இராமகிரி கால
பைரவர்
சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் (ஊத்துக்கோட்டை)
வழியில் இராமகிரி என்ற ஒரு கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தின் அருகே 1000 வருடம் பழமையான கோயில் உள்ளது. இந்தக்
கோயிலின் பிரதான மூர்த்தி கால பைரவர்.
கோயிலுக்கு வெளியே ஒரு தீர்த்தம் உண்டு. நந்தி வாயிலிருந்து
இந்த தீர்த்தத்திற்கு நீர் கொட்டுகிறது.
வருடத்தில் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது இந்த தண்ணீர் எங்கிருந்து
வருகிறது என்று இந்நாள் வரை யாருக்கும் புலப்படவில்லை.
நந்தி வாயிலிருந்து வரும் தண்ணீர் அருமையாக இருக்கிறது.
பிரும்மகத்தி தோஷம் விலக
ராமேஸ்வரம் பாதாள பைரவர்
ராமர் ராமேஸ்வரம் கோவில் சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது. அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க சிவபெருமான் பைரவரை அனுப்பினார்.
பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார். பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார். இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது.
No comments:
Post a Comment