ஜாதகத்தில் புதன் தரும் யோகங்கள் - அவயோகங்கள்
லக்னத்தில புதன் மட்டும் அமையப் பெற்றால் எப்படி இருப்பார்கள்?
புதன் கிரஹத்தின் காரகத்துவம்
புதனின் அமைப்பு ஜாதகத்தில் மிகமிக பலமாக இருந்தால் தான் ஒருவர் எந்த துறையைச் சார்ந்த வராக இருந்தாலும் அந்தத் துறை யில் மாபெரும் வெற்றியாளராக வும், வைரம்போல் ஜொலிக்கச் செய்யும் ஆற்றலும் வெளிப்படும். புத்தி, அறிவு, ஆற்றல், தொழில், வியாபாரம், கணக்கு போன்றவற் றை தரும் கிரகமாக புதன் திகழ்கி றார்
சௌம்யன், புத்திதாதா, தனப்பிரதன்
சௌம்யன், புத்திதாதா, தனப் பிரதன் என்று அழைக்கப்படும் புதன் புத்திக்கும், வித்தைக்கும் அதிபதியாக இருப்பவர். அறிவு, ஆற்றல், வித்தை, கல்வி, சொல், வாக்கு ஆகியவற்றிற்கு காரண கர்த்தாவாக விளங்குபவர். வித்தையின் நாயகன், அறிவை ஆள்பவன், எழுத்தறிவிப்பவன், சிந்தனையின் ஊற்று, வாக்கில் நிற்பவன், கணக்கிற்கு அதிபதி, கல்வியின் கர்த்தா, விவேகத்தின் வேந்தன், பகுத்தறிபவன், அறிவுச் சுரங்கம், நுண்கலை வல்லுனர், விகடகவி, நகைச்சுவையின் நாயகன், இன்னும் அறிவு சார்ந்த, மூளை சார்ந்த, விஷய ஞானங்க ளை எல்லாம் அருளும் வியக்கத் தக்க விந்தை மிகுந்த கிரகம் புதன்
நட்பா அல்லது பகையா ?
லக்னத்தின் ராசி எதுவோ, அந்த ராசி அதிபதி புதனுடன் நட்பு அல்ல து பகை கிரகமா என்று சேர்த்து பார்த்துக்கொள்ள வேண்டும்.
புதன் கிரஹத்தின் தன்மை
கிரகங்களில் புதன் சற்று வலிமை குறைந்தவர். கல்வியில் திறமை தருபவர். சுய லக்னாதிபதியாக முழு பலன் கொடுப்பவர். பிற லக்னகேந்திரத்தில் ராசி அதிபதியை அனுசரித்து பலம். இணைந்து செயலாற்றும் திறமையைத்தருவதால்
லக்கினத்தில் புதன்
லக்னத்தில் புதன் உள்ளவர்கள் எந்த காரியத்தையும் மற்றவர் களை சரியாக உபயோகித்து முடிக்க வல்லவர்கள். ராஜா ஆக இருப்பதைவிட பல ராஜாக்களை உருவாக்குவார் ஆக இருக்கவும் அதன் கூடவே தன் காரியங்களை சுலபமாக முடிக்கவும் வல்லவ ர்கள். விரைந்து முடிவெடுப்பது, முடிவுகளை சமயோசிதமாக மாற்றுவது, தலைமைக்கு பணிந்து செயல் புரிவது என்று இவர்கள் இரண்டாவது நிலையில் பிரகாசிப்பார்கள். இராஜதந்திரிகள் பெரும்பாலும் புதன் பலம் பெற்றவர்கள்.
கன்னி ராசியில் உச்சம் , ஆட்சி மற்றும் மூலதிரிகோணம்
நவகிரஹங்களில் புதன் மட்டுமே கன்னி ராசியில் உச்சம் , ஆட்சி மற்றும் மூலதிரிகோணம் என்ற மூன்று நிலைகளை அடைகிறார் . கன்னியில் புதன் உள்ள ஜாதகர் கள் புதிய கண்டுபிடிப்புகள் , ஆரா ய்ச்சி கல்வி , கணக்கு மற்றும் கணக்கியல் பெரும் சாதனை செய்கிறார்கள்
புதன் தரும் தொழில் அமமைப்புகள்
புதன். கணக்கு சம்மந்தமான ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஆடிட்டர்கள், வித்தகர்கள், சிந்த னைத்திறன், கற்பனைத்திறன், எழுத்தாற்றல், சொல்லாற்றல் மிக்க பத்திரிக்கையாளர்கள், நிரூபர்கள், கதாசிரியர்கள், புத்தக பதிப்பாளர்கள், பல்வேறு நுணுக்கங்களை அலசி ஆராயும் திறன் படைத்த ஜோதிடர்கள், வானசாஸ்திர நிபுணர்கள், வேத ஞான சாஸ்திர விற்பன்னர்கள். கம்ப்யூட்டர் மூலம் உலகை ஆளும் நிபுணர்கள். ஐ.டி.துறை, தொலைத்தொடர்புத் துறை, அஞ்சல் துறை, நிதித்துறை, வங்கித்துறை போன்றவற்றில் அறிவு, மூளையை பயன்படுத்தி நமக்கு கொடுத்த பணியை சிறப்பாக செய்து சாதனை படைக்க புதபகவானின் அருள் கடாட்சம் மிக மிக உறுதியாக தேவை.
புதன் பாதகாதிபதி
தனுசு மற்றும் மீன லக்கினத்திற்கு இவர் பாதகாதிபதி ஆகி , இவர் ஜாதகத்தில் கேந்திரங்களில் வலுத்தால் பெரும் சோதனைகளை அவர்களுடைய தசை காலத்தில் கொடுக்க கூடியவர். புதனே லக்னத்திற்கு பாவியாக அமைந்து பாதக ஸ்தானத்தில் இருந்தால், ஜாதகருக்கு அடிக்கடி புத்தி தடுமாற்றங்களையும் குழப்பங்க ளையும் உண்டாக்குவார். சோம்பே றியாக இருப்பதுடன் நோய் நீங்குவ தற்காக எந்த முயற்சிகளும் செய்யமாட்டார்.
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீசம்,
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீசம், நீச கிரகத்துடன் சேர்க்கை, நீச கிரக பார்வை போன்ற பலம் குறையும் காலக்கட்டங்கள் உண்டு. இந்த கால நேரத்தில் பிறந்தவர்கள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள்.
புதன் நீச்சம்
புதன் நீச்ச ராசியான மீனத்தில் இருந்தால், வாயுத் தொல்லையால் கை கால் பிடிப்பு இருக்கும். ஞாபக சக்தி குறையும். தலை உச்சி பகுதி யில் வலி இருக்கும். கல்வியில் தடை ஏற்படும்
திருவெண்காடு புதன் ஸ்தலம்
நாகை மாவட்டம், திருவெண்கா ட்டில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபிரம்ம வித்யாம்பிகை சமேத ஸ்ரீசுவேதா ரண் யேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. காசிக்கு இணையான ஆறு தலங்களில் முதன்மை யானது. நவக்கிரக நாயகர்களில் ஒருவரான புதன் ஸ்தலம். சந்திரனுக்கும், தாரைக்கும் பிறந்தவர் புதன். சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்து கிரகபதம் அடைந்தவர். சந்திரன் புதனுடன் திருவெண்காட்டை அடைந்து சுவேதாரண்ய பெருமா னை வழிபட்டு குருத்துரோகம் செய்த பாவத்தையும், சயரோக த்தையும் நீங்க பெற்றான். இத்தலத்தில் புதனுக்கு தனிச் சன்னதி இருக்கிறது. இந்த கோவில் சோழ வளநாட்டில் காவிரி வடகரையில் அமைந்துள்ள பதினோராவது திருத்தலமாகும்.
எப்படி செல்வது ?
சீர்காழியிலிருந்து 14 கி.மீ. தூரத்திலும், மயிலாடுதுறை யிலிருந்து 26 கி.மீ தூரத்திலும் உள்ளது.
திருவெண்காடு ஸ்தல சிறப்புகள்
1. புதன் திசை ஒவ்வொருவர வாழ்விலும் 17 ஆண்டுகள் நீடிக் கும். எனவேதான் திருவெண்காட் டில் உள்ள புதன் சன்னிதானத்தில் 17 தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்கிறார்கள். 17 தடவை சுற்றி வந்து வழிபடுவது மிகவும் நல்லது.
2. பொதுவாக புதன் கிரகத்தை ஆணும் இல்லாத, பெண்ணும் இல்லாத கிரகம் என்று சொல்வார்கள். ஆனால் திருவெண்காட்டில் புதன் பகவான் ஆண் கிரகமாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
3. திருவெண்காடு புதனை வழிபட்டால் கல்வி, ராஜயோகம், குபேர சம்பத்து, திருமணம், செல்வம், செழிப்பு, கலைத் துறைகளில் மேன்மை உள்பட 8 வகையான அதிகாரங்கள் கைக்கூடும்.
4. திருவெண்காடு தலத்தில் ருத்ரபாதம் உள்ளது. இதை வழிபட்டால் 21 தலைமுறை பாவங்கள் தீரும் என்பது ஐதீகம். காசியில் உள்ள விஷ்ணு பாதத்தை வழிபட்டால் 7 தலைமுறை பாவங்கள்தான் விலகும். ஆனால் திருவெண்காடு தலத்தில் யார் ஒருவர் ருத்ர பாதத்தைமுறைப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு காசியை விட 3 மடங்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment