு சில மேஷ லக்கின நேயகர்களுக்கு இல்லை பெற்ற சனி பகவானால் ஏற்படலாம்.

2. ரிஷப லக்கினத்திற்கு / ராசிக்கு 9 மற்றும் 10ம் அதிபதி ஆகி தர்ம கர்மாதியாதி ஆகிறார். தர்மகர்மா திபதி என்பதால்  அஸ்தங் கம் பெற்ற சனி பகவான் அதிக தீய பலன்களை தரமாட் டார்.ஒரு சில ரிஷப லக்கின நேயகர்களுக்கு தொழில் மற்றும் வேலையில் அஸ்தங்கம் பெற்ற சனி பகவானால் சில பாபதிப்புகளை தரக்கூடும்

3. மிதுன லக்கினத்திற்கு / ராசிக்கு 9ம் அதிபதி என்பதால் சனி பகவான் யோகத்தை கொடுப்பர் . ஒரு சில லக்கின நேயகர்களுக்கு 8 மற்றும் 9 ம் அதிபதி ஆகி ஒரு சில மிதுன லக்கின / ராசி நேயர்களுக்கு  அஸ்தங் கம்பெற்ற சனி பகவான் உடல் நல பாதிப்பை தருவார்

4.கடக லக்கினத்திற்கு / ராசிக்கு 7 மற்றும் 8 ம் அதிபதி ஆகி அஸ்தங்கம் பெற்ற சனி பகவான் கணவன் மனைவி கருத்து வேறுபாடு , மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்த கூடும்.

5. சிம்ம லக்கினத்திற்கு / ராசிக்கு 6 மற்றும் 7 ம் அதிபதி ஆகி அஸ்தங்கம் பெற்ற சனி பகவான் கணவன் மனைவி கருத்து வேறுபாடு , மற்றும் கடன் தொல்லை எதிரிகளால் தொல்லை ஆகியவற்றை ஏற்படுத்த கூடும்.

6. கன்யா லக்கினத்திற்கு / ராசிக்கு 5 மற்றும் 6 ம் அதிபதி ஆகி  அஸ்தங் கம்பெற்ற சனி பகவான் குழந்தை களை பற்றிய கவலை , உடல் உபாதைகள் , கடன் தொல்லை ஆகியவற்றை ஏற்படுத்த கூடும். 5ம் அதிபதி என்பதால் கெடு பலன்கள் குறைவாகவே இருக்கும்

7. துலா லக்கினத்திற்கு / ராசிக்கு 4 மற்றும் 5ம் அதிபதி ஆகி ,அதி யோக காரகர் சனி பகவான் ஆகின் றார்., அவர் 41 நாட்களுக்கு அஸ்தங்கம்  பெறுவது நன்மையான பலன்களை தருவார்.

8. விருச்சிக லக்கினத்திற்கு / ராசிக்கு 3 மற்றும் 4ம் அதிபதி ஆகி அஸ்தங்கம் பெற்ற சனி பகவான் சோம்பறித்தனம் , மனோ தைரியம் இல்லாத நிலயை தருவார். மேலும் வாகனங்கள் ஓட்டும் பொழுது , மிகவும் கவனம் தேவை. ஒரு சில நேயர்களுக்கு சொத்து , வாஹனம் , தாயாரின் உடல் நிலை மேம்படும் நிலை ஏற்படும் .

9.தனுசு லக்கினத்திற்கு / ராசிக்கு 2 மற்றும் 3ம் அதிபதி ஆகி  அஸ்தங்க ம்பெற்ற சனி பகவான் 41 நாட்களுக்கு குடும்பத்தில் குழப்பம் , பண வரவுக்கு தடை , சோம்பறி த்தனம் , மனோ தைரியம் இல்லாத நிலயை தருவார்.

10. மகர லக்கணத்திற்கு / ராசிக்கு ராசி மற்றும் 2ம் அதிபதி அஸ்தங்கம்ஆகி  பெற்ற சனி பகவான் 41 நாட்களுக்கு ராசி அதிபதி என்பதால் அதிக தீய பலன்கள் ஏற்படுத்தமாட்டார். 2ம் அதிபதி என்பதால் தாராளமான தன வரவு , கடன் அடைபடக்கூடிய நிலை , கொடுத்த வாக்கை காப்பாற்றும் நிலையை ஏற்படுத்தி தருவார்.

11. கும்ப லக்கணத்திற்கு / ராசிக்கு ராசி மற்றும் 2ம் அதிபதி அஸ்தங்கம் ஆகி  பெற்ற சனி பகவான் 41 நாட்களுக்கு ராசி அதிபதி என்பதால் அதிக தீய பலன்கள் ஏற்படுத்தமாட்டார்.

12. மீன லக்கணத்திற்கு / ராசிக்கு 11 மற்றும் 12ம் அதிபதி ஆகி  அஸ்தங் கம்பெற்ற சனி பகவான் 41 நாட்களு க்கு நல்ல வருமானம் , தொழில் மேன் மை , பதவி உயர்வு ஆகியவற்றை தருவார். சொத்து , முதலீடு ,, வாஹனம் போன்றவற்றில் முதலீடு செய்து வந்தால் விரயத்தை தவிர்க்கலாம்.

விதி விலக்குகள்

1. ஜனன ஜாதகத்தில் சனி பகவான் வலு பெற்று காணப்பட்டால் அதிக தீமைகள் ஏற்படாது.

2. ஜாதகத்தில் யோகமான தசை அல்லது புத்தி அல்லது அந்திரம் நடை பெற்றால் தீமை இல்லை.

3. லக்கினாதிபதி சூரியனாக இருந்தால் , அஸ்தங்கம் தீய பலன்களை தருவதில்லை.

4. சூரியனோ அல்லது சந்திரனோ ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் அஸ்தங்கம் கெடுபலன்கள் தருவதில்லை.

5,அஸ்தங்கம் பெற்ற கிரஹங்கள் கேந்த்ரா திரிகோணாதிபதி இருந்தால் , அஸ்தங்கத்தால் கெடு பலன்கள் ஏற்படுவதில்லை

பரிஹாரம்

· குல தெய்வ வழிபாடு

· சனி பகவான் வழிபாடு3தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும்.

* சனிக்கிழமை தோறும் பகவானுக்கு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும்

* கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம்.

* வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும்.

* சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

* சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும்.

* விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

* அனுமார் வழிபாடு சனி பகவானின் தொல்லைகளை குறைக்கும்.

* ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கி வரலாம்.

* அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

* ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம்.

* சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது.

* அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.

* சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம்.

* உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள்.

* வன்னிமரத்தை சுற்றி வந்து வணங்க வேண்டும். இதனால் சனிபகவானின் கொடுமையான பாதிப்புகள் விலகி விடும்.

* பிரதோச காலத்தில் சிவபெருமானுக்கு வில்வ இலை கொடுத்து வணங்க வேண்டும்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295



No comments:

Post a Comment