நீங்கள் கோடீஸ்வராக வேண்டுமா? நல்ல நாளில்
புதிய முயற்சிகளை தொடங்குங்கள் !. வெற்றி நிச்சயம்!!
நாள்உதவுது போல் நண்பர்கள் அல்லது நல்லவர்கள் உதவ மாட்டார்கள் என்பது பழமொழி .
ஆகையால் , நல்ல நாளில்
அல்லது நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற நல்ல நாளில் ஒரு காரியத்தை தொடங்கினால் , அந்த காரியம் நிச்சயம் வெற்றிபெறும்.
உதாரணமாக , ஒரு திரைப்படத்தை
நீங்கள் தயாரிக்க விரும்புகிறர்கள் என்று
வைத்து கொள்வோம் , பூஜை போடும் நாள்
நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற நல்ல நாளா என்று கட்டாயமாக அறிய வேண்டும்.
டிஜிட்டல் சினிமா வந்து விட்டதால் ரூ 50 லட்சத்திற்குள் யார் வேண்டுமானாலும் படம் எடுக்க முடிகிறது
இப்பொழுது . அதனால் கோடம்பாக்கத்தில் வாரத்திற்கு 10 படம் பூஜை போடுகிறார்கள்.
எல்லா படங்களும் வசூல் ரீதியாக வெற்றியடைகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.
பாஹுபலி 2 படம்வசூல் ரூ 1500 கோடிகளை தாண்டியுள்ளது.
பாஹுபலி 2 படம் வசூல் எவ்வளவு தெரியுமா ? ரூ 1500 கோடிகளை தாண்டியுள்ளது . ஆக , ஒரு திரைப்படம் வசூலில் வெற்றி பெற தயாரிப்பாளர் நல்ல நாளில் அதை அரம்பிக்க
வேண்டும் என்று தெளிவாக தெரிகிறது.
அப்படி இல்லையென்றால் , திரையிட்ட இரண்டு நாட்குளுக்குள் தோல்வியை தழுவ
நேரிடும். உங்களுடைய புதிய தொழில் முயற்சிகள் , புதிய வேலையில் சேரும்
நாள் , சுப காரியங்கள் தொடங்கும் நாள் சுப நாளாக அமைய வேண்டும்.
ஆக , திரைப்பட பூஜை போடும்
அல்லது புது தொழில் தொடங்கும் நாள் அல்லது புதிய முயற்சிகள் மேற்கொள்ளும் நாள் கீழ்கண்டவாறு அமையவேண்டும்.
ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களும், கோச்சார
ரீதியாக அல்லது தசை மற்றும் புக்தி படி நேரம் சரியில்லை என்றாலும், தவிர்க்க முடியாத சூழலில், தங்களுக்கு
அனுகூலம் தரும் நட்சத்திரங்களில், காரியத்தை தொடங்கலாம் என்று கூறப்படுகிறது.
அதன்படி, ஜென்ம நட்சத்திரத்திற்கு முன்னும், பின்னும்
உள்ள நட்சத்திரங்கள், நான்கு, ஆறு மற்றும் எட்டாவது நட்சத்திரங்களில் முயற்சியை தொடங்கலாம்.
அதாவது , கோச்சார ரீதியாக
அஷ்டம சனி , அர்த்தாஷ்டம சனி ,
கண்ட சனி, ஏழரை சனி, குருபகவான்
கோச்சாரரீதியாக ராசியில் , மூன்று , நான்கு , ஆறில், எட்டில், பத்தில் மற்றும் 12ல் அமையும் பொழுது ஜாதகருக்கு கெடுதலான பலன்கள் ஏற்படும். .
ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்
என்பது பழம் பாடல்.
தாரா பலன்
பொதுவாக ஒரு நட்சத்திரத்திற்கு அனுகூலமான நட்சத்திரம் தாரா பலன்
நட்சத்திரம் என்றும். அனுகூலமற்ற நட்சத்திரம் வதை நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
அடுத்தடுத்த நட்சத்திரங்கள் நட்பு நட்சத்திரங்களாகவே சொல்லப்படுகிறது. அதேபோல், ஜென்ம
நட்சத்திரங்களும், ஜென்ம தாரைகளும் உகந்தது அல்ல.
ஆகாத
நட்சத்திரங்கள்
அத்துடன் நம் முன்னோர்கள் சில நட்சத்திரங்களை விலக்க
வேண்டும் என்றும் அதை பாடலாக கூறி உள்ளனர். அதாவது,
” ஆதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், முப்பூரம் (பூரம்,
பூராடம், பூரட்டாதி) கேட்டை, தீதுறு விசாகம், சுவாதி,
சித்திரை, மகம் ஈராறில் பாயில் படுத்தார் தேறார்,
பெருந்தனம்
கொண்டார் தாயார், வழிநடை பட்டார் மீளார்,
பாம்பின் வாய்
தேரை தானே”
என்று கூறி உள்ளனர்.
எனவே, அதற்கேற்ப, சம்பந்தப்பட்ட காரியங்களை, சம்பந்தப்பட்ட
நட்சத்திரங்களின்போது ஒத்தி வைத்தல் நலம்.
மேல்நோக்கு நாள் ,கீழ்நோக்கு நாள் என்றால் என்ன?
பழங்காலத்தில் முன்னோர்கள் தாம் வானியல் அறிவு கொண்டு
கணகிட்டதில் மேல்நோக்கு நாளும்,கீழ்நோக்கு நாளும் ஒன்றாகும்.புவியின் நிலநடுக் கோட்டிலிருந்து
சூரியனின் நிலையையும் ,பூமியைச் சுற்றி வரும் சந்திரனின் நிலையையும் அடிப்படையாகக்
கொண்டு மேல்நோக்கு நாள்,கீழ்நோக்கு நாள்,சமநோக்கு நாள் என வகைப் படுத்தினார்கள்
.இதை எளிதாக தெரிந்துகொள்ள 27 நட்சத்திரங்களை மூன்று பிரிவாக பிரித்தார்கள்.
கீழ்நோக்கு நாள்.
|
பரணி ,கார்த்திகை ,ஆயில்யம் ,மகம் ,விசாகம் ,மூலம் ,முப்பூரம் (பூரம்,பூரட்டாதி ,பூராடம்
|
செய்ய வேண்டிய செயல்கள்:
குளம்,கிணறு வெட்டலாம்,கிழங்குவகை பயிர்களை பயிரிடலாம்
|
மேல்நோக்கு நாள்.
|
ரோகிணி,திருவாதிரை
,பூசம்
,உத்திரம்
,உத்திராடம்
,திருவோணம்
,அவிட்டம்
,சதயம்
, உத்திரட்டாதி
-
|
வீடு,கட்டிடங்கள்
கட்ட பூமி பூஜை சுபகாரியங்கள் ,தொழில் தொடங்குதல் ,மரங்கள்
நடுதல்.
|
சமநோக்கு நாள்.
|
அசுவினி ,மிருகசீரிடம்
,புனர்பூசம்,அஸ்தம்
,சித்திரை
,சுவாதி
,அனுஷம்
,கேட்டை
,ரேவதி
|
கால்நடைகள் வாங்கவும்,உழவு
பணிகள் ஆரம்பிக்கவும் உகந்த நாள்.
|
உங்கள் ஜாதகப்படி யோக நட்சத்திர நாள் எவை ?
பழனி ஆண்டவர் (நவபாஷண சிலை) பழனி
உங்கள் ஜாதகத்தில் உங்கள் பிறந்த யோகம் என்ன என்று குறிப்பிட பட்டுஇருக்கும்.குறிப்பிட்ட யோகத்திற்கு குறிப்பிட்ட நட்சித்திர நாள் நல்ல யோகமானபலன்களை தரும். சில குறிப்பிட்ட நட்சித்திர நாள் யோகமான பலன்களை தராது. அவை என்ன வென்று கீழே பாப்போம்.
யோகம்
|
யோக
நட்சத்திரம்
|
அவயோக
நட்சத்திரம்
|
விஷ்வகம்பம்
|
பூசம்
|
திரு ஓணம்
|
பிரீதி
|
ஆயில்யம்
|
அவிட்டம்
|
ஆயுஷுமான்
|
மகம்
|
சதயம்
|
சௌபாக்கியம்
|
பூரம்
|
பூரட்டாதி
|
ஷோபனம்
|
உத்தரம்
|
உத்திரட்டாதி
|
அதிகண்டம்
|
ஹஸ்தம்
|
ரேவதி
|
சுதர்மம்
|
சித்திரை
|
அஸ்வினி
|
திருதி
|
ஸ்வாதி
|
பரணி
|
சூலம்
|
விசாகம்
|
கார்த்திகை
|
கண்டம்
|
அனுஷம்
|
ரோஹிணி
|
விருத்தி
|
கேட்டை
|
மிருகசீர்ஷம்
|
துருவம்
|
மூலம்
|
திரு ஆதிரை
|
வ்யாகதம்
|
பூராடம்
|
புனர் பூசம்
|
ஹர்ஷணம்
|
உத்திராடம்
|
பூசம்
|
வஜ்ரம்
|
திரு ஓணம்
|
ஆயில்யம்
|
சித்தி
|
அவிட்டம்
|
மகம்
|
வ்யதீபாதம்
|
சதயம்
|
பூரம்
|
வரியான்
|
பூரட்டாதி
|
உத்தரம்
|
பரிகம்
|
உத்திரட்டாதி
|
ஹஸ்தம்
|
சிவம்
|
ரேவதி
|
சித்திரை
|
சித்தம்
|
அஸ்வினி
|
ஸ்வாதி
|
சாத்தியன்
|
பரணி
|
விசாகம்
|
சுபம்
|
கார்த்திகை
|
அனுஷம்
|
சுப்பிரம்
|
ரோஹிணி
|
கேட்டை
|
பராமயம்
|
மிருகசீர்ஷம்
|
மூலம்
|
ஐந்திரம்
|
திரு ஆதிரை
|
பூராடம்
|
வைதிருதி
|
புனர் பூசம்
|
உத்திராடம்
|
ஆக , நீங்கள் திரைப்பட
பூஜை போடும் அல்லது புது தொழில் தொடங்கும் நாள் அல்லது புதிய முயற்சிகள் தொடங்கும் நாள் நல்ல நாள் என்றால் நீங்கள்
நிச்சயம் பல கோடிகளை சம்பாதிக்கலாம் என்பதில் ஐயம் இல்லை.
No comments:
Post a Comment