Search This Blog

Thursday, April 12, 2018

விளம்பி வருட புத்தாண்டு 12 ராசிகளுக்கு ஆன பலன்கள் ஜோதிட சாகரம் ஆர் வீ சேகர் போன் 9848915177




விளம்பி வருட புத்தாண்டு 12 ராசிகளுக்கு ஆன பலன்கள்

Astrologer R V Seckar Mobile 9848915177
R V Seckar 

விளம்பி வருடம் 14.4.2018 அன்று கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, சனிக்கிழமை காலை 8.13 மணிக்கு உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில்,  ரிஷப லக்கினத்தில் பிறக்கிறது.

விளம்பி புத்தாண்டு தினத்தன்று கிரஹ நிலைகள்


சந்திரன், புதன்

சூரியன், சுக்கிரன்
 லக்னம்






ராகு,


கேது




செவ்வாய் சனி


குரு












குருபகவானின் வீடான மீன ராசியிலும், சனிபகவானின் நட்சத்திரமான உத்திரட்டாதியிலும் இந்த விளம்பி புத்தாண்டு பிறக்கிறது. முன்னோர்களின் வழிபாடும் மற்றும் அவர்களுக்கு அமாவாசை தோறும் திதி கொடுத்து வர, வழி பட வாழ்வில் உன்னதமான நிலை அடைவார்கள்.

மேஷ ராசி
(அஸ்வினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177





சந்திரன், புதன்

மேஷ ராசி சூரியன், சுக்கிரன்










ராகு

கேது






செவ்வாய் சனி


குரு



குருபகவானின் பார்வை:
குருபகவான் தனது 5-ம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்ப்பதால், புதிய முயற்சிகளால் வெற்றி உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். தல யாத்திரை மேற்கொள்வீர்கள். உடன் பிறந்த மூத்த சகோதர வகையில் உதவிகள் வந்து அமையும்.

 குருபகவான் 7-ம் பார்வையால் உங்கள் ஜென்ம ராசியைப் பார்ப்பதால் திடீர் தன வரவு ஏற்படும். சுபநிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கணவன் மனைவி உறவு மிக சிறப்பாக அமையும்.

குருபகவான் 9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் மனோ தைரியம் மிகுந்து காணப்படும். கடன் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
சனிபகவான்
சனிபகவான் விளம்பி ஆண்டு முழுவதும் 9வது இடமான பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். சிலவுகளை கட்டுப்படுத்தி சேமிப்பு பெருக கூடிய நேரம் இது.

Astrologer R V Seckar Mobile 9848915177

குடும்பத்திற்கான பலன்கள்

சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். ஆகவே, வீண் சிலவுகளை தவிர்க்கவும்.வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்ய ஒரு சிலருக்கு யோகம் உள்ளது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும் நேரம் இது.

தொழில் துறையில்/ பணியில் உள்ளவர்களுக்கு

வியாபாரத்தில் தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.புது வீடு மாறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வோடு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒரு சிலருக்கு  புதிய பொறுப்புகள் அதிகரிக்கும்  சம்பள உயர்வு அதிகரிக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சுக்கிரனால் பிரச்சினைகள் தீரும். அதிக வேலைப்பளுவையும் சமாளித்து மேல் அதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள்.

மாணவ மாணவியருக்கு

மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் தேடி வரும். சிலருக்கு வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்கும் யோகம் அமையும்.

ரிஷபம் ராசி
(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)
Astrologer R V Seckar Mobile 9848915177


ரிஷப ராசிக்கு 11ம் இடத்தில சந்திரனும் புதனும் இணைந்து காணப்படுவது ஒரு அற்புதமான யோகம் ஆகும். 2 , 5 ம் அதிபதியான புதன் 3 அதிபதியான சந்திரனுடன் இணைந்து  லாபஸ்தானத்தில் இணைந்து காணப்படுவதால், பண வரவு தாராளமாக இந்த வருடம் முழுவதும் காணப்படும், தன காரகனான புதன் 11 ம் இடத்தில இருப்பதால் , புத்தாண்டில் நீங்கள் மேற்கொள்ளும் காரியம் அனைத்தும் வெற்றியை தரும்.
குருபகவானின் பார்வை:

விளம்பி வருட தொடக்கம் முதல் 3-10-2018 வரை குரு ருண ஸ்தானமான 6ம் இடத்தில இருப்பதால் பணவரவு தடை படும். கடன் தொல்லை அதிகரிக்கும். சிலவுகளை குறைத்து சிக்கனமாக இருந்தால் அனாவசியமான கடன் தொல்லைகளிலிருந்து தப்பலாம்.
4-10-2018 முதல் விளம்பி ஆண்டு முடியம் வரை குரு 7 வீட்டில் அமரபோவதால் ரிஷப ராசியை பார்ப்பதால் நல்ல யோகமான பலன்கள் இந்த ராசி நேயர்களுக்கு ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில், உத்தியோகத்தில் உள்ள போட்டி, பொறாமைகள் நீங்கும்.

சனிபகவான்

சனிபகவான் விளம்பி ஆண்டு முழுவதும் 8வது இடமான அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால் பணவரவிற்கு தடை ஏற்படும். எடுத்த காரியங்கள் உடனே நிறைவேறாது. ஒருவித படபடுப்பு ஆன மனோ நிலை காணப்படும். ஒரு சிலருக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுத்தும். எதிரிகளால் தொல்லை, அமைதியின்மை ஆகிய தீய பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. சனி கிழமை தோறும் சனி பகவானை வழிபாட்டு வர தீய பலன்கள் விலகி நன்மையான பலன்கள் ஏற்படும்

சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்
ரிஷப
ராசி




ராகு
கேது

செவ்வாய் சனி

குரு



குடும்பத்திற்கான பலன்கள்

கணவன் மனைவி ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும். திருமணம் , மற்றும் சுப காரியங்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது. மனைவி மூலமாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு.

தொழில் துறையில்/ பணியில் உள்ளவர்களுக்கு

அஷ்டம சனி நடைபெறுவதால், புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். புதிய கூட்டு தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். கூட்டு தொழிலில் உள்ளவர்கள் சக பங்குதாரர்களால் தொல்லைகள் ஏற்படும்.

பணியில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அவதி அடைய நேரிடும் . மேலதிகாரிகளுடன் அனுசரித்து போவது நன்மையான பலன்களை தரும். நன்றாக வேலை பார்த்தும் நல்ல பெயர் கிடைக்காது. அக்டோபர் 2018 பிறகு மேம்மையான  பலன்கள் ஏற்படும்.

விவசாயிகளுக்கு

ரிஷப ராசி விவசாயிகளுக்கு இந்த விளம்பி ஆண்டில் விவசாயத்தில் மேன்மையான பலன்கள் நடைபெறும். ஒரு சிலர் புதிய பயிர்களை விவசாயம் செய்து அமோக விளைச்சலை பெறுவார்கள்.ஒரு சிலருக்கு புதிய விவசாய வாகனங்கள் வாங்கும் ஏற்படும் யோகம் அமையும். பூச்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சிலருக்கு சங்கடங்கள் ஏற்படும்.
மாணவ மாணவியருக்கு

மேற்படிப்பு படிக்க வாய்ப்புகள் ஒரு சிலருக்கு தட்டி போகும் . சிலருக்கு வெளிநாடு சென்று உயர் கல்வி படிக்கும் யோகம் ஏற்பட தடை ஏற்படும். சரஸ்வதி காயத்ரி மற்றும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் வழிபாடு கல்வி தடைகளை முறியடிக்கும்.

மிதுன ராசி
 (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)
Astrologer R V Seckar Mobile 9848915177


குருபகவான் உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் அமர்ந்துள்ளதால். இது நல்ல யோகமான அமைப்பு. இதுவரை குழந்தை பாக்கியம் அமைய பெறாதவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்திற்கு இடம் மாறுகிறார். உங்கள் ராசிக்கு 6வது இடம் என்பதால் கடன் தொல்லை அதிகரிக்கும். உங்கள் எதிரிகள் வலுவுடன் காணப்படுவார்கள். திடீர் மருத்துவ சிலவுகள் ஏற்படும். ஒரு சிலருக்கு வீண் அலைச்சல்கள் ஏற்படும்.

சந்திரன், புதன
சூரியன், சுக்கிரன்



மிதுன ராசி




ராகு

கேது

செவ்வாய் சனி

குரு




குருபகவானின் பார்வை:

குரு பகவான் தன்னுடைய 5ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் இடத்தை பார்வை இடுவதால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உற்றார் உறவினர்களின் பேராதரவு கிடைக்கும். சுபகாரியங்கள் நடத்துவதில் இருந்த தடைகள் நீங்கும்.வருமானம் படிப்படியாக உயரத் தொடங்கும்.

லாப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் துணிச்சலுடன் கடினமான விஷயங்களில் இறங்குவீர்கள்.கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள்.உடன்பிறந்தோர் வகையில் வேறுபாடுகள் விலகி ஒற்றுமை பலப்படும்.

மிதுன ராசியை குரு பார்வையிடுவதால் கடினம் என்று ஒத்திவைத்திருந்த தொழிலை இந்த காலகட்டத்தில் எடுத்து திறம்படச் செய்து முடித்துவிடுவீர்கள்.திருமணம் போன்ற சுபகாரியங்களும் குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கி வாழ்க்கை ரம்யமாக இருக்கும் .

செவ்வாய் சனி சேர்க்கை

செவ்வாய் சனி சேர்க்கை மிதுன ராசிக்கு 11ம் அதிபதியும் மற்றும் 6ஆம் அதிபதியுமான செவ்வாய் பகவான் 8 மற்றும் 9 ம் அதிபதியான ,  சனி பகவானுடன்  இணைந்து களத்திர ஸ்தானமான 7ம் வீட்டில் இருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறக்கிறது. மனைவியை நேசியுங்கள். விட்டுக்கொடுத்து போனால் இல்வாழ்வு இனிமையாக இருக்கும்.

தொழில் துறையில்/ பணியில் உள்ளவர்களுக்கு

மிதுன ராசி நேயர்களுக்கு ஜீவனஸ்தானமான 10 ம் வீட்டில் ராசியாதிபதி மற்றும் சுகஸ்தானாதிபதி அமர்ந்துள்ளதால்  தொழிலில் நல்ல முன்னேற்றம் காணப்படும். . அலுவலகத்தில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம்  கிடைக்கும் . வியாபார கிளைகள் ஆரம்பிக்கவோ, விரிவாக்கம் செய்ய நல்ல நேரம் இது. கூட்டு தொழிலில் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டிய நேரம் இது.

விவசாயிகளுக்கு

கால்நடைகளாலும் நல்ல வருமானம் கிடைக்கும்.விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள்.  புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். விவசாயத் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்லவும்.

மாணவ மாணவியருக்கு

சிலருக்கு விடுதிகளில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். எதிர்பார்த்த பாடப்பிரிவுகளில் சேர்வார்கள். மாணவமணிகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டமிது. நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் வெற்றியடைவீர்கள். ஆனாலும் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

Astrologer R V Seckar Mobile 9848915177


கடக ராசி
(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177




சந்திரன், புதன்

சூரியன், சுக்கிரன்









கடக ராசி
ராகு

கேது






செவ்வாய் சனி


குரு




கோச்சாரத்தில் குரு பகவான்

குரு பகவான் கடக ராசிக்கு சுகஸ்தானமான 4ம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். 4ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிப்பது மிக நன்மையான பலன்களை தராது.

ஆயினும் குரு பகவான் 8ம் இடத்தை பார்வையிடுவதால் எதிரியால் பயம், பழி, கெட்ட பெயர், அவமானம், அபகீர்த்தி போன்ற தீய பலன்கள் ஏற்படுவதற்கு தடை ஏற்படும்.

மேலும் , குரு பகவான் கர்ம மற்றும் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தைப் பார்வை இடுவதால் , தொழில் மற்றும் உத்யோகத்தில் மேன்மை கட்டாயம் ஏற்படும்.

ராசிக்கு 4 மற்றும் 11 ம் அதிபதியான சுக்ர பகவானை குரு பார்வை ஏற்படுவதால் சிலவுகள் குறைந்து சேமிப்பு பெருகும். ஒரு சில நேயர்கள் புதிய சொத்துகள் வாங்கும் யோகம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய வாகனங்கள் ஏற்படும்.

குடும்பத்திற்கான பலன்கள்

இதுவரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். கணவன் மனைவி ஒற்றுமை மிக சிறப்பாக இருக்கும். பிரிந்த கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேரும் வாய்ப்பு அமையும்.

தொழில் துறையில் உள்ளவர்களுக்கு

மேலும் ஜீவன ஸ்தானத்தில் தனஸ்தான அதிபதி ஆன உச்சம் பெற்ற சூரிய பகவானை குரு பார்வையிடுவதால் ஒரு சிலருக்கு தொழிலில் மிகவும் உன்னதமான நிலையை அடைய வாய்ப்புள்ளது. திரண்ட செல்வம் தொழிலால் மற்றும் உத்தியோகத்தால் ஏற்படும். ஒரு சில கடக ராசி நேயர்களுக்கு பெரும் பதவிகள் வந்து அடையும்.அரசியலில் உள்ளவர்களுக்கு மிக உயர்ந்த பதவிகள் வந்தடையும்.

விவசாயிகளுக்கு

கடக ராசி விவசாயிகளுக்கு விவசாயத்தில் மேன்மையான பலன்கள் இந்த விளம்பி ஆண்டில் நடைபெறும். ஒரு சிலர் புதிய பயிர்களை விவசாயம் செய்து அமோக விளைச்சலை பெறுவார்கள். புதிய கண்டுபிடிப்பால் விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்துவார்கள். ஒரு சிலருக்கு புதிய விவசாய வாகனங்கள் வாங்கும் ஏற்படும் யோகம் அமையும்.

சிம்ம ராசி
(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177




சந்திரன், புதன்

சூரியன், சுக்கிரன்









ராகு

கேது



சிம்ம ராசி


செவ்வாய் சனி


குரு




சிம்ம ராசிக்கு கடந்த முப்பத்தாறு மாதங்களாக இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது. இந்த தமிழ் புத்தாண்டு  உங்களுக்கு நல்ல மேன்மையான பலன்கள் நடை பெற  உள்ளது.

கோச்சாரத்தில் குரு பகவான்

குரு பகவான் அதிசாரமாக 3ம் வீடான துலா ராசியில் உள்ளார். மூன்றில் உள்ள குருவால் அதிக நன்மையான பலன்களை எதிர்பார்ப்பதற்கு இல்லை. விரய சிலவுகள் அதிகம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆகையால் ஆடம்பர சிலவுகளை தவிர்க்கவும்.

பாக்கிய ஸ்தானத்தை குரு பார்வை இடுவதால் தெய்வ வழிபாடு, அதிர்ஷ்டம், வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.
லாப ஸ்தானமான 11ம் இடத்தை குரு பார்ப்பதால் , எடுத்த காரியம் வெற்றி, நோய் குணமடைதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோச்சாரத்தில் சனி பகவான்

புத்திர மற்றும் பூர்வ புண்ய ஸ்தானமான 5 ம்  இடத்தில செவ்வாய் மற்றும் சனி பகவான் இணைந்துஇருப்பதால் , பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் குழந்தைகளின் நடவடிக்கைகளை நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் . குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் மிகுந்த கவனம் தேவை.

குடும்பத்திற்கான பலன்கள்

7ம் இடத்தை கோச்சார குரு பார்வையிடுவதால் குடும்பத்தில் சுப நிகஸ்ச்சிகளுக்கு குறைவு இருக்காது. திருமணம் , மற்றும் சுப காரியங்கள் நடை பெற வாய்ப்பு உள்ளது. மனைவி மூலமாக அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி உறவு மேன்மையாக அமையும். மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தங்க நகைகள் வாங்கும் யோகம் ஏற்படும். சிலவுகள் குறைந்து சேமிப்புகள் பெருகும்.

தொழில் துறையில் உள்ளவர்களுக்கு

புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் தொழிலை விரிவாக்கம் செய்வார்கள். சிலவுகளை கட்டுப்படுத்தினால் , சேமிப்பு பெருகும். ஊழியர்களின் ஒத்துழைப்பால் தொழிலில் சிம்ம ராசி நேயர்களுக்கு மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களளுக்கு பதவி உயர்வு, அனுகூலமான இடமாற்றம் , மற்றும் சம்பள உயர்வு போன்றவை ஏற்படும்.

விவசாயிகளுக்கு

 விளம்பி ஆண்டில் மகசூல் அமோகமாக இருக்கும். சிலவுகள் குறைந்து சேமிப்புகள் பெருகும். புதிய நிலங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு அமையும். புதிய விவசாய முயற்சியில் ஈடுபட்டு அதனால் மேன்மையான பலன்கள் ஏற்படும் யோகம் ஒரு சிலருக்கு அமையும்.

விளம்பி புத்தாண்டு சிம்ம ராசி நேயர்களுக்கு ஆரம்பித்தில் சில சோதனைகளும் , சங்கடங்களையும் தந்தாலும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் யோகமான பலன்களை தரும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறலாம்.

கன்னி
(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)


Astrologer R V Seckar Mobile 9848915177



சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்






ராகு


கேது


செவ்வாய் சனி

குரு


 கன்னி ராசி


நீண்ட காலம் தடைபட்ட திட்டங்கள் நிறைவேறும்.மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் உதவியால் நன்மைகள் நடைபெறும்.. புதிய சொத்து வாங்கும் யோகம் ஏற்படும். நீண்ட காலமாக தடைபட்ட திருமணம் தற்பொழுது. கணவன்-மனைவிக்கிடையே அன்பும் பாசமும் அதிகரித்து காணப்படும்.

கோச்சாரத்தில் குரு பகவான்

3.10.18 வரை குருபகவான் தன ஸ்தானமான  2-வது வீட்டிலேயே இருக்கபோவதால்   குடும்பத்தில் குதுகூலம் நிலவும். தங்க ஆபரணங்களில் அதிக முதலீடு செய்வீர்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும்..நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் நல்ல உறவு நிலவும்.. பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள்.

4.10.18 முதல் 12.3.19 வரை 3-ம் வீட்டில்  குரு சஞ்சரிக்க இருப்பதால்  அதுமுதல் அதிக அலைச்சல் உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்க போராட  நேரிடும். இளைய சகோதரர்  அன்பும் ஆதரவும் உண்டு.பணத்தட்டுப்பாடு ஏற்படுவதால் கடன் வாங்கும் சூஸ்நிலை ஏற்படும்.. தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துப் போகும். தந்தைவழி சொத்துகள் அனுபவிக்கும் யோகம் ஏற்படும்.

 13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்கிரமாக 4-ல் அமர்வதால் எடுத்த காரியங்களில்  வெற்றி உண்டாகும், தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய சொத்துக்கள் வாங்கும் பொழுது மிகுந்த எச்சரிக்கை தேவை.

கோச்சாரத்தில் சனி பகவான்

அர்த்தமாஷ்டம சனி நடை பெறுவதால் , சனிக்கிழமை தோறும் சனிபிரிதி செய்வது நலம். ஊனமுற்றோர்களுக்கு, மற்றும் காகங்களுக்கு சனிக்கிழமை தோறும் அன்ன தானம் செய்து வர, சனி பகவானால் தீய பலன்கள் நடைபெறாது. மனதில் ஒரு வித கவலை சூழும். ஒரு காரியத்தை முடிக்க இடை விடாது போராட நேரிடும். தாயின் ஆரோக்கியத்தில் மிகவும் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மை பயக்கும் . பிறருக்கு ஜாமின் அளிப்பதை தவிர்க்கவும.

கோச்சாரத்தில் ராகு / கேது

12.02.19 வரை  கன்னி ராசிக்கு லாப ஸ்தானமான 11ம் வீட்டில்  ராகு இருப்பதால் வருமானம் பெருகும். எடுத்த காரியங்கள் கைகூடும். . சமுதாயத்தில்  உங்கள் குழந்தைகள் தன்னெச்சையாக செயல் படுவார்கள்.. பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும்.

 உங்கள் ராசிக்கு கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-லும் சஞ்சரிக்கும் காலகட்டத்தில் அதாவது 13.02.19 முதல் வருடம் முடியும் வரை அதிக பணிச்சுமையால்  அல்லாட நேரிடும்.வீண் பழி உங்கள் மீது சுமத்தப்படும். தாயாருடன் இணக்கமான போக்கை கடைபிடித்தால் நலம்.. வீடு, வாகனப் பராமரிப்புச் செலவு அதிகரித்து உங்களை கடன்காரராக ஆக்கும் பணியில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் ஏற்படும்.

குடும்பத்திற்கான பலன்கள்

திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணமும் திருமணம் ஆனவர்களுக்கு குழந்தைபாக்கியமும் ஏற்பட்டு நன்மைகளை அடையப் போகிறீர்கள் எதிலும் வெற்றி, தங்கு தடையற்ற முன்னேற்றம், புகழ், அந்தஸ்து கூடப் பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் உதவியும் அரசாங்கத்தால் நன்மையும் அடையப் போகிறீர்கள். ஷேர் மார்க்கெட்டில் வெற்றிகள் பெற்று லாபங்களைப் பெறுவீர்கள். நீண்ட காலமாக இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்துகள் கிடைக்கப் பெறுவார்கள். அவற்றிலிருந்த வில்லங்கங்கள் தீர்ந்துவிடும். தெய்வ அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கக் கூடிய காலகட்டமாக இந்த விளம்பி வருடம் அமையும்.

தொழில் துறையில்/ பணியில் உள்ளவர்களுக்கு

எதிர்பாராத பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவைகள் கிடைக்கப் பெறுவீர்கள்பணியில் தங்கள் பணியில் இருந்த சோர்வு நீங்கி, வேலையில் நேர்த்தியாகச் செயல்பட்டு வெற்றியடைவார்கள்.. சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் உண்டு. வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். உங்கள் முதலீடுகள் இந்த காலகட்டத்தில் பலனளிக்கத் தொடங்கும். உங்களுக்குக்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் நல்ல விசுவாசத்துடன் ஒத்துழைப்பாக இருப்பவர்கள். உங்களின் கடின உழைப்பு வீண் போகாது.

விவசாயிகளுக்கு

கறவைமாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும் மாடுகள் வளர்த்தும் லாபங்களைப் பெறுவீர்கள். புதிய நிலங்களையும் வாங்குவீர்கள். விவசாயிகளுக்கு கொள்முதல் லாபம் சீராக இருக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

மாணவ மாணவியருக்கு
மாணவமணிகளின் மதிப்பு மரியாதை உயரும். உங்களை வெறுத்து ஒதுங்கியவர்கள் எல்லாம் தேடி வருவார்கள்.

துலாம்
 (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177



சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்






ராகு


கேது


செவ்வாய் சனி

துலா ராசி
குரு




துலா ராசி நேயர்களுக்கு ஜென்ம ராசியில் குருவும்,, 3ம் இடமான  தைரிய வீரிய ஸ்தானத்தில் சனியும், 4ம் இடமான சுக ஸ்தானத்தில் கேதுவும், ஜீவனஸ்தானமான  தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகங்கள் அமைந்திருக்கின்றன. பத்தில் ஒரு பாவியாவது இருக்கவேண்டும் என்ற ஜோதிட பாடல் படி 10ம் இடத்தில ராகு அமர்த்துள்ளதால் தொழிலில் நல்ல மேன்மை உண்டாகும். பதவிஉயர்வுகள் வந்து சேரும்.  மனோ தைரியம் மிகுந்து காணப்படும்.

துலா ராசி அதிபதி சுக்கிரன்   துலா ராசியை பார்ப்பதால்.   உங்களை வாடிக்கொண்டு இருந்த  தாழ்வு மனப்பான்மை, பயம் இவை விலகும்.   இல்லற வாழ்வு மகிஸ்ச்சியாக இருக்கும். . கணவன், மனைவி அந்யோன்யம் சிறப்பாக இருக்கும்.

Astrologer R V Seckar Mobile 9848915177


கோச்சாரத்தில் குரு பகவான்

3.10.2018 வரை குரு பகவான்   ஜன்ம குருவாக அமர்ந்து இருப்பதால் ,  பலவித துயரங்களை  நீங்கள் சந்திக்க நேரிடும்.  4.10.18 முதல் குரு 2-ல் அமர்வதால், குடும்பத்தில்  மகிழ்ச்சி பெருகும்.

குரு பகவான் தன்னுடைய 7ம் பார்வையால் துலா ராசிக்கு 7ம் இடத்தில் உள்ள சூரியன் மற்றும் ராசியாதிபதியான சுக்கிரனை பார்வையிடுவதால் இதுவரை திருமண தடையை சந்தித்தவர்கள் தற்பொழுது திருமண பந்தத்தை காண்பார்கள். ஒரு சில ராசி நேயர்கள் புதிய கூட்டு தொழில் இந்த விளம்பி ஆண்டில் தொடங்குவார்கள். கணவன் மனைவி உறவு அன்யோன்யம் மிகுந்து காணப்படும்.

கோச்சாரத்தில் சனி பகவான்
தைரிய வீரிய ஸ்தானமான  மூன்றாமிடத்தில் சனி சஞ்சரிக்கிறார்.. இதுவரை நிரந்திர  வேலை, தொழில், வியாபாரம் அமையப்பெறாதவர்கள் நிரந்தர தொழில் , வேலை  அமைப்புகளை பெறுவீர்கள். நிலையான வருமானம் கிடைக்கக் கூடிய வகையில் தொழிலோ, வேலையோ அமையும். சனி செவ்வாய் சேர்க்கையில்  புது ஆண்டு பிறப்பதால்  வாகனங்களை கையாளும்பொழுது மிக்க கவனம் தேவை.

விளம்பி ஆண்டு முழுக்க சனி பகவான் தைரிய , வீரிய ஸ்தானமான  3-ம் வீட்டில் நின்று, நல்ல யோகமான பலன்களை தந்து கொண்டுஇருக்கிறார்..  கடினமான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உங்களின் இலக்கை நோக்கி வெகு  வேகமாக  நகர்வீர்கள்.

குடும்பத்திற்கான பலன்கள்

கணவன் மனைவிக்கிடையே அன்யோன்யம் உண்டாகும். தங்கள் குழந்தைகளின் சாதனைகள் மூலம் . பெற்றோரின் கவுரவம் அந்தஸ்து உயரும்.  எதிர்பாராத  உதவிகள் கிடைக்கும். காரிய தாமதம் உண்டாகும். அரசுவேலைகளுக்கு தேர்வுகளை சிறப்பாக  முடியும். தேர்வின் முடிவுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். உங்கள் ரசனைக்கேற்ப பழைய வீட்டை விரிவுப்படுத்திக் கட்டுவீர்கள்.

தொழில் துறையில் / பணியில் உள்ளவர்களுக்கு

புதிய தொழில் செய்வதற்கு அடித்தளமிடுவீர்கள். செய்தொழில் மேன்மையடையும். சிலருக்கு வெளியூர் சென்று தொழில் செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும்.  பணியில் உள்ளவர்கள் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். இந்த இடம் மாற்றங்கள் எதிர்காலத்தில் உங்களுக்கு நன்மைகள் தரும். புதிய இடங்களுக்கு மாற்றலாகிச் சென்று சிறப்பாக பணியாற்றுவீர்கள். அலுவலகத்தில் புதிய பயிற்சிகளைக் கற்றுக் கொள்வீர்கள்.

விவசாயிகளுக்கு

புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள்.விவசாயிகளுக்கு  லாபம் நன்றாக இருக்கும் . மாற்றுப் பயிர் செய்வதிலும் பால் வியாபாரம், முட்டை வியாபாரம் போன்ற உப தொழில்கள் மூலமாக வருமானத்தைக் காண்பீர்கள்.

மாணவ மாணவியருக்கு

மாணவமணிகள். படிப்பில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மாணவமணிகள்  உற்சாகமாக விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள். இதனால் உடலாரோக்கியம் பலப்படும். மாணவ மணிகள் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். அதிகமான மதிப்பெண்கள் பெற்று பெற்றோர்/ஆசிரியர்களின் அன்பையும் ஆதரவும் பெறுவார்கள். மாணவ மணிகள் விரும்பிய பள்ளிக்கூடத்திலும் கல்லூரியிலும் இடம் கிடைக்கப்பெற்றுச் சேர்வார்கள்.
விருச்சிகம்
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177



சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்






ராகு


கேது


செவ்வாய் சனி
விருச்சிக ராசி
குரு




சிலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக இருந்தால் கடன் வாங்குவதை தவிர்க்கலாம். விருச்சிக ராசி பிறரிடம் அன்பாகவும் பணிவாகவும் பேசி காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். எதிர்ப்புகளை வெல்லும் திறன் உண்டாகும். சந்தோஷமான  சம்பவங்கள் வாழ்க்கையில் நடக்கும். உங்கள் கடின உழைப்புக்கும் திறமைக்கும் உரிய மரியாதை  கிடைக்கும். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் உறுதுணையாக  இருப்பார்கள்.

உங்கள்  அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்திக் கொள்ள, பொறுப்புகளைதிறமையாக  செய்து முடிப்பீர்கள். வருமானம் சரளமாக இருக்கும். பங்கு வர்த்தகத்திலும் ஸ்பெகுலேஷன்  ஓரளவு நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோரின் உடல்நலத்தில் திடீர் பாதிப்புகள் ஏற்படும். அதனால் மருத்துவ செலவு உண்டாகும்.

கோச்சாரத்தில் குரு பகவான்

குரு பகவான் 3.10.2018 வரை விரைய ஸ்தானமான 12 ம் இடத்தில சஞ்சரிக்க இருப்பதால்  திடீர் பயணங்கள் மற்றும் திடீர் செலவுகளால் திண்டாடுவீர்கள். ஒரு சில நேயர்கள்  திருமணம், சீமந்தம் போன்ற சுபச் சிலவுகளால் கடன் வாங்க நேரிடும். தீர்த்த யாத்திரை செல்லும் நேரம் இது. வேலைச்சுமை அதிகரிக்கும். மனச்சோர்வு உண்டாகும். வியாழ கிழமை தோறும் நவகிரஹங்களில் உள்ள குரு பகவானுக்கு கொண்டக்கடலை மாலை சார்த்தி வரவும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை விருச்சிக ராசியில்  குரு வந்து அமர்வதால் வீண் அலைச்சல் அதிகரிக்கும்.  முன்கோபம் அதிகரித்து காணப்படும். எதிர்பாராத மருத்துவ சிலவுகள் உண்டு.

கோச்சாரத்தில் சனி பகவான்

விளம்பி ஆண்டு  முழுவதும் சனி குடும்ப , வாக்கு , தன ஸ்தானமான  2-ல் அமர்ந்து பாதச்சனியாக இருப்பதால், வீண் வாக்கு வாதங்களைத் செய்வதை அறவே தவிர்த்திடுங்கள். வீட்டில் புது வரவு உண்டாகும்.. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை விவேகத்துடன் அணுக வேண்டும். வருமணத்தடை ஏற்படும். எழரை சனியின் கடைசி கால கட்டம் நடைபெறுவதால் ,  புதிய தொழில் முயற்சிகளை தவிர்க்கவும். பணியில் கவனமாக செயல் பட வேண்டிய நேரம் இது. பணியில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.. ஏழரைச் சனி தொடர்வதால் எல்லா விஷயங்களில் மிகவும் கவனம் தேவை.
குடும்பத்திற்கான பலன்கள்
நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கி இணக்கமான சூழ்நிலை நிலவத் தொடங்கும் பெற்றோர் இதுவரை இல்லாத அளவுக்கு அன்பு பாசத்துடன் இருப்பார்கள். மேலும் புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் வருமானம் கூடத் தொடங்கும். அதனால் பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். வாங்கிய சொத்துகளில் இருந்த வில்லங்கங்கள் நீங்கும். அவற்றை சிறப்பான விலைக்கு விற்று புதிய வீடு நிலங்களை வாங்குவீர்கள். வங்கிகளில் சேமிப்பு உயரும். குடும்பத்தில் பாகப்பிரிவினை நல்ல முறையில் நடக்கும்.

தொழில் துறையில் / பணியில் உள்ளவர்களுக்கு

கவனத்துடன் செயல்பட்டு வியாபாரத்தைப் பெருக்கவும். பணவரவு சரளமாக இருக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியில் உள்ளவர்கள்  கவனத்துடன் செயல்படவும். உங்களுக்கு மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் உண்டு. ஆனாலும் சில நேரங்களில் நீங்கள் பேசும் வார்த்தைகளால்  மேலதிகாரிகளின் தயவு அடைவதில் கால தாமதம் ஏற்படும். எனவே பேச்சில் எச்சரிக்கை தேவை. சக ஊழியர்கள் நட்புடன் பழகுவார்கள். 

புதிய சேமிப்புகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். நண்பர்களையோ, கூட்டாளிகளையோ நம்பி எதையும் பேசவோ செய்யவோ வேண்டாம். வியாபாரத்தை சீரமைக்கும் எண்ணத்தை ஒத்தி வையுங்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை அமர்த்தி, உங்கள் பொருள்களை பல புதிய சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனையை அதிகரிக்க செய்யலாம்.

விவசாயிகளுக்கு

கால்நடைகளால் உங்களுக்கு செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அவற்றைப் பராமரிப்பதில் கவனமாக இருக்கவும். சக விவசாயிகளிடம் உங்கள் மதிப்பு குறையும். விவசாயிகள் கவனமாக இருக்கவேண்டிய காலகட்டமாகும். மற்றபடி மனோ தைரியத்திற்கு ஒன்றும் குறைவு வராது. புதிய குத்தகைகளை தவிர்க்கவும்.

மாணவ மாணவியருக்கு

மாணவமணிகள் படிப்பில் வெற்றி அடைவீர்கள். நல்ல மதிப்பெண்களையும் அள்ளுவீர்கள். ஆசிரியர்கள் உங்களைப் புகழ்வார்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177



சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்






ராகு


கேது

தனுசு
ராசி
செவ்வாய் சனி

குரு




சகோதரரால் நன்மை உண்டு. வராத கடன்கள் மே மாதத்தில் அனைத்தும் வசூலாகும். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளால்  ஜெயம் உண்டாகும். புதிய  வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கோச்சாரத்தில் குரு பகவான்

3.10.2018 வரை குரு பகவான் லாப ஸ்தானமான 11ம் இடத்தில் சஞ்சரிக்க இருப்பதால் வீட்டில் சுப நிகஸ்ச்சிகளுக்கு குறைவிருக்காது. பிதுரார்ஜித சொத்துகள் வந்து சேரும்.  நெருங்கிய உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நன்மை பயக்கும். 13,3,2019 முதல் 13-4-2019 வரை குரு பகவான் அதிசார வக்ர கதியில் ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் முன் கோபம் மிகுந்து காணப்படும். மனஉளைச்சல் அதிகரித்து காணப்படும்.

கோச்சாரத்தில் சனி பகவான்

விளம்பி வருடம்  முழுவதும் சனி பகவான் தனுசு ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். ஜென்ம ராசியில் சனி பகவான் இருக்கும் பொழுது வரவுக்கு மேல் சிலவுகள் செய்ய வைப்பார். ஒரு சிலருக்கு வேலை பறிபோகும். ஒரு சிலர் தொழிலில் தொடர்ந்து நஷ்டங்களை சந்திக்க நேரிடும். சொந்த ஊரை விட்டு வெளியூரில் சென்று  வசிக்க நேரிடும். மனதில் இனம் தெரியாத கவலை  சேரும். கணவன் மனைவி இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ நேரிடும், குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலை ஏற்படும். தக்க சனி பிரீத்தி செய்து வந்தால் தீய பலன்கள் நடைபெறாமல் நன்மையான பலன்களே நடைபெறும்.

குடும்பத்திற்கான பலன்கள்

திருமணம் போன்ற சுபகாரியங்களும் குழந்தை இல்லாதோருக்கு மழலை பாக்கியமும் உண்டாகும்.பொருளாதாரத்தில் சிறப்பான நிலையை எட்டி விடுவீர்கள்.சங்கடங்களும் தடைகளும் நீங்கும்.  நல்ல வருமானம் தரும் சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள்.வழக்கு விவகாரங்கள் சாதகமான நிலைமைக்குச் செல்ல வாய்ப்பில்லாததால்  சமரசமாக முடித்துக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ளலாம். பழைய கடன்களைத் திருப்பி அடைப்பீர்கள். எதிரிகள் அடங்கி இருப்பார்கள்.

தொழில் துறையில் / பணியில் உள்ளவர்களுக்கு

தொழிலில் கடுமையான போட்டி நிலவும்.கணவரிடம் விட்டுக்கொடுத்து சென்றால் காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம். குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.பெண்மணிகள் குடும்பத்தில் பொறுமையுடன் இருக்கவும். சிலருக்கு வெளிநாடு சென்று பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டாகும். சோம்பேறித்தனத்தை மூட்டைக் கட்டிவைத்துவிட்டு திறம்படச் செயல் பட வேண்டிய நேரம் இது.  சிலருக்கு அரசாங்க விருதுகளும் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர் வகையில் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.

விவசாயிகளுக்கு

புதிய குத்தகைகள் மூலமும் எதிர்பார்த்த வருவாயைப் பெறுவீர்கள் .மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டு பலன் பெறுவீர்கள். இதனால் கொள்முதலில் பொருள்களை விற்று நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள்.

மாணவ மாணவியருக்கு
மாணவமணிகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டமிது.  எதிர்பார்த்த பாடப்பிரிவுகளில் சேர்வார்கள். சிலருக்கு விடுதிகளில் தங்கி படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றியடைவார்கள். ஆனாலும் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

மகரம்
(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177



சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்






ராகு


மகர ராசி

கேது


செவ்வாய் சனி

குரு




மகர ராசி நேயர்களுக்கு  விளம்பி வருடத்தில் தாராளமான வருமானம் வந்து சேரும்.. குடும்பத்தில் சகல வசதிகளும்  வந்து சேரும். ராசி நேயர்களின்  மேம்பட்ட  சிந்தனைகள்  வருங்காலவாழ்வை திசை திருப்பும். ராசி நேயர்கள் நீண்ட கால  திட்டங்கள் நிறைவேறும்.  சமயோஜிதப் புத்தியாலும், சாதுரியமான பேச்சாலும் உங்களடய  நீண்ட நாள் பிரச்சினைகளைத் தீர்ப்பீர்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். 

பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும்  உயரும். நீண்ட கால கடன் பிரச்சினை தீரும். தாராளமான  பணவரவு உண்டு. உங்களின் நண்பர்களின்  சுயரூபம் அறிந்து ஜாக்கிரதையாக  செயல்படத் தொடங்குவீர்கள்.  கடன் உதவிகள்  தக்க நேரத்தில் கிடைக்கும்.

கோச்சாரத்தில் குரு பகவான்

குரு பகவான் விளம்பி  ஆண்டு ஆரம்பம் முதல் 03.10.2018 வரை ஜீவன ஸ்தானமான  10-ம் வீட்டில் சஞ்சரிப்பதால் தொழிலில் போட்டி  பொறாமையால் குறைந்த வியாபாரமே நடை பெரும். பெரிய பதவியில்  உள்ளவர்கள் தங்களுடைய பதவிகளை இழக்கும் நேரம் இது.  உங்களிடம் திறமை குறைந்துவிட்டதாக அடிக்கடி நினைத்துக்கொள்வீர்கள். 

உங்களின் எண்ணங்களைத் பிள்ளைகளிடம் செலுத்த  வேண்டாம். ஆனால், 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் மகர ராசிக்கு 11ம் வீடான லாப வீட்டில் அமர்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். இழந்த பதவிகளை மீண்டும் பெறுவீர்கள்.

சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும். உங்கள் இல்லத்தில் கிரகப் பிரவேசம், சீமந்தம்,திருமணம்,  போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு குறைவிருக்காது.  தொடர்ந்து வரும்  சுப நிகழ்ச்சிகளால்  உங்கள் வீடு களை கட்டும். கணவன் மனைவி அன்னியோன்மாக காணப்படும். வீட்டில் செலவு குறைந்து சேமிப்பு பெருகும்.. பிள்ளைகளின் பிடிவாதமான போக்கு மாறும். . ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி 12-ம் இடமான அயன சயன ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால்    கடன் வாங்க வேண்டியிருக்கும்.

கோச்சாரத்தில் சனி பகவான்

இந்த விளம்பி ஆண்டு முழுவதும் சனி பகவான் அயன , சயன ஸ்தானமான 12-ல் மறைந்து விரயச் சனியாகத் சஞ்சரிக்க இருப்பதால் மிகவும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உறவினர்களோடு மற்றும் நண்பர்களோடு கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நலம். 

இளைய சகோதரர்கள் உங்களுக்கு சங்கடங்களை தருவார்கள். நல்ல நண்பர்களை உங்கள் சந்தேகப் புத்தியால்  இழக்க வேண்டி வரும். காரிய தடங்கல் , மனச்சோர்வு , கடின உழைப்பு போன்றவற்றால் பாதிக்க படுவீர்கள். மகர ராசிக்கு சனி பகவான் ராசி அதிபதி மற்றும் 2 ம் அதிபதி ஆவதால் , தீய பலன்கள்  குறைந்து நன்மையான பலன்களே நடை பெரும். சனி கிழமை தோறும் சனி பகவானை ஆராதித்து வந்தால் , நன்மையான பலன்களே நடைபெறும்.

குடும்பத்திற்கான பலன்கள்

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடை பெரும்.  வேலை வாய்ப்பு இல்லாதவர்கள் புதிய வேலைவாய்ப்பை பெறுவார்கள். திருமணம் நீண்ட நாட்களாக தடை பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு திருமணம் நடை பெரும். கணவன் மனைவி இடையே கருத்து ஒற்றுமை காணப்படும் . குடுப்பதில் ஒற்றுமை ஓங்கி காணப்படும். செயும் தொழிலில் மேன்மை உண்டாகும். 

வேளையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். நண்பர்களால் உதவி உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். ஒரு சிலர் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய நேரிடும். திடீர் தனவரவு உண்டாகும். கௌரவம் ஓங்கும் . பெயரும் நர்மதிப்பும்  உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் மேன்மை உண்டாகும்.

தொழில் துறையில் / பணியில் உள்ளவர்களுக்கு

பங்கு சந்தை , தரகு தொழிலில் யிடுபட்டுஉள்ளவர்கள் தொடர் லாபங்களை பெறுவார்கள். ஒரு சில நேயர்களுக்கு புதிய நண்பர்கள் அமைவார்கள். தொழில் தொடர்பாக ஒரு சிலர் பிறந்த ஊரை விட்டு செல்ல நேரிடும். தொழிலில் மேன்மை, கூட்டுத்தொழிலில் யோகம் போன்ற நற்பலன்களை தருவார். அரசாங்க தொடர்பால் அல்லது ஒப்பந்தங்களால் ஆதாயம் ஒரு சில நேயர்களுக்கு உண்டு. பணியில் உள்ளவர்கள்  சோதனைகளைக் கடந்து பெருமூச்சு விடுவார்கள். மேலதிகாரிகள் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வார்கள். வருமானம் பெருகத் தொடங்கும்.

விவசாயிகளுக்கு

கால்நடைகளாலும் நல்ல வருமானம் கிடைக்கும். விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பார்கள். விவசாயத் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்லவும். புதிய கால்நடைகளையும் வாங்குவீர்கள். மகசூல் பெருகும். வருவாய் கூடும். விவசாயிகளுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும்.நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம்.  புதிய நிலங்களை வாங்கும் நேரமிது.

மாணவ மாணவியருக்கு
மாணவமணிகளுக்கு முன்னேற்றகரமான காலகட்டமிது. நல்ல மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் வெற்றியடைவீர்கள். குழந்தைகளின் கல்வியில் மேன்மை உண்டாகும்.
Astrologer R V Seckar Mobile 9848915177


கும்பம்
(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய(

Astrologer R V Seckar Mobile 9848915177



சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்




கும்ப ராசி


ராகு


கேது


செவ்வாய் சனி

குரு




இந்த விளம்பி வருடத்தில்  கும்ப ராசி நேயர்கள்  தங்கள் பேச்சு சாதுர்யத்தால்  காரியம் சாதிப்பார்கள்.. அரசு வேலை , ஒப்பந்தங்கள் கிடைக்க பெரும்.  புது வீடு வாங்க அல்லது கட்ட யோகம் ஏற்படும். நீண்டகாலமாக இழுபறியாக இருந்த  வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வரும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.  உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். நீண்ட நாட்களாக தடைகளை சந்தித்த  அயல்நாட்டுப் பயணம் தற்போது அமையும்.

வேலை இல்லாதவர்களுக்கு  வேலை கிடைக்கும். ஒரு சில ராசி நேயர்களுக்கு  இளைய சகோதரர் மூலம் உதவிகள்  கிடைக்கும். உங்கள் ராசிக்கு சந்திரன் 2-ல் நிற்கும் போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் அன்பாக  பேசி எல்லாவற்றையும் சாதித்து  காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். வேற்றுமொழிக்காரர்கள் மூலம் தக்க உதவிகள் கிடைக்க பெறுவீர்கள்.

கோச்சாரத்தில் குரு பகவான்

இந்த விளம்பி  ஆண்டு ஆரம்பம்  முதல் 03.10.2018 வரை குரு பகவான்  பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் நிற்பதால் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். ஒரு சில ராசி நேயர்கள் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். நீண்ட காலமாக வசூல் செய்ய முடியாத கடன் தற்போது வசூலாகும்.. வேலை, அலுவலகம்  என்றில்லாமல் இனிக் குடும்பத்துக்காகக் கொஞ்சம் நேரம் ஒதுக்கும் நிலை உருவாகும். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் நிறைந்து காணப்படும், நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு  தற்சமயம் குழந்தை பாக்யம் ஏற்படும். . உங்கள் மீது  மதிப்பு, மரியாதை கூடும். உறவினர்கள் உங்களை மதிக்க தொடங்குவார்கள்.

 04.10.2018 முதல் 12.03.2019 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குப் பத்தாம் வீட்டுக்கு வருவதால், செய்தொழிலில் அல்லது வேலையில்  பல ஏற்ற இறக்கங்களை சந்திக்க நேரிடும்.  பிறர்க்கு  கேரண்டீ  அளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். கொடுக்கல் வாங்கல்களில்  தங்களின் நாணயத்தின்  மீது மற்றவர்களுக்கு  சந்தேகம் ஏற்படும். ஆனால், 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குரு பகவான் அதிசார வக்கிரமாகி லாப வீட்டில் வந்தமர்வதால் ,நீண்ட நாளாக வராமலிருந்த பணமெல்லாம் இப்போது கைக்கு வரும். பல வழிகளில் உங்கள் வருமானம் பெருகும். வீட்டில்  மகிஸ்ச்சிக்கு  குறைவிருக்காது. . திடீர் யோகம், பணவரவு உண்டு.

கோச்சாரத்தில் சனி பகவான்

இந்த விளம்பி  ஆண்டு முழுக்க சனிபகவான் லாப ஸ்தானமான 11ம்  வீட்டில் நிற்பதால், இந்த ராசி நேயர்களின் செயலில் வேகம் கூடும். பல வகைகளில் வருமானம் பெருகத் தொடங்கும்.  பெரிய மனிதர்களின் தொடர்பால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.  தங்களின் தொலைநோக்குச் சிந்தனைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் . உங்களின் அழகு, இளமைக் கூடும். பெரிய பதவிகள் உங்களை  தேடி வரும்.  ஒரு சில நேயர்கள் புது வீடு கட்டி குடிபுகுவீர்கள். உங்களுடைய பேச்சாற்றலால் எல்லோரையும் கவர்வீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் தவிர்த்தால் உங்கள் சேமிப்பு பெருகும். நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன் பிரச்னைகள் தீரும்.. ஒரு சிலருக்கு அயல்நாடு செல்லும் யோகம் உண்டாகும். பிற மொழி பேசுபவர்கள் உதவுவார்கள். ஒரு சில நேயர்கள் சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு  நல்ல பெயர் எடுப்பீர்கள்.

குடும்பத்திற்கான பலன்கள்

கும்ப ராசி நேயர்களுக்கு  இந்த விளம்பி வருட முழுவதும் மறைமுக பணவரவு, வரதட்சணை, உயில் சொத்து, லாட்டரி, ரேஸ்,  புதையல் மூலம் பணவரவை பெற வாய்ப்பு உள்ளது. ஜாதகர் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குழந்தைகளின் வாழ்வில் நல்ல முன்னேற்றம் தென்படும். மனோ தைரியம் மிகுந்து காணப்படும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு ஜாதகர் நல்ல வருவாய் ஈட்டும் வாய்ப்பு ஏற்படும்.  இளைய சகோதர சகோதிரிகளுக்கு வாழ்வில் நல்ல மேன்மை ஏற்படும்.

நீண்ட காலமாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும். தீர்த்த யாத்திரை செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். ஒரு சிலர் புதிய சொத்துக்கள் , மனை வாங்கும் யோகம் உண்டாகும் . ஆன்மீக பயணத்தால் கடவுளின் அருளாசியை பெறுவார்கள்
தொழில் துறையில் / பணியில் உள்ளவர்களுக்கு

மேலதிகாரிகள் உங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுவார்கள். கொடுத்த பணிகளைக் குறித்த காலத்தில் செய்து முடித்துக் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களின் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பதவி உயர்வுடன் இரு மடங்கு ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் உன்னதமான நிலையை அடைவார்கள். புதிய பொருள்களை வாங்கி வியாபாரத்தைப் பெருக்கலாம். கூட்டாளிகள் ஆதரவாக இருந்து உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர்.

விவசாயிகளுக்கு

விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். விளைச்சல் அமோகமாக இருக்கும்.  வருவாய் கூடும். புதிய நிலங்களை வாங்கும் நேரமிது. நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம். அதன் மூலம் அதிக மகசூலை அதிகரிக்க முயற்சிக்கலாம். கால்நடைகளின் மூலம் அதிக லாபம் வரும் என்பதால் புதிய கால்நடைகளை வாங்கிப் பயனடையலாம்.

மாணவ மாணவியருக்கு

மாணவ மணிகள்  நல்ல மதிப்பெண்களையும் அள்ளுவீர்கள். படிப்பில் வெற்றி அடைவீர்கள். விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்வீர்கள். ஆசிரியர்கள் உங்களைப் புகழ்வார்கள்.

மீனம்
(பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

Astrologer R V Seckar Mobile 9848915177


மீன ராசி
சந்திரன், புதன்
சூரியன், சுக்கிரன்






ராகு


கேது


செவ்வாய் சனி


குரு




மீன ராசிக்கு  குடும்பம் , வாக்கு , தன ஸ்தானமான 2-ம் வீட்டில் சுக்கிரன் அமர்ந்திருக்கும்போது இந்த விளம்பி வருடம் பிறப்பதால் இந்த ராசி நேயர்கள்  இடை விடாது போராடி தங்கள் செய்யும்  காரியங்களில் வெற்றி காண்பார்கள். சமயோஜிதமாகவும் சாதுர்யமாகவும் எல்லா காரியங்களுக்கும் தக்க தீர்வு காண்பீர்கள். கடன் தாராளமாக கிடைக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

ஆடம்பர சாதனங்கள் நிறைய வாங்குவீர்கள். புது வாகனம் வாங்கும் யோகம் ஒரு சில நேயர்களுக்கு அமையும்.. நீண்ட காலமாக தடை பெற்ற திருமண வாய்ப்பு தற்பொழுது நடை பெரும்.

வியாபாரத்தில் தேக்கமான இருந்த நிலைமை இந்த விளம்பி வருடத்தில்  மாறி மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும். . மே , ஜூன் மாதங்களில் வியாபாரத்தில்  லாபம் அதிகரிக்கும்.  பெரிய மனிதர்களின் ஒத்துழபைப்பால் புதிய வியாபார ஒப்பந்தம் கிடைக்கும். ஸ்பெகுலேஷன்,ஷேர் மார்க்கெட்,  இரும்பு, உதிரி பாகங்களால் பெருத்த லாபம் ஒரு சில ராசி நேயர்களுக்கு வந்து சேரும்.. வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.புதிய வியாபார கிளைகள் பல்வேறு இடங்களில் தொடங்குவீர்கள். கூட்டு தொழில் அமோகமாக அமையும்.

கோச்சாரத்தில் குரு பகவான்


14-4-2018 முதல் 3.10.2018 வரை மீன ராசிக்கு 8ம் வீடான அஷ்டம ராசியில் குரு பகவான்  சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், எதிரிகள் தொல்லை, மனதில் அமைதியின்மை , ஒரு விதமான படபடப்பு போன்றவை ஏற்படும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை மீன ராசிக்கு 9ம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும் . அரசியல்வாதிகளின் நட்பால் பல காரியங்களைச் சாதிப்பீர்கள். இல்லத்தில் சுப காரியங்களுக்கு பஞ்சம் இருக்காது. நீண்ட காலமாக தடை பெற்ற திருமண தற்பொழுது கைகூடும்  உங்கள் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்பு அமையும். எதிரிகள் தொல்லை அறவே நீங்கும். பண வரவு தாராளமாக இருக்கும். புதிய சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும்.

13.3.2019 முதல் 13-4-2019 வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் செய்தொழிலில் தேக்கம் காணப்படும். பணியில் உள்ளவர்களுக்கு மிகவும் சோதனையான காலகட்டம். செலவுகள் மிகுந்து வருமானம் குறையும்.

கோச்சாரத்தில் சனி பகவான்

இந்த விளம்பி ஆண்டு  முழுக்க சனிபகவான் ஜீவன மற்றும் கர்ம ஸ்தானமான  10-ம் வீட்டிலேயே சஞ்சரிக்க இருப்பதால்  பிறரால் முடியாததை நீங்கள் சாதிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்கு அமையும்.. நண்பர்கள் வட்டத்தில்  செல்வாக்குக் கூடும். ஒரு சில மீன  ராசி நேயர்களுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.

குடும்பத்திற்கான பலன்கள்

திடீர் தனவரவு உண்டாகும். கௌரவம் ஓங்கும் . பெயரும் நர்மதிப்பும்  உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் மேன்மை உண்டாகும். ஒரு சிலருக்கு உடல் ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.எதிரிகளால் தொல்லை மற்றும் காரியத்தடை உண்டாகும். அரசியலில் உள்ளவர்கள் தங்கள் எதிரிகளால் பதவி இழக்கும் நிலை ஏற்படும். பங்கு சந்தை , தரகு தொழிலில் யிடுபட்டுஉள்ளவர்கள் தொடர் லாபங்களை பெறுவார்கள். ஒரு சில நேயர்களுக்கு புதிய நண்பர்கள் அமைவார்கள்.

குடுப்பதில் ஒற்றுமை ஓங்கி காணப்படும். செயும் தொழிலில் மேன்மை உண்டாகும். வேளையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். நண்பர்களால் உதவி உண்டு. புதிய தொழில் முயற்சிகள் வெற்றியை தரும்.

தொழில் துறையில் / பணியில் உள்ளவர்களுக்கு

பணியில் உள்ளவர்கள்  தங்கள் பணியில் இருந்த சோர்வு நீங்கி, வேலையில் அதிவேகமாக செயல்பட்டு வெற்றியடைவார்கள். எதிர்பாராத பதவி உயர்வு ஊதிய உயர்வு ஆகியவைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சக ஊழியர்களுக்கு தேடிச் சென்று உதவி செய்யுங்கள். அதனால் அவர்களால் ஏற்பட இருக்கும் குழப்பங்கள் குறைந்துவிடும். 

வியாபாரிகளுக்கு வியாபாரம் நன்றாக இருக்கும். உங்கள் பழைய முதலீடுகள் இந்த காலகட்டத்தில் பலனளிக்கத் தொடங்கும். மேலும் நண்பர்களைக் கலந்தாலோசிக்காமல் எந்த முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். உங்களுக்குக்கீழ் பணியாற்றும் ஊழியர்கள் நல்ல விசுவாசத்துடன் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மறைமுக உழைப்பு வீண் போகாது.

விவசாயிகளுக்கு

புதிய நிலங்களையும் வாங்குவீர்கள்.கறவைமாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும் மாடுகள் வளர்த்தும் லாபங்களைப் பெறுவீர்கள். விவசாயிகளுக்கு எதிலும் பெரிய லாபங்களை எதிர்பார்க்க முடியாது. பாசன வசதிகளையும் சீராக்கிக் கொள்ள சிறிது செலவு செய்யும் காலகட்டமாக இது அமைகிறது.  கொள்முதல் லாபம் சீராக இருக்கும். இருப்பினும் சக விவசாயிகளை அனுசரித்துச் சென்று குத்தகைகளை முடிக்க முயற்சிக்கவும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும்.

மாணவ மாணவியருக்கு

மாணவ மணிகள் கேளிக்கை போன்றவைகளில் நேரத்தைக் கழிப்பார்கள். கல்வியிலும் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஞாபக சக்தி அபாரமாகக் கூடும். மந்தநிலையில் இருக்கும் மாணவமாணவியர் கூட முதலிடம் வகிக்கும் அளவிற்கு சிறப்பான காலகட்டமாகும்.. கெட்டப்பழக்கங்கள் உள்ள நண்பர்களையும் திருத்துவார்கள்.


Astrologer R V Seckar Mobile 9848915177


No comments:

Post a Comment