Search This Blog

Thursday, March 7, 2024

திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று 12 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய ச...


திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று  12

 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சங்கு!


சிவராத்திரிக்கு முந்திய நாள் தோன்றிய

 நன்னீர்க்குளம். சங்கு

பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம்தான்.

நான்கு யுகங்களிலும் இரண்டு கழுகுகள் தினமும் இந்த மலைக்கு வந்து ஈசனை வழிபட்ட காரணத்தால் இந்தத் தலத்துக்கு, 'திருக்கழுக்குன்றம்' என்ற பெயர் உண்டானது என்கிறார்கள். கழுகுகள் உச்சிவேளையில் வந்து ஈசனை வழிபட்டு அங்கு வழங்கப்படும் பிரசாதத்தி உண்டு செல்லும் நிகழ்வைப் பலரும் தரிசித்திருக்கிறார்கள்.



மார்க்கண்டேய ரிஷி இங்குள்ள ஈசனை அபிஷேகிக்கப் பாத்திரமின்றித் தவித்தபோது, ஈசன் இக்குளத்தில் சங்கு வரவைத்ததாகத் தலபுராணம் சொல்கிறது.

2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு சங்கு தோன்றியது. அதன்பின் 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று மீண்டும் சங்கு தோன்றிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. 

பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் இந்தத் தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம். இந்த முறை தோன்றியிருக்கும் அந்த சங்கில் சங்குப்பூச்சி இன்னும் உயிருடன் உள்ளது. எனவே சங்கை மண்டபத்தில் ஒரு தட்டில் வைத்து நீர் விட்டு அதில் வைத்திருக்கிறார்கள்.

மகாசிவராத்திரி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று சங்கு தோன்றியிருப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.



திருக்கழுக்குன்றத்தில் 07-03-2024 அன்று 12 ஆண்டுகளுக்குப்பின் தோன்றிய சங்கு! சிவராத்திரிக்கு முந்திய நாள் தோன்றிய நன்னீர்க்குளம் சங்கு பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம்தான். 



நான்கு யுகங்களிலும் இரண்டு கழுகுகள் தினமும் இந்த மலைக்கு வந்து ஈசனை வழிபட்ட காரணத்தால் இந்தத் தலத்துக்கு, 'திருக்கழுக்குன்றம்' என்ற பெயர் உண்டானது என்கிறார்கள். கழுகுகள் உச்சிவேளையில் வந்து ஈசனை வழிபட்டு அங்கு வழங்கப்படும் பிரசாதத்தி உண்டு செல்லும் நிகழ்வைப் பலரும் தரிசித்திருக்கிறார்கள். மார்க்கண்டேய ரிஷி இங்குள்ள ஈசனை அபிஷேகிக்கப் பாத்திரமின்றித் தவித்தபோது, ஈசன் இக்குளத்தில் சங்கு வரவைத்ததாகத் தலபுராணம் சொல்கிறது.



 2011-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி அன்று இங்கு சங்கு தோன்றியது. அதன்பின் 12 ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று மீண்டும் சங்கு தோன்றிய அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பொதுவாக சங்கு கடலில் மட்டுமே தோன்றும். ஆனால் இந்தத் தீர்த்தக் குளம் நன்னீர்க்குளம். எனவே இங்கு சங்கு தோன்றுவதே அதிசயம். 

இந்த முறை தோன்றியிருக்கும் அந்த சங்கில் சங்குப்பூச்சி இன்னும் உயிருடன் உள்ளது. எனவே சங்கை மண்டபத்தில் ஒரு தட்டில் வைத்து நீர் விட்டு அதில் வைத்திருக்கிறார்கள். மகாசிவராத்திரி நாளை நடைபெற இருக்கும் நிலையில் இன்று சங்கு தோன்றியிருப்பது பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.


No comments:

Post a Comment