Search This Blog

Tuesday, January 14, 2020

சுக்கிர தோஷத்திற்கு வைரம் கட்டாயம் அணிய வேண்டுமா? யாரெல்லாம் வைரம் அணிய வேண்டும்? For debilitated Venus , one has to wear Diamond , For weak Venus in Horoscope , it is better to wear Diamond


சுக்கிர தோஷத்திற்கு வைரம் கட்டாயம் அணிய வேண்டுமா? யாரெல்லாம் வைரம் அணிய வேண்டும்?


இது பற்றிய காணொளியை காண , கீழ்கண்ட லிங்க்யை கிளிக் செய்யவும்



சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி

அசுர குருவான சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். களத்திரகாரகன், இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவைகளை சிறப்புடன் வாழும் யோகத்தை தருவது சுக்கிரன்தான்.

இவர் தான். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிரபகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.


பொதுவாகச் சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி ஆவார். வாழ்க்கையில் நமக்குத் தேவையான பொன், பொருள், நல்ல மனைவி, உயர் பதவி, சுகமான வாழ்க்கை என அனைத்தையும் வாரி வழங்கக் கூடிய தன்மையுடையவர் சுக்கிரன்.

ஒருவருக்கு சுக்கிரன் பலமாக இருந்தால் வாழ்வில் கிடைக்க வேண்டிய அனைத்துத் தேவைகளும் எளிதில் பூர்த்தி ஆகும் என்பது நிதர்சனமான உண்மை. ஆகையால் சுக்கிரன்

நமது ஜாதக கட்டத்தில்
நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வாரி வழங்குவார். 



அம்சத்தில் சுக்கிரன் நீச்சம்

சுக்கிரன் ஜென்மலக்னத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி வாய்ப்பு, நல்ல தேகம், தைரியம், துணிவு போன்ற சுகபோக வாழ்வினை அள்ளிக் கொடுப்பார்.

குறிப்பாக மீனத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று இருக்க, அவருக்கு நட்பு கிரகங்களின் தொடர்பும், பகை கிரகங்களின் தொடர்பும் இன்றி இருந்தால் மேலே குறிப்பிட்ட அனைத்தும் கிடைக்கப்பெறுவர்.

சுக்கிரன் ஆட்சி வீடான ரிஷபம் மற்றும் துலாமில் இருந்தால் சுகபோக வாழ்வு நிச்சயம். ஆனால், நட்பு கிரகங்கள் நீசமடையால் இருக்க வேண்டும். இல்லையெனில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது.

சுக்கிரன் நீசம் 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படும். தலை தூக்க முடியாத அளவுக்கு பெரும் அவமானத்தைச் சந்திக்க நேரிடும்.



 சுக்கிரன் நீசம்

 நீசம் - என்றால் கெட்டு நிற்பது என்று பொருள். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் அல்லது 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், பணம் செலவு கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.

R

பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், பண விரயம், முக்கியமாக வியாதி. ஆம், சுக்கிரன் ராசியில் இருக்கும் போது உச்சமானால் அதாவது நீசமானால் கடுமையான வியாதியை சந்திப்பர்.

தாம்பத்ய வாழ்க்கை பாதிப்பு சுக்கிரன் நீசம் பெற்றிருந்தால் களத்திர சுகங்கள் குறைவு, பெண்கள் வகை ஆதாய அனுகூலங்கள் குறைவு, சுகத்தானம் பலம் இழத்தல், ஆடை, ஆபரண வசதிகள், வண்டி வாகன வசதிகள் குறையும்.



காரகத்வ தோஷம்

களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் நீசமாய் இருந்தால் இலட்சுமி அருளில்லாமல் இருந்தால் தீய மனது அமைந்தவனாய் தனது வயதிற்கு மூத்தவளுடனே சேர்ந்து சுகம் இல்லாமல் எப்போதும் கவலையுடன் இருப்பான்.


வைரம் எப்படி இருக்க வேண்டும்

நிறமற்ற, நீலம் அல்லது சிவப்பு நீல ஒளியைக் கொண்ட, கரும்புள்ளிகள் இல்லாத வைரமே மிகவும் சுபமான வைரமாகும்.

மஞ்சள், சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலைத் தருகிறது.

வெண்மையான வைரம் மதம் மற்றும் ஆன்மிக, தெய்வீக காரியங்களுக்கு ஏற்றது.

 மஞ்சள் நிறம் மட்டும் கொண்ட வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும்.

யாரெல்லாம் வைரம் அணிய வேண்டும்?

சிற்றின்ப நோய்கள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், கண் நோய் போன்ற நோய்களும் வைரத்தை அணிவதால் குணமாகும்.

ஆண் குழந்தையை விரும்புபவர்கள் சிறு கருமை கலந்த வைரங்களை அணிவது நன்மையளிக்கும்.

 வைரம் அணிபவர்களை விஷ ஜந்துக்கள் மற்றும் தீய ஆவிகள் தீண்டாது.

வைரம் புள்ளிகள் ஏதும் இல்லாமலிருந்தால் அவை நல்ல வைரம் என்றும் அணியத் தகுந்தவை.

வைரத்தை ரிஷபம், துலாம் ராசிகளில் பிறந்தவர்களும்

சுக்கிரன் சுபராக இருந்து சுக்கிர திசை நடப்பில் உள்ளவர்களும்

 6,15,24 ம் எண்ணில் பிறந்தவர்களும் அணிவது சிறப்பு.


 வைரத்தை தங்கம் அல்லது பிளாட்டினத்தில் பதித்து மோதிர விரல் அல்லது நடு விரலில் வெள்ளிக்கிழமைகளில், சுக்கிர ஓரையில் அணிந்து கொள்வது நல்லது.

ஜிர்கான் அணியலாம்.

ஜிர்கான், வைரத்தை வாங்க இந்த ஜிர்கான் கற்களை வாங்கி அணியலாம். ஜிர்கான் கற்களும் பளபளப்பும், கடினத் தன்மையும் கொண்டது. வைரத்தைப் போலவே நற்பலனை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

Free Mass Ping

1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete