பரிவர்த்தனை யோகம்
இரண்டு கிரஹங்கள் மாறி ஒன்றின் வீட்டில் மற்றொன்று அமர்வது
பரிவர்த்தனை யோகம் ஆகும்! உதாரணமாக கடக
ராசிக்கு அதிபதியான சந்திரன் மீன ராசியிலும் , மீன ராசிக்கு
அதிபதியான குரு கடக ராசியில் அமர்ந்திருப்பது பரிவர்த்தனை யோகம் ஆகும்.
பரிவர்த்தனை யோகம் பற்றிய காணொளியை காண , கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்
https://youtu.be/1AGTrGiDAJY
இந்த பரிவர்த்தனை யோகத்தால் தங்கள் வீடு மாறி அமர்ந்த கிரகங்களின் வலிமை மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்கும்.
https://youtu.be/1AGTrGiDAJY
இந்த பரிவர்த்தனை யோகத்தால் தங்கள் வீடு மாறி அமர்ந்த கிரகங்களின் வலிமை மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்கும்.
"தானென்ற
கோள்களது மாறி நிற்க்க
தரணிதனில் பேர் விளங்குத் தனமுள்ளோன்"
தரணிதனில் பேர் விளங்குத் தனமுள்ளோன்"
கிரகங்கள் இடம்
மாறிப் பரிவர்த்தனையாக நிறக் அந்த ஜாதகருக்கு இப்பூமியில் பேரும் புகழும் பொருளும்
கிடைக்கும்.
பரிவர்த்தனை யோகம் ஜாதகனின் வாழ்க்கையில் பல
வெற்றிகள் ஏற்பட வழிவகுக்கும்.
சுப கிரஹங்கள் பரிவர்த்தனை அடைந்துஇருந்தால் யோகமான பலன்கள்
ஏற்படும். அசுப கிரஹங்கள் பரிவர்த்தனை அடைந்துஇருந்தால் அவயோகமான பலன்கள்
கிடைக்கும்.
பரிவர்த்தனை யோகம் பெற்ற கிரஹங்கள் 6, 8, 12ஆம் வீட்டின் அதிபதிகளாக இருப்பின், ஜாதகனுக்குத் தீய பலன்கள்தான் அதிகமாகக்
கிடைக்கும்.
சுப பலன்களை
தரக்கூடிய பரிவர்த்தனை யோகம்
2ஆம்
அதிபதியும் -தன
ஸ்தானாதிபதியும் லாபதிபதியும் (,11ஆம்
அதிபதியும் பரிவர்த்தனையானால்
|
ஜாதகர்
குபேரன் போன்று வாழ்வார்.
செல்வ சேர்க்கைக்கு தடை இருக்காது
|
2ஆம்
அதிபதியும் தன
ஸ்தானாதிபதியும் (, 9ஆம்
அதிபதியும் (பாக்யாதிபதியும்) பரிவர்த்தனையானால்,
|
ஜாதகன் அதிர்ஷ்ட
காரர் என்று பெயர் எடுப்பர்.. வேத பண்டிதராக
விளங்குவார் மேதாவியாக
இருப்பர்
|
லக்கினாதிபதியும் 5ஆம் அதிபதியும்
பரிவர்த்தனையானால்,
|
ஜாதகர் பெரும் புகழும் பெற்று
விளங்குவார்.
|
லக்கினாதிபதியும் அதிபதியும், 10ஆம் அதிபதியும் பரிவர்த்தனையானால்,
|
ஜாதகன்
அரசில், அல்லது அரசியலில் பிரதமர் மற்றும்
முதன்-மந்திரி போன்ற பதவிகளை அலங்கரிப்பர்.
|
9ஆம் அதிபதியும், 10ஆம் அதிபதியும்
பரிவர்த்தனையானால்,
|
இதற்கு தர்ம கர்மாதிபதி யோகம்
என்கின்ற பெயரும் உண்டு!ஜாதகனுக்கு புகழ்,அந்தஸ்து,அதிகாரம், தரும்
மிகவும் உயர்ந்த அமைப்பு இது.
|
அசுப பலன்களை
தரக்கூடிய பரிவர்த்தனை யோகம்
6ஆம் அதிபதியும், 11ஆம் அதிபதியும்
பரிவர்த்தனையானால்
|
ஜாதகன் தன் சொத்துக்களை, செல்வங்களை தன
மதியீனத்தால் , எதிரிகளால் இழக்க நேரிடும் இழக்க நேரிடும்
|
இந்தப் பரிவர்த்தனை யோகத்திற்கு உதாரணமாகச்
சொல்லப்படும் ஜாதகம் மறைந்த முன்னாள் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி
அம்மையார் அவர்களின் ஜாதகம். அதை உங்களுக்கு கீழே தந்துள்ளேன்.
இந்திரா காந்தி ஜாதகம்
குரு
|
கேது
|
||
இந்திரா காந்தி ஜாதகம்
உத்திராடம்
19 நவம்பர்
1917
11.11 PM
|
சனி லக்கினம்
|
||
சந்திரன்
|
செவ்வாய்
|
||
சுக்கிரன் ராகு
|
சூரியன் புதன்
|
சந்திரன் -சனி பரிவர்த்தனை
|
சுக்கிரன்- குரு
பரிவர்த்தனை
|
செவ்வாய் -சூரியன்
பரிவர்த்தனை
|
ஒரு ஜாதகத்தில் ஆறு
கிரஹங்கள்தான் பரிவர்த்தனை அடைய முடியும். திருமதி இந்திரா காந்தி அம்மையார் ஜாதகத்தில்
ஆறு கிரகங்கள் பரிவர்த்தனையாகி உள்ளன. ஒரு ஜோடி பரிவர்த்தனை என்பது இரண்டு
உச்சங்களுக்குச் சமம். 3ஜோடி பரிவர்த்தனை என்பது ஆறு கிரகங்கள்
உச்சமானதற்குச் சமம் என்று எடுத்துக்கொள்ளலாம்.
இந்த பரிவர்த்தனைகளால் அவர் பல நன்மைகளை அடைந்தார்.
எதிரிகளே இல்லாத நிலை ஏற்பட்டது. பங்களாதேஷ் போரில் ஈடுபட்டு பங்களாதேஷிற்கு
பாகிஸ்தான் மிடமிருந்து சுதந்தரம் வாங்கி தந்தார். தனியார் வங்கிகளை நாட்டுடமை ஆக்கினார். தன்னுடைய எதிகளுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்கினர்.
"கூசாது கோணாதி கேந்திராதி
குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு
திரளான தானியங்கள் கூடும் பாரு "
குறிப்பான பரிவர்த்தனையாய் இருக்க
தேசாதிபத்தியமும் வருவதோடு
திரளான தானியங்கள் கூடும் பாரு "
1-5-9-ஆம் அதிபதிகளும் 4-7-10-ஆம் அதிபதிகளும்
பரிவர்த்தனை பெற்றிருந்தால் ஜாதகர் உலகை ஆள்வார்கள். அதிகம் செல்வம்
பெறுவார்கள்.
திரிகோணாதிபதியும்
கேந்திரதிபதியும் பரிவர்த்தனை அடைந்து இருந்தால் மிக பெரிய அளவிலான யோகத்தை
ஜாதகருக்கு கொடுக்கும். திருமதி இந்திரா காந்தி ஜாதகத்தில் லக்கினாதிபதியான
சந்திரனும் 7ம் அதிபதியான சனி பகவானும் பரிவர்த்தனை அடைந்து
காணப்பட்டார்கள்.
4ம் அதிபதியான சுக்கிரனும் , 9ம் அதிபதியமான
குருவும் பரிவர்த்தனை அடைந்து வலுவான பரிவர்த்தனை யோகம் அமைந்தது.
சனியும்
சந்திரனும் பரிவர்த்தனை அடைந்து
காணப்பட்டால்
"மதியுமே கரிவீடேக மந்தனும் மாறி நின்றால்
பதிதனயோகம் பாக்கியமதிகமாகும்
துதிபெற அரசர போகன் சொல்மொழி
பெலமிலாதான் மதிகரிதிசையில் போகம்
வரவுயர்ந்த வாழ்வே "
சனி,
சந்திரன் வீட்டிலும், சந்திரன், சனி வீட்டிலும் இருந்தால் பாக்கியம்
பெருகும், சந்திரன் திசையில் சனி திசையில் மேலும் மேலும் உயர்வு தருவார்கள்.
குருவும்
சுக்கிரனும் பரிவர்த்தனை அடைந்து காணப்பட்டால்
"பார்க்கவன் நிதி
வீடேகப்பகர் குரு மாறி நின்றால்
தீர்க்காய் லாப யோகம் செல்வமும் ஆகமாகும்
மூர்க்கமாயிருப்பன் யார்க்கும் முடிவு நளதொலையு
மட்டும்
சுக்கிரன் 2-ல் இருக்க குருவுடன் பரிவர்த்தனையாகி குரு வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் குருவும்.
இருந்தால் செல்வம் பெருகும் ஆயுள் முடியும் வரை வீரனாய்
இருப்பான்
.
இந்திரயோகம்
"உள்ளசன் மாதிலாபத்திலுற வேயந்லாபாதி
தள்ளுஞ்சன்மந்தனிலிருக்கத் தனத்தானதான்
பத்திலுறக்
கொள்ளும்பத் தோனிரண்டுறவே கொண்டு
சென்மந்திரமாக
வள்ந்திரயோகமென வழுத்தும் பலன்களினி
துரைப்பாம்"
பரிவர்த்தனை பெறுவதால் இந்திரயோகம்
லக்கினாதிபதி 11-ல், 11 ஆம் அதிபதி லக்கினத்தில், 2-ஆம் அதிபதி 10-ல், 10-ஆம் அதிபதி 2-ல் இருக்க
லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால் ஜாதகர்
இந்திரயோகத்தை அனுபவிப்பார்கள்.சுகபோக வாழ்வு அமையும்.
1ம் அதிபதி
(லக்கினாதிபதி) லாபஸ்தானத்தில் (11ல்) அமைய , லாபஸ்தானத்திப் 1ல் அமைய , தனஸ்தானாதிபதி (2ம் அதிபதி) ஜீவனஸ்தானத்தில் அமைய (10ம் அதிபதி) , ஜீவனஸ்தானாதிபதி 2ல் அமைய , லக்கினம் ஸ்திர லக்கினமாக இருந்தால்
ஜாதகர் இந்திரயோகம் என்றயோகம்
ஏற்படுகிறது.
மூன்று வகையான
பரிவர்த்தனை யோகம்
ப பரிவர்த்தனை
யோகம்
|
2,
4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களுக்கு
உரிய அதிபதிகளில் எவரேனும் இருவர் இடம் மாறி இருந்தால்,
|
ஜாதகர் திரண்ட செல்வம் பெற்று
வளமுடன் வாழ்வார்.
|
|||
தைன்ய பரிவர்த்தனை
|
6, 8, 12-ம் இடங்களுக்குரிய ஆட்சி கிரகங்கள் பரிவர்த்தனை பெற்றால்
ஜாதகருக்கு அசுப பலன்களை ஏற்படுத்தும்
|
ஜாதகருக்கு விரும்பத்தகாத பலன்களை தரும்
|
|||
கஹல பரிவர்த்தனை:
மூன்றாம்
|
இடத்துக்குடைய
கிரகம் 1, 2, 4, 5, 7,
9, 10, 11-ம் இட த்தில் இருந்து, அந்த இடங்களுக்கு உரிய கிரகம் 3-ம் இடத்தில் இருந்தால், அது சுப பலனாக அமையும்
|
ஜாதகர்
மனோதைரியம் உள்ளவராக திகழ்வார். பல வெற்றிகளை குவிப்பர்
|
சமுத்திர யோகம்
7ம் அதிபதியும் 9ம் அதிபதியும், பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் சமுத்திர
யோகமே.. இந்த யோகம் ஜாதகரின் வாழ்வில் பிற்பகுதியில் வேலை செய்யும் . அதாவது 50 வயதுக்கு மேலே.
சரிதாம யோகம்
7ம் அதிபதியும் 9ம் அதிபதியும், பரிவர்த்தனை பெற்றிருக்க, இவர்களில் ஒருவருடன் சந்திரன் நின்ற ராசிக்கு அதிபதி கூடியிருந்தால் சரிதாம
யோகமாகும். நல்ல யோகமான வாழ்வு உண்டு, 31 வயது முதல் 50 வயது வரை வளமான வாழ்வு அமையும்
Free Mass Ping
No comments:
Post a Comment