Search This Blog

Wednesday, June 28, 2017

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைரேகை என்ன சொல்கிறது? Palmistry reading for Donald Trump , American President

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைரேகை என்ன சொல்கிறது?

Donald Trump - American President

கையின் அமைப்பு

Palmistry Reading for Donald Trump

ட்ரும்பின் கை சதுர வடிவாக காணப்படுகிறது.    அவருடைய கை விரல்கள் அவருடைய உள்ளங்கையெடு ஒப்பிடுகையில் சிறிதாக உள்ளது. இப்படிப்பட்ட கை உள்ளவர்கள் தங்களது உள்ளத்து உணர்ச்சிகளை மறைக்க தெரியாதவர்கள். இத்தககைய கை உடையவர்கள் வியாபாரத்தில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். பல தொழில் நிறுவனங்களை நடத்தி அதனை திறம்பட நிர்வாகிக்கும் திறமை உடயர்வர்களாக இருப்பார்கள். மற்றும் இத்தகைய நபர்கள் தங்களுடைய வியாபார ரகசியங்களை பிறருக்கு தெரியாமல் மூடி மறைக்கும் திறமை வாய்ந்தவர்கள். இத்தகைய நபர்கள் தாங்கள் என்ன நினைக்கிறார்களோ அதனை அடைபவர்காளாக இருப்பார்கள்.

இவருடைய கட்டை விரல் வலுத்து சிறுத்து  காணப்படுவதால் இவர் மிகுந்த மனோ தைரியத்தோடு தயை தாட்சிண்யம் காட்டாதவர் ஆக இருப்பார்.

ட்ரம்பின் ஆயுள் ரேகை
Donald Trump's Life Line

எல்லோரும் எண்ணுவது போல் , ஆயுள் ரேகை ஒருவருடைய ஆயுளை பற்றி மட்டும் தெரிவிப்பதில்லை. ஆயுள் ரேகை வைத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடைபெற இருக்கும் முக்கிய சாதனைகள் , நபர் எதிர்கொள்ள போகும் சங்கடமான நிகழ்வுகள் மற்றும் ஒருவருடைய ஆரோக்கியத்தை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ட்ரும்பின் ஆயுள் ரேகை ஆரம்பிக்கும் நிலையில் சங்கலி போன்று அமைந்துள்ளது. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவில் அராம்பிக்கும் ஆயுள் ரேகை மெலிதாகவும் சிறு சிறு தீவுகள் நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இத்தகைய கை உள்ளவர்கள் தங்களுடைய இளம் வயதில் குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்துஇருப்பார்கள். அத்தகைய நிகழ்வுகள் ட்ரும்பின்இளம் வயதில் ஆழ்ந்த மனோபாதிப்பை ஏற்படுத்திருக்கும்.

டிரம்ப் சிறு வயது பருவத்திலிருந்து இளம் வயது பருவத்திற்கு மாறிய காலம் அவ்வளுவு எளிதாக அமைந்துவிடவில்லை என்பது அவருடைய ஆயுள் ரேகை உணர்த்துகிறது. டிரம்ப் தன்னுடைய குடும்பத்தை விட்டு பிரிந்து ராணுவ பள்ளியில் படித்த காலங்கள் அவருக்கு பல வேதனையான அனுபவத்தை கொடுத்தது என்றே கூறலாம்.

நடு வயதுக்கு பிறகு , டிரம்ப்ன் ஆயுள் ரேகை வலுவாக காணப்படுவதால் அவர் புதிய சவால்களையும் முயற்சிகளையும் சந்திக்க தயங்க மாட்டார் என்பதை உணர்த்துகிறது.

ட்ரம்பின் புத்தி  ரேகை
Line of Mind

ஒருவரின் புக்தி ரேகையை வைத்து அவரின் புத்தி சாதுரியத்தையும் , அவர் சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கக்கூடியவரா  மற்றும் மற்றவர்களிடம் சகஜமாக பழகி காரியத்தை சாதித்து கொள்ளும் திறமை உடையவரா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

ட்ரம்பின் புக்தி ரேகை அவருடைய ஆயுள் ரேகையுடன் ஆரம்பிக்கும்பொழுது இணைந்து காணப்படுகிறது. இதனால்  டிரம்ப் தன்னுடைய தொழிலையும் தனிப்பட்ட வாழ்க்கையும் பிரித்து பார்க்க முடியாதவர் என்பதை உணர்த்துகிறது.

வலுவான ட்ரம்பின் புத்தி  ரேகை அவர் சுயமாக முடிவு எடுக்கக்கூடியவர் என்றும், அவர் மற்றவர்களின் கருத்தை அப்பிடியே ஏற்பவர் இல்லை என்பதை உணர்த்துகிறது.

வலுவான புத்தி  ரேகை அமையப்பெற்றதால் டிரம்ப் கீழ் கண்ட முக்கியமான முடிவுகளை எடுக்கமுடிந்தது.

  • ·     பாரிஸ் சீதோஷண உடன்பாட்டில் இருந்து தைரியமாக வெளியேற முடிந்தது

  • · ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டின் அம்மா என்று அழைக்கப்படும் வெடிகுண்டை வெடிக்க செய்து அமெரிக்காவின் எதிரி நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்க முடிந்தது.

  • ·   வட கொரியாவிற்கு அமெரிக்காவின் பிரமாண்டமான அணு ஆயுத கப்பலை அனுப்பிவைக்க முடிந்தது.

  • ·   வட கொரியாவிற்கு சரமாரியான சவால்களை விட்டு கொண்டிருக்க முடிகிறது.

  • ·    கியூபாவுடன் ஒபாமா போட்டிருந்த அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடிந்தது.

ட்ரம்பின் இருதய ரேகை
Line of Heart

இருதய ரேகையை வைத்து ஒருவர் தன்னுடைய உணர்ச்சிகளை எவ்வாறு கையாள்வர்? , மற்றவர்களிடம் எப்படி பழுகுவார்?, தன்னுடைய அன்பை எவ்வாறு வெளிப்படுத்துவர்? போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.

ட்ரம்பின் இருதய ரேகை ஆரம்பிக்கும் இடத்தில பல வளையங்களாக காணப்படுகிறது. இந்த  கை ரேகை அமைப்பு ட்ரும்பிற்கு அவருடைய இளமை காலத்தில் அவர் குடும்பத்திலுருந்து அன்பு , பாசம் போன்றவை கிடைக்கவில்லை என்பதை உணர்த்துகிறது.

ட்ரம்பின்  விதி  ரேகை
Fate Line

இந்த ரேகை எல்லோர் கையிலும் இருப்பதில்லை. இந்த ரேகை இருந்தால் ஜாதகர் இளம் வயது முதற்கொண்டே வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று உறுதியுடன் இருப்பார்கள். தடைகளையும் எதிர்ப்புகளை மீறி இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்பார்கள்.

ட்ரம்பின்  விதி  ரேகை  அவருடைய இட கையின் கீழே ஆரம்பித்து வலுவாக சனி மேட்டை சென்று அடைகிறது. இதனால் இவர் சிறுவயதிலிருந்தே வியாபாரத்தில் ஈடுபட முடிந்தது. மேலும் அவரின் தந்தையின் வியாபாரத்தை விரிவாக்க முடிந்தது.

நடுவில் விதி ரேகை மெலிந்து காணப்படுவதால் அவர் பல்வேறு தோல்விகளை வியாபாரத்தில் சந்திக்க நேரிட்டாலும் அவரது விட முயற்சியினால் அதனிலிருந்து மீள முடிந்தது . விதி ரேகை சனி மேட்டை நெருங்கும் பொழுது வலுவாக காணப்படுவதால்  வயதுக்கு பிறகு அமெரிக்காவின் ஜனாதிபதி ஆக முடிந்தது.

ட்ரம்பின் குரு மேடு
Mount of Jupiter

குரு மேடு வலுவுள்ளதாகவும், தெளிவாகவும் உள்ளது. இது அவருக்கு உள்ள கடவுள் நம்பிக்கையும் கடவுளின் அனுகிரஹத்தையும் குறிக்கிறது. இத்தகைய நபர்கள் கடவுளின் அனுகிரஹத்தால் பொதுமக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும்  தன்மை உடையவர்கள்.

ட்ரும்பும் இந்து மத நம்பிக்கையும்
Singalachariar - Hindu Priest at White House

டிரம்ப் இந்து மதத்தின் பூஜை முறைகளை பெரிதும் மதிப்பவர்.அமெரிக்காவின் ஜனாதிபதி அலுவகமான வெள்ளை மாளிகையில் டிரம்ப் நிர்வாகம் நாராயணச்சார் என்ற ஆச்சார்யரை வேளைக்கு அமர்த்தியுள்ளது.   இவர் டிரம்ப் பதவி ஏற்பு விழாவின் பொழுது இந்து சம்பரதாய பூஜைகளை நடத்தினார்.  இவருடைய  முக்கிய பனி வெள்ளை மாளிகையில் என்னவென்றால் , தினந்தோறும் பூஜைகளை மேற்கொள்வது மற்றும் அன்றய  நாள் நல்ல நாளா இல்லையா என்பதை ட்ரும்பிற்கு தெரிவிப்பர். மேலும் ராகு காலம் மற்றும் நல்ல ஹோரைகள் நேரங்களையும் முக்கியமான ஒப்பந்தங்களை கையெழுத்து இடுவதற்கு குறித்து கொடுப்பார்.

டிரம்ப் பதவி ஏற்பு விழாவின் பொழுது சிங்களச்சரியர் நடத்திய பூஜை வீடியோ காண கீழே கிளிக் செய்யவும் 


மேலும் சிங்களச்சியார்  டிரம்ப் மற்றும்அ வரது குடும்ப உறுபினர்கள் ஜாதகங்களை அலசி ஆராய்ந்து ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி , குரு கோச்சாரத்தில் ஜென்மம் போன்ற இடங்களில் இருந்தால் அதற்கு வேண்டிய பரிகாரங்களையும் மேற்கொள்வார்.

இவருடைய இந்த தெய்வீக பணிக்காக $ 63000 ( Rs 41,00,000) சம்பளமாக  எந்த வித வரி பிடித்தம் இல்லாமல் டிரம்ப் நிர்வாகம் வழங்கி வருகிறது.

ட்ரம்பின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

ட்ரம்பின் புக்தி ரேகை அவருடைய ஆயுள் ரேகையுடன் ஆரம்பிக்கும்பொழுது இணைந்து காணப்படுவதால், சில முக்கிய முடிவுகளை எடுக்க சில சமயம் தடுமாறுவார். உதாரணமாக , வடகொரியாவை அச்சுறுத்துவதற்கு பல நடவடிக்கைளை எடுத்தாலும் , அவரால் வட கொரியாவின் சவால்களை முற்றிலுமாக அடக்க முடியவில்லை.  சீனாவின் வட கொரியாவின் ஆதரவு நிலைக்கு ஒரு ,முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை.  சீனாவின் தென் கடல் பகுதியில் உருவாக்கும் செயற்கை தீவுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடிய வில்லை.


மேலும் டிரம்ப் எதிர்காலத்தில் வலை குடா நாடுகளில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது  , ISI ஒழிப்பது , வட கொரியா வை அடக்குவது , சீனாவின் தென் கடல் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவது , ரஷ்யாவை அடக்குவது போன்ற பல்வேரு சிக்கலான பிரச்சனைகளை கையாள வேண்டியிருப்பதால் பொறுமையுடன் நிதானமாக முடிவுகள் மேற்கொள்வது அவசியமாகிறது

No comments:

Post a Comment