ரிஷப ராசி
ராகு பகவான் 12ம் இடமான அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து 11ம் இடமான லாப
ஸ்தானத்துக்கு மாறுகிறார். கேது பகவான் 6ம் இடமான
ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து 5ம் இடமானபஞ்சம ஸ்தானத்துக்கு மாறுகிறார்.
2024 ஜூன் வரை ராகு ரேவதி நட்சத்திரத்தில்
பயணம் செய்கிறார். தடையின்றி பண வருமானம் வரும். 11ம் இடமான லாப ஸ்தானத்தில் பயணம்
செய்யும் ராகு வெற்றிகளையும் பண வருமானத்தையும் சரளமாக தருவார். நீங்கள் சந்திக்கும் சவால்களை சாதனைகளாக மாற்றுவீர்கள். . சுப செலவுகள்
அதிகரிக்கும். கேது பகவான் 5ஆம் வீட்டில் பயணம் செய்வது சுமாரான பலனை கொடுக்கும்.
2024ஆம் ஆண்டு பிப்ரவரி வரை கேது சித்திரை நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில்
உங்களுக்கு பண வருமானம் வரும் என்றாலும் எதிர்பாராத செலவுகளும்அதிகரிக்கும்.
11ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரும்
ராகுவால் யோகமான பலன்கள் ஏற்படும். காரிய தடை நீங்கி வெற்றிகள் உண்டாகும்.மனது சந்தோஷமாக
இருக்கும். பணவரத்து திருப்தியாக இருக்கும். உங்கள் பேச்சு சாதுர்யத்தால் வெற்றிகள்
உண்டாகும். நீண்ட நாட்களாக இழுத்து வந்த வம்பு
வழக்குகள் நீங்கும். சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கூடும். வெளிநாட்டு பயணங்கலால் லாபம்
உண்டாகும்.. குடும்பத்தில் குதூகலத்திற்கும் மகிழ்ச்சிக்கும் குறைவு இருக்காது. உறவினர்,
நண்பர்கள் தக்க சமயத்தில் உதுவுவார்கள் . கணவன்,
மனைவிக்கிடையே உறவு பலப்படும்.. குழந்தைகள் மூலம் சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.
தொழில் வியாபாரம் நன்றாக நடைபெறும்
. கூடுதல் லாபம் கிடைப்பதால் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.. ஒரு சில நேயர்கள் புதிய
தொழில் வியாபாரம் செய்ய முயற்சி மேற்கொள்வீர்கள்.
இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள்
கிடைக்கலாம். இதற்காக அவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் உங்களது
கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.அதனால் ஒரு சில நேயர்களுக்கு திடீர் பிரச்சினை தலைதூக்கலாம். கலைத்துறையினருக்கு
கடன் விவகாரங்கள் சமாளிக்கும் நிலையில் இருப்பார்கள்.
பரிஹாரம்
சனிக்கிழமைகளில் நவகிரஹத்தில் உள்ள
ராகு பகவான் தான்யம் உளுந்து வைத்தும் மற்றும் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடவும். செவ்வாய்
கிழமைகளில் கேது பகவான் தான்யம் கொள்ளுவைத்தும் மற்றும் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடவும்
No comments:
Post a Comment