Search This Blog

Tuesday, October 10, 2023

ராகு கேது பெயர்ச்சி 2023 -2025 மேஷ ராசி பலன்கள்- Raahu -Kethu Transit 20...


ராகு கேது பெயர்ச்சி 2023

அக்.8, 2023 முதல் ஏப்.26, 2025 வரை

ராகு கேது பெயர்ச்சி 2023-ராகு மேஷத்திலும், கேது துலாம் ராசியிலும் தற்போது உள்ளன. அக்டோபர் 8ல் நடக்கும் இந்த கிரகங்களின் பெயர்ச்சியால், எந்தெந்த ராசியினர் நன்மை அடைவார்கள், யார் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த காணொளியில் விரிவாக பாப்போம்.

ராகு மற்றும் கேது கிரகங்கள் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் சஞ்சரித்து அதற்கான பலன்களைத் தரக்கூடியவர்கள். இந்த கிரகங்களோடு சேர்க்கக்கூடிய மற்ற கிரகங்களைப் பொருத்தும் அதற்கான பலன்கள் மாறுபடும். கோச்சாரத்தில் சனி மற்றும் குரு பகவான் அமர்ந்து இருக்கும் நிலையால் யோக பலன்கள் கூடும் குறையும். எப்போதும் ராகு, கேது மற்ற கிரகங்களின் பலத்தை தனதாக்கிக் கொண்டு பலன் தரக்கூடியவை. அந்த வகையில் சில ராசியினருக்கு பெரியளவில் முன்னேற்றமும், அதிர்ஷ்ட பலனும் கிடைக்கும்.

 

ராகு மற்றும் கேது இந்த இரண்டு கிரகங்களும் எப்போதும் பின்னோக்கி நகரக்கூடியன. இந்த பெயர்ச்சியின் காரணமாக ராகு, குரு பகவானின் ராசியான மீன ராசியிலும், புதன் அதிபதியாக கொண்ட கன்னி ராசியில் கேதுவும் சஞ்சரிக்க உள்ளனர்.

மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் ரிஷப  ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் ரிஷப  ராசியின் அதிபதியாகிய சுக்கிரனின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

ராகுவை வைத்து தகப்பானார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்து கொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர். ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றை சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.



மேஷ ராசி நேயர்களுக்கு  ராகு பகவான் ஜென்மத்தில்  இருந்து அயன சயன போக ஸ்தானமான 12ம் இடத்திற்கு  மாறுகிறார் | கேது பகவான் 7ம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்து 6ம் இடமான ரண ருண ரோக ஸ்தானத்துக்கு பெயர்ச்சி ஆகிறார்.

ராகு பகவான் ரேவதி நட்சத்திரத்தில் அடுத்த ஆண்டு ஜூன் 2024 மாதம் வரை பயணம் செய்யப்போகிறார். வருமானம் சரளமாக இருக்கும். பணவரவுக்கு ஏற்ப செலவுகள் இருக்கும் .மன அழுத்தமும் குழப்பமும் நீங்கி மனதில் நிம்மதி பிறக்கும். உடல் ஆரோக்கியக் கோளாறுகள்  நீங்கும். ருணம் மற்றும் சத்ரு ஸ்தானமான   ஆறாம் வீட்டில் பயணம் செய்யும் கேதுவால் குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். சித்திரை நட்சத்திரத்தில் கேதுபகவான் பயணம் செய்யும் காலகட்டத்தில் கௌரவப் பதவிகள் தேடிவரும். வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். எதிரிகளை பந்தாடுவீர்கள்.

இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷ ராசி நேயர்களுக்குப பல விதத்திலும்  யோகபலன்களை அள்ளித் தரும். தெய்வ வழிபாடு , ஆன்மீக . பயணங்கள் மகிழ்ச்சி தரும். தன்  நம்பிக்கை அதிகரிக்கும். வீண் பழி அகலும். குடும்பத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்களை சந்திக்கும்  நிலை உருவாகலாம். கணவன், மனைவி உறவு மேம்படும்.. பிள்ளைகளின் கல்வியில் அதிக கவனம் செலுத்தும் நிலை ஏற்படும்.  தீய கனவுகள் உங்கள் மன நிலையை பாதிக்கும்  உறவினர்கள், நண்பர்கள் இவர்களிடம் இருந்து உதவி கிடைக்காது. . மனம் அலை பாயும். பண வரவு சரளமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள்  தக்க சமயத்தில் உங்களுக்கு கிடைக்கும்.



தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத . ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் தக்க நேரத்தில் வருவதில் தடங்கல்  ஏற்படும் அதை சரி செய்வதில் கவனம் தேவை. ஒரு சில நேயர்களுக்கு பணவரத்து தாமதப்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல்  பணிசுமை உங்களை சோர்வடைய செயும் . முக்கிய பதவிகள் ஒரு சிலருக்கு கிடைக்கம்.  பதவி உயர்வுநீண்ட நாள் தடை பெற்ற பதவி உயர்வு இப்போது  கிடைக்கலாம்.

பெண்கள் தன்னம்பிக்கையுடன் காணப்படுவார்கள்.  தொழில் அல்லது வேலை நிமித்தமாக  பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வரும். பண வரவு சரளமாகவும் மற்றும்  திருப்திகரமாகவும்  இருக்கும். எடுத்த காரியங்கள் வெற்றியை தரும்.

பரிஹாரம்

சனிக்கிழமைகளில் நவகிரஹத்தில் உள்ளராகு பகவான் தான்யம் உளுந்து வைத்தும் மற்றும் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடவும். செவ்வாய் கிழமைகளில் கேது பகவான் தான்யம் கொள்ளுவைத்தும் மற்றும் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடவும்




No comments:

Post a Comment