உங்கள் ஜாதகப்படி
உங்களுக்கு கோடீஸ்வர யோகம் உள்ளதா ?
கோடீஸ்வர யோகத்தை பற்றி ஜாதக நூல்களில் சொல்லப்பட்டுள்ளது .
இது உண்மையா என்று பல பேர் வினவுகின்றனர். பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பணியின்
சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா ?
சுமார் 1,52,000 கோடிகள் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து கோடீஸ்வர யோகம் உண்மைதான் என்று அறிந்து
கொள்ளலாம்.
முகேஷ் அம்பணியின் ஜாதகம்
புதன்
சுக்ரன்
சூரியன்
கேது
|
செவ்வாய்
|
||
ராசி மண்டலம்
|
|||
குரு
|
|||
சந்திரன்
|
லக்கினம்
சனி
|
ராகு
|
கோடீஸ்வர யோகம்- கிரஹ அமைப்புகள்
செல்வமும் செல்வாக்கும் நிறைந்த கோடீஸ்வர குடும்பத்தில்
பிறக்கவேண்டுமானால், லக்னத்துக்கு 4-ம் இடமான சுகஸ்தான அதிபதி, செவ்வாய், 9 மற்றும் 10-ம் இடத்து அதிபதிகள் தங்கள் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ சுப பலம்
பெற்று இருக்கவேண்டியது அவசியம். இந்த அமைப்பில் பிறக்கும் குழந்தைகளின்
முன்னோர் பரம்பரையாகவே செல்வமும் செல்வாக்கும் பெற்றிருப்பார்கள்
...
முகேஷ் அம்பணியின் ஜாதகத்தில் சுகஸ்தான அதிபதி ஆன சனி பகவான் லக்கினத்தில் பலமாக
அமையப்பெற்று, செவ்வாய் எழிலே அமையப்பெற்றும்
ஒன்பதாம் அதிபதியான சந்திரன் இரெண்டாம் இடத்திலும் , ஜீவனாதிபதியான சூரியன் ஆறில் உச்சம்
பெற்றும் அமைத்துள்ளது.
லக்னத்துக்கு 9-ம் இடத்துக்கு அதிபதியான கிரகமும், குருவும் இணைந்து 1,4,7,10 ஆகிய இடங்களிலோ அல்லது 5,7,9 ஆகிய இடங்களிலோ இருக்கும் அமைப்பில் பிறந்தவர்களும், பிறக்கும்போதே கோடீஸ்வரராகத் திகழ்வார்கள்.
முகேஷ் அம்பணியின் ஜாதகத்தில் ஒன்பதாம் அதிபதியான சந்திரனை பத்தில் உள்ள குரு பார்வையிடுகிறது.
9-ம் இடத்து அதிபதி சுபகிரகங்களுடன் இணைந்து, லக்னாதிபதியும் பலம் பெற்று இருக்கும் ஜாதகர்கள் தந்தையின் மூலமாக செல்வம்
கிடைக்கப் பெறுவார்கள். பாக்கியஸ்தானமாகிய 9-ம் இடத்து அதிபதி கேந்திரத்தில் இருந்து, அந்த ஸ்தானமே 9-ம் இடத்து அதிபதியின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருந்தால், அந்த ஜாதகர் பல வித யோகங்களைப் பெற்று வாழ்வார்கள்.
பரிவர்த்தனை யோகம்
சுப கிரகங்கள் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தாலும், ஒன்றுக்கொன்று
பரிவர்த்தனை பெற்று அமர்ந்திருந்தாலோ செல்வ வளம் உண்டாகும். மிக அபூர்வமாக ஒரு
சிலருக்கு வாழ்வின் பெரும் பகுதி சுப கிரகங்களின் தசை நடக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு
உண்டாகும்.
இது மிகவும் அபூர்வமாக நேரிடக்கூடிய வாய்ப்பு. அப்படி அமைந்தால், அந்த
ஜாதகர் கடைசிவரை நிறைந்த செல்வத்துடன் வாழ்வார்கள்.
குருவும் கேதுவும் இணைத்திருக்கும் யோகம்
குருவும் கேதுவும் இணைந்திருக்கும் ஜாதகர்கள், திடீர்
யோகத்தால் கோடீஸ்வரராகத் திகழ்வார்கள். ஆனால், குருவும் கேதுவும் இணைந்திருக்கும் இடம்
குருவின் ஆட்சி வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருக்கவேண்டியது முக்கியம். மேலும் குருவும்
கேதுவும் கேந்திரத்திலோ அல்லது திரிகோணத்திலோ இணைந்திருக்கவேண்டும். அப்போதுதான்
சுப பலன்கள் உண்டாகும். கேதுவுக்கு குருவின் பார்வை ஏற்படுவதும்.
பாக்கியராஜ் ஜாதகம்
![]() |
Add caption |
பாக்கியராஜ் ஜாதகத்தில் குரு கேதுவை பார்க்கிறார்,வலுவான புதாத்திய யோகம் அமையப்பெற்றுள்ளது.லாபதியான செவ்வாய் எட்டாம் இடத்தில உச்சம் பெற்று காணப்படுகிறார்.
செய்யும் தொழிலால் கோடீஸ்வர யோகம்
கோடீஸ்வர யோகத்தைத் தரும். ஒருவர் தான் செய்யும் தொழிலால்
கோடீஸ்வரராக ஆகவேண்டுமானால், தொழில் ஸ்தானமான 10-ம் இடத்து அதிபதியும், லாப
ஸ்தானமான 11-ம் இடத்து அதிபதியும் சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தாலும், இரண்டு
கிரகங்களும் இணைந்து சுகஸ்தானமான 4-ம் வீட்டிலோ அல்லது 9-ம் இடமான
பாக்கியஸ்தானத்திலோ சுப பலம் பெற்று இருக்கவேண்டியது அவசியம். 10-ம்
இடத்துக்கு அதிபதி, 11-ம் இடத்துக்கு அதிபதி ஆகிய கிரகங்களுக்கு 4-ம் இடத்து
அதிபதியின் பார்வையோ அல்லது 9-ம் இடத்து அதிபதியின் பார்வையோ பட்டாலும் தொழில் மூலம் பெரும்
பொருள் சம்பாதிக்கமுடியும்.
பூர்வ புண்ணிய ஸ்தானம் மற்றும் சுக ஸ்தானம்
4-ம் இடத்துக்கு சுபகிரகத்தின் பார்வை
பட்டாலோ, 4-ம்
இடத்தில் லக்னாதிபதியோ, 2,5,9,11-ம் வீட்டுக்கு அதிபதிகள் இருந்தாலோ வாழ்க்கையில் செல்வ
சுகத்துக்குப் பஞ்சமே இருக்காது. பூர்வ புண்ணியஸ்தானமான 5-ம்
இடத்துக்கு அதிபதி, தனஸ்தானமாகிய 2-ம் இடத்துக்கு அதிபதி ஆகிய கிரகங்களின் தசா புக்திகள் சுபகிரகத்தின்
பார்வையுடன் நடைபெற்றால், செல்வமும் செல்வாக்கும் மிக்க வாழ்க்கை ஏற்படும்.
நன்றியுடன் -www.newlanka.lk
No comments:
Post a Comment