Search This Blog

Friday, February 24, 2023

ராஜ கேந்திர யோகம் அல்லது அரச கேந்திர யோகம் 4 கேந்திரங்களில் 7 கிரஹங்கள்

ராஜ கேந்திர யோகம் அல்லது அரச கேந்திர யோகம் -

4 கேந்திரங்களில் 7 கிரஹங்கள்

ஜோதிடத்தில் கேந்திர ஸ்தானங் கள் என்று கூறப்படுகின்ற லக்னம் என்ற 1 ஆம் வீடு, 4, 7, 10 ஆகிய ஸ்தானங்களில் ஒன்று கூட விட்டு போகாமல் 7 க்கு மேற்பட்ட கிரக ங்கள் இருந்தால் அது அரச கேந்திர யோகம் ஆகும். லக்கினத்தில் சந்திரன் ஆட்சி, 7ல் செவ்வாய் உச்சம் சனி ஆட்சிமற்றும் திக்பலம் 10 ல் சூரியன் உச்சம் மற்றும் திக்பலம்

ராஜ கேந்திர யோக பலன்கள்

இதன் பலன் வாழ்வில் சக சௌகரியங்களையும் பெற்ற வராகவும், தங்களுக்கென்று ராஜ்யம் உள்ளவர், நிலபுலன்கள், நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் அமைப்புக்கள் அவை களுக்கு கிளைகள், திறமையான வேலையாட்கள், நிர்வாகத்திறன், தலைமை பொறுப்புகள் வந்து சேரும்.

ராஜபோக யோகம் -

அதாவது ராஜகிரகமான சூரியன் ஆட்சி பெற்று சூரியனுக்கு 10ல் சந்திரன் உச்சம் பெறுவதும், சந்திரன் ஆட்சி பெற்று சந்திரனுக்கு 10ல் சூரியன் உச்சம் பெறுவதும் ராஜபோக யோகம் ஏற்படும் அமைப்பு ஆகும்.

அரசன் அல்லது அரசனுக்கு நிகரான செல்வம்

இதன் பலன் அரசன் அல்லது அரசனுக்கு நிகரான செல்வ வளம், செல்வாக்கு வளம், நினைத்தை முடிப்பதற்க்கான ஆட்கள் பலம், வெற்றியை அனைவருடனும் சந்தோஷமாக பகிர்ந்து அனைவ ராலும் விரும்ப படுபவராகவும் ஆவார், அரசு அரசியல் பலம், பெரிய ராஜ்யங்களை மற்றும் தொழில் நிறுவனங்களை நிறுவுவார்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295




No comments:

Post a Comment