Search This Blog

Tuesday, June 27, 2017

வாழ்க்கையில் போராட்டமா? உங்கள் வீடு வாஸ்து முறைப்படி உள்ளதா? How to Rectify Vaasthu Defects ?

வாழ்க்கையில் போராட்டமா? உங்கள் வீடு வாஸ்து முறைப்படி உள்ளதா?

Vasthu Directions

மஹாபாரதத்தில் வாஸ்து

துரியோதனன் தன் செல்வ செழிப்பை காண்பதற்காக ஒரு பெரிய மாளிகையை கட்டினான். அந்த மாளிகையை பார்ப்பதற்காக பாண்டவர்களை அழைத்தான். அந்த  மாளிகையில் வாஸ்து சாஸ்திரத்திற்கு புறம்பாக பல அறைகளை கட்டியிருந்தான். ஓரிடத்தில் தண்ணீர் கூடுவது போன்று இருக்கும். அங்கே பாண்டவர்கள் மிக கவனமாக வருவார்கள். ஆனால் தண்ணீர் ஏதும் இல்லாதால் ஏமாற்றம் அடைவார்கள் . இன்னொரு இடத்தில் தண்ணீர் ஏதும் இல்லாமல் இருக்கும். அங்கு பாண்டவர்கள் வழுக்கி விழுவார்கள் . கொவுரவர்கள் அவர்களை பார்த்து எள்ளி நகையாடுவார்கள். வாஸ்த்துக்கு புறம்பான மாளிகை கட்டி அதில் வசித்ததால் கொவுரவர்களின் வீழ்ச்சி ஆரம்பமாயிற்று என்கிறது மஹாபாரதம்.

வாஸ்து சரியாக இல்லை என்றால் அந்த வீட்டின் சொந்தக்காரர் பல்வேறு தொந்தரவுகளையும் சங்கடங்களையும் சந்திக்க நேரிடும். வேலை இழத்தல் , தொழில் போராட்டம் , உடல்நிலை சீர்கேடு , கணவன் மனைவி கருத்து வேறுபாடு , குழைந்தைகளின் வாழ்வில் போராட்டம் , மனநிம்மதியின்மை , பணத்தட்டுப்பாடு , கடன் சுமை போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெறும்.

அட்ட திக்குப் பாலர்கள்


 எட்டுத்திசைகளுக்கும் அதிபதியான தேவர்கள்

கிழக்குத் திசை
ஆதித்தன்
மேற்குத் திசை
வருணன்
வடக்குத் திசை
குபேரன்
தெற்குத் திசை
இயமன்
வடமேற்கு திசை
வாயு
வடகிழக்கு திசை
ஈசன்
தென்கிழக்கு திசை
அக்னி
தென்மேற்கு திசை
பித்ரு 

asta thikku Balagargal


வாஸ்து புருஷன்  உருவகம் குறியீட்டு வடிவில் தரப்படும்போது, வடகிழக்கில் தலையும், தென் மேற்கில் காலும் இருக்க வாஸ்து புருஷ மண்டலத்தைக் குப்புறப் படுத்தபடி ஆக்கிரமித்திருக்கும் ஒரு ஆண் உருவமாக வாஸ்து புருஷன் விவரிக்கப்படுகிறார்.

vaasthu Sasthiram

வாஸ்து முறைப்படி  எந்த திசையில் என்ன அமைக்கலாம்?

திசை
எந்த திசையில் என்ன அமைக்கலாம்
எந்த திசையில் என்ன அமைக்க கூடாது
என்ன பலன்கள் ஏற்படும்
படுக்கை அறை 
தென்மேற்கு திசைஇருக்க வேண்டும்.
தூங்கும் போது தலை தெற்கு அல்லது மேற்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
கண்டிப்பாக வடகிழக்கு திசையில் தூங்கக் கூடாது

குளியலறை மற்றும் கழிப்பறை
மேற்கு அல்லது கிழக்கு திசையில் இருக்க வேண்டும்
கண்டிப்பாக வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்கக் கூடாது.
வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருந்தால் வீட்டில் பணம், உடல்நிலை மற்றும் கல்வியில் தடைகள் ஏற்படும்
தென் மேற்கு, வடக்கு, வட கிழக்கு, தென் கிழக்கு திசைகளில் 
வெட்டு அல்லது வளைவுகள் இருக்கக்கூடாது

ஆக வீட்டில் நிம்மதி இருக்காது. பண புழக்கம் தடை ஏற்படும்
பணம் வைக்கும் பீரோவை 

வடகிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் வைக்கக் கூடாது
பண புழக்கம் தடை ஏற்படும்
ஈசான்ய மூலை வடகிழக்கு
பூஜை ரூம், வரவேற்பு அறை, கிணறு, ஆழ்குழாய் கிணறு, மீன் அலங்கார தொட்டி , தண்ணீர் பானை அல்லது குழாய் ஆகியவற்றை வைக்கலாம்
படுக்கை அறை
குளியலறை மற்றும் கழிப்பறை
கழிப்பறை கூடவே கூடாது மீறி வைத்தால் குடும்ப தலைவரின் ஆரோக்கியம்  கெடும்
தென்கிழக்கு அல்லது அக்னி மூலை
சமையலறை , மின்சாரம் போர்டு
படுக்கை  அறை பூஜை அறை

தென்மேற்கு (குபேர மூலை)
படுக்கை  அறை
குளியலறை மற்றும் கழிப்பறை
கடன் வாங்கி கட்ட முடியாத சூழ்நிலை ஏற்படும்
தென்கிழக்கு அல்லது அக்னி மூலை
வெட்டு அல்லது வளைவுகள் இருக்கக்கூடாது

வீட்டு பெண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
வாசற்கதவு

தென்மேற்கு திசையை நோக்கி இருக்க கூடாது

தென்மேற்கு (கன்னி மூலை) 
நகை, பணம், விலையுயர்ந்த கற்கள் வைக்கும் பெட்டகத்தை, அலமாரி இங்கு வைக்க வேண்டும்



vaasthu Sasthiram


எளிய வாஸ்து திருத்தங்கள்
  • · வீட்டின் பிரதான நுழைவு வாயில் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ அமைந்தால் நலம்

  • ·    மின்மாற்றியோ அல்லது இடுகாடு வீட்டில் அருகாமையில் இருப்பது நல்லது அல்ல.

  • ·        வீட்டின் வாசற்கதவு தென்மேற்கு திசையை நோக்கி இருந்தால், தீய சக்திகள் வீட்டில் நுழையக்கூடும் . இந்த தோஷத்தை போக்க மச்ச யந்திரத்தை   மாட்டினால் தீய சக்தி வெளியேறும் . சுபீக்ஷம் கூடும்.
vaasthu Sasthiram

  • ·   கருங்கல்லில் வீடுகள் கட்டக்கூடாது.அது குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்து விடும்.

  • பணப்பெட்டியை வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கி வைத்தால் வீட்டில் மஹாலட்சுமி குடியிருப்பார்கள்



மச்ச யந்திரம்
Macha Yanthiram


உங்கள் வீடு வாஸ்து சரியில்லாத வீடா?  வாஸ்த்து குறைகளை நீக்க எளிதான பரிகாரம் ஒன்று உள்ளது. வீட்டின் அறைகளையோ  அல்லது வீட்டின் சில பகுதிகளை இடிக்கவோ அல்லது திருத்தி அமைக்கவோ வேண்டியதில்லை. நன்கு பூஜிக்கப்பட்ட மச்ச யந்திரம் ஒன்று வாங்கி வீட்டில் சுவாமி அறையிலோ அல்லது ஈசான்யத்திலோ மாட்டி பூஜித்து வர வாஸ்து குறைபாடுகள் வாஸ்து பகவான் அருளால் நீங்கி மேன்மையான வாழ்வு அமையும்.
Vaasthu Yanthiram

No comments:

Post a Comment