Search This Blog

Friday, March 6, 2020

அதிசார குரு பெயர்ச்சி 2020 பலன்கள் -அதிசார குரு பெயர்ச்சி எந்த எந்த ராசிகளுக்கு நன்மை தரும் ? எந்த எந்த ராசிகளுக்கு தீமை தரும் ?


அதிசார குரு பெயர்ச்சி 2020


அதிசார குருஎன்றால் என்ன ??

குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருப்பர்.  தற்சமயம் அவர் தனுசு ராசியில் உள்ளார். அதிசாரம் என்பது முன்னோக்கி செல்லுதல் என்று பொருள். அவர் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு முன்னேறி 27-03-2020 முதல் 8-7-2020 வரை அதிசாரமாக இருப்பார். பின்னர் அவர் 9-7-2020 அன்று மறுபடியும் தனுசு ராசிக்கு வந்து விடுவார். இதைத்தான் அதிசார கதி அல்லது நிலை என்று கூறுகிறோம் .

13-03-2019
                
குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து  தனுசு ராசிக்கு பெயர்ச்சி
10-04-2019 முதல் 28-10-2019  வரை
வக்கிரகதியாக விருச்சிக ராசியில் இருந்தார் 
27-03-2020 முதல் 8-7-2020 வரை
குரு பகவான் அதிசார பெற்று மகர ராசிக்கு செல்வார்
15.12.2020
மகர ராசிக்கு பெயர்ச்சியாகி செல்வார்



வக்கிரம் என்றால் என்ன?

ஒரு கிரகம் பின்னோக்கி செல்லுதலை வக்கிரம் என்று கூறுவார்கள்


அதிசார குரு பெயர்ச்சி எந்த எந்த ராசிகளுக்கு 

நன்மை தரும் ? எந்த எந்த ராசிகளுக்கு தீமை 

தரும் ?


குரு பார்க்க கோடி நன்மை


நவ­கி­­கங்­­ளில் குரு  பக­வானே முதன்மை சுப கிர­கம். தேவர்­­ளின் குரு இவர்    இவ­ருக்கு சுப கிர­கங்­­ளில் முதன்மை அந்­தஸ்து கிடைத்­தது.




குரு பகவான் எந்த மாதிரியான யோகங்களை தருவார்?

வேதங்­கள், நல்ல குணம், நன்­­டத்தை, தர்ம காரி­யங்­கள், புத்தி கூர்மை, கல்வி, எடை, மந்­தி­ரிப் பதவி, அர்ச்­­கர், கோயி­லில் பூஜை செய்­­வர்­கள், வழி­பாடு, கற்­றுத்­­ரு­தல், பணம், மதிப்பு,   போன்ற நற்­­லன்­களை நமக்கு அளிக்­கக்­கூ­டிய சக்தி பெற்­­வர்.  ஒவ்­வொரு ராசி­யி­லும் ஒரு ஆண்டு சஞ்­சா­ரம் செய்­­வர். தனுசுமீனம் ராசி­­ளுக்கு அதி­பதிகட­கத்­தில் உச்ச பலம் பெறு­வார்மக­ரத்­தில் நீச்ச பலம் பெறு­வார் – 12 ராசி­­ளைக் கடந்து வர 12 ஆண்டு ஒரு­மா­மாங்­கம் ஆகும்.


அதிசார குரு பெயர்ச்சி பலன்கள் 2020 பலன்களை பற்றிய காணொளி காண , கீழ்கண்ட லிங்கை அழுத்தவும்

https://youtu.be/TcHxf93IP8s
-
12 ராசிகளுக்கும்

குருபகவான் நவம்பர் 5 2019 முதல் தனுசு ராசியில் சஞ்சரித்து வருகிறார். அவர் மேலும் மார்ச் 30 2020 முதல் அதி சாரமாக மகர ராசியில் சஞ்சரிக்க உள்ளார். July மாதம் 8 2020 வரை குரு பகவான் மகர ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்க உள்ளார். மகர ராசியில் குரு பகவான் நீச்சம் அடைவார். ஆனால் , கோட்சரத்தில் சனி பகவான் மகரத்தில் சஞ்சரித்து கொண்டிருப்பதால். சனியுடன் கூடிய குரு பகவான் நீச்ச பங்கம் பெற்று நீச்ச பங்க ராஜ யோகத்தை தரவுள்ளார்.


மே 15 2020 முதல் குரு பகவான் வக்கிரம் அடைவர். ஜூன் 29 2020 வரை குரு பகவான் வக்கிர நிலையில் மகர ராசியில் இருப்பார். அதன் பின் குரு பகவான் மீணடும் பின்னோக்கி நகர்ந்து மகர ராசியில் இருந்து அவரது சொந்த வீடான தனுசு ராசிக்கு திரும்ப வந்துவிடுவார். மறுபடியும் தனுசு ராசியில் ஆட்சி பெற்று இருப்பர்.




14.12.2020 வரை உத்­தி­ரா­டம் 1ம் பாதத்­தில் சஞ்­­ரித்து 15.12.2020 அன்று குரு மகர ராசிக்கு பெயர்ச்­சி­யா­கி­றார். இந்த கால சூழ்­நி­லைக்கு ஏற்ப குரு­வின் பலன்­கள் கூடும் – குறை­யும்.


குருவிற்கு 5,7, 9 பார்வைகள் உண்டு. இந்த பார்வைகளால் அந்த ராசிகள் சிறப்பான பலன்களை அடைவதோடு ஒவ்வொரு ராசிக்கும் அமையும் வீடுகளைப் பொருத்து பலன்கள் மாறுபடும். குருவின் பார்வையால் சிலருக்கு ஆரோக்கியம் கூடும் ஆயுள் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். பணவரவும் அதிகமாக கிடைக்கும்.


குரு பகவான் மகரம் ராசியில் இருந்து ஐந்தாம் பார்வையாக ரிஷபம் ராசியையும், ஏழாம் பார்வையாக கடகம் ராசியையும், ஒன்பதாம் பார்வையாக கன்னி ராசியை பார்க்கிறார்.

குரு பகவான் பொதுவாக கோட்சரத்தில் 2, 5,7,9,11 வரும்பொழுது அமோகமான பலன்களை நேயர்களுக்கு வாரி வழுங்குவார்.


அதிசார குரு பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் நூற்றுக்கு நூறு பலனடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.


ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்

தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்

இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்

ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்

தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்

சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்

வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும்


மேஷ ராசி


மேஷ ராசிக்கு மார்ச் 30 2020 முதல் அதி சாரமாக மகர ராசியில் சஞ்சரிக்க உள்ளார். மே மாதம் 14 2020 வரை குரு பகவான் மகர ராசியில் அதி சாரமாக சஞ்சரிக்க உள்ளார். மேஷ ராசிக்கு மகர ராசி ஜீவனஸ்தானமான 10 ம் இடத்தில சஞ்சரிக்க இருக்கிறார்.

10 ம் இடத்தில குரு கோட்சர ரீதியாக வரும்பொழுது ஜாதகருக்கு தொழிலில் , உத்யோகத்தில் இன்னல்கள் , சங்கடங்கள ஏற்படுத்துவார்.  இதனால் தொழிலில் மற்றும் உத்யோகத்தில் கடின உழைப்பு தேவைப்படும். 10ல் குரு இருந்தால் பதவி பாழ் என்று கூறுவார்கள்.



ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்

மன சோர்வு , உடல் சோர்வு, உடல் உபாதைகள் போன்றவை ஏற்படும்.
எதிர்பாராத சிலவினங்கள் ஏற்படும். இந்த பாதகமான நிலைமைகள் குரு பகவான் மறுபடியும் பாக்கியத்தனமான 9ம் இடத்திற்கு தனுசுவில் வரும்பொழுது ஏற்படும்.

ஆயினும் மேஷ ராசிக்கு 9 அதிபதியான குரு பகவான் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில் நீச்சம்  நீச்சம் அடைந்தாலும் , நீச்ச பங்க ராஜ யோகம் பெறுகிறார். மேலும் 9 மற்றும் 10 ம் அதிபதிகளுமான குரு மற்றும் சனி இணைந்து மகரத்தில் இருப்பது தர்மகர்மாதிபதி யோகம் அடைவதால் யோகமான பலன்கள் இந்த ராசி நேயர்களுக்கு ஏற்படும்.

அதிசாரமாக குரு பகவான் 10 ம் இடத்தில இருக்கும் பொழுது தன்னுடைய பார்வையாக 2 , 4 , 6 இடத்தை பார்வை இடுவர். அதனால் செல்வா சேர்க்கை , சொத்துக்கள் , வாகனங்கள் வாங்குதல் , எதிரிகளை வெல்லக்கூடிய ஆற்றல் ஆகியவை ஏற்படும்.

10ல் உள்ள குருவால் பாதகமான பலன்கள் ஏற்பட இந்த நீச்ச பங்க ராஜ யோகம் ஏற்படுத்துகிறது. தொழிலில் ஏற்றம் , பதவி உயர்வு ,ஆகியவை ஏற்பாடும். IT வேளையில் உள்ளவர்கள் புதிய ப்ரொஜெக் வெளிநாடு செல்லும் நிலை ஏற்படும்.

ரிஷப ராசி



குரு­ பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்சசியாகி எட்டாமிட ஸ்தான பலன்களை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது எட்டாமிட சிரம பலன்கள் இருக்கும். ஆனாலும், குருவின் சேர்க்கை அந்த சிரமங்களை குறைக்கும்.

பணச்­சிரமம், சேமிப்பு கரைதல், தேக ஆரோக்யக்குறை, காரியத்தடை போக்குவரத்தில் முன்னெச்சரிக்கை தேவைப்படும். மனக்­குழப்பம் என பொதுப்பலன்களாக இந்த குருபபெயர்ச்சியில் இருக்கும்.



அதே­போல் குருவின் 5,7,9ம் பார்வை 12ம் இடத்திற்கும், 2ம் இடததிற்கும், 4ம் இடத்திற்கும் இருப்பதால்  சுபச்செலவுகள், தனவிரயம் ஏற்படும். சுகபோனம்  சுஜீவனம், பொருளாதார மேன்மை, பணவரவு, கல்வியில் முன்னேற்றம், தனவிருத்தி என பார்வை பலன்கள் இருக்கும்.

குருவின் மூல நட்சத்திர சஞ்சாரம் 10.04.2019 வரை நீடிககும். அதன் பிறகு குரு வக்ரமாகி மீண்டும் விருசசிக ராசிக்கு வந்து கேட்டை நட்சத்திர சஞ்சரம் செய்வார். கடின உழைப்பு, வீண் விவகாரம், பயண அலைசல், எதிர்பாராத செலவினங்கள் என்று சிரமங்­கள் இருந்தாலும் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சி தரும். சுபகாரிய அனுகூலம் என இருக்­கும். இந்த வக்ரபெயர்ச்சி பலன்கள் 28.10.2019 வரை நீடிக்­கும். அதன் பிறகு வக்ர நிவர்த்­தி­யாகி மீண்­டும் தனசு ராசி
அதிசாரமாக  9ம் இடத்தில குரு பகவான்

 26.03.2020 வரை நீடிக்கும். அதன் பிறகு குரு அதிசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார்.

 இத­னால் உங்களுக்கு எண்ணிய எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் சந்தோ­ஷமான சூழ்நிலை இருக்கும். சுபகாரிய அனு கூலமாகும். இந்த சூழ்நிலை 8.7.2020 வரை நீடிக்கும்.
8 ம் இடத்தில குரு பகவான்

இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்


அதன் பிறகு குரு மீண்­டும் தனுசு ராசிக்கு வந்து உத்­தி­ராட நட்­சத்­திர சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது மீண்­டும் சிரம பலன்­களை கொடுப்­பார். 9.7.2020 முதல் குரு உத்­தி­ராட நட்­சத்­திர முதல் பாத சஞ்­சா­ரம் செய்­யும் பொழுது தனுசு ராசி­யில் 14.12.2020 வரை இருந்து சிர­மங்­களை கொடுத்­தா­லும் பொதுப் பலனாக நற்பலன்களையும் வழங்குவா.

ரிஷப லக்கினத்திற்கு தர்மகர்மாதிபதியான சனி பகவான் லாபதிபதியான குருவுடன் இணைந்து மகரத்தில் அமையும் பொழுது யோகமான பலன்களை ரிஷப  ராசி நேயர்களுக்கு வாரி வாரி வழுங்குவர்.


மார்ச் 3 தேதி வரை ஜூன் 23 தேதி 2020 வரை இந்த ராசி நேயர்களுக்கு அதி யோகமான பலன்களை வாரி வழுங்குவார்.


மிதுன ராசி


குரு  பகவான் 7 ம் இடத்தில சஞ்சரிப்பது  நல்ல பலன்களை தரும். ஆணல்  அதிசாரமாக  8ம் இடத்தில குரு பகவான் சஞ்சரிக்கும் பொழுது தீய பலன்களே நடை பெரும்.  

மேலும் மிதுன ராசிக்கு தற்சமயம் அஷ்டம சனி நடை பெறுகிறது.

அஷ்டம சனியும் , அஷ்டம குருவும் மிதுன ராசி நேயர்களுக்கு அதிக துன்பங்களையும் துயரங்களையும் தரக்கூடிய அமைப்பு உள்ளது.

ஒரு சிலருக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படலாம். மருத்துவ சிலவுகள் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை.

உங்களுக்கு தொழில் ரீதியான முன்னேற்றம், கவுரவம், அரசு சார்ந்த விஷயம் அனுகூலம், குடும்பத் தேவைகள் பூர்ததியாகுதல்உஷ்ணம் சார்ந்த தேக ஆரோக்யக்குறை என பலன்கள் இருந்தாலும் பொருளாதார சூழ்­நிலைகள் தாராளமாக இருக்கும்.


8ல் குரு அதிசாரமாக

இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்

 குரு அதசாரம் பெற்று மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உங்களுக்கு எதிர்பாராத சிர­மங்­கள் வரும். பண நெருக்­கடி வரும், வீண் விஷ­யங்­கள், காரி­யத்­தடை, ஜாமீன் கொடுத்த வகை­யில் சிக்­கல், போக்­கு­­ரத்­தில் சிர­மம் என சிரம பலன்­கள் இருக்­கும். சூழ்­நி­லையை அனு­­ரித்து இந்த கால­கட்­டத்­தில் திட்­­மிட்டு செயல்­­டுங்­கள். இந்த சூழ்­நிலை 8.7.2020 வரை நீடிக்­கும்.
கடக  ராசி

 குரு பகவான் விருச்­சிக ராசியிலருந்து தனுசு ராசிக்­குப் பெயர்ச்சியாகி ஆறாமிட ஸ்தான பலனகளை வழங்குவார். ஏற்கனவே சனி, கேது ஆறாமிட சஞ்சார பலன்கள் நற்பலன்ளாக இருந்­தா­லும் குருவின் ஆறாமிட சஞ்சார பலனகள் சிரமத்தை கொடுக்கும்.

சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்

குடும்­பத்­தில் வீண் பிரச்னை, பணச் சிக்­கல், கடன் வாங்­கு­தல், தேக ஆரோக்­யக்­குறை என சிரம பலன்­கள் பொது ­­லன்­­ளாக ஆண்டு முழு­­தும் இருக்­கும். அதே போல் குரு­வின் 5,7,9ம் பார்வைகள் 10ம் இடம், 12ம் இடம், ராசிக்கு 2ம் இடம் என குரு பார்வை இருப்­­தால் செய்­யும் தொழி­லில் பிரச்னை, கடின உழைப்பு, பணிச்­சுமை என சிரமங்கள் இருக்­கும்.

குரு பகவான் ருண ஸ்தானமான 6 ம் இடத்தில அதிசஞ்சாரமாக செய்யஇருப்பதால் தன விரயம், தேக ஆராக்யக்குறை, சுபச் செலவினங்கள், தனவிருத்தி, சுகஜீவனம், சுக போஜனம், பேச்சு சாதுர்யம் என பார்வை பலன்கள் இருக்கும். இது ஆண்டு முழுவதும் நீடிக்­கு ம்.



 உங்களுக்கு எதிர்பாராத பணவரவு, ஆன்மிக ஈடுபாடு, கடன் வாங்குதல் , எதிர்பாராத ரிப்பேர் செலவினங்கள், குடும்பத்தில் வீண் வாக்குவாதம் என இருக்கும். பயண அலைச்சல் சிரமம் தரும்.
ஆனால் குருபகவான் அதிசாரமாக 7 ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் , மிக யோகமான பலன்கள் இந்த காலகட்டத்தில் ஏற்படும்.
நீசபங்க ராஜ யோகம் பெற்ற குரு பகவான் இந்த ராசி நேயர்களுக்கு யோகமான பலன்களை வாரி வழுங்குவார்.


சிம்ம  ராசி


சிம்ம  ராசிக்கு கோச்சாரத்தில் குரு 5ஆமிட ஸ்தான பலன்களை தந்து கொண்டிருக்கிறார் . ஏற்கனவே சனி, கேது ஐந்தாமிட சஞ்சார பலன்­கள் சிரம பலன்­­ளாக இருந்தாலும் குருசேர்க்கை சனி, கேது­வின் சிரம பலன்­களை குறைக்கும். குருவின் ஐந்தாமிட சஞசார பலன்களாக சுபகாரிய அனுகூலம், செல்வ சேர்க்கை , திருமணம், புத்திர பாக்யம் போன்ற நற்பலன்கள் செல்வாக்கு பெருகுதல் பூர்வீக சொத்து மூலமாக பொருளாதார வரவு என ஆண்டு முழுவதும் பொதுப் பலன்களாக இருக்கும்.

அதே­போல் குருவின் 5, 7, 9ம் பார்வை 

 சிம்ம  ராசிக்கு 9ஆமிடம் 11ஆமிடம், ராசியில் பதிவதால் தொழிலில் முன்னேற்றம் , புராண கோயில்களுக்கு சென்று வழிபடுதல் , ஆலய புனரமைத்தல் , செல்வ சேர்க்கை , வீட்டில் சுப காரியங்கள், உத்யோகத்தில் பதவி உயர்வு, சுகபோகம்,  பெருகுதல், அனுகுலமான இடமாற்றம் என குருவின் பார்வை பலன்கள் ஆண்டு முழுவதும் பொதுப்பலன்களாக இருக்கும்.

அதிசார குரு பெயர்ச்சி பலன்கள்  

30.3.2020  குரு அதிசாரம் பெற்று ருண ஸ்தானமான 6ம் இடத்திற்கு மகர ராசிக்கு செல்கிறார். இதனால் உற்றார் உறவினர்களிடையே சண்டை, சச்சரவு , பயண அலைச்சல்,  அனாவசிய செலவுகள், திடீர் மருத்துவ சிலவு,  வாகனம் ஓட்டும் பொழுது முன்னெச்சரிக்கை, தாயார் தேக ஆரோக்யகுறை என சிரம பலன்களை தருவார்.

6ல் குரு அதிசாரமாக இருப்பதால் , எதிரிகளின் கை ஓங்கிருக்கும் . ஆனால் , 6ல் சனி உள்ளதால் எதிரிகளை சமாளிக்க கூடிய ஆற்றலை தரும்.
 குரு மீண்டும் தனுசு ராசிக்கு வந்து உத்திராட நட்சத்திர சஞ்சாரம் செய்யும் பொழுது மீண்டும் நற்பலன்களை வழங்குவார்.  தனுசு ராசி­யில் குரு பின்னர் சஞ்சாரம்  செய்யும் பொழுது அரசு வழியில் ஆதாயம் , தொழில் ரீதியான முன்னேற்றம், பாராட்டு, நற்பெயர், பண வரவுகள் என சுப பலன்களாக இருக்கும்.

கன்னி



கன்னி ராசிக்கு 4ம் வீட்டில் குரு உள்ளார் . கன்னி ராசிக்கு அதிசாரமாக  ஐந்தாம் வீட்டில் குரு அமர்வது அற்புத பலன்களை தரும். கன்னி ராசிக்கு குரு 4,7 உரியவர் . முன்னேற்றம், சுகம், சந்தோஷங்களை தருபவர் . குரு பெயர்ச்சி யால். குருவின் பார்வை உங்க ராசி லக்னத்தின் மீது விழுகிறது. மனோ தைரியம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் கூடும். சுறுசுறுப்பு அதிகரிக்கும்.





உங்க லாப ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். லாபம் அதிகரிக்கும். மூத்த சகோதரருடன் உறவு பலப்படும்.

வீடு வாங்குவீர்கள். குரு பகவான் ஒன்பதாம் வீட்டை பார்ப்பது தெய்வ கடாட்சம் கிடைக்கும். IT துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு வெளிநாட்டு . ப்ரொஜெக்ட்ல வேலை கிடைக்கும்., வெளிநாட்டு கல்வி மாணவர்களுக்கு அமையும். உயர்கல்வி யோகம் தேடி வரப்போகிறது.

அதிசாரத்தில் குரு பகவான் இருக்கும்பொழுது ஒரு சில நேயர்களுக்கு திருமணம் கைகூடும். ஒரு சிலருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் அமையும்.
தசை புக்தி போன்றவை நன்கு அமையப்பெற்ற கன்னி ராசி நேயர்கள் இந்த கால கட்டங்களில் நிறைய சாதிப்பவர்கள்.

துலாம்


துலா  ராசிக்கு 3ம் வீட்டில் குரு உள்ளார் . துலா   ராசிக்கு அதிசாரமாக  4ம் வீட்டில் குரு  சுமாரான பலன்களை தரும்.  துலா  ராசிக்கு குரு 3,6 உரியவர் . முன்னேற்றம், சுகம், சந்தோஷங்களை தருபவதற்கு தடைகளை ஏற்படுத்துவார். அதிசாரமாக  குரு 4 வீட்டில் உள்ளார். குரு  பார்வையாக 8,10.12 இடங்களை பார்ப்பார். குரு 10 ம் இடத்தை பார்ப்பதால் தொழிலில் , உதோயோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். செய்யும் சிலருக்கு புதிய வேலை கிடைக்கும்.  தொழிலில் சாதனை படைப்பீர்கள்.

 நிறைய பயணங்கள் செல்வீர்கள். விரயஸ்தானமான 12 ம் இடத்தை பார்ப்பதால் சுப விரையங்கள் ஏற்படும். வண்டி வாகனம் வீடு வாங்கும் யோகம் வரும். வீடுகளை அழகுபடுத்துவீர்கள்.



இந்த குரு மனோ நிறைவையு ம் சந்தோசத்தையும் தரப்போகிறார்.  இளைய சகோதரிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் பணவரவும் சந்தோஷம் அதிகம் இருக்கும். செலவுகள் கட்டுப்படும். 8 ம் வீட்டினை குரு பார்ப்பதால் தேவையற்ற செலவீனங்கள், தடைகள் நீங்கும்.

விருச்சிகம்

அதிசாரமாக  மூன்றில் குரு புகழ், கீர்த்தியை அதிகரிப்பார். மூன்றாம் வீடு மறைவு ஸ்தானம்.  சற்று பாதகமான பலன்கள் நடைபெறும் குரு பார்வை உங்க ராசிக்கு ஏழாம் வீட்டின் மீது விழுகிறது. திருமண தடைகள் நீங்கும். மனதிற்குப் பிடித்த வரன் கிடைக்கும். காரணம் குருவின் நேரடி பார்வை உங்க ஏழாம் வீட்டின் மீது விழுகிறது.

ஒரு சிலருக்கு வெகு நாள் தடைபட்ட காதல் திருமணம் அமையும். அதிர்ஷ்டம் உங்க வீட்டு கதவைத் தட்டப்போகிறது.



லாப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நல்ல நண்பர்கள் உங்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். குருவின் பார்வை பாக்ய ஸ்தானத்தின் மீது விழுகிறது. உங்களின் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். அப்பாவிற்கு நன்மை நடைபெறும். ஆலயங்களுக்கு புனித பயணங்கள் செல்வீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டு யோகம் தேடி வரப்போகிறது.

தனுசு



ஜென்ம ராமர் வனத்திலே

ஜென்ம ராசியில் இருந்த குரு அதிசாரமாக இரண்டாம் வீட்டிற்குப் போகிறார். அதிசார குருப்பெயர்ச்சி குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சினைகளை தீர்த்து வைப்பார். செல்வ சேர்க்கை அதிகரிப்பார்.  உத்யோக உயர்வை கொடுப்பார்.

நிறைந்த அதிர்ஷ்டத்தை தருவார். குரு பார்வை உங்க ராசிக்கு பத்தாம் வீட்டினை ஜீவனஸ்தானத்தை பார்ப்பதால் தொழில் வருமானம் அதிகரிக்கும். ஒரு சில ராசி நேயர்களுக்கு நிரந்தர தொழிலை ஏற்படுத்தி தருவார் குரு.



ருண ஸ்தானமான ஆறாம் வீட்டினை பார்க்கிறார். நீண்ட நாட்கள் இருந்து வந்த நோய்கள் நீங்கும். வாழ்க்கையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்., எதிரிகள் தொந்தரவுகள் கடன் தொந்தரவு நீங்கும்.

எட்டாம் வீடான ஆயுள் ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களின் ஆயுள் கூடும் தடைகள் விலகி அதிர்ஷ்டம் கூடும்..


மகரம்

மகரம் ராசிக்காரர்களுக்கு அதிசாரமாக ஜென்ம குரு நீசபங்க ராஜயோகம் பெற்று அமர்கிறார். ஜென்ம குரு அற்புதமான பலனை தருவார்.

சொந்த வீட்டில் அமரும் குரு தனது ராசியில் இருந்து 5,7,9 வீடுகளை குரு பார்க்கிறார். குடும்பத்தில் நிம்மதி கிடைக்கும். நீண்ட நாட்களாக திருமணம்  தடை ஏற்பட்டவர்களுக்கு திருமணம் நடக்கும்.

குரு 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். நீண்ட நாட்களாக குழந்தை பெரு இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் ஒரு சில நேயர்களுக்கு உத்யோக உயர்வு ஏற்படும். கிடைக்கும்.  பெரும் புகழும் கிடைக்கும்.

காலத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டை குரு பார்ப்பதால் திருமண தடைகள் நீங்கும்.  மனா வாழ்க்கையில் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும் சந்தோஷம் அதிகரிக்கும்.

 ஒன்பதாம் வீட்டை குரு பார்ப்பதால் வெளிநாடு பயணம் செல்வீர்கள்.  தந்தையின் வாழ்வில் உயர்வு ஏற்படும். ஒரு சில நேயர்களுக்கு உயர்கல்வி யோகம் அமையும்.

கும்பம்

கும்பத்தின் ராசி அதிபதி சனி.

கும்ப ராசிக்கு கோச்சார ரீதியாக தற்சமயம் லாப சித்தனமான 11 ம் வீட்டில் இருந்து அதிசாரமாக குரு விரயஸ்தானமான 12ம் இடத்திற்கு செல்ல இருக்கிறார்.

 உங்க ராசிக்கு தன ஸ்தானமான இரண்டாம் வீடு மற்றும் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டு அதிபதி குருபகவான். குரு பகவான் விரயஸ்தானமான 12ஆம் வீட்டிற்கு வருகிறார்



இதனால் ஏற்கனவே சனிபகவான் கோட்சரரீதியாக மகர ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்து இருக்கிறார்.  குடும்பத்தில் சுப செலவுகள்  ஏற்படும். குரு  நான்கு, ஆறு, எட்டாம் வீடுகளை பார்க்கிறார்.

நான்காம் வீடு சுகஸ்தானம், கல்வி, அம்மா, இந்த வீட்டினை குரு பார்ப்பதார் பெரிய திருப்பங்கள் ஏற்படும். புதிய வண்டி வாகனங்கள் வாங்கலாம்.
ஆறாம் வீட்டினை குரு பார்ப்பதால் கடன்கள் தீரும் நீண்ட கால நோய்களிலிருந்து விடுதலை ஏற்படும். நோய்கள் விலகி ஆரோக்கியம் அதிகரிக்கும்.
எட்டாம் வீட்டினை குரு பார்ப்பதால் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும்.ஆயுள் கூடும் நிம்மதி ஏற்படும்.

மீனம்

மீனம் ராசிக்கு குரு பகவான் ராசி அதிபதி. அவர் கோச்சாரத்தில் தர்சமாய் ஜீவன ஸ்தானமான 10 ம் இடத்தில உள்ளார் . அவர் அதிசாரமாக லாபஸ்தானமான 11ம் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும்.

 இந்த அதிசார குரு பெயர்ச்சியால் நிறைய லாபம் கிடைக்கும். லாப ஸ்தானத்தில் நீச பங்க ராஜயோகம் பெற்று குரு அமர்கிறார். வராத பணமும் தேடி வரும். கேட்ட இடத்தில் பண உதவி கிடைக்கும்.



குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். குரு பார்வை உங்க ராசிக்கு மூன்றாம் வீடு, 5,7,9 வீடுகளின் மீது விழுகிறது.

 திருமணம் தடை ஏற்பட்டவர்களுக்கு  நல்ல முறையில் திருமணம் நடக்கும். சமுதாயத்தில் நல்ல பெயர் கிடைக்கும். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும்.
மனோ தைரியம் கூடும், முக்கிய முடிவுகள் எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்  . குழந்தைகளால்  நன்மைகள் நடக்கும். வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும் . மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.








No comments:

Post a Comment