Search This Blog

Thursday, June 21, 2018

குரு பகவானும் கனக புஷ்பராகமும்


குரு பகவானும் கனக புஷ்பராகமும்



குரு பகவானின் மற்ற பெயர்கள்

வியாழன், குரு, பொன்னவன், ஆங்கீரசன், ஜீவன், வாகீசன், கீஷ்பதி, வேதியன், பிருஹஸ்பதி

R V Seckar Gemologists  rvsekar2007@gmail.com 9848915177

தன காரகன்

குரு புத்திர காரகன்; தன காரகன்; புத்திரத்தைக் குறிக்கும் 5-ம் வீட்டில் குரு இருந்தால் புத்திர நாசம் உண்டாகும். தனத்தைக் குறிக்கின்ற 2-ம் வீட்டில் குரு இருந்தால் அவருக்கு பணக் கஷ்டம் உண்டாகும்.

R V Seckar Gemologists  rvsekar2007@gmail.com 9848915177


குரு பார்க்க கோடி நன்மை

குரு நின்ற இடம் பாழ்
\
7ல் தனித்த குரு இல்லறம் சுகம்மில்லை


சித்தாந்தம் வேதாந்தம் ஞானி போல் பேசுதல் தாமத திருமணம் அப்படியே திருமணம் ஆனாலும் திருமண வாழ்கை சுகமில்லை
8.ல் குரு இருப்பவர்கள் வரட்டு பிடிவாதம் குணம் கொண்டவர்கள்
லக்னத்திற்க்கு 10 க்குரியவரோடு குரு இனைந்திருந்தால் அல்லது 10 க்குரியவரை குரு பார்த்தால் ஜாதகர் வேத சாஸ்திர புராணங்களை உபதேசிப்பவராக, ஆச்சாரியராக அல்லது ஒரு அமைச்சராக இருப்பார். அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு பாக்கியவானக இருப்பார்.

7ல் குரு இருந்தால்

சாந்த குணம் தர்ம குணம் ஆச்சாரம் மிகுந்தவள்தெய்வ நம்பிக்கைபொறுப்பு உடையவள் அதிகமான பேச்சு மனைவியால் முன்னேற்றம்ரகசியங்களை (கணவனின்) அறிந்தவள் முன்னேற ஆர்வம் குடும்ப பந்தம்.

குரு சந்திர யோகம்

குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும் .அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும்.மனைவி வழியில் தனலாபம் ஏற்படும்.பூமியில் பேரும்புகழும் பெற்று இறையருளோடு நீடோடி வாழ்வான்.
குறிப்பு:-குரு சந்திர யோகம் நீசம் பகை மற்றும் மறைவு ஸ்தானங்களில் இருப்பின் மேற்கண்ட பலனை தராது.

 குரு மங்கள யோகம்
குருவுடன் செவ்வாய் சேர்ந்தாலும்,பார்த்தாலும் "குரு மங்களயோகம்"அளிப்பார்.
நல்ல வாழ்க்கை துணைஅமையும்.திருமணத்திற்கு பிறகு மனைவியால் முன்னேற்றம் ஏற்படும்.நிலபுலவசதி ஏற்படும்.

குரு+கேது சேர்க்கை யோகம்

அறிவும் ஞானமும் ஒன்றிணையும்போது கேள யோகமாக மாறிவிடுகிறது...
மடாதிபதிகளாக இருப்பார்கள். தொழிலில் பலப்பல யுக்திகளை கண்டு பிடித்து முண்னேறுபவர்களாக இருப்பார்கள். அறநிலையத்துறையில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். அடிக்கடி பயண மேற்கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு குடும்ப வாழ்க்கை கேள்வி குறிதான். பிறந்த ஊரை விட்டு வெளியூரில் வசிப்பவர்கள்

பிரம்ம ஹத்தி தோசம்

குரு பலமிழந்து சனி பலம் பெற்று, குருவும் சனியும் 5 பாகைக்குள் இணைந்து அல்லது சம சப்த பார்வை பெறும் போது, இந்த தோஷம் உண்டாகிறது.
குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்
ரிஷப ராசியில் வக்கிரமான குரு ஜாதகரை மருத்துவத்துறையில் சிறந்தவராக ,ஞானமுள்ளவராக உருவாக்குகிறார் .,
4.
மிதுன ராசியில் வக்கிரமான குரு ஜாதகரை தர்ம சாஸ்திரம் ,உலக ஞானம் கொண்ட விஷயாதியாக
கடகத்தில் வக்கிரமான குரு – கல்வியில் தடையும் ,பால வயதில் முன்னுக்கு வராமல் அதிகமான கஷ்டங்களை கொடுக்கிறார்.,
13.
கன்னி ராசியில் வக்கிரமான குரு – தந்தை வழி உறவினருடன் மனக்கசப்பு ,சச்சரவுகளும் ,மனவருத்தம்.

குரு திசை

குரு திசை மொத்தம் 16 வருடங்கள் நடைபெறும். ஒருவரின் ஜெனன ஜாதகத்தில் குருபகவான் பலம் பெற்று சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற நட்பு கிரகங்களின் சேர்க்கை சாரம் பெற்று ஆட்சி, உச்சம் பெற்றாலும், பூமி, மனை வீடு போன்றவற்றால் சிறப்பான அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கை கூடும். சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். சமுதாயத்தில் பெயர் புகழ், மதிப்பு மரியாதை உயரும். பணவரவுகள் தாரளமாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் போன்றவற்றில் நாணயம் தவறாமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவும், பெரியோர்களின் ஆசியும் கிட்டும். அரசு வழியில் அனுகூலம், வங்கிப்பணிகளில் உயர்பதவி, ஆசிரியராக பணிபுரியும் வாய்ப்பு, பலருக்கு உதவி செய்யும் அமைப்பு, சமுக பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஆலய நிர்வாக பணிகளில் உயர்பதவிகள் கிட்டும். கல்வியில் சாதனைப் புரியும் அமைப்பு உண்டாகும். ஆன்மீக தெய்வீக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். பல நற்பணிகளுக்காக செலவு செய்ய நேரிடும்.

குருபகவான் பலமிழந்து பகை, நீசம், பாவிகள் சேர்க்கை மற்றும் பார்வைப் பெற்றால் குருதிசை காலங்களில் கடுமையான பண நெருக்கடிகள் ஏற்படும். பணம் கொடுக்கல் வாங்களில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள், கடன் தொல்லைகள் அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத நிலை நாணயக் குறைவால் சமுதாயத்தில் மதிப்பு குறைவு நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியத்திலும் பாதிப்புகள், ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை உண்டாகும். எதிர்பாராத கண்டங்களும், சோதனைகளும் ஏற்படும். குடும்பத்தில் வறுமை, புத்திரர்களிடையே பகை மற்றும் புத்திர பாக்கியமின்மை, சுப காரியங்களில் தடை, உற்றார் உறவினர்களுடன் விரோதம் செய்யும் தொழில் வியாபாரத்தில் நலிவு நஷ்டம் உண்டாகும். பிராமணர்களில் சாபத்திற்கு ஆளாக கூடிய நிலை, எதிர்பாராத தன விரயங்கள் குடும்பத்தில் நிம்மதி குறைவு, கணவன் மனைவியிடையே ஒற்றுமையின்மை ஏற்படும்.

11ல் குரு

11ல் குரு பலம். இல்லற சுகத்தை நாடாத சுய அறிவு சார்ந்த மேதை.. இராமனுஜர், வள்ளளார்,அரவிந்தர், விவேகானந்தர் ஆகியோரே உதாரண
சண்டாளயோகம்

குரு இராகு எந்த இடத்தில்இருந்தாலும் ஜாதக ஸ்தானத்தை இழந்து விடுகிறது\குரு இராகு சண்டாளயோகம்ஜீவானாதி கூட்டாளி மணைவி புத்திரன் கடன் விரோதம் நோயை ஏற்படுத்தி கொள்வார் இது சண்டாளதன்மை.

குரு சுக்கிர சேர்க்கை

குரு சுக்கிர சேர்க்கை காதலில் தோல்வி,மன அமைதியற்ற குடும்பம்,ஒற்றுமையில்லாத மனைவி ,அன்பில்லாத குழந்தை இவைகளை கொடுப்பதன் மூலம் மனிதன் துயரத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறான்.
ஓருவருக்கு காதல் தோல்வி,வழக்கு மன்றத்திற்கு செல்லுதல்,சன்னியாசியாக போவதே நல்லது போன்ற மனமாற்றத்தை தருவது குரு சுக்கிரன் சேர்க்கையாகும்.

அஷ்டலட்சுமியோகம்

ராகு 6ல் இருந்து அதற்கு கேந்திரத்தில் குரு நின்றால் அதற்கு அஷ்டலட்சுமி யோகம் என்று பெயர்,திரண்ட செல்வமும் செழிப்பும் சாதகரை வந்தடையும்
மிகவும் வறுமைகோட்டில் வாடிய ஒரு சாதகர் திடீரென வசதியுடையவராக மாறிவிட்டாரெனில் அத்ற்கு வழிவகுத்து நிற்பவை 2 யோகங்கள்தாம்.

ராகு/கேதுக்கள் லக்கினத்திற்கு 6/12ல் இருந்து குருவும் கேந்திரமேற அஷ்டலட்சுமி யோகம் என்பதே புலிப்பாணியின் பாடல், தவிர ராகுவிற்கு கேந்திரத்தில் குரு என்பதல்ல.


சகட யோகம்

குரு நின்ற வீட்டிற்கு 6-8-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் ஏற்படும்.சகட யோகம் என்றால் வண்டிச்சக்கரம்.சக்கரம் போல வாழ்வில் ஏற்றம் இறக்கம் ஜாதகருக்கு பலன் ஏற்படும்.

கோச்சாரத்தில்குருவின்நிலை

 தீதிலாதொருமூன்றிலேதுரியோதனன்படைமாண்டதும் 
இன்மைஎட்டினில்வாலிபட்டம்இழந்துபோம்படியானதும் 
 ஈசனாரொருபத்திலேதலைஓட்டிலேஇரந்துண்டதும் 
தர்மபுத்திரர்நாலிலேவனவாசமப்படிப்போனதும் 
 சத்யமாமுனிஆறிலே இரு காலிலேதளைபூண்டதும் 
வன்மையுற்றியராவணன்முடிபன்னிரெண்டில்வீழ்ந்ததும் 
மன்னுமா குரு சாரிமாமனைவாழ்விலாதுருமென்பவே 

குரு ஜென்ம ராசியிலிருந்து 1-3-4-6-8-10-12 ஆகிய ஸ்தானங்களில் தரும் அசுப பலன்களை இதிகாசநாயகர்களின் வாழ்க்கை நிகழ்ச்சியோடுஒப்பிட்டு இந்தப் பாடல் விளக்குகிறது.


Free Mass Ping

1 comment:

  1. Water Hack Burns 2lb of Fat OVERNIGHT

    At least 160 000 men and women are utilizing a easy and SECRET "liquids hack" to lose 1-2 lbs each and every night as they sleep.

    It is simple and works with anybody.

    Here's how to do it yourself:

    1) Grab a glass and fill it with water half the way

    2) And then do this weight losing hack

    and be 1-2 lbs skinnier in the morning!

    ReplyDelete