Search This Blog

Saturday, February 25, 2023

ஜாதகத்தில் சுக்கிரன் தரும் தோஷம்-ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்தால்?

 ஜாதகத்தில் சுக்கிரன் தரும் தோஷம்

ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் இன்பம், ஆடம்பரம், அன்பு, செல்வம் ஆகியவற்றின் காரணியாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த கிரக ம் ஜாதகத்தில் பலவீனமாக இருந் தால், அந்த நபர் வறுமையில் வாழ்கிறார் திருமண வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படுகிறது.. மாறாக, சுக்கிரன் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு நிறைய பணம் கிடைத்து, ஆடம்பர வாழ்க்கை வாழலாம். சுக்கிரன் வலுவாக இருந்தால் நிறைய பெயரும், புகழும், அங்கீகாரமும் கிடைக்கிறது.

ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந்தால்

ஜாதகத்தில் சுக்கிரன் வலுவிழந் தால், அவரின் திருமண வாழ்க்கை யில் தடைகள் ஏற்படும் வாய்ப்பு கள் அதிகம்.சுக்கிரன் வலுவிழந்தா ல் அல்லது பாவிகள் தொடர்பு இருந்தால் திருமணம் தடைபடும். சுக போகங்கள் குறைவுபடும். அழகு மங்கும். ஆடம்பர பொருட் கள் சேர்க்கை இருக்காது. பொருள் வரவில் தடை, தாமதம் இருக்கும்.

சுக்கிரன் நீச்சம் , அஸ்தங்கம் , அம்சத்தில் நீசம்

சுக்கிரன் நீச்சம் , அஸ்தங்கம் , அம்சத்தில் நீசம் , பகைவரால் பார்க்க பட்டாலும் , பகை வீட்டில் அமர்ந்தாலும் , வக்கிரம் அடைந்தா லும் ,, சுக்கிரன் லக்கினத்திற்கு பாதகாதிபதியாக இருந்து தசை நடந்தாலும் , பலவீனமான சுக்கி ரன் , வறுமை, இரகசிய நோய்கள், தோல் தொடர்பான நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறார்.

சுக்கிரன் பகை,நீசம், பாவர்களின் தொடர்பால் பலமிழந்தால் என்ன நடக்கும்?

சுக்கிரன் அஸ்தங்கம் - திருமண தாமதம்

இங்கே இணைக்கப்பட்டுள்ள ஜாதகத்தில் சுக்கிரன் அஸ்தங்கம் . மகர லக்கணத்திற்கு சுக்கிரன் அதியோககாரகர் . அவர் சூரியனு டன் மிக நெருங்கிய பாகையில் அமைய பெற்றதால் அஸ்தங்கம் தோஷம் அடைகிறார்.

மகரம்,கும்பத்தில் சுக்கிரன் நட்பு என்றாலும்கூட அது சனியின் வீடு என்பதால் குறையுடைய, வீடு,வாகனம் , திருமணத்தடை போன்ற ஏதாவதொன்றில் குறையை சேர்த்துதான் சுக்கிரன் தருவார். அல்லது கொடுத்து அதை அனுபவிப்பதில் தடையை தருவார். மகரம்,கும்பத்தில் உள்ள சுக்கிரன் சனியின் இயல்பையும் கலந்தே தருவார்.

ஜாதகருக்கு வசதி வாய்ப்பு இருந்தும் திருமணம் 29 வயது ஆகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. மேலும் 7ம் அதிபதியான சந்திரன் அம்சத்தில் நீச்சம் பெற்றுள்ளார். அதனால் திருமணம் இன்னும் நடை பெற வில்லை.

மேலும் இது போன்ற தோஷ ஜாதகங்களை திருமண பொருத்தம் மட்டும் பார்க்காமல் இதற்கு இணையான தோஷ ஜாதகங்களை இணைத்தால்தான் திருமண வாழ்வு சிறக்கும்.

பரிகாரம்:

1.சுக்கிரன் வலுக்குறைந்து இருப்பவர்கள், கும்பகோணம் அருகே இருக்கும் சுக்கிரனுக்கு உரிய ஸ்தலமான கஞ்சனூர் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

2.சென்னையிலிருப்பவர்கள் மாங்கட்டிலிருக்கும் வெள்ளீஸ்வரர் கோயிலுக்கோ மயிலாப்பூரிலிருக் கும் வெள்ளீஸ்வரர் கோயிலுக்கோ சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

3.ஜனன கால ஜாதகத்தில் சுக்கிரன் நீசம், அஸ்தமனம் பெற்று வலிமை குறைந்தவர்கள் ஒவ்வொரு மாத பூர நாளில் மற்றும் ஆடிப்பூர நாளி ல் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் சுக்கிர தோஷம் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

4.ஸ்ரீவைகுண்டநாராயண பெருமா ள் கோயில்.

ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந் தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றோ இருந்தால்

ஒருவர் சுக சௌகர்யங்களுடன் மனநிறைவோடு வாழ சுக்கிரனின் அருள் மிகவும் அவசியம். ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்தோ அல்லது ஆதிபத்திய தோஷம் பெற்றோ இருந்தால் , இங்கு பரிஹாரம் செய்தல் விலகுகிறது.

அமைவிடம்

திருவாரூரிலிருந்து 12 கி.மீ. தொலைவிலும், கும்பகோணத் திலிருந்து 25 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம்- குடவாசல்- திருவாரூர் பேருந்து மார்க்கத்தில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது

5. தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.

6. சுக்கிர பகவானுக்கு வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வெண்ணிற வஸ்திரம் அணிவித்து, வெண் தாமரை மலரால் அர்ச்சித்து வழிபடவேண்டும்.

7 மொச்சைப் பயறு சுண்டல் நைவேத்தியம் செய்து, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்க வேண்டும்.

8. வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து வீட்டுப் பூஜையறையில் மகாலட்சுமி திருவுருவப் படத்தை அலங்கரித்து வைத்து, நெய் தீபம் ஏற்றி, மகாலட்சுமி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாராயணம் செய்து, பால் பாயசம் நைவேத்தியம் செய்யலாம்.

9. பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளில், கஞ்சனூர் சென்று அல்லது நவகிரஹங்களில் உள்ள சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு வரலாம்.

10. தினமும் இரவு மொச்சைப் பயறை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் மொச்சை ஊறிய தண்ணீரை அத்தி மரத்துக்கு ஊற்றிவிட்டு, மொச்சைப் பயறை பசுவுக்கு உண்ணக் கொடுக்க வேண்டும்.

11. வீட்டில் உங்கள் ஜென்ம நட்சத்திரற்கு உரிய மரம் வளர்க்க வசதியில்லாதவர்கள், அருகிலுள்ள கோயிலில் வளர்க்கச் செய்யலாம். இதன் மூலம் மிகக் கடுமையான சுக்கிர தோஷங்களிலிருந்தும் விடுபடலாம்.

உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295



No comments:

Post a Comment