Search This Blog

Tuesday, June 12, 2018

அமாவாசை யோகம் என்றால் என்ன?


அமாவாசை யோகம் என்றால் என்ன?


r v seckar practicing company secretary , 9848915177, rvsekar2007@gmail.com,

பித்ரு காரகன் சூரியன். மாத்ரு காரகன் சந்திரன். ஜாதகத்தில் இவர்கள் இணையும்  பொழுது அமாவாசை யோகம் ஏற்படுகிறது.
ஜாதகத்தில் சூர்யன் மற்றும் சந்திரன் இணைந்து  காணப்பட்டால் அதை அமாவாசை யோகம் என்று கூறுகிறோம் .

சூரியபகவான்- சந்திரபகவானும் ஒரே பாகையில் இருக்கும் பொழுது அமாவாசை யோகம் எனப்படும். இரண்டு கிரகங்களும் சூரியனுக்கு முன் பின் 8.பாகைக்குள் இருப்பது அமாவாசை யோகம்.

சந்திர  ஆதிக்கம் கொண்டவர்  கவிதை எழுதுவதில்  வல்லமை பெற்று காணப்படுவர்சூரிய ஆதிக்கம் கொண்டபர் கட்டுரை எழுதும்  திறமை பெற்றவர்கள் ஆவர்.

சூரியன், சந்திரன் இணைவும், தொடர்பும் ஜாதகருக்கு மிகப் பெரிய யோகத்தை தருகின்றது.

ஒளி கிரகங்கள் இணைந்திருந்து திரிகோண இடங்களான1-5-9- ல் இடங்களில் இருந்தால் பெரிய யோகம் .

 கேந்திர  இடங்களான 4-7-10-ல் இடங்களில் இருந்தால் சுமாரான யோகம்.

உபஜெய இடங்களான2-3-11-ல் இருந்தால்,   ஜாதகருக்கு  நல்ல யோகம் ஏற்படும்.

r v seckar practicing company secretary , 9848915177, rvsekar2007@gmail.com,


வலுவான அமாவாசை யோகம்

வலுவான அமாவாசை யோகம் அமைய பெற ஜாதகத்தில் சந்திரன் அஸ்தமனம் அடையாமல் இருக்க வேண்டும். ஜாதகத்தில் , சூரியனிடம் சந்திரன் 12 பாகைக்கு மேல் இருப்பது அவசியம்.

ஜாதகத்தில் வளர்பிறை சந்திரனாக இருப்பது அவசியம். அமாவாசையோகம் பெற்று அதில் ஒரு கிரகம் ஆட்சி உச்சம் பெற்று அமைந்தாலும் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன் சம்பந்தம் ஏற்பட்டாலும் இருவரும் இருக்கும் வீட்டின் அதிபதியும் பலம் பெற்றாலும் அமாவாசை யோகம் ராஜயோகமாக மாறி உயர் நிலை பெறுவார்கள்.

ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம் பெறுவது மிக யோகமான பலன்களை தரும்.

அமாவாசை யோகத்தை பற்றி புலிப்பாணி முனிவர்

பாரப்பாயின்ன மொன்று பகரக்கேளு
பகலவனும் கலை மதியும் கோணமேற
சேரப்பா பலவிதத்தால் திரவியம் சேரும்
செல்வனுக்கு வேட்டலுண்டு கிரகமுண்டு
ஆறப்பா அமடு பயமில்லை யில்லை
அர்த்த ராத்திரிதனிலே சப்தம் கேட்பன்
கூறப்பா குமரனுக்கு யெழுபத்தெட்டில்
கூற்றுவனார் வருங்குறியை குறிபாய் சொல்லே

சூரியனும் சந்திரனும் இணைந்து 1-5-9-ல் இருந்தால் ஜாதகர் /ஜாதகிக்கு அதிக செல்வம், வீடு, பயம், ஆயுள் விருத்தி, பலவகையில் செல்வம் கிட்டும்.

இரவில் சப்தங்களைக் கேட்பான் 78 வயது வரை ஆயுள் பலம் உள்ளவர்.

மற்றொரு பாடலில் சூரியன், சந்திரன் இணைந்து 7-ல் இருந்தால் செல்வங்கள் குவியும். அனைத்து சுகபோக வசதியுடன் வாழ்வார்கள் என கூறுகின்றார்.
r v seckar practicing company secretary, 9848915177, rvsekar2007@gmail.com,


அமாவாசை யோகத்தை பற்றி புலிப்பாணி முனிவர்

கதிரொடு மதியுங்கூடி கலந்தொரு ராசி நிற்க
துதிபெறு பலவாயெந்திரம் சூட்சுமக் கருவியாலும்
அதிவித பாஷாணங்களமைந்திடும் வல்லோனாகி
விதியுடனிருப் பனின்னோன்
மேன்மையாமறிவுள்ளேனே

வலுப்பெற்ற அமாவாசை யோகம்

சூரியனும், சந்திரனும் இணைந்து இருந்தால் பல எந்திர கருவிகள் செய்வான். பல மருத்துவம் செய்வான்.புத்தி கூர்மையுள்ளவனாய் இருப்பான்.

சூரியனும், சந்திரனும் இணைந்து அவர்களில் ஒருவர் ஆட்சி உச்சம் பெறும் நிலை அல்லது ஆட்சி, உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் ஜாதகர் சிறந்த நிர்வாகியிகவும், செல்வம், புகழ், மக்களால் பாராட்டும் தலைவராகவும் இருப்பார்கள்.

வலுப்பெறாத அமாவாசை யோகம்

வலுப்பெறாத அமாவாசை யோகம் பெற்றிருந்தால் செல்வ நிலையில் குறைபாடும் தாய் தந்தையால் நன்மை பெற முடியாத நிலையும், பெற்றோரை பிரிந்து வாழும் நிலையும். தன் செய்கையால் தானே தாழ்நிலை பெறும் நிலையும் தரும் என்பது பொது விதியாகும்.

பாவிகளின் சம்பந்தம் மற்றும் இராகுபகவானின் சம்பந்தம் தொடர்பு ஏற்படுமானால், தானே அறிந்து பல குற்றங்களை செய்பவராகவும் குறுக்கு வழியில் செல்பவராகவும், கள்ளக் கட்த்தல் ,போதைப் பொருள், மது பானம் ,விற்பவராகவும் இருப்பார்கள். குடும்பத்திலும் அவப்பெயர் உண்டாக்குவார்கள் எந்த நோக்க மின்றியே வாழ்க்கை நட்த்தும் நிலையும் ஏற்படும்.

சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒரே ராசியில் இருந்து அமாவாசை யோகம் பெற்று இருவரில் ஒருவர் ஆட்சி பெற்றவர்கள் அரசியல் யோகம் உண்டு.

அறிஞர் அண்ணா ஜாதகம்

செவ்வாய்


சனி
ராகு




ராசி

15-09-1909








கேது 
லக்கினம்  சுக்கிரன்
சூரியன் சந்திரன் குரு புதன்

துலா லக்கினத்தில் பிறந்த அறிஞர் அண்ணா அவர்கள் ஜாதகத்தில் 12 ம் வீட்டில் சூரியன் மற்றும் சந்திரன் இனைந்து அமாவாசை யோகம்  காணப்பட்டதால் , அவர் அரசியலிலே பிரவேசித்து பின்னர் தமிழ் நாட்டின் முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்படத்தக்கது.

No comments:

Post a Comment