Search This Blog

Monday, February 26, 2024

ஜாதகத்தில் ப்ரம்ம சாபம் அல்லது குரு சாபம். பராமச்சரியருக்கு குரு துரோகம்...


 

பிரம்ம சாபம்  அல்லது குரு சாபம்

குருவை அவமதிப்பது கேலி, கிண்டல் செய்வது, கற்ற வித்தையை தவறாக பயன்படுத்துவது, குரு நிந்தனை செய்வது, நமக்கு தெரிந்தவற்றை மற்றவர்களுக்கு சொல்லி கொடுக்காமல் இருப்பது நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,வித்தையை தவறாக பயன்படுத்துவது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.

பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.படித்தது மறந்து விடும்.



ஜாதகத்தில் குருவும் சனியும் சேர்க்கை பெற்று ஐந்தாம் இடம் மற்றும் ஒன்பதாமிடம் சம்பந்தப்பட்டால் அது பிரம்மஹத்தி தோஷம் ஆகும். குரு சாப தோஷம் என கொள்ளலாம்.

உக்கடம் தருபவன் காரகன் குரு இவ்வாறு சனியால் பாதிக்கப்பட்டால் புத்திர பாக்கியம் இல்லை .ஆண் குழந்தை முக்கியமாக இருக்காது.

சர்ச்சைகளின் 'நாயகன்' ஜெயேந்திர சரஸ்வதி

தன்னுடைய குருவான பரமாச்சியாரை ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவமானம் அடையச்செய்தவர் ஜெயேந்திரர். உண்ட வீட்டுக்கு துரோகம் செய்ததை போல் தன்னை வளர்த்து ஆளாக்கிய பரமாச்சியாரை துன்புறுத்திய ஜெயேந்திரர். இதனால் பின்னர் கொலை வழக்கில் சம்மந்தபட்டு சிறை செல்ல நேரிட்டது. குருவுக்கு செய்த துரோகத்தால் பின்னர் பல துன்பங்களை அனுபவிக்க நேரிட்டது.

 ஜெயேந்திர சரஸ்வதி 1935ம் ஆண்டு திருவாரூர் அருகே இருள்நீக்கி கிராமத்தில் பிறந்தார்.

80களிலிருந்தே மடத்தின் சமயச் செயல்பாடுகளுக்கு மாறான செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்பட்டவர்.

குறிப்பாக தமக்கு முந்தைய மடாதிபதியான சந்திரசேகர சரஸ்வதி இருக்கும்போதே, தமக்கு இளைய பீடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதியை இவர் நியமித்தார்.சங்கராச்சாரியாராக இருப்பவர்கள் எப்போதும் தன் தண்டத்தை (சங்கராச்சாரியார் கையில் வைத்துள்ள ஒரு புனிதக் கழி) பிரியக் கூடாது என்பது மரபு.

ஆனால், ஜெயேந்திரர் மடத்தைவிட்டு வெளியேறியபோது, தன் தண்டத்தையும் கமண்டலத்தையும் விட்டுவிட்டே வெளியேறினார்.

சாதுர்மாஸ்ய பூஜை காலத்தில் பீடாதிபதிகள் வெளியேறக்கூடாது என்ற விரதத்தையும் மீறி அவர் வெளியேறியது மடத்தின் பக்தர்களுக்கு பெரும் துக்கத்தை ஏற்படுத்தியது.

தண்டத்தைவிட்டு வெளியேறியது குறித்து அந்தத் தருணத்தில் செய்தியாளர்கள் கேட்டபோது, தண்டத்தின் சக்தியை தன் உடலில் ஏற்றிக்கொண்டதாக பதிலளித்தார் ஜெயேந்திரர்.

1987 அக்டோபர் 2ஆம் தேதியே ஜன கல்யாண், ஜன ஜாக்ரண் என்ற புதிய இயக்கங்களை ஆரம்பித்தார் ஜெயேந்திரர்.



முன்னாள் பீடாதிபதியான ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி 1954 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி  இளைய பீடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதியை அறிமுகம் செய்து வைத்தார்.

 40 ஆண்டுகள் இளையமடாதிபதியாக இருந்த அவர் 1994ம் ஆண்டில் 69வது காஞ்சி மடத்தின்  பீடாதிபதியாக பொறுப்பேற்றார்.

மறைந்த காஞ்சி சங்கர மட பீடாதிபதி ஜெயேந்திரர் 1980 களின் மத்தியில் மடாதிபதிகளுக்கு உரிய தண்டத்தை வைத்துவிட்டு திடீரென காஞ்சி சங்கர மடத்தை விட்டு ஓடி போனார். 

இவருக்கும் பரமாச்சியாருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இது நிகழ்ந்தது . ஜெயேந்திரர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பரமாச்சிரியர் நிராகரித்ததால் கோபம் அடைந்து காஞ்சி மடத்தை விட்டு வெளியேறினார் என்று கூறப்பட்டது.


அப்போது மூத்த அரசியல் தலைவராக மற்றும் ஜனாதிபதியாகவும் இருந்த R வெங்கட்ராமன்  இதில் தலையிட்டு ஜெயேந்திரரை கண்டுபிடித்து மீட்டு வந்தார்.

2004ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி தோல்வியடைந்தபோது, ஜெயலலிதாவின் அகங்காரமே அதற்குக் காரணம் என்று ஜெயேந்திரர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

அதேபோல் மடாதிபதியாக இருந்த நிலையில் சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் அனுபவித்தார்.

நவம்பர் 11, 2004 ஆண்டு காஞ்சி கோவில் மேலாளர் சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயந்திர சரஸ்வதி கைது செய்யப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

>ஜனவரி 10, 2005  சங்கர்ராமன் கொலைவழக்கில் இருந்து, ஜெயேந்திரருக்கு ஜாமின் வழங்கியது. மேலும், இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக உயர்நீதிமன்றத்திலிருந்து புதுவை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நடந்துவந்த காலகட்டத்தில், வழக்கை விசாரித்த நீதிபதிக்கு பணம் கொடுத்து சங்கராச்சாரியார் தீர்ப்பை மாற்ற முயல்வதாக 2011 ஆகஸ்டில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.



சங்கராச்சாரியாரும் நீதிபதியும் பேசுவதாகக் கூறப்பட்ட ஒலிநாடாக்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

>நவம்பர் 27 2013, அன்று உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி சங்கரராமன் கொலை வழக்கில் இருந்து ஜெயந்திர சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டார்.

>மார்ச் 2011ல் தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி என்ற அரசியல் கட்சியை  ஜெயந்திரர் துவங்கினார்.

>பிப்ரவரி 28, 2018 ஆம் ஆண்டு மூச்சு திணறல் காரணமாக   ஜெயந்திரர் சரஸ்வதி   மரணமடைந்தார். 

ஜெயேந்திரர், விஜயேந்திரர் கைது

2004-ம் ஆண்டு சங்கரராமன் கொலை வழக்கில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அரசால் அதிரடியாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டார். ஜெயேந்திரருடன் இளைய மடாதிபதி விஜயேந்திரர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர் குறித்த ஏராளமான வெளிவராத தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

அடுத்தடுத்து புகார்கள்

 மூத்த எழுத்தாளர் அனுராதா ரமணன், ஜெயேந்திரர் தம்மிடம் தவறாக நடக்க முயன்றார் என பகிரங்கமாக புகார் தெரிவித்தார். விஜயேந்திரருக்கும் நடிகை ஒருவருக்கும் தொடர்பிருக்கிறது என்கிற தகவலும் அப்போது கசிந்து பரபரப்பை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment