Search This Blog

Thursday, August 3, 2017

வரலட்சுமி நோன்பு- How to perform Varalaxmi Viratham ?

இன்று வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு மஹாலஷ்மியின் அருளால் உங்கள் கஷ்டங்கள் ஒழிய மஹாலஷ்மியை மறவாமல் வழிபடுங்கள்.


வரலட்சுமி நோன்பு
இன்று ஆகஸ்டு 4ம் தேதி வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இல்லந்தோறும் திருமகளை வரவேற்று நோன்பிருந்து பூஜை செய்து மகிழ்கிறோம். இந்நாளை வரலட்சுமி விரதம் அல்லது வரலட்சுமி நோன்பு என்கிறோம். திருமகளான லட்சுமி நம் இல்லத்திற்கு எழுந்தருளி கொலுவிருப்பதால் இதை வரலட்சுமி பண்டிகை என்றும் கூறலாம்.

வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது பதினாறு வகைச் செல்வத்துக்கும் அதிபதியான லட்சுமியின் அருள்\வேண்டி இந்துக்களின் 
நோன்பாகும்ஆடி மாதம் வளர் பிறையில் முழுநிலவு வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் இந்த நோன்பை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.


வரலட்சுமி விரதம் பூஜையை எப்படி செய்வது?

இந்நாளில் வீட்டைச் சுத்தம் செய்து விளக்கேற்றி வாசனைப் புகையினால் இல்லத்தை நிறைத்து கலசம் ஒன்றில் லட்சுமியை வணங்கித் தொடங்குவர்.
 கலசத்தினுள் பச்சரிசிஎலுமிச்சை, பொற்காசு என்பவற்றை இட்டுகலசத்தைப்பட்டாடையால்அலங்கரித்துதங்கம்வெள்ளி அல்லது பஞ்ச உலோகங்களினால் ஆன இலட்சுமியின் உருவச்சிலையைஅல்லது படத்தை கலசத்திலுள்ள தேங்காயில் வைப்பர். மஞ்சள் சரட்டை குங்குமத்தில் வைத்துக் கலசத்தில் அணிந்து வரலட்சுமியைக் கிழக்குப் பக்கமாக வைத்து வணங்குவர்.

வரலட்சுமி உங்கள் வீட்டுக்கு வருகிறார்!

ஒவ்வொரு வரலட்சுமி விரதத்தன்றும் அம்மன் தம் பிறந்தகத்திற்கு வருவதாக நம்பிக்கை. அவளை அன்புடன் வரவேற்று ஆராதித்து துதிக்கிறோம். மறுநாள் வெள்ளிக் கிழமையன்று விளக்கேற்றி வைத்து நல்ல நேரத்தில் பிள்ளையார் பூஜை செய்து கலசத்தில் அம்மனை ஆவாஹனம் செய்து கலச பூஜை செய்து பின் லஷ்மி அஷ்டோத்திரம் முடித்து மலர்களால் அர்ச்சிக்கிறோம். 

மஹா நிவேத்யம்
தீப ஆராதனை செய்து இனிப்பான பலகாரங்களைப் படைப்பர். பின்னர் கலசத்தில் வைத்த மஞ்சள் சரட்டை விரதமிருந்தவர் கையில் கட்டுவர். பின்னர் படைக்கப்பட்ட பொருட்களுடன் தாம்பூலம், மஞ்சள், புடவை போன்றவற்றை சுமங்கலிகளுக்கு தானமாகக் கொடுத்து ஆசி பெற்று காலை முதல் உண்ணாநோன்பிருந்ததை முறித்து தாமும் உண்டு விரதத்தை நிறைவேற்றுவர்.

அன்று முழுவதும் அஷ்டலட்சுமி தோத்திரம்லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் செய்வர். மாலை வேளைகளில் உற்றார்,சுற்றார் வீடுகளுக்குச் சென்று ஒருவருக்கொருவர் தாம்பூலம் பெற்றுக்கொள்வர்.

வரலட்சுமி நோன்பு செய்வது எப்படி என்பதை விளக்கும் வீடியோ பார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கினை கிளிக் செய்யவும்




மஹாலட்சுமி அஷ்டகம் 




திருமகளான லட்சுமியை வணங்கி அவர்களுடைய அருளை பெற்று உங்கள் குடும்பம் தழைத்து ஓங்க வரலட்சுமி நோன்பை இன்று மறவாமல் மேற்கொள்ளவும்.

No comments:

Post a Comment