ஜோதிடத்தில் பாவத்பாவம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் *பாவத் பாவா* என்னும் வழிமுறை மிகவும் எளிமையானது.
ஜாதகத்தில் ஒரு பார்வதின் குணாதிசயங்களைத் தீர்மானிக்க, அந்த பாவத்தை மட்டுமல்ல, அந்த பாவத்தின் வரிசை எண்ணுடன் தொடர்புடைய எண்ணால் ஆளுகைக்குட்பட்ட பாவத்தையும் பார்க்க வேண்டும்: 2 வது முதல் அதுனுடைய 2 ம் பவத்தை (4 ம் வீடு) வீட்டையும் 3 வது பாவத்தை வைத்து 6வது பாவத்தையும் , 4 வது பாவத்தை வைத்து 8 ம் பாவம் பற்றியும் , 5ம் வீட்டை வைத்து 10 பாவத்தை மூலமாகவும் பலன்களை சொல்ல வேண்டும்
5ம் பாவத்தை பற்றி அறிய
உதாரணமாக ஒருவருக்கு குழந் தை பாக்கியம் பற்றி தெரிந்து கொள்ள லக்கினத்திற்கு 5 ஆம் பாவகம் பற்றி ஆராய வேண்டும். மேலும் 5 ஆம் வீட்டிற்கு 5 ஆம் இடமான 9 ஆம் இடத்தையும் சேர்த்து ஆராய வேண்டும். 5 ஆம் இடம் குழந்தை 9 ஆம் இடம் பாக்கியம். இதைத்தான் *பாவத் பாவா* என்று அழைக்கிறோம்.
நோய், கடன், பகை போன்றவற்றை பற்றி அறிய
மேலும் ஒருவருக்கு ஏற்படும் நோய், கடன், பகை போன்ற விஷயங்கள் பற்றி ஆராய லக்கினத்திற்கு 6 ஆம் பாவகம் பற்றி பார்க்க வேண்டும். நோய், கடன், பகை ஆகியவை எந்த அளவில் நிவர்த்தி பெரும் என்பது பற்றி தெரிந்து கொள்ள 6 ஆம் வீட்டிற்கு 6 ஆம் வீடான 11 ஆம் பாவகம் பற்றியும் நாம் அறிந்து கொண்டால் மட்டுமே நாம் முழுமையாக தெரிவிக்க இயலும். 11 ஆம் இடமான லாபத்தை கொ ண்டு 6 ஆம் இடம் தொடர்புள்ள கடனை அடைக்கலாம். நோயை போக்கலாம்.
ஆயுள் பாவத்தை பற்றி அறிய
ஒருவருக்கு 8 ஆம் அதிபதி தசை நடந்து அதனால் உண்டான பிரச்ச னைகளை 8 ஆம் பாவகத்திற்கு 8 ஆம் இடமான 3 ஆம் வீட்டின் தசை நடப்பின் அவரது பிரச்சனைகள் அனைத்தும் தீரும் நேரம் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
7ம் பாவத்தை பற்றி அறிய
7 ஆம் இடம் தாம்பத்ய ஸ்தானம் (மனைவி) என்றால் என்றால் 7 க்கு 7 ஆம் இடமான லக்கினம் (கண வன்) ஜாதகர் ஆவார்.
எனவே *பாவத் பாவா* என்னும் அமைப்பின் படி ஒரு குறிப்பிட்ட பாவகத்தின் செயல்பாடு பற்றி தெரிந்து கொள்ள அந்த பாவக த்தில் இருந்து மற்றொரு பாவகம் வைத்து பலன் கூறும் முறையே பாவத் பாவக விதி.
இது ஒவ்வொரு பாவகத்திற்கும் இன்னொரு பாவகத்தால் ஏற்படும் மாற்றம் என்றும் வைத்து கொள்ளலாம்.
இது ஜோதிட பலன்களை துல்லியமாக சொல்லுக்கூடிய சூட்சமத்தை நமக்கு அளிக்கிறது
உங்கள் ஜாதகத்தை விரிவாக அலச , ஜாமக்கோள் பிரசன்ன மூலமாக உங்கள் பிரச்சனைகளும் அதன் தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment