Search This Blog

Monday, May 22, 2017

புலிப்பாணி முனிவர் சொல்லும் சன்யாச யோகம்

புலிப்பாணி முனிவர் சொல்லும் சன்யாச யோகம்

Pulipaani Rishi


பொதுவாக ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமலே கடைசிவரை தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்து இறந்து விடுவர். வேறு சிலர் தனது குடும்பத்தையும் துறந்து , தனது சுக இன்பங்களையும் மறந்து இறைப்பணிக்காக இல்லற வாழ்க்கையை விட்டு துறவறமென்னும் சன்யாசத்தை ஏற்படுத்திக்கொள்வர். இவையெல்லாம் முன் ஜென்ம கரும பலன்களே. அதாவது பூர்வ புண்யம் என்பர்.
புலிப்பாணி முனிவர் சொல்லும்சன்யாச யோகம்

கேளப்பா ஈரைந்தில் முகோள் நிற்க
கெதியுள்ள சன்னியாசி யோகம்யோகம்
ஆளப்பா அத்தலதில் இருகோள் நிற்கில்
அப்பனே தபசியடா யோகிஞானி
கூளப்பா ஒரு கோளும் குணமாய்நிற்கில்
குவலயதில் புனிதனடா ஞானியோகி
வீளப்பா விண்ணுலகத் தேவரோடு
விதமாக வீற்றிருப்பான் ரிஷிகளோடே


இன்னுமொரு கருத்தைக் கூறுகிறேன் கேட்பாயாக! இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்பர். அதே பத்தாம் இடத்தில் இரண்டு கிரகங்கள் இருப்பின் தபசியாகவும், யோகியாகவும், ஞானியாகவும் இருப்பான். மற்றும் அதே இடத்தில் ஒரு கோள் பலம் பெற்று குணமாக இணக்கத்துடன் நின்றால் அவன் அந்நிலவுலகில் புனிதனாகவும் ஞானியாகவும் யோகியாகவும் விளங்குவதோடு விண்ணுலகில் உள்ள தேவர்களோடு சகல வரிசைகளுடன் ரிஷிகளின் கூட்டத்துடன் உடன் உறைவான். 

Sri Ramanuchariar

வைணவப் பெரியார் 
ராமானுஜச்சாரியாரின் ஜாதகம்




புதன் சுக்கிரன் சூரியன்
ராகு
சந்திரன்
குரு



ராசி
லக்கினம்



செவ்வாய்


சனி

கேது



3000 வருடங்குளுக்கு முன்னர் வாழ்ந்த புலிப்பாணி ரிஷி கூறியது படி இலக்கினத்திற்குப் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் நிற்க கெதிதருகின்ற சன்னியாசி யோகம் என்று கூறியது வியப்பை தருகிறது.

ராமானுச்சாரியாரின் ஜாதகநிலையில் பத்தாமிடத்தில் மூன்று கிரகங்கள் புலிப்பாணி ரிஷி கூறியது படி ராமானுச்சாரியார் இல்லறத்தை விட்டு துறவறத்தை மேற் கொள்ள நேர்ந்தது.

 அவ்வாறு இல்லறத்தை விட்டு துறவறத்தை கொண்ட வைணவப்பெரியார் ராமானுச்சாரியாரின் ஜாதநிலையில் உள்ள கிரககங்கள் ஒரு பார்வை.

Sri Ramanuchariar


பதினொன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவப் பெரியார்.உதாரண ஜாதகத்தில் திருமணம் ஆகாமலே சன்யாச வாழ்க்கை வாழ்ந்த ராமானுஜச்சாரியாரின் ஜாதக கிரகநிலைகள் :

1.    சந்திரனுக்கு நான்காம் அதிபதி புதன் சுக்கிரனுடன் இணைந்திருப்பது.
2.    சந்திரன் , குரு இணைந்து சனியினால் சமசப்தமாக பார்க்கப்படுவது.இங்கு குரு , சனி இணைப்பு சன்யாச யோகத்தை தந்தது.
3.    சூரியன் உச்சம் பெற்று 3-12 க்கு அதிபதி புதன் 4-11 க்கு அதிபதி சுக்கிரனுடன் இணைந்து 10- ல் இருப்பது இறவாப் புகழ் பெற்ற சன்யாச யோகமாகும்.
4.    புலிப்பாணி கூறியபடியே ஜீவனஸ்தானத்தில் மூன்று கிரஹங்கள் அமையப்பெற்றதால், ராமானுஜர் சன்யாச வாழ்க்கை மேற்கொள்ள நேர்ந்தது.
5.    குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் அமையப்பெற்றதும் , ஏழாம் அதிபதியான சனி  பகவான் ல் மறைந்துகாணப்பட்டதால் அவருக்கு சந்நியாசி ஆகும் நிலை ஏற்பட்டது.

Sri Gautama Buddha


ஸ்ரீ கௌதம  புத்தரின்  `ஜாதகம்




சுக்கிரன் சூரியன் குரு
சனி செவ்வாய்

புதன்
ராகு



ராசி
லக்கினம்




கேது

சனி


சந்திரன்



ஸ்ரீ கௌதம  புத்தரின்  ஜாதகத்தில் கர்ம ல்ஸ்தானமான 10 ம் இடத்தில  5 கிரஹங்கள் அமையப்பெற்றதால் திருமனானாலும் அவர் சன்யாசி ஆக வாழ நேரிட்டது.

கடக லக்கினத்தில் பிறந்து ஜீவன ஸ்தானமான 10ம் இடத்தில ஒன்றுக்கு மேற்பட்ட ராஜ கிரகங்கள் அமையப்பெற்றால் அவர் சன்யாசியாக வாழ்வர் என்று புலிப்பாணி அடித்து சொல்கிறார். 

ஆன்மிக யோகம்- சனியும் குருவும் எந்தவிடத்திலாவது சம்பந்த பெற்றிருப்பது சேர்க்கை பார்வை பரிவர்த்தனை- தெய்வீகம் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு- ஸ்ரீ கௌதம  புத்தரின்  ஜாதகத்தில் கர்ம ல்ஸ்தானமான 10 ம்  இடத்தில் குருவும் சனியும் சேர்க்கை பெற்றிருப்பது அவருக்கு சன்யாச யோகம் அமையகரணமாய் இருந்தது.

10 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. என்னுடைய ஜாதகத்தில் 7-ம் இடத்தில் ஐந்து கிரகங்கள் உள்ளது இதில் புதன் நீட்சபங்கம் பெற்றுள்ளது (கன்னி லக்னம்) நான் சந்நியாசி ஆகி விடுவேனா....பதிலுக்காக காத்திருக்கிறேன் நண்பரே.....

    ReplyDelete
    Replies
    1. ஆம், சந்நியாசி தான்

      Delete
    2. Hahaha nerya connection erukum

      Delete
  3. Mistake in chart.. how Sani is in mesha and Dhanu ??

    ReplyDelete
  4. Enaku suriyan, Chandran, sevvai in 10the place. Three planets are joined in tenth place. Sanniyasi yoga ma?

    ReplyDelete
    Replies
    1. Yenakku two planets 10 th place santhiran suriyan me mesha lagnam 12 l sani 9 l puthan sukran athu illaaama 10 vathu veetu tha my jenma rasiyum

      Delete
  5. Yenakku mesha lagnam makara rasi 5 il ragu 9 il sukran puthan 10 il santhiran suriyan,11 il kuru sevvai,kethu and 12 il sani naa sanniyaasi yaaa pls sollunga

    ReplyDelete
  6. எனது ஜாதகத்தில் நான்காம் வீட்டில் ஐந்து கிரகங்கள் சேர்ந்து உள்ளன எனக்கும் சந்யாச யோகம் உண்டா தனுசு லக்கனம்

    ReplyDelete