Search This Blog

Friday, September 22, 2017

வர்கோத்தமம் என்றால் என்ன? What is meant by Vargothamam in Horoscope ?

வர்கோத்தமம் என்றால் என்ன?


வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பது ஆகும்   ! அதுபோல் லக்கினம் ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்!

வர்கோத்தம லக்கினம்


அவுரங்ஷீப் ஜாதகம்





சந்திரன் சனி


புதன்

ராகு


சூரியன்
சனி



லக்கினம் குரு

ராசி
கேது
லக்கினம் சந்திரன்

அம்சம்








ராகு
செவ்வாய்






சுக்கிரன்


சூரியன் புதன்


குரு



செவ்வாய்

கேது
சுக்கிரன்



மேல உள்ள உதாரண ஜாதகத்தில் கும்ப லக்கினம் ராசியிலும் அம்சத்திலும் ஒரே இடத்தில இருப்பதால் கும்ப லக்கினம் லக்கினம் வர்கோத்தமம் ஆக இருக்கிறது .

சுக்கிரன் வர்கோத்தமம்







சுக்கிரன்






சுக்கிரன்





ராசி



அம்சம்




























ரிஷபத்தில் சுக்கிரன் இருந்து அம்சத்திலும் சுக்கிரன் ரிஷபத்தில் அமையப்பெற்றால் , சுக்கிரன் வர்கோத்தமம் அடைந்து காணப்படுகிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
யத்ர யத்ர கிரஹ வர்கோத்தமம்
தத்ர தத்ர கிரஹ பரிபூரணம்

என்கிறது ஒரு சம்ஸகிறத சுலோகம். 3 கிரகங்கள் வர்கோத்தமம் பெற்றிருந்தால் அவருக்கு அதிக அளவிலான ராஜயோகம் கிடைக்கும்.


ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரஹங்கள் வர்கோத்தமம் அடைந்து காணப்பட்டால் அந்த ஜாதகர் தன்வந்தராகவும் , செல்வாக்கு மிக்கவராகவும் இருப்பார் .
வர்கோத்தமம் பெறும் கிரகம் மிகவும் பலம் உள்ளதாகவும் இருக்கும். ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்!  
பொதுவாக , ஒரு ஜாதகத்தில் அசுபர்கள் வர்கோத்தமம் அடைந்தாலும் , அந்த ஜாதகருக்கு அந்த கிரகம் மிகவும் நன்மையான பலன்களையே  தரும்..
வர்கோத்தமம் பெற்ற கிரஹத்தின் தசை புக்தி காலங்களில் ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களையே தரும்.

4ம் அதிபதி , 9ம் அதிபதி மற்றும் 10ம் அதிபதி வர்கோத்தமம் பெற்றால் நல்ல யோகமான பலன்களை ஜாதகருக்கு அது நிச்சயமாக வழூங்கும் என்பதில் ஐயமே இல்லை.
லக்னத்துக்கு சுபராக நட்பு ,ஆட்சி மற்றும உச்சம் பெற்று வர்கோத்தமம் பெற்றால் அது முழு வழுவை பெற்றது என்பது பொருள். இத்தகைய அமைப்பு ஜாதகருக்கு மிகவும் யோகமான பலன்களையே தரும்.

லக்கினம் வர்கோத்தமம் அடைந்துருந்தால்
நீண்ட ஆயுள் , செல்வம் , செல்வாக்கு
சூரியன் வர்கோத்தமம் அடைந்துருந்தால்
ஜனாதிபதி , பிரதமர் , மந்திரி , கிராம சபை உறுப்பினர் , நகராட்சி உறுப்பினர் மற்றும் அரசியலில் பெரும் பதவி
சந்திரன் வர்கோத்தமம் அடைந்துருந்தால்
அதீத மனோவலிமை , கதை , கவிதை ஆற்றல் நல்ல கற்பனை சக்தி
செவ்வாய் வர்கோத்தமம்
சேனாதிபதி , காவல் துறையில் உயர் பதவி , மிகுந்த மனோ தைரியம் எடுத்த காரியத்தை தடைகளை மீறி நிறைவேற்றுதல்
புதன் வர்கோத்தமம்
பேச்சற்றல் , மதிநுட்பம் , ஆராய்ச்சி திறன் , உயர் கல்வி யோகம்
குரு வர்கோத்தமம்
தெய்வ அனுக்கிரஹம் , மனோ தைரியம் ஆன்மீக ஈடுபாடு
சுக்கிரன் வர்கோத்தமம்
கலைத்துறையில் ஈடுபாடு , கவர்ச்சியான உருவம் , நகை தொழில்
சனி வர்கோத்தமம்
தலைமை தாங்கும் திறன் , தொழிலதிபர் ,
ராகு வர்கோத்தமம்
ஜாதகர் துணிச்சல் மிக்கவர் அதிர்ஷ்டசாலி  தொழிலதிபர்
கேது வர்கோத்தமம்
இறைஅருள் பெற்றவர் , ஞானி பிரபல ஜோதிடர்

. ஏழாம் வீட்டு அதிபதி, ராசி வர்கோத்தமம் பெற்றுருந்தால் , அழகான கணவன் அல்லது மனைவி அமைவாள்.
ஜீவனாதிபதி வர்கோத்தமம் அடைந்துருந்தால் , உயர்ந்த பதவி அல்லது லாபகரமான தொழில் அமையும். .

6 comments:

  1. ஐயா, லக்ன வர்கோத்தமம் மற்றும் 5ல் திரிகோண சுக்கிர வர்கோத்தமம் இதன் நற்பலன்கள் என்ன இந்த ஜாதகருக்கு திருமணம் எப்போது நடக்கும், பெண் ஜாதகம் எப்படி இருக்க வேண்டும் நாள் 31.07.1989 11.02 pm.

    ReplyDelete
  2. Necha sukran vargottamam petral indha palan porunthuma

    ReplyDelete
  3. Sukiran-neecham vargotham petral

    ReplyDelete
    Replies
    1. முதலில் கஷ்டமும் பின் யோகம்

      Delete
  4. Iyya rishaba rasiyil ucham petra sandhiran vargothamam petraal enna palangal iyyaa

    ReplyDelete