Search This Blog

Friday, May 19, 2017

மகா ரிஷி அகத்தியர் அருளிய குழந்தை பேரு அருள் மந்திரம்

மகா ரிஷி அகத்தியர் அருளிய குழந்தை பேரு அருள் மந்திரம்

Agasthiar Maha Rishi

குழல் இனிது யாழ் இனிது என்பர்
மக்கள் தம் மழலை சொல் கேளாதோர்

என்றார் திருவள்ளுவர். நிறைந்த செல்வங்கள் இருந்தாலும் வீட்டில் ஒரு குழந்தை இல்லை என்றில் அதைவிட கொடுமை வேறுஒன்றும் இல்லை.

சிலருக்கு குழந்தை தாமதாக பிறக்கிறது. சிலருக்கு  குழந்தை  பாகியமே இல்லாமல் போகிறது. சிலருக்கு திருமணமாகி பல ஆண்டுகள் கழித்து  குழந்தை பாககியம் ஏற்படுகிறது. குழந்தை திருமணமானவுடன்  பிறக்காவிட்டால் , பெற்றோர் மற்றும் உறவினர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது.

சுவீகார புத்ர யோகம்

கன்னி அல்லது மிதுன லக்கினமாக இருந்து 5ல் சனி , செவ்வாய் இருந்து  புதனின் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருப்பது. ஜாதகருக்கு குழந்தை பாக்கியம் இல்லை சுவீகார புத்ரன் உண்டு.

Pulipani Rishi


புலிப்பாணி முனிவர் சொல்லும் அன்னியபீசம்

பாரப்பா பனிரெண்டில் மதியும்நிற்கப்
பகருகின்ற பவுமனுமே மதிக்குயெட்டில்
சீரப்பா செவ்வாய்க்கு யெட்டிதீயர்
சிவசிவா சென்மனுமோ அன்னியபீசம்
ஆரப்பா அயன்விதியை அரையலாமோ
அப்பனே அனலனொடு குளிகன் சேர்ந்து
கூறப்பா குடியிருக்க அட்டமத்தில்
கொற்றவனே அவைபோலே கூறுவாயே.


இன்னொரு சேதியையும் நீ கேட்பாயாக! 2ஆம் இடத்தில் சந்திரன் நிற்க மதிக்கு எட்டில் அந்த செவ்வாய் நிற்க அச் செவ்வாய்க்கு எட்டில் தீக்கோள்கள் நிற்பினும் சிவபரம் பொருளின் பேரருட் கருணையால் அச்சாதகன் அன்னியபீசம் என்றே கூறுக. அதேபோல் பிரமன் படைப்பின் விந்தை இன்னுமொன்றுளது. சூரியனோடு குளிகனும் இலக்கினத்திற்கு அட்டமத்தில் கூட அச்சாதகன் அன்னிய பீசமே என்று கூறுக. 

Pulipani Rishi


புலிப்பாணி சித்தர் சுமார் 3000 வருடங்குளுக்கு முன் வாழ்ந்தவர் ஆவர். அவர் அந்நிய பீசம் பற்றி அருமையாக 3000 வருடங்குளுக்கு முன்பே  கூறியுள்ளது மிகவும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. அன்னியபீசம் என்பது சோதனை குழாய்  குழந்தை அல்லது வாடகை தாய் மூலம் குழந்தை குழந்தை  பேரு ஏற்படுவது.




மகா ரிஷி அகத்தியர் அருளிய குழந்தை பேரு அருள் மந்திரம்

Agasthiar Maha Rishi


குழந்தை உடனே பிறக்க அகஸ்தியர் மகா ரிஷி தனது  அகத்தியர் பரிபூரணம் என்ற நூலில் கீழ்கண்ட முறைகளை பாடலாக அருளியுள்ளார்.

இருந்துகொண்டு குருபரனை த்யானம்பண்ணி
இன்பமுடன் ஓம்ரீங் அங்வங்கென்று
வருந்தி மனம்கனிவதனால் தேனில் மைந்தா
மார்கமுடன்  ஆயிரத்தெட்டு உருவே செய்து
அருந்தவமாய் தலை முழுவும்போது மையெந்த
அன்புடன் பெண்களுக்கு ஈய்ந்தனால்
திருந்தி அந்த மங்கைற்கு கெர்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைய் கான்பாரே

மலடு நீக்கும் ரஹஸ்யம்

பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் யென்பதுவுக்குள் கற்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானுகும்
நேர்மையுள்ள ரஹஸ்யமிது சந்தான வித்தை   
ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி
அறிந்துமன துரிமையான லடக்கம்பண்ணி
சாரப்ப சாகரத்தில் தவுசுபண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே

அகஸ்தியர் அருளிய மேலே சொன்ன பாடல்களின் விபரம்

வெள்ளிக்கிண்ணம் ஒன்றில் தேனை முழுமையாக நிரப்பிடுதல் வேண்டும்.  தேன் நிறைந்த அந்த கிண்ணத்தை வலது  கையில் வைத்து கொள்ள வேண்டும்.   குழந்தை இல்லாத நபர் கிழக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த வெள்ளிக்கிண்ணத்தில் உள்ள தேனை நோக்கி கீழ்ச்சொன்ன மந்திரத்தை  1008 தடவை குழந்தை பேரு இல்லாத தம்பதியின் கணவரே  மனம் சிதறாமல்  சொல்ல வேண்டும்.

ஓம் ரீங் அங் வங்

அப்படி மந்திரம் உருவேற்றிய தேனை குழுந்தை பேரு இல்லாத மனைவியானவள் தன் மாதவிலக்கு முடிந்து தலை குளித்த பின் அருந்த வேண்டும்.   பின் தொடர்ந்து தாம்பத்திய உறவில் ஈடுபட்டு வரவேண்டும்.

இப்படி செய்தல் கண்டிப்பாக எண்பது நாட்குளுக்குள் கரு தரிக்கும் என்று என் குருநாதர் அகஸ்தியர் மகா ரிஷி கூறுகிறார். இந்த சிகிச்சை முறைக்கு எந்தவித பத்திய முறையும் இல்லை. 

இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளு முன் குருநாதர் அகஸ்தியர் மகா ரிஷி மற்றும் அவர்களின் குல தெய்வத்தையும் வணங்கி ஆரம்பிக்க வேண்டும்.


அன்புடன் ஆர் வீ சேகர்

No comments:

Post a Comment