Search This Blog

Thursday, May 25, 2017

மாங்கல்ய தோஷம் என்றால் என்ன ?

மணமகன் தாலி கட்டும் முன் மணவறையில் இறந்தது ஏன் ?


சமீபத்தில் திருமண நடைபெற்ற பின் மயிலம் முருகன் கோயிலுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரின் தந்தையும் விபத்தில் இறக்க நேரிட்டது. பெங்களூரில் மணப்பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவதற்கு முன்  மணமகன் மாரடைப்பால் மணவறையில்  உயிரிழந்தார். குஜராத்தில் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் மணமகன் இறக்கநேரிட்டது. இந்த மாதிரியான துயர சம்பவங்கள் நிகழகாரணம் என்ன ?

மணமகளுக்கு தார அல்லது செவ்வாய் தோஷம் அமைந்து இருந்து மணமகன் ஜாதகம் சுத்த ஜாதகமாக அமையப்பெற்றாலும் மற்றும் மணமகன் ஜாதகத்தில்  தார அல்லது செவ்வாய் தோஷம் அமையப்பெறவில்லையானாலும் , அப்படிப்பட்ட ஜாதகங்களை இணைத்தாலும் இப்படி பட்ட துயர சம்பவங்கள் நடைபெறுகின்றன..

Tying knot at a Marriage


மாங்கல்ய தோஷம் என்றால் என்ன ?

அங்காரகன் என்ற செவ்வாயால் ஏற்படக்கூடிய தோஷம், மாங்கல்ய தோஷம். விஷக்கன்யா தோஷம், களத்திர தோஷம், சர்ப்ப தோஷம், சூரிய  தோஷம், புனர்பூ தோஷம், இவற்றுள் செவ்வாய் தோஷம், சர்ப்ப தோஷம், மாங்கல்ய தோஷம் ஆகியவை மிக முக்கியமானவை.

மாங்கல்ய தோஷம், பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்க தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் மாங்கல்ய தோஷம் என்கிறோம். ஒருவருடைய லக்னத்தில் இருந்து 8-ஆம் இடம் தான், மாங்கல்ய ஸ்தானம்.

Mangalya Dosham

இதில் சூரியன், செவ்வாய், சனி , ராகு, கேது ஆகிய கிரகங்கள் இருப்பது நல்லதல்ல. 8-ஆம் இடத்தில் மேலே சொன்ன 5 கிரகங்கள் இருந்து, அந்த இடம், அக்கிரகங்களின் சொந்த வீடாக, உச்சம் பெற்று இருந்தால் தோஷம் குறையும். அவ்வீட்டில் குரு, சுக்கிரன் பார்வை இருந்தால், தோஷம் விலகும்.
ஏன் திருமண பொருத்தம் முக்கியம் ?

ஆண் பெண் இருவருக்கும் இதே மாதிரியான அமைப்பு இருந்தால் (தோஷ  ஜாதகமாக) , இவர்கள் இணை பிரியாத தம்பதியர்களாக, நீடித்த ஆயுளுடன், இன்பமான வாழ்க்கை வாழ்வார்கள். தோஷ ஜாதகத்தை தோஷ ஜாதகத்துடன் தான் இணைக்கவேண்டும். ஆனால் , மணமகள் ஜாதகம் தோஷ  ஜாதகமாக அமைந்து , மணமகன் ஜாதகம் சுத்த ஜாதகமா அமையப்பெற்றால் மணமகனுக்கு ஆயுள் அரிஷ்டம் ஏற்படுகிறது.

Thirumana Porutham

அதுபோல் , மணமகளுக்கு செவ்வாய் தோஷம் இருந்து மணமகனுக்கு இல்லையானால் , அப்படிப்பட்ட ஜாதகத்தை இணைத்தால் , மணமகனுக்கு திருமணத்திற்கு முன்போ அல்லது பின்போ ஆயுள் அரிஷ்டம் ஏற்படுகிறது.

எதனால் மணமகனுக்கு அற்ப ஆயுள் நிலை ஏற்படுகிறது ?


பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், களத்திர தோஷம், ராகு கேது தோஷம், புத்திர தோஷம் போன்ற தோஷங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படியே அமைந்து விட்டாலும் அதே போன்ற தோஷமுள்ள வரனாக பார்த்து ஜோடி சேர்த்தால் தான் வாழ்க்கை மகிழ்ச்சியளிக்கும். இல்லையென்றால் வாழ்க்கையே போராட்டமாகிவிடும்.

உதாரணமாக, மேஷ லக்ன பெண்ணுக்கு 7க்குரிய சுக்ரன் 6ல் நீசம். அந்த சுக்ரனே 2ம்இடமாகிய குடும்ப ஸ்தானத்துக்கும் அதிபதி அவர் 6ல் நீசமானதாலும் 7ல் 12மிட,9மிட அதிபதி குரு ராகுவுடன் சேர்ந்து அமர்ந்தது. 8மிடத்துக்கு அதிபதி செவ்வாய் குடும்ப ஸ்தானத்தில் அமரந்து 8மிடம் பார்வை இட்டதால் தாரம் நிலைக்கவில்லை

காரகோ பாவ நாஸ்தி

Karogo Bhava Naasti

களத்திரகரான சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில்  7ம் இடத்தில் அமையப்பட்டிருந்தால் , அந்த பெண்ணுக்கு எளிதில் திருமணம் நடைபெறாது. இப்படிப்பட்ட தோஷ ஜாதகத்தை சுத்த ஆண் ஜாதகத்தை  இனைக்கும்பொழுது , மணமகனுக்கு அற்ப ஆயுள் உண்டாகிறது.

செவ்வாய் தோஷம்

Chevvai Dosha

லக்கனம், சந்திரன், சுக்கிரன் முதலியவைகளுக்கு 2,4,7,8,12, ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷ ஜாதகமாக கருத வேண்டும். அப்படி மீறி திருமணம் செய்தால் செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு செவாய் தெசை நடைபெற்றால் அக்காலத்தில் துணைவர் துணைவியை இழக்க வேண்டிய நிலை வரும் என சோதிடம் கணிக்கிறது.
பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் அமையப்பெற்று ஆணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்றால் , அப்படி பெற்ற ஜாதகத்தை இணைக்கும் பொழுது , ஆணுக்கு அகால திருமணத்திற்கு பின் ஏற்ப்படுகிறது. செவ்வாய் தோஷத்திற்கு பல விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. திருமண பொருத்தத்திற்கு இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
Lord Chevvai Mangal


விதவைப் பெண்

v  7ம் இடத்தில் உள்ள செவ்வாய் சூரியன் சேர்கை பெற்றால் அவள் விதவையாவாள்.

இடு கதிர் செவ்வாய் கூடி
எங்கு நின்றாலும் இரு தாரம்தானே

என்கிறது ஒரு சோதிட பாடல்.

v  மூன்று அசுபர்கள் 7ம் இடத்தில் அமையப்பெற்றால் அந்தப் பெண் மாங்கல்ய பலம் இழந்து விடுவாள்.

v  8ம் இடமான மங்கல்ய ஸ்தானத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது, போன்ற அசுபர்கள் அமையப்பெற்றாலும் விதவையாகி விடுவாள்.

v  7ம் இடத்தில் சனி, செவ்வாய் போன்ற அசுபர்கள் இணைது இருதால் இளவயதில் மாங்கல்ய பலம் இழ்க்க நேரிடும்.


வாழை மரத்திற்கு தாலி கட்டும் சம்பிரதாயம் ஏன்?

Vaazhai Marathirku Thaali Katum Sampradayam


பெண்ணுக்கு தோஷம் இருந்து ஆணுக்கு இல்லை எனில் , அப்படி பட்ட ஜாதகத்தை இணைக்கவே கூடாது. ஆனால் , காதல் திருமணம் என்றால் , கீழ்கண்ட  பரிகாரத்தை செய்து திருமணம் செய்து கொள்ளலாம்.

ஒரு பிள்ளை பெற்றால் உடனே செத்தாள் அந்த உத்தமி யார்’ என்று வாழையைக் கூறுவார்கள். வாழைக்குத் தெய்வ குணமும், பெண்ணின் குணமும் உள்ளது.

அதனால்தான் வாழைக்கு தாலி கட்டினால் களத்திர தோஷம் மற்றும் தார தோஷம் ஆகியவை நீங்கிவிடும் என்று கூறப்படுகிறது.

வாழையை பெண்ணாக எண்ணி, வாழைக்கு தாலி கட்டினால் ஒரு மனித பெண்ணைத் திருமணம் செய்யும்போது அதில் மண முறிவு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

ஒரு சிலருக்கு ஜாதகத்தில் இரண்டு திருமணம் இருக்கும். இவர்களுக்கு இதுபோன்று செய்வது சிறந்தது.

அதாவது ஒருவருக்கு 8ம், 9ம் துணைவிக்கான ஸ்தானம். இந்த இடங்களில் பாவ கிரகங்கள் உட்கார்ந்திருந்தாலோ, சுக்கிரனை பாவ கிரகங்கள் பார்த்துக் கொண்டிருந்தாலோ அவர்களுக்கு தார தோஷ ஜாதகம் என்று கூறுகிறோம். தார தோஷம் என்றால் இவர்களுக்கு இரண்டாவது மனைவி உண்டு. அவர்கள் வாழைக்கு தாலி கட்டி வெட்டிவிட்டு, பிறகு திருமணம் செய்து கொண்டால் இரண்டாவது திருமணம் என்ற கணக்கு வந்துவிடும்.


No comments:

Post a Comment