Search This Blog

Tuesday, January 24, 2023

சதூஸ் சாகர யோகம் என்றால் என்ன ?

 சதூஸ் சாகர யோகம் என்றால் என்ன ?

சதுஸ் சாகர யோகம்

நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் அமையப்பெற்றால் அத்தகைய அமைப்பு சதுஸ் சாகர யோகம் என்று அழைக்கப் படுகி றது. வேத ஜோதிட சாஸ்திரத்தி ன்படி, ராசி அல்லது ஜனன ஜாதகத்தில் 1, 4, 7, 10 ஆகிய 4 கேந்திர வீடுகளிலும் கிரகங்க ள் அமைந்தால், சதுஸ்சாகர யோகம் உருவாகும்.

மன்னனுக்கு நிகரான வாழ்க்கை

இதனால் , ஜாதகருக்கு சமுதாய த்தில் நன் மதிப்பு , ஒரு மன்னனு க்கு நிகரான வாழ்க்கை அமையும். நீண்ட ஆயுள் நல்ல குழந்தைகள் , ஆரோக்கி யமான உடல் வாகு 
வக்கிரம் மற்றும் அஸ்தங்கம்
சதூஸ் சாகர யோகம் அமைந்து ள்ள மற்ற கிரகத்தின் வக்கிரம் மற்றும் அஸ்தங்கம் ஆகியவற் றைக் கருத்தில் கொள்ள வேண்டு ம், ஏனெனில் இது சதூஸ் சாகர யோகாவின் யோக பலன்களை குறைக்கலாம்.
பாப கிரஹங்களின் பார்வை

சதூஸ்சாகரம் அமைந்துள்ள கிரஹங்களின் மீது ஏதேனும் பாப கிரஹங்களின் பார்வை ஏற்பட் டால் அது யோகத்தின் பலனை குறைக்கும்.

ஜாதகத்தை முழுவதுமாக பகுப்பாய்வு

சதூஸ்சாகரம் யோகம் அதன் நல்ல பலன்களையும் தரும் அளவிற்கு உருவாகி உள்ளதா என்பதை ஜாதகரின் ஜாதகத்தை முழுவது மாக பகுப்பாய்வு செய்ய வேண்டு ம்.

நடப்பு யோக மகாதசா

சதுஸ் சாகர யோகத்தை உருவாக்குவதில் ஈடுபட்டுள்ள நடப்பு யோக மகாதசா மற்றும் அந்தர்தசாவின் கீழ் யோகம்அதிக நற்பலன்களைத் தருகிறது.

இந்த யோகாவின் முக்கியத்துவம் மற்றும் விளைவுகள் என்ன? 
சதுசாகர யோக பலன்கள்
1, ஜாதகர் உயர்ந்த அதிகார பதவிகளை வகிப்பார் அல்லது அதிகார வட்டத்திற்கு மிக நெருக்கமாக இருப்பார்.
2, ஜாதகர் பெயர் புகழ் அடைவார்
3. ஜாதகர் ஆரோகியமான உடல் நிலையை கொண்டவர் ஆவார்.
4. ஜாதகருக்கு யோகமான , வளமான வாழ்வு அமையும்.
5. ஜாதகர் வெளிநாட்டில் சென்று வேலை அல்லது தொழில் செய்ய கூடியவர் ஆக இருப்பார்
6 திரண்ட செல்வ சேர்க்கை ஜாதகருக்கு அமையும்
7, ஜாதகர் செல்வம் மற்றும் சொத்துக்களை அடைவதற்கு சட்டவிரோத வழிகளைப் பயன்படுத்த தயங்க மாட்டார்

கேந்திரங்களில் இருக்கும் கிரகம் வலுவானது

கேந்திரங்களில் இருக்கும் கிரகம் வலு பெரும். 10ல் உள்ள கிரகம் 7 ல் உள்ளதைவிட வலு அதிகம். 7ல் உள்ள கிரகம் 4ல் உள்ளதை விட வலு அதிகம். 4ல் உள்ளது லக்கணத்தை விட வலு அதிகம். ஆனால் லக்கினம் இந்த விதிக்கு விலக்கு . லக்கினம் எப்போதுமே வலுவானது என்பதை நாம் உணர வேண்டும்.
பண வரவு தாராளமாக இருக்கும்
கிரஹங்கள் ஆட்சி பெற்றாலும் இல்லை பெறாவிட்டாலும் கேந்திரங்களில் இருக்கும் கிரகம் வலுவானது. சதூஸ் சாகர யோகம் அமைந்தால் ஜாதகருக்கு பண வரவு தாராளமாக இருக்கும். ஜாதகருக்கு பெயரும் புகழும் கொடுக்கும்.

மகாத்மா காந்தி ஜாதகம்

மகாத்மா காந்தி ஜாதகத்தில் இந்த சதுஸ் சாகர யோகம் அமைய பெற்று இருந்ததால் அவர் மஹாத்மா என்று அழைக்கப்பட்டார். அவர் பெயர் உலகெங்கும் பரவி அவருக்கு பெரும் புகழும் அவர் வாழும் காலத்திலும் மற்றும் அவர் இறந்த பின்னும் அவருக்கு ஏற்படுத்தி கொடுத்தது

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க ஜாமக்கோள் ஆருடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜாதகம் பார்க்க ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் என்னுடைய அலைபேசி மற்றும் whatsup No 7904719295

No comments:

Post a Comment