Search This Blog

Tuesday, June 20, 2017

அதீத காம உணர்வை கொடுக்கும் கிரஹ அமைப்புகள் -ஒரு ஆய்வு- Planetary Positions for excessive sexual desires

அதீத காம உணர்வை கொடுக்கும் கிரஹ அமைப்புகள் -ஒரு ஆய்வு

7th House and extra-marital relations


இந்த பதிவில் சற்று நெருடலான உண்மை நிகஸ்ச்சிகளை பற்றி எழுதியுள்ளேன். பெண்களும் வாசகர்களும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

காகத்திற்கு , பசுவிற்கும் உள்ள தாய்ப்பாசம்

என்னுடைய வீட்டு மாடிக்கு செல்லும் வழியில் ஒரு வேப்பமரம் மரம் உள்ளது. அதில் ஒரு காகம் கூடு கட்டியிருந்தது நான் மாடிப்படி ஏறினால் அந்த காகம் அஃரோஷமாய் தாக்க வரும். நான் அதன் குஞ்சுகளை எடுக்க போகிறானோ என்ற பயத்தால் என்னை அது தாக்க வரும். இதன் மூலம் அந்த தாய்ப்பறவை தன்னுடைய குஞ்சுகள் மேல் எத்துணை பாசம் வைத்திருக்கன்றது என்று அறிந்து கொள்ளலாம்.

7th House and extra-marital relations

பசுமாட்டையும் அதன் கன்றையும் விலைக்கு வாங்கியபின்பு , அதனை வாங்கியவர் அதன் கன்றை தன்னுடைய சைக்ளின் காரியாரில் கட்டிவிடுவார். அவர் சைக்ளில் செல்ல ஆரம்பித்தால் , தாய் பசுமாடு அதன் கன்றை பின் தொடர்ந்து ஓடிவரும்.

மேலே சொன்ன இரு நிகஸ்ச்சிகளிலும் , தாய்ப்பாசம் என்றால் என்ன என்பதை ஐந்து அறிவு படைத்த பறவையும் பசுவும் நமக்கு தெளிவு படுத்துகிறது.

யானைக்கு உள்ள தாய்ப்பாசம்

கீழே உள்ள வீடியோ கிளிக் செய்து பாருங்கள். கீழே விழுந்த குட்டி யானையை தாய் யானையும் மற்ற யானைகளும் பாசத்துடன் தூக்கிவிடுவதை பாருங்கள்.





ஐந்து அறிவு படைத்த யானைகளுக்கு உள்ள தாய்ப்பாசம் ஆறறிவு படைத்த ஒரு சில பெண்களுளக்கு ஏன் இல்லாமல் போகிறது? என்பது புரியாத புதிராக அமைகிறது. கிரஹங்களின் அமைப்புதான் அவர்களை இந்த நிலைக்கு ஆளுக்குகிறது என்று எடுத்துக்கொள்ளலாம் .

ஆனால் , பத்திரிகையில் வந்த ஒரு செய்தி மிகவும் என்னை பாதிக்க செய்தது. ஐந்து அறிவு படைத்த பறவைக்கும் பசுவுக்கும் உள்ள தாய்ப்பாசம் ஏன் ஆறறிவு படைத்த ஒரு சில மனித ஜென்மங்களுக்கு இல்லாமல் போய்விட்டது என்று கேட்க தோன்றுகிறது
.
7th House and extra-marital relations

மகனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜ்ல் வைத்த தாய்

தன்னுடைய கள்ள காதலை கண்டித்த வயது வந்த மகனை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜ்ல் மறைத்து வைத்த ஒரு தாயின் தாய்ப்பாசத்தை என்னவென்று சொல்வது?.

தன்னுடைய காமப்பசி தீர தன்னுடைய மகனையே வெட்டி கொலை செய்ய தூண்டுவது நிச்சயமாக கிரஹங்களின் வேலைதான். ஒரு பெண்ணுடைய அதிக காமவேட்கையை அவருடைய ஏழாம் பாவத்தை வைத்து கூறிவிட முடியும்.


பெற்றவளால் குப்பையில் வீசப்பட்ட ரெட்டை ரோஜாக்கள்



twins who had been thrown into dustbin by their own mother

பெற்றவளால் குப்பையில் வீசப்பட்ட ரெட்டை ரோஜாக்கள் காப்பகத்தில் வளர்ந்து இன்று ராணுவத்தில் சேர நுழைவுத்தேர்வு தடகளபயிற்சி தேர்வுகள் என தேர்ச்சி பெற்றுள்ளனர்!


தினதந்தியில் வந்த செய்தியை கீழே தந்துள்ளேன்

கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது … – தினத் தந்தி
கள்ள காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் கைது …
தினத் தந்தி
வீட்டில் தூங்கிய கணவரை கள்ள காதலுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற பெண் கைது செய்யப்பட்டார். உடலை தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு கணவரை காணவில்லை என்று …


ஏழாம் பாவத்தை வைத்து எவற்றை அறியலாம்?

ஏழாம் பாவத்தை வைத்து ஜாதகர் சுய இன்பம் கொள்பவராகள்ள உறவு வில் விருப்பமுடைவரா , முறையற்ற காம ஆசை, உடையவரா மிருகங்களை சேர்வதில் விருப்பமுடைவரா, , கற்பழிப்புக்கு துணிபவரா ஓரின சேர்க்கையாளராபோன்ற எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஏழாம் பாவத்தை வைத்து கீழ்கண்டவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.



1
ஒருவர் செய்யக் கூடியவர் வியாபாரத்தின் லாப நஷ்டத்தை பற்றி
2
ஒருவர் பெறும் சன்மானத்தையும், கொடுக்கும் சன்மானத்தையும் பற்றி
3
சுற்றத்தார்கள் சூழ்ந்திருப்பதையும் பற்றி
4
திருமணமாகும் நேரங் காலத்தையும் திருமணம் எப்படி நடக்குமென்பதையும் பற்றி
5
ஒருவருடைய போக சக்தியையும் பற்றி
6
களத்திர சுக, துக்கங்களையும் பற்றி
7
வழக்கு வியாஜ்ஜியங்களைப் பற்றி
8
மனைவியின் ஆயுளைப் பற்றி,
9
சிற்றின்ப நிலை எத்தகைய நிலையென்பதையும் பற்றி
10
திருமணத்திற்கு வெளியே ஏற்படும் உறவு முறைகளை பற்றியும்

7th House and extra-marital relations

ஏழாமிடத்தில் கிரகங்கள் அமர்வு , சேர்க்கை மற்றும் இணைவு

ஏழாமிடத்தில்
ராகு, கேது, சனி இணைவு
களத்திர நாசம்
மேஷ லக்னம்
ஏழாமிடத்தில் சுக்கிரன் அமையப்பெற்றால்
கேந்திராதிபத்திய தோஷம்- ஜாதகி திருமணப்பந்தத்திற்கு வெளியே உறவு தேடும் நிலை ஏற்படுகிறது.

ஏழில்
கேது 
தங்களாது வாழ்க்கை துணையைப் பிரிந்து விலகி வேறொருவருடன் உறவு கொள்ள நேரிடலாம்.
ஏழாம் அதிபதியும்
கேதுவும் இணைவு / பார்வை
திருமண உறவு நீடித்து இருக்காது
ஏழில்
சூரியன் + கேது இணைவு
குடும்பத்தில் குழப்பம்- கணவனுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு
ஏழில்

சந்திரன் + கேது இணைவு
கணவனுடன் அடிக்கடி கருத்து வேறுபாடு
ஏழில்
செவ்வாய் + கேது இணைவு
வாழ்கைத் துணையை இழந்தவர்கள், பிரிந்தவர்களுடன் உறவு ஏற்படும்.

ஏழில்
குரு + கேது இணைவு
முறையான திருமணம் அமையாது
ஏழில்
சுக்கிரன் + கேது இணைவு
அடிக்கடி கருத்து வேறுபாடு  ஏற்படும்
ஏழில்
சனி + கேது இணைவு
கீழானவர்களுடன் தொடர்;உறவு ஏற்ப்படும்.

ஏழில்
சனியும் செவ்வாயும் இணைவு
ஜாதகிக்கு அளவுக்கு மீறிய காம வேட்கை ஏற்படுகிறது
சனியும் செவ்வாயும்
ஏழாம் இடத்தை பார்வையிட்டால்
திருமண பந்தத்திற்கு வெளியே உறவு ஏற்படும்
ஏழாமதிபதி அல்லது செவ்வாய்
பன்னிரெண்டில் நிற்க
முறையற்ற சமுதாயத்திற்கு புறம்பான திருமண வாழ்க்கை அமையும்
ஏழில்
சுக்கிரன்,செவ்வாய் இணைவு
அதீதமான காம உணர்வு ஏற்படும்

யோனி பொருத்தம்

யோனிப் பொருத்தம் 10 பொருத்தங்களிலொன்றாக இருந்தாலும் தாம்பத்ய உறவுக்கு மிக முக்கியமாக இருக்க வேண்டிய பொருத்தமிது. யோனி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்தால் , மனைவி திருமணப்பந்தத்திற்கு வெளியே உறவு தேடும் நிலை ஏற்படுகிறது.


ஆண்களுகளுக்கும் பொருந்தும்

மேல சொன்ன கிரஹ அமைப்புகள் பெண்களுக்கு மற்றும் ஆண்களுகளுக்கும் பொருந்தும். ஆண்கள் ஜாதகத்தில் மேற்சொன்ன கிரஹ சேர்க்கைகள் அல்லது பார்வைகள் ஏழாம் பாவத்திற்கு ஏற்பட்டால் , திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் அல்லது திருமண வளையத்திற்கு அப்பாற்பட்டு உறவுகளை ஏற்படுத்தும்
பரிஹாரம்


மேற்படி கிரஹ சேர்க்கை அமைந்த பெண்கள் வழி தவறி வாழ்க்கையை வீணாக்க நேரிடும். அப்படி பட்ட பெண்களை நாம் தவறான பெண்கள்  என்று கூற முடியாது. நவகிரஹங்கள் ஆட்டி அவர்கள் ஆடுகிறார்கள். ஆகவே , அப்படி பட்ட பெண்கள் தக்க பரிகாரங்கள் செய்து , நவகிரங்களை தொடர்ந்து வழிபாட்டால் தங்கள் வாழ்வு மேம்படுத்திக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment