Search This Blog

Saturday, October 21, 2023

ஒரு கிலோ ஹாப் ஷூட்ஸ்' (hopshoots) காய்கறி விலை ரூ 1 லட்சமா ?ஹாப் ஷூட்ஸ்'...


உலகின் அதிக விலையுள்ள காய்கறி  ஹாப் ஷூட்ஸ் காய்கறி  ' (hopshoots)



ஹாப் ஷூட்ஸ்' (hopshoots)என்ற காய்கறி வகை இந்தியாவில் சுமார் 1 லட்சம் ரூபாய் அளவிற்கு விற்கப்பட்டு வருகிறது. இந்த ஹாப் ஷூட்ஸ் என்ற காய்கறி வகை ஒரு கிலோவிற்கு ஒரு லட்சம் வரை விற்கப்படுகிறது.

ஐரோப்பியாவில் மிகவும் பிரபலமான இந்த காய்கறி இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் முதலில்  விளைவிக்கப்பட்டது. 

பின் இந்த காய்கறி பீகார் மாநிலத்தில் உள்ள விவசாயியான அம்ரேஷ் சிங் என்பவர் விளைச்சல் செய்து வருகிறார்.ஆமாம்! ஏன் இந்த காய்கறிக்கு இவ்வளவு விலை என நீங்கள் கேட்கலாம்? இந்த காய்கறி இந்தியாவில் மிகவும் குறைவான அளவிலே கிடைக்கும்.இந்த காய்கறியை செடியாக பயிரிட்டு காய் வருவதற்கு சுமார் 3 வருடங்கள் எடுத்துக்கொள்ளுமாம்.

 

மேலும் இந்த காய்கறியை மிகவும் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டால் மட்டுமே நல்ல விளைச்சல் தரும் கூறுகின்றனர்.இந்த காய்கறியை விளைவிக்க கடுமையான உடல் உழைப்பு தேவைப்படுவதால் விலை உயர்ந்தே காணப்படுகிறது.

#பிகார் மாநிலம் காரம்திஹ் கிராமத்தைச் சேர்ந்த அம்ரேஷ் சிங்# 38 வயதான நபர் அம்ரேஷ் சிங். இவர் உலகிலேயே அதிக விலை கொண்ட காய்கறியை அவுரங்காபாத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் விளைவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்திய காய்கறி ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து ஹாப் ஷூட்ஸ் காய்கறி விதைகளை அம்ரிஷ் சிங் வாங்கியுள்ளார்.

மருத்துவ குணங்கள்ஹாப் ஷூட்ஸ் எனப்படும் இந்த காய்கறி வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை பூர்வீகமாக கொண்டது. இது ஆன்டி பாக்டீரியாவாக பயன்படுகிறது.

இதுபோன்ற தாவரத்தின் ஒவ்வொரு பகுதியும் பழம், பூ முதல் தண்டு வரை பல பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. மேலும், இது காசநோய் , தூக்கமின்மை, தோல் பளபளப்பு , மன அழுத்தம், கவலை போன்ற நோய்களுக்கு இயற்க்கை மருந்தாக இருக்கிறது. இந்த வகை காய் ‘பாக்டீரியா எதிர்ப்பு விளைவுகள் மற்றும் கசப்பான சுவையூட்டும் தன்மை கொண்டுள்ளதால் இது பீர் தயாரிப்பிலும் பயன்படுத்தபடுகிறது என கூறப்படுகிறது. ஆகவே இந்த ஹாப் ஷூட்ஸ் காய்கறிகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

டிபி நோய்க்கு எதிரான பயன்படுத்தக் கூடியது. இதிலுள்ள ஆசிட் புற்றுநோய் செல்களை அழிக்கக்கூடியவை. லூகீமியா செல்களை தடுக்கக்கூடியவை. பீர் பானத்தின் சுவையை கூட்டுவதற்கு, பானத்தின் நிலைத்தன்மையை பாதுகாப்பதற்கு பெரிதும் உதவுகிறது.

 

இந்த காய்கறி செடி சுமார் 6 மீட்டர் வரை வளரக்கூடியது.மேலும் இந்த செடியின் ஆயுட்காலம் சுமார் 20 ஆண்டுகள் என கூறுகின்றனர். முன்னதாக ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள லாஹவுல் பகுதியில் ஹாப் ஷூட்ஸ் காய்கறிகள் விளைவிக்கப்பட்டுள்ளன


No comments:

Post a Comment