சில உபயோகமான வாஸ்து குறிப்புக்கள்
எப்படி பட்ட மனை வாங்க வேண்டும்?
சதுரமான
அல்லது செவ்வக வட.வுடைய மனை
வாங்குவது நன்மை தரும். தெருக்குத்து
இல்லாத மனை என்றல் மிகவும் நலம்
எந்த இடத்தில் காலி இடம் அதிகம் விட வேண்டும் ?
கட்டுமான
பனியின் பொழுது கிழக்கிலும் வடக்கிலும் அதிக இடம் காலியாக இருப்பது நலம்
வடக்கு பக்கத்தில் என்ன அமைக்க வேண்டும் ?
வடக்கு
பக்கம் கட்டிடம் கட்டும்
பொழுது அந்த இடத்தில் அதிக எடை இல்லாதவாறு வடிவமைக்க வேண்டும். வாட்டர் டேங்க் அந்த இடத்தில் அமைப்பது நன்மை தரும். கிணறு , தண்ணீர் போர் செட் அமைத்தல் நலம்.
எங்கு மாடிப்படிகள் அமைக்கலாம் ?
தெற்கு
பகுதியில் அதிக கணம் ஏற்றலாம். இங்கு மாடிப்படிகள் அமைக்கலாம்.
அக்னி மூலையில் என்ன அமைக்கலாம் ?
தென்
கிழக்கு மூலையில் (அக்னி) சமையலறை அமைப்பது சாலச்சிறந்தது. அக்னி மூலையில் ஜெனெரேட்டர் , இன்வெர்டர் , மின்சார மீட்டர் ஆகியவற்றை அமைத்தல் நலம் தரும்.
படுக்கை அறை எங்கு அமைக்க வேண்டும்
?
நிறுதியில்
(தென் மேற்கு) படுக்கை அறை அமைத்தால் கணவன் மனைவி உறவு அன்னியோன்மாய் சமயம். சத் புத்திர பாக்கியம் ஏற்படும். நீண்ட காலம் குழைந்தை இல்லாதவர்களுக்கு நிருதியில் தாம்பத்தியம் சுகம் காண குழந்தை பாக்யம் கண்டிப்பாக ஏற்படும்.
கழிப்பறை மற்றும் குளியலறை எங்கு அமைக்க வேண்டும் ?
குபேர மூலையில் என்ன அமைக்கலாம் ?
குபேர
மூலையில் (தென்
மேற்கில்) கழிப்பறை மற்றும் குளியலறை அமைப்பது நன்மை தராது.
ஒரு சிலர்க்கு ஓயாத கடன் தொல்லையால் கஷ்டப்படுவார்கள். அவர்கள் வீட்டை ஆராய்ந்தால் குபேர மூலையில் (தென்
மேற்கில்) கழிப்பறை மற்றும் குளியலறை அமைத்து இருப்பார்கள்.குபேர மூலையில் பணம்
மற்றும் நகை வைக்கும் பெட்டகத்தை வைக்கலாம்.
ஈஸான்ய மூலையில் என்ன அமைக்கலாம்
?
ஈஸான்ய மூலை (வடகிழக்கு)
என்பது ஒரு மனையில் ஈசன் தாங்கும் இடமாகும். இங்கு பூஜை அறை , வரவேற்பு அறை , கிணறு , ஆழ்துளை கிணறு போன்றவற்றை அமைக்க வேண்டும். கண்டிப்பாக செப்டிக் டேங்க் , கழிவறை, குளியலறை போன்றவற்றை
கண்டிப்பாக அமைக்க கூடாது.
பெண்கள் நோயால் வாடும் நிலை
ஒரு
சில பெண்கள் நோயால் வாடும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். அவர்கள் வீட்டை கவனித்தால் கண்டிப்பாக தென்கிழக்கு மூலை சரிவர அமைந்துஇருக்காது.
வீட்டின் பிராதான நுழைவு வாயில் எங்கு அமைக்க வேண்டும் ?
வீட்டின்
பிராதான நுழைவு வாயில் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ அமைவது நன்மை தரும்.
கோயில் நிழல் படும் வீடுகள்
உங்கள்
வீடு அல்லது மனையின் அருகில் சுடுகாடோ , கோயிலோ அல்லது எலக்ட்ரிகல் மின்மாற்றியோ இல்லாதவாறு
அமைவது நன்மை தரும். கோயில்
நிழல் படும் வீடுகள் விருத்திக்கு வருவதில்லை.
No comments:
Post a Comment