Search This Blog

Saturday, August 12, 2017

உங்கள் கையில் புக்தி ரேகை வலுவானதாக உள்ளதா ? அப்ப நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான்- Strong head line in Palmistry- An Analysis

உங்கள் கையில் புக்தி ரேகை வலுவானதாக உள்ளதா ? அப்ப நீங்கள் அதிர்ஷ்டக்காரர்தான்- Strong mind line in Palmistry- An Analysis

தெளிவான புக்தி ரேகை

ஒருவரின் தெள்ளிய அறிவு , புத்தி கூர்மை , ஞானம் ஆகியவற்றை ஒருவருடைய கையில் உள்ள புத்தி ரேகையை வைத்து அறிந்து கொள்ளலாம். வலுவான  புக்தி ரேகை உள்ளவர்கள் நல்ல மதி  நுட்பம் , தெளிவான அறிவு உடயர்வர்கள் ஆக இருப்பார்கள். திரண்ட செல்வம் பெற்றிந்தாலும் நல்ல புத்திரேகை அமையப்பெறாதவர்கள் பிறரால் எளிதாக ஏமாற்ற பட்டு தங்கள் செல்வதாய் இழுக்க நேரிடும்.

ஒருவருக்கு தெளிவான , தீர்க்கமான புக்தி ரேகையுடன் தெளிவான ஆயுள் ரேகையும் , சூரிய ரேகையும் மற்றும் இருதய ரேகையும் அமையப் பெற வேண்டும். அத்தகைய அமைப்பு , ஜாதகருக்கு திரண்ட செல்வமும், புத்திசாலித்தனம் மற்றும் நல்ல குடும்ப வாழ்வும் அமையும்.

iநல்ல புத்தி கூர்மை பெற்றவர்கள் அவர்களுடைய ஜாதகத்தில் புதன் வலுவான நிலையில் இருப்பர். மிதுனத்தில் ஆட்சி பெற்றோ அல்லது கன்னி ராசியில் ஆட்சி, உச்சம் மற்றும் மூல திரிகோணம் பெற்றோ இருப்பர்.

அல்லது புதன் கேந்திரங்களில் அல்லது திரிகோணத்தில் அமையப்பெற்று குருவால் பார்க்கப்பெற்றிப்பார். மனோகரகர் சந்திரன் ஜாதகத்தில் வலுப்பெற்று காணப்பட்டால் , புத்தி ரேகை தெளிவாக இருக்கும். புத்தி ரேகை வளைந்தும் நெலிந்தும் காணப்பட்டால் , ஜாதகத்தில் சந்திரன் நீச்சம் பெற்றோ , அல்லது மறைவு ஸ்தனங்கலான 6 , 8, 12 போன்ற இடங்களில் காணப்படுவார்.

சங்கிலி தொடர் போன்ற புக்தி ரேகை

புக்தி ரேகை இடைவிடாத சங்கலியை போன்றும் , பல தீவுகள் ஆக காணப்பட்டால் மனஅமைதியின்மை, மனச்சோர்வு, மனோபலகீனம் போன்றவற்றால் பாதிக்க படுபவர். இத்தகைய கைமைப்பு  உடையவர்கள் சந்திரன் மற்றும் புதன் ஜாதகத்தில் வலுவின்றி காணப்படும். இவர்கள் சித்த பிரமை , புத்தி மாறாட்டம் , பைத்தியம் , ஞாபக மறதி , இடைவிடாத தலைவலி போன்றவற்றால் பாதிக்கப்படுவர். பகவான் ரமண மகா ரிஷி சிறுவயதில் சித்தி பிரமையால் பாதிக்கப்பட்டார். அவரின் பெற்றோர் போகாத கோயில்கள் இல்லை. பின்னர் தெய்வ அருளால் அவரின் நிலை மாறி பின்னர் மகரிஷி ஆனார்.

புத்தி ரேகைளிருந்து ஒரு கிளை ரேகை குரு மேட்டிற்கு செல்லுமானால்

புத்தி ரேகைளிருந்து ஒரு கிளை ரேகை குரு மேட்டிற்கு செல்லுமானால் அவர்கள் பிரபல ஜோதிடராகவோ , தலை சிறந்த பொருளாதார , பாதுகாப்பு ஆலோசாகரகோவோ இருப்பார்கள். பிரபல ஜோதிடரும் , என் குருநாதருமான மறைந்த முருகு ராஜேந்திரன் கையில் இத்தகைய அமைமப்பு காணப்பட்டதால் அவர் தலை சிறந்த ஜோதிட ஆலோசகராக ஆக முடிந்தது. மற்றும் தேசிய பாதுகாப்பு  ஆலோசர்கள் ஆன அஜித் தோவல் , பிரஜேஷ் மிஸ்ரா , சிவஷங்கர் மேனன் போன்றவர்களின் கையில் இத்தகைய அமைப்பு காணப்படும்.

புக்தி ரேகையில்ருந்து ஒரு கிளை ரேகை சூரிய மேட்டிற்கு சென்றுந்தால்

புக்தி ரேகையில்ருந்து ஒரு கிளை ரேகை சூரிய மேட்டிற்கு சென்றுந்தால் , அத்தகையவர்கள் தாங்கள் செய்யும் தொழிலால் திரண்ட செல்வம் அடைவார்கள். 

சென்னையில் யுள்ள சரவணா ஸ்டோர்ஸ் , சரவண பவன் , போத்திஸ், போன்ற நிறுவங்கள் இதற்கு சிறந்த உதாரணம். முகேஷ் அம்பானியின் ஜியோ மொபைல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். 


முகேஷ் மகள் சொன்ன ஐடியாவினால்  ஜியோ மொபைல் ஆரம்பித்தார். இன்று இந்தியாவில் உள்ள அணைத்து மொபைல்  சேவைகளையும் பின்னுக்கு தள்ளி ரிலையன்ஸ் மொபைல் இன்று முதலிடத்தில் உள்ளது. புத்தி கூர்மையால் திரண்ட செல்வத்தை அடைய முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

புக்தி ரேகை சந்திர மேட்டை நோக்கி பயணித்திருந்தால்

புக்தி ரேகை சந்திர மேட்டை நோக்கி செண்டிருந்தாலும் , சங்கிலி  போன்ற அமைப்புடைய  புக்தி  ரேகை கையில் அமைந்தால் ஜாதகர் மந்த புக்தி உள்ளவராகவும் , சித்த பிரமை உள்ளவராகவும் இருப்பர். அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.  சிலர் தற்கொலையும் செய்து கொள்வார்கள்.
நடிகை ஷோபனா வின் தற்கொலை

வலுவிழந்த புக்தி புக்தி ரேகை கையில் அமைந்தால் ஜாதகர் மந்த புக்தி உள்ளவராகவும் , சித்த பிரமை உள்ளவராகவும் இருப்பர். அடிக்கடி தற்கொலை செய்யும் எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். 

மன அழுத்தம், பணப்பிரச்சனை, காதல் தோல்வி என பல்வேறு காரணங்களுக்காக இதற்கு முன்னர் பல நடிகர்/நடிகைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நகைச்சுவை நடிகர் வடிவேலுவுடன் பல திரைப்படங்களிலும், நடிகர் வெண்ணிராடை மூர்த்தியுடன் மீண்டும் மீண்டும் சி‌ரிப்பு என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடித்து பிரபலமடைந்த நடிகை ஷோபனா 2011ஆம் ஆண்டில் காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொண்டார்

நடிகர் சாய் பிரசாந்த்வின் தற்கொலை


ஏராளமான டிவி சீரியல்களிலும் ஐந்தாம் படை போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகர் சாய் பிரசாந்த் இந்த ஆண்டு மார்ச் மாதம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சாவதற்கு முன்னர் என் மரணத்திற்கு நானே பொறுப்பு என கடிதம் எழுதி வைத்து விட்டு தன் உயிரை மாய்த்து கொண்டார்.
புக்தி ரேகை சங்கிலி தொடர் போன்று தெளிவில்லாமல் அமைந்து இருந்தால்

ஒருவர் கையில்  புக்தி ரேகை சங்கிலி தொடர் போன்று தெளிவில்லாமல் அமைந்து இருந்தால் மற்றும் இடை இடையே தீவு குறுகலாக அமைந்து காணப்பட்டால் , தற்கொலை எண்ணம் மேலோங்கி இருக்கும். பைத்தியம் பிடித்தவர்களாக இருப்பார்கள். பிறரை கொலை செய்யபவர்களாக இருப்பார்கள்.கலகக்காரர்களாக இருப்பார்கள்.

புக்தி ரேகை தனித்து அமைந்து இருந்தால்

ஒருவருடைய கையில் புக்தி ரேகை ஆரம்பிக்கும் பொழுது ஆயுள் ரேகையுடன் இணையாமல் காணப்பட்டால்  அதாவது தனித்து அமைந்துஇருந்தால் தைரியமான முடிவுகளை எடுப்பார்கள். மனோ தைரியம் மிக்கவர்கள் ஆக இருப்பார்கள்.. தீர்க்க தரிசியுமாகவும்  தலைவர்களாகவும் இருப்பர்கள். இப்படி பெற்றவர்களை எவராலும் அன்பால் கட்டிவைக்க முடியாது. பெரும்பாலும் மனைவியை அல்லது கணவரை ஆட்டி வைப்பவர்களாக இருப்பார்கள்.

இத்தகைய அமைப்பு ஒபாமாவிற்கு இருந்ததால்தான் 90 ஆண்டுகள்அமெரிக்கா மற்றும் கியூபாவிற்கு இருந்த பகைமையிற்கு ஒரு முற்று புள்ளி வைக்கமுடிந்தது.

90 ஆண்டுகளுக்குப்பிறகு கியூபா மண்ணில் அமெரிக்க அதிபர்

அமெரிக்கா மற்றும் கியூபா வரலாற்றில் இந்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். 1959 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியை தொடர்ந்து, அமெரிக்கா - கியூபா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில், கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டார் ஒபாமா. 90 ஆண்டுகள் கழித்து கியூபாவிற்கு வருகைததரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றார்.
புக்தி ரேகை ஆரம்பிக்கும் பொழுது ஆயுள் ரேகையுடன் இணைந்து காணப்பட்டால்

இத்தகைய நபர்கள் மிக சிறந்த யூகிக்கும் தன்மை உடயர்வர்கள். இவர்களை எளிதாக ஏமாற்றமுடியாது. எதையும் தீர ஆராய்ந்து பின்னர் அதில் ஈடுபடுவார்கள். எந்த சிக்கலான காரியத்தியும் எளிதாக முடிப்பார்கள். எந்த விஷயமும் இவர்களுக்கு எளிதாக இருக்கும். இவர்களுடைய மனோ சக்தியும் மனோ தைரியமும் பிரம்மிப்பு ஊட்டுவதாக இருக்கும். இவர்கள் எந்த காரியத்தையும் எளிதாக முடிக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்கள்.
புக்தி ரேகை செவ்வாய் மேட்டை அடைந்துருந்தால்
புக்தி ரேகை ஆயுள் ரேகையுடன் ஆரம்பத்தில் இணையாமல் செவ்வாய் மேட்டை அடைந்துருந்தால், அவர்கள் பொது ஜன சேவையில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். பெரும் தலைவர்களாக இருப்பார்கள். தொழிற்சங்க  தலைவர்களாவும், பஞ்சாயத்து தலைவர்களாவும் , நகர் மன்ற தலைவர்களாவும், மேயர்களாகவும் , அமைச்சர்களாகவும் இருப்பார்கள்.
புக்தி ரேகையில் வெள்ளை புள்ளி மற்றும் கரும் புள்ளி


புக்தி ரேகையில் ஒரு வெள்ளை புள்ளி காணப்பட்டால் , அந்த வயதில் திரண்ட செல்வதை தரும். ஒன்றுக்கு மேற்பட்ட வெள்ளை புள்ளிகள் காணப்பட்டால் , அந்த அந்த வயதில் திடீர் செல்வ சேர்க்கை ஏற்படும். அதுபோல் , கரும் புள்ளி காணப்பட்டால் , அந்த வயதில் மனோதைரியம் குறைந்து காணப்படும். சிலருக்கு , மனசிதைவால் , பல துன்பங்களை அனுபவிக்க நேரிடும்.

ஆகவே வலுவான  புக்தி ரேகை உள்ளவர்கள் நல்ல மதி  நுட்பம் , தெளிவான அறிவு உடயர்வர்கள் ஆக இருப்பார்கள். திரண்ட செல்வம் பெற்றிந்தாலும் நல்ல புத்திரேகை அமையப்பெறாதவர்கள் பிறரால் எளிதாக ஏமாற்ற பட்டு தங்கள் செல்வதாய் இழுக்க நேரிடும்.

No comments:

Post a Comment