Search This Blog

Sunday, August 6, 2017

சோதனைகளும் போராட்டங்களும் உங்கள் வாழ்வில் தொடர்கதையா? அதை வெற்றி கொள்ள உங்கள் ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா? Cancellation of debilitation - An Analysis

சோதனைகளும்  போராட்டங்களும் உங்கள் வாழ்வில் தொடர்கதையா

அதை வெற்றி கொள்ள உங்கள் ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா?

ஜோதிட ரத்னா ஆர் வீ சேகர்


இந்த ஜோதிட கட்டுரை என்னால் எழுதப்பட்டு நட்சத்திர யோகம் என்ற ஜோதிட பத்திரிகையில் மார்ச் 2001 ஆண்டு வெளிவந்தது.

வஞ்சக துரியோதனன் 

துரியோதனின் தந்தையும் பாண்டவர்களின் சித்தப்பாவான த்ரிதிராஷ்ட்ரன் வேடங்களை நன்கு கரைத்து குடித்தவர். தன் மகன் துரியோதனன் பாண்டவர்கள் அரசாளவேண்டிய நாட்டை அவர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றிக்கொண்டிருக்கார்கள் என்பதை நன்கு அறிந்து இருந்தார். ஆனாலும் , அவரால் துரியோதனனுக்கு நல்ல அறிவு புகட்டி துரியோதனை திருத்த முடியாமல் போய்விட்டது.  அஞ்ஞானம் அவர் கண்களை மறைத்தது. 
Duriyothanan

த்ரிதிராஷ்ட்ரன்  சஞ்சயனிடம் கீழ்கண்டவாறு பலதடவை புலம்பி தீர்க்கிறார்.

" மனிதனின் அத்துணை முயற்சியும் வீண். எல்லாம் கடவுளின் சித்தபடிதான் நடைபெறுகிறது ” 



ஹனுமானின் புலம்பல்
இராமாயணத்தில் ஹனுமான் ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறார்.
"கடவுளின் அவதாரமான ராமனும், சீதையும் மற்றும் லக்ஷ்மணனும் இத்துணை துன்பங்களையும் துயரங்களையும் அனுபவிக்கும் பொழுது மனிதர்கள் ஆகிய நாம் எம்மாத்திரம்? எல்லாவற்றிக்கும் நேரம்தான் காரணம்.. கேட்ட நேரத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது" என்று  கூறுகிறார்.

Seethai with Hanuman in Ashoka Vanam



சீதையின்  புலம்பல்

சீதா பிராட்டி அசோக வனத்தில் கீழ்கண்டவாறு புலம்புகிறார்.

"நான் முன் ஜென்மத்தில் செய்த வினைதான் இந்த ஜென்மத்தில் இத்தைனை துன்பங்களை மற்றும் துயரங்களையும் அனுபவிக்க நேரிடுகிறது."

மேலும் சீதை ஓரிடத்தில் இவ்வாறு கூறுகிறார்.

" விருப்பு , வெறுப்பு இல்லாமல் இருப்பவர்கள் மிகவும் அரிது. நாம் எதன் மீது ஆசைப்படுகிறோமோ ,அதன் மூலம்  துன்பமும் , எதனை  வெறுக்கின்றோமோ , அதன் மூலம் பயமும் வந்து சேருகிறது. விதியை யாராலும் வெல்ல முடியாது. விதிக்கு நானும் மற்றும் ஸ்ரீ ராமனும் விதிவிலக்கல்ல  என்பது இதன் மூலம் தெளிவாக தெரிகிறது".

இதனால் , கடவுள் மனிதனாக பிறந்தால் கர்ம வினைகளிலிருந்து தப்பிக்க இயலாது என்று தெளிவாக தெரிகிறது.  கடவுளுக்கே இந்த கதி என்றால் மானிடர்களாக பிறந்துள்ள நம்மை போன்றவர்களின் கதியை பற்றி சொல்லவும் வேண்டுமா?

என்னை ஜோதிட ஆலோசனைக்காக சந்திக்க வரும் சிலர்  " நான் படும் கஷ்டங்கள் , துயரங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை.  ஆகையால் சில நேரம் நாம் ஏன் தற்கொலை செய்யக்கூடாது என்று எண்ணம் தலைஓங்குகிறது என்று கூறுகிறார்கள்.


ஜெயலலிதா சந்தித்த சோதனைகள் 

Selvi Jayalalitha

மறைந்த செல்வி ஜெயலலிதா 30 வருடங்களுக்கு முன்பு இரு தடவை தற்கொலை முயற்சிகள் செய்து பின்பு காப்பாற்றப்பட்டிருக்கிறார். அவர் பின்பு பல சோதனைகளை கடந்து  தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக வில்லையா?


கருணாநிதி சந்தித்த சோதனைகள்

Kalainar Karunanidhi

அதேபோல் , கலைஞர் கருணாநிதி அவர்கள் எம்ஜியார் ஆண்ட 24 வருடங்கள் வனவாசம் போன்ற நிலை அனுபவிக்க நேரவில்லையா ? கருணாநிதி அவர்கள் எமெர்ஜென்சி  காலத்தில்  பல சோதனைகளை பின்னர் கடந்து  தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆக வில்லையா?

சோதனைகள் கூடும் பொழுது இறைவழி பாடு அவசியம்  ஆகிறது. இறை அனுகிரஹத்தால் எந்த விதமான சோதனைகளையும் இடர்பாடுகளையும் தாண்டி வாழ்க்கையில் வெற்றியை குவிக்கலாம் என்பதற்கு மேற்சொன்ன உதாரணங்களே சாக்ஷி.

Sri Ramar


ஸ்ரீ ராமர் ஜாதகம்


சுக்கிரன்
சூரியன் புதன்






கேது



ராசி சக்கரம்
லக்கினம்
குரு
சந்திரன்

செவ்வாய்



ராகு



சனி


ராமர் ஜாதகத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம்

*ஜோதிட சாஸ்திர ரீதியாக ஒருகிரகம் உச்சம் பெற்றால் அவன் ஊரில் முக்கியமானவனாக இருப்பான் எனக்கூறப்பட்டுள்ளது பகவான் ராமருக்கோ ஐந்து கிரகங்கள் உச்சம். *ஜோதிட யோகங்கள் அனைத்தும் இந்த ஜாதகத்தில் உள்ளன.

ராமர் ஜாதகத்தில் உள்ள யோகங்கள்

குருசந்திர யோகம்
சந்திரன் குருவுடன் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்துஇருப்பதால்
குரு மங்கள யோகம்
குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது

கஜகேசரி யோகம்,
சந்திரன் குருவுடன் சேர்ந்து லக்கினத்தில் அமர்ந்துஇருப்பதால்
கேந்திர யோகம்
நான்கு கேந்திரங்களில் கிரஹங்கள் அமர்ந்திருப்பது
தர்ம கர்மாதிபதி யோகம்
9க்கும் 10க்கும் அதிபதிகள் குருவும் புதனும் ஒருவரை ஒருவர் சமசப்தமாக பார்ப்பது
ராஜ யோகம்
9ம் அதிபதி குரு 9ம் இடத்தை பார்வையிட்டு உச்சம் பெற்றிருப்பது
புத ஆதித்ய யோகம்
சூரியனும் புதனும் ஒன்று கூடி இணைந்திருப்பது 
சசயோகம்
சனி பகவான் உச்சம் பெற்று கேந்த்ரா ஸ்தானமான 4ம் வீட்டில் இருந்தது 

இத்துணை யோகங்கள் இருந்தும் , அரசாள வேண்டிய ராமர் ஏன் 14 வருடங்கள் வனவாசம் செயும்  நிலை ஏன் ஏற்பட்டது? சீதா பிராட்டியை இராவணன் கவர்ந்து பின்னர் ராமர் ராவணனுடன் சண்டை செய்து மீட்க நேரிட்டது ஏன் ? இதனால் என்ன தெரிகிறது என்றால் ஒரு ஜாதகத்தில் 5 கிரஹங்கள் உச்சம் பெற்றாலும் ராஜயோகத்தை கொடுக்க வில்லை.

ஆயினும் ஜாதகத்தில் ஒரு கிரஹம் நீச்சம் பெற்று நீசபங்கம் ஏற்பட்டால் அத்தகைய அமைப்பு ஜாதகருக்கு நிச்சயம் ராஜயோகமான பலன்களை தருகிறது.  ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் 5 கிரஹங்கள் உச்சம் பெற்றாலும் ஒரு கிரகம் நீசம்பெற்று நீசபங்க ராஜயோக பலன்களை பெறாததால்  அவர் வாழ்க்கையில் பல கஷ்டங்களையும் சோதனைகளையும் சந்திக்க நேர்டது.  ஒரு ஜாதகத்தில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கிரஹங்கள் நீச்சம் அடைந்து நீசபங்கம் ஏற்படவில்லை என்றால் , அப்படிப்பட்ட ஜாதகர் வாழ்வு கரடுமுரடாக அமைகிறது.  

தோல்வி , சோதனை, வேதனை, போராட்டம், ஏழ்மை , இல்வாழ்வு  சரியாக அமையாமை , நோய் , கடன், எதிரிகளால் தொல்லை, எல்லோராலும் எதிர்க்கப்படும் நிலைமை போன்ற தீய பலன்களே ஏற்படுகிறது.

காணும் வகை நீச்ச ஸ்தானத்து வேந்தனும்
திண்டிறல் சேர்ந்திடும் அம்மனை உச்ச வேந்தும்
திங்கள் கேந்திரம் தன்னில் சேர்ந்ததானால்
மண்டியிடும் நீச்ச பல ஒழிந்து கீர்த்தி
மகாராஜாவென வாழ்ந்திடுவான் பூமியினில்
கொண்ட பல கோல் நீச்சத்தனிலருந்தாலும்  ஒருகோள்
குறி நீசங் நெடி எல்லாக்கோளும் நன்றாகும்

அதாவது , ஒரு ஜாதகத்தில் பல கிரஹங்கள்  நீச்சம் பெற்றாலும் ஒரு கிரஹத்திற்கு நீசபங்க ராஜயோகம் ஏற்பட்டால் , மற்ற நீச்ச பெற்ற கிரஹங்களுக்கும் நீச்ச பங்கம் ஆகி , ராஜயோக பலன்கள் ஏற்படும் என்று மேல சொன்ன ஜோதிட பாடல் தெளிவாக்குகிறது.
கைரேகை மன்னன் சீரோ ஜாதகம்
Chero , Palmistry

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் சீரோ என்ற ஆங்கிலேயர் தஞ்சாவூர் வந்து சில ஆண்டுகள் தங்கி சரோபோஜி நூலகத்தில் இருக்கின்ற ஓலை சுவடிகளை அரைச்சி செய்து பின்பு கைரேகையை பற்றி விரிவான நூல் ஒன்றை எழுதினார்.

அதன்பின்பே , கைரேகை சாஸ்திரம் உலக அளவில் பிரபலம் அடைந்தது. இதை சீரோ தன்னுடைய கை ரேகை சாஸ்திரம் நூலில் முன்னுரையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.


கேது










ராசி சக்கரம்
செவ்வாய்


குரு

சந்திரன்



லக்கினம்
புதன்
சுக்கிரன்
சனி
சூரியன்

ராகு


சீரோ ஜாதகத்தில் , 3 கிரஹங்கள் நீச்சம் அடைந்து கண்ணப்படுகிறது.  குரு , செவ்வாய், சூரியன்  போன்ற கிரஹங்கள் நீச்சமடைந்து காணப்பட்டது.  நீச்சம் பெற்ற குரு , நீச்சம் பெற்ற செவ்வாயை பார்ப்பதால் , .  குரு  மற்றும்  செவ்வாய்  கிரஹங்கள்நீச்சம் பங்க ராஜயோகம் ஏற்படுகிறது. 

சூரியன் நீச்சம் பெற்றாலும் , சூரியன் நின்ற ஸ்தானமான துலா ராசிக்கு  அதிபதியான சுக்கிரன் சந்திரனுக்கு 10ம் இடத்தில அமையப்பெற்றதால் சூரியனுக்கு நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படுகிறது.

ஜாதகத்தில் 5 கிரஹங்கள் உச்சம், பெற்றாலும் ஸ்ரீ ராமர் துன்பங்களையும் துயரங்களையும் சந்திக்க நேரிட்டது. ஜாதகத்தில் 3 கிரஹங்கள் ,நீச்சம்  பெற்றாலும், நீச்ச பங்க ராஜ யோகம் அமைந்ததால் , சீரோ கைரேகை சாஸ்திரத்தினால் உலக அளவில் பெயர் புகழ் அடைய முடிந்தது. 

திரு மோடி ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜயோகம் அமையப்பெற்றதால் , பிஜேபியில் பல சீனியர்களை பின்னுக்கு தள்ளி பிரதமர் பதவியை அடையமுடிந்தது.

உங்கள் ஜாதகத்தில் நீச்ச பங்க ராஜ யோகம் உள்ளதா?




2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஆம் ,குரு 7ல் நீச்சம் ,கடக லக்னம்

    ReplyDelete