ஜோதிடத்தின் படி சுக்கிர பகவான் ஒருவருக்கு
திருமண வாழ்க்கை, மண வாழ்க்கையில் மகிழ்ச்சி, அழகு, காதல், பொருள், ஆடம்பரம், வசதி
போன்ற பல விஷயங்களைத் தரக்கூடியவராக இருப்பார்.
ரிஷபம் மற்றும் துலாம் ராசிக்கு அதிபதியாக
இருக்கும் சுக்கிர பகவான் மீன ராசியில் உச்சமும், கன்னி ராசியில் நீசமும் அடைவார்
ஒருவர் வாழ்க்கையில் அனைத்து சுக சௌக்கியங்களும்
பெற்று, மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனில், அவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் வலிமை பெற்றிருப்பது
அவசியம். குறிப்பாக ஒருவரின் திருமண வாழ்க்கை இனிமையாக அமைய சுக்கிரன் வலிமைப் பெற்றிருக்க
வேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ,
கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு
8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து
அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ,
12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.
எதிரி கிரகங்களாக கருதப்படும் சுக்கிரன்,
குரு இரண்டும் இணைந்திருப்பது ஒருவகை சுக்கிர தோஷம் என்று கருதலாம்.
சூரியனால் சுக்கிரனை அஸ்தங்கம் செய்யப்படுவது
தோஷமாகும்.
சுக்கிர பகவான் ராசியில் வலுப்பெற்றும்,
நவாம்சத்தில் நீசமடைந்து இருப்பது சுக்கிர தோஷத்தை குறிக்கும். இதனால் உங்களின் வாழ்வின்
ஆரம்பம் அல்லது பிற்பகுதியில் சுக்கிரன் மோசமான பலனைத் தர வாய்ப்புள்ளது.
இந்தத் தோஷம் திருமணத்தடை மற்றும்
திருமணத்திற்கு தாமதம் ஏற்பட காரணமாக இருக்கிறது.
சனி, ராகு, கேது, புதன் ஆகிய கிரகங்களுடன்
சுக்கிரன் நட்பு கிரகமாகவும். சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் சுக்கிரனுக்கு
பகை கிரகங்களாகும்.
அதாவது ஜாதகத்தில் சுக்கிர பகவான்
, சனி , செவ்வாய் , சூரியன் , தேய்ப்பிறை சந்திரன் போன்ற பாப கிரஹங்களுடன் இணைந்து
காணப்பட்டாலும் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கோளுடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக்
காரணமாக உள்ளது.
திருவாரூர் அருகில் மணக்கால் அய்யம்பேட்டையில்
அமைந்திருக்கிறது, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவைகுண்ட நாராயணப் பெருமாள் ஆலயம். இல்லறம்
நல்லறமாகவும், தம்பதி ஒற்றுமைக்கும், கருத்து வேறுபாடுகளால் பிரிந்த தம்பதியினர் மீண்டும்
ஒன்று சேரவும் அருளும் அற்புதத் திருத்தலம் இது என்கிறார்கள் பக்தர்கள். இந்த ஆலயத்தின்
தலவிருட்சம் அத்தி. தீர்த்தம் ராஜபுஷ்கரணி ஆகும்.
பிரார்த்தனை:
திருமண தடை நீங்க , குழந்தை பாக்கியம் கிடைக்க ,, சுக்கிர தோஷம் நிவர்த்தி
அடைய ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்க , சக்ரத்தாழ்வாருக்கு
தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் 6 to 8 மணிக்குள் விளக்கேற்றி பிரார்த்தனை
செய்கிறார்கள்.
பரிகார தலம்
மணக்கால் அய்யம்பேட்டை காதலர்களை ஒன்று சேர்க்கும் தலமாகவும் தடைபெற்ற
காரியங்களை தொடர்ந்து நடத்துவதுற்கும் , பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும், மற்ற பெண்களின்
மீது மோகம் கொண்ட கண்டவர்களை திருத்தவும் ஜாதகத்தில் சுக்கிர தோஷம் உள்ளவர்கள் தீர்வு பெறவும் இந்த தளம் பரிகார தலமாக அமைந்துள்ளது.
அனைத்துவித சுக்கிர தோஷங்களை தீர்த்து
வைக்கும் பரிகார ஸ்தலம் ஆக அமைகிறது.
மாலிக்காபூர் தலைமையில் மொகலாய படை
இந்தக்கோயிலை சீரழித்தது. சென்னையை சேர்ந்த மருத்துவர் சிவராமன் கனவில் வந்து வைகுந்த
பெருமாள் இந்த கோயிலை புதிப்பிக்குமாறு உத்தரவு இட்டார். அதன்படி இந்த கோயிலுக்கு
2002 ல் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.
ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்த நிலையில்
இருந்தாலும் , ஆதிபத்திய தோஷம் பெற்று அமைந்துஇருந்தால் , மார்கழி மாதத்தில் வரும்
வெள்ளிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டால் ஒரு தீர்வு கிடைக்கிறது. மார்கழி மாதத்தில்
சுக்கிர பகவான் இங்குள்ள வைகுண்ட பெருமாளை ஒளி வடிவில் வந்து வழிபடுவதாக ஐதீகம்.
சுக்கிரன் மற்றும் குபேரன் வழிபட்டதால்
ஜாதகத்தில் சுக்கிர தோஷம் மற்றும் 9ம் இடம் (பாக்கிய ஸ்தானம்) தோஷம் அமைய பெற்றவர்கள்
இங்கு வழிபடும்பொழுது தோஷ பரிஹாரம் ஏற்படுகிறது,
இந்த கோயிலில் ஸ்ரீ நரசிம்மரும் ,
யோகநரசிம்மரும் ஒன்றாக காட்சி அளிப்பதால் , தினமும் சுக்கிர ஹோரை வரும் நேரத்தில் தேங்காய்
உடைத்து 12 முறை வலம் வந்து வழிபட்டால் தடை பெற்ற காரியம் உடனே நிறைவேறும்.
காதல் கைகூட
காதல் திருமணம் கைகூட , காதல் திருமணம் பிடிக்காதால் அதை பிரிக்க நினைக்கும் பெற்றோர்கள் எண்ணம் மாற இங்கு வந்து பெருமாள் காலடியில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்து வழிபட்டு பெருமாளுக்கு உரிய மூல மந்திரத்தை சொல்லி அர்ச்சித்து சாறு பிழிந்து அருந்தினால் தம்பதியர் ஒற்றுமை மேன்மை அடையும். விவாகரத்து என்று கோர்ட் வரை சென்றவர்கள் கூட ஒன்று கூடியுள்ளார்கள்.
கோயிலுக்கு எப்படி செல்வது ?
திருவாரூரில் இருந்து 12 கிலோமீட்டர்
தூரத்திலும், கும்பகோணத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த திருக்கோயில் அமைந்துள்ளது.. கும்பகோணம் - திருவாரூர் -குடவாசல்
பேரூர்ந்து மார்க்கத்தில் மணக்கால் அய்யம்பேட்டை தலம் அமைந்துள்ளது.
சுக்கிர தோஷ பரிஹாரம்
சுக்கிநவகிரஹங்களில் உள்ள சுக்கிர பகவானை வெள்ளிக்கிழமை அன்று வ ழிபாடு செய்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
குறிப்பாகப் பூராடம், பூரம், பரணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த கோயிலுக்குச் செல்வது
சிறப்பாகும்.
இரவு நேரத்தில் மொச்சை பயிரை ஊறவைத்து
மறுநாள் காலை அதன் நீரை அத்தி மரத்திற்கு ஊற்றிவிட்டு, அந்த பயிரைப் பசு மாட்டிற்கு
உணவாகக் கொடுத்தால் முன்னேற்றம் கிடைக்கும். இவ்வாறு செய்வதன் மூலம் கடுமையான சுக்கிர
தோஷத்தில் இருந்து விடுபடலாம் எனக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment