Search This Blog

Wednesday, May 24, 2017

பகவான் ஸ்ரீ ராமர் ஜாதகம்- ஒரு ஆய்வு- Shree Ramar Jathagam

பகவான் ஸ்ரீ ராமர் ஜாதகம்- ஒரு ஆய்வு

பகவான் ஸ்ரீ ராமர் கி.மு. 5114ம் ஆண்டு   பங்குனி மாதம், வளர்பிறை நவமி,புனர் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்.

*கடக லக்கினம்.லக்கினாதிபதி சந்திரன் லக்கினத்திலேயே ஆட்சியாக உள்ளார்.இது மிகப்பெறும் வலுவாகும் மேலும் கடக லக்கினம் ராஜ லக்கினமாகும்.

Shree Ramar doing bramahathi Dosham


ஸ்ரீ ராமர் ஜாதகம்


சுக்கிரன்
சூரியன் புதன்






கேது



ராசி சக்கரம்
லக்கினம்
குரு
சந்திரன்

செவ்வாய்



ராகு



சனி


ராமர் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம்

*ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருகிரகம் உச்சம் பெற்றால் அவன் ஊரில் முக்கியமானவனாக இருப்பான் எனக்கூறப்பட்டுள்ளது பகவான் ராமருக்கோ ஐந்து கிரகங்கள் உச்சம். *ஜோதிட யோகங்கள் அனைத்தும் இந்த ஜாதகத்தில் உள்ளன.

.
ராமர் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

குருசந்திர யோகம்
சந்திரன் குருவுடன் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்துஇருப்பதால்
குரு மங்கள யோகம்
குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது

கஜகேசரி யோகம்,
சந்திரன் குருவுடன் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்துஇருப்பதால்
கேந்திர யோகம்
நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் அமர்ந்திருப்பது
தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் குருவும் புதனும் ஒருவரை ஒருவர் சமசப்தமாக பார்ப்பது
ராஜ யோகம்
9ம் அதிபதி குரு 9ம் இடத்தை பார்வையிட்டு உச்சம் பெற்றிருப்பது
புத ஆதித்ய யோகம்
சூரியனும் புதனும் ஒன்று கூடி இணைந்திருப்பது 
சசயோகம்
சனி பகவான் உச்சம் பெற்று கேந்த்ரா ஸ்தானமான 4ம் வீட்டில் இருந்தது 

கம்ப இராமாயணத்தில் வரும் ராமரின் பிறப்பு கிரஹ நிலை

ஆயிடை. பருவம் வந்து அடைந்த எல்லையின்.
மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட.
வேய் புனர்பூசமும். விண்ணுளோர்களும்.
தூய கற்கடகமும். எழுந்து துள்ளவே.

ஆயிடை   பருவம் வந்து அடைந்த எல்லையின் - அப்போது.
மகப்பேற்றுக்குரிய   பருவம்  வந்து  சேர்ந்த  அந்தக்காலத்தில்;  மா
இரும்மண்   மகள் மகிழ்வின்  ஓங்கிட  -  மிகப்பெரிய  நிலமகள
மகிழ்ச்சியில் ஓங்கவும்வேய்புனர் பூசமும் -  பொருந்திய ‘புனர்பூசம்’

என்னும்  விண்மீனும்;  விண்ணுளோர்களும்  -  வானுலகில்  வாழும

தேவர்களும்;  தூயகற்கடகமும்  -  தூய்மையானதாகிய கடக ராசியும்;
எழுந்து துள்ள - (மகிழ்ச்சியினால்) எழுந்து துள்ளி ஆடவும். மேற்சொன்ன பாடலில்   கம்பர் ராமன்  அவதரித்த  நாள்  புனர்பூசம்.  ராசி கடகம்என்று தெளிவாக குறிப்பிடுகிறார்.
Shree Ramar Pattabishekam


ராமர் ஜாதகத்தில் கிரஹங்கள் பார்வை

*லக்கினத்திலேயே உச்சம் பெற்ற குருவும்,ஆட்சி பெற்ற சந்திரனும் இருப்பதால் முகம் ராஜகளையாக இருக்கும் இருந்தாலும் உச்சம் பெற்ற சனி நான்காம் இடத்திலிருந்து 10-ம் பார்வையால் லக்கினத்தை பார்ப்பதால் எல்லோரையும் கவரக்கூடிய நீல வர்ணத்தில் இருந்தார் .

*8-ல் சுக்கிரன் உச்சம் பெற்று உள்ளார். சுயம்வரத்தில் தானே விரும்பி தகுதியான மனைவியை அடைந்தார்.

*7-மிடத்தை குருவும்,சந்திரனும் பார்ப்ப்தால் மனைவி சீதா பேரழகியாக இருந்தார்.
Shree Ramar Pattabishekam

*7-ல் செவ்வாய் இருந்து,6-மாதிபத்தியம் பெற்ற குரு பார்த்ததால் மனைவியை பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டது. *உச்சம் பெற்ற கிரகத்தை உச்சன் பார்த்தால் நீச பவர் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.இதன் பலனை ராமரும் அனுபவித்தார். *7-மாதிபதி சனி உச்சம் பெற்று அந்த இடத்தில் செவ்வாயும் உச்சம் பெற்றதால் அந்நிய நண்பர்களாலும்,நபர்களாலும் ஏகப்பட்ட உதவிகள் கிடைத்தன.

*6-மாதிபதி குரு உச்சம் பெற்று லக்கினத்திலேயே இருப்பதால் எப்போதும் எதிரிகள் ருப்பார்கள் இருந்தாலும் அவர் பாக்கியாதிபதி ஆனாதால் எதிரியாலும் நன்மை உண்டு.

 *என்னதான் இவர் ஜாதகம் மிகவும் வலுவாக ராஜயோக அமைப்பாக இருந்தாலும்,யோகாதிபதி திசை புக்திகள் இவருக்கு வரவே இல்லை என்பது உண்மையாகும் அதனால்தான் காட்டில் வாழ்தல்,மனைவி பிரிந்து வாடுதல்,போர் செய்தல்,மகன்களுடன் கருத்து வேறுபாடு, என பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிட்டது.

ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் 5 கிரஹங்கள் உச்சம் பெற்றிருந்தும் , பல யோகங்கள் அமைந்துரைந்தாலும் , அரச குலத்தில் பிறந்தாலும் அவர் 14 வருடங்கள் வனவாசம் செய்ய நேரிட்டது  - மனிதனா பிறந்தால் கடவுள் கூட கர்ம வினைகளிருந்து தப்ப முடியாது என்பதை உணர்த்துகிறது.

ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஸ்ரீ ராமர் ஜாதகம் - பூஜை அறையில் வைத்து வழிபட்டால் , ஜாதகரீதியாக கெடு பலன்கள் குறைந்து குடும்பத்திற்கு சுபீக்ஷம் ஏற்படும்.
Shree Ramar Pattabishekam

கம்பர், சுந்தர காண்டத்தில் இதைத்தான் சொல்கிறார்.
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவுஎனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபா டுற்ற வீக்கம்
கலங்குவ தெவரைக் கண்டால்
அவர்என்பர் கைவி லேந்தி
இலங்கையில் பொருதா ரன்றே
மறைகளுக் கிறுதி யாவார்!

`அலங்கல்’ என்றால் மாலை. `அரவு’ என்றால் பாம்பு. அலங்கலில் தோன்றும் பொய்ம்மை அரவு மாலையில் தோன்றும் பாம்பு என்ற மெய்யான எண்ணம். இது போலப் பஞ்சபூதங்கள் ஒன்று சேர்ந்து பொய்யான பிரபஞ்சம் என்ற வீக்கிமாகி மயக்குகிறதே. அது யாரைக்கண்டால் விலகிப் போய் மாலையான ஈசுவரன் மட்டும் தெரியுமோ அவர்தான் ராமச்சந்திர மூர்த்தி என்றார்.

ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.

6 comments:

  1. அய்யா சிறு சந்தேகம் ராமர் அவதரித்த மாதம் பங்குனி தானே தாங்கள் சித்திரை என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.சித்திரை மாதத்தில் ஸ்ரீ ராம நவமி வருவதில்லை அதான் கேட்டேன்.

    ReplyDelete
  2. மிக்க நன்றி பங்குனி என்று திருத்தியுள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. சந்திரனை அடிப்படையாகக் கொண்ட ஜாதகத்தில் ஆடி அமாவாசை முடிந்த அடுத்த நாள் ஆவணி மாதம் துவங்கி விடுகிறது எனவே ஆவணி அவிட்டம் ஆடி மாதத்திலேயே வந்து விடும் அதேபோல பங்குனி மாசத்திலே அமாவாசை முடிந்தவுடன் சித்திரை மாசம் துவங்கிவிடும் அதனால் நவமி சித்திரை நவமியாகத்தான் தெலுங்கு பஞ்சாங்கங்களில் இருக்கும் அதனால் தான் முன்கூட்டியே வருவது போன்று நமக்கு ஒரு நினைப்பு ஆனால் விசேஷங்கள் எல்லாம் தெலுங்கு பஞ்சாங்கத்தின் அடிப்படையிலே சந்திரனை அடிப்படையாக வைத்து தான் நடத்தப்படுகிறது எனவே சித்திரைதான் நவமி தான் ராமர் பிறந்தது

      Delete
  3. sooriyan meshaththil ullar . chiththiraithaan

    ReplyDelete
  4. Ramanavami is in Chithirai. Please correct it.

    ReplyDelete
  5. உறவினர்கள் ஜாதகம் வீட்டில் வைத்திருப்பது சரியா?

    விளக்கம் அளிக்க வேண்டும்

    ReplyDelete