Search This Blog

Monday, May 15, 2017

நவ கிரஹங்களை வணங்க தமிழ் பாடல்கள்

நவ கிரஹங்களை வணங்க தமிழ் பாடல்கள்

Lord Surya Bhagavan

சூரியன் பகவான்

"காசினி இருளை நீக்கும் கதிரொளி ஆகியெங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை
நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரி வலமாய்
வந்த தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி"


இவ்வாறு சூரியநை வணங்குவதால் உடற்பிணி கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்கும். ஜாதகத்தில் கிரக தோஷமுள்ளவர்களும் மற்றும் சூரிய திசை நடப்பவர்களும் ஞாயிறு விரதமிருத்தல் வேண்டும். 


சந்திரன் பகவான்
Lord Chandra Bhagavan


"அலைகடல் அதனில் நின்றும் அன்று வந்துதித்த போது
கலைவளா திங்களாகிக் கடவுளென் றெவரும் ஏத்தும்
சிலை முதல் உமையாள பங்கன் செஞ்சடைப் பிறையாருமேரு
மலைவல மாதவந்த மதியமே போற்றி போற்றி''


ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றவர்கள் , தேய்பிறை சந்திரனிலில் பிறந்தவர்கள் சந்திர பகவானை தொடர்ந்து வண்ங்கி வரவேண்டும். சந்திரனை வழிபட ஆயுள் விருத்தியும் சகல செல்வ போகங்களும் பெறுவார்கள். 

செவ்வாய் பகவான்
Lord Sevvai Bhagavan

வசனநல் தைரியத்தோடு மன்னவர் சபையில் வார்த்தை
புசபல பராக்ர மங்கள போர்தனில் வெற்றி ஆண்மை
நிசமுடன் அவரவர்க்கு நீளநிலம் தனில் அளிக்கும்
குசன் நிலமகனாம் செவ்வாய் குரைகழல் போற்றி போற்றி''

ஜாதகத்தில் செவ்வாய் தோஷ உள்ளவர்கள் , செவ்வாய் நீச்சம் பெற்றவர்கள் செவ்வாய் பகவானை தொடர்ந்து வழி பட்டு வரவேண்டும். செவ்வாய் தோஷம் யுள்ள திருமணமாகாத கன்னி பெண்கள் செவ்வாய் கிழமைகளில் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம், வெற்றிலை போன்ற மங்கலப் பொருட்களை சுமங்கலிப் பெண்களுக்கு வழங்க வேண்டும்..


புதன் பகவான்
புதன் பகவான்

"மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம்
விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன்
திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல் கொடுக்க வல்லான்
புதன் கவி புலவன் சீர்மால் பொன்னடி போற்றி போற்றி''


ஜாதகத்தில் புத கிரஹம் நீச்சம் பெற்று காணப்பட்டாலும் , புத கிரஹம் மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் , புதன் கிழமைகளில் புதன் பகவானை வழி பட வேண்டும். புதன் விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவை பெருகும்.


குரு பகவான்
Lord Guru Bhagavan


"மறைமிகு கலைநூல் வல்லோன் வானவாக் கரசன்
மந்திரி நறைசொரி கற்பகப் பொன் நாட்டினுக் கதிபனாகி
நிறைதனம் சிவிகை மண்ணில் நீடு போகத்தை நல்கும்
இறையவன் குரு வியாழன் இரமலாப்பாதம் போற்றி''

ஜாதகத்தில் குரு  கிரஹம் நீச்சம் பெற்று காணப்பட்டாலும் , குரு  கிரஹம் மறைவு ஸ்தானங்களில் அமையப்பெற்றாலும் , குரு கிரஹம் கேந்திர ஆதிபத்திய தோஷம் அடைந்து காணப்பட்டாலும் , வியாழ கிழமைகளில் குரு பகவானை தொடர்ந்து வழி பட்டு வரவேண்டும். குரு தோஷமுள்ளவர்கள் மட்டுமின்றி ஏழ்மையில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், குடும்பத்தைப் பிரிந்தவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் அனைவரும் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.


சுக்கிரன் பகவான்
Lord Shukira Bhagavan


"மூர்க்கவான் சூரன் வாணன் முதலினோர் குருவாய்
வையம் காக்கவான் மழை பெய்விக்கும் கவிமகன் கனகம்
ஈவோன் தீர்கவா னவர்கள் போற்றச் செத்தவர் தமை எழுப்பம்
பார்க்கவன் சுக்கிரன் தன் பாத பங்கயங்கள் போற்றி! ''



சுக்கிர பகவானை தொடர்ந்து வெள்ளி கிழமைகளில் வழி பட ,செல்வங்கள் பெருகுவதோடு பாவக்கிரகங்களின் பார்வையினால் பலமிழந்திருக்கக்கூடிய சுக்கிர பகவான் தொல்லைகள் நீங்கப் பெற்று நற்பலன்களை அளிப்பார்.

சனீஸ்வரன்
Lord Sani Bhagavan

"முனிவர்கள் தேவ ரேமும் மூர்த்திகள் முதலினார்கள்
மனிதர்கள் வாழ்வும் உன்றன் மகிமையது அல்லால் உண்டோ
கனிவுள தெய்வம் நீயே கதிர்சேய காகம் ஏறுஞ்
சனியனே உனைத்துதிப்பேன் தமியேனுக் கருள் செய்வாயே!"

நவகிரங்களில சனி பகவான் மட்டும் ஈஸ்வரன் என்ற பட்டத்தை பெற்றுள்ளார். ஏழரை சனி , அஷ்டம சனி நடப்பர்வர்கள் சனி கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள்ளை துணியிலே கட்டி நல்லெண்ணெய் ஊற்றித் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 


ராகு பகவான்
Lord Rahu Bhagavan


"வாகுசேர் நெடுமான் முன்னம் வானவருக்கு அமுதம்
ஈயப்போகும் அக்காலை உன்றன் புணர்ப்பினால் சிரமே
அற்றுப்பாகுசேர் மொழியன் பங்கன் பரன் கையில் மீண்டும்
பெற்ற ராகுவே உனைத் துதிப்பேன் ரட்சிப்பாய் ரட்சிப்பாயே!''

ராகு தோஷமுள்ளவர்கள் சனிக்கிழமைகளில் இவ்விரதத்தை அனுசரிக்கலாம். 

கேது பகவான்:
Lord Kethu Bhagavan

"பொன்னையின் னுரத்திற் கொண்டேன் புலவர்தம்  பொருட்டால்
ஆழி, தன்னையே கடைந்து முன்னம் தண் அமுது அளிக்கல் உற்ற
பிள்ளை நின் கரவால் உண்ட பெட்பினிற் சிரம் பெற்றுயர்ந்தாய் என்னையாள் கேதுவே இவ்விருநிலம் போற்றத் தானே!"



ஜாதகத்தில் கேது நன்றாக அமையாதவர்கள் , செவாய்   கிழமை தோறும் வணங்கி வர செல்வம், ஞானம், வெற்றி, புகழ் அனைத்தும் வந்து சேரும். 

2 comments:

  1. Sir, Do you see kundli of individuals? If yes fee for the same?

    ReplyDelete
  2. Dear Mr Pandey , Sorry presently I am writing only research articles on Astrology and I am not doing individual horoscope reading for fees. Thanks R V Seckar

    ReplyDelete