உடல் வலுப்பெற, ஆர்தரைட்டிஸ்
என்கின்ற மூட்டு வலி இடுப்பு வலி நீங்க கல்தாமரை
மூலிகை
மூட்டு வலி நீங்க கல்தாமரை மூலிகை
மூட்டு வலி ஏன் வருகிறது?
கை, கால் மற்றும் விரல்களில்
மூட்டுகளின் இணைப்புகளில் மெல்லிய ஜவ்வு உள்ளது. இந்த ஜவ்வு வீக்கம் அடைவதால், கை,
கால் மற்றும் விரல்களை மடக்குவதில் சிரமம் ஏற்படும். இணைப்பு மூட்டுக்களில் உள்ள வழுவழுப்பு
தன்மையுடன் கூடிய ஜெல்' போன்ற திரவம் குறைவாலும், இணைப்பு திசுக்கள் பாதிக்கப்பட்டு,
வீக்கம் ஏற்படுகின்றன..
அழிந்து வரும் மூலிகைகள்
மூலிகை செடிகள் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால் தற்போது பொதிகை மலையில் அபூர்வ மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முளைத்து பூத்துக்குலுங்கிய வண்ணம் காட்சியளிக்கின்றன. பாறைகளுக்கிடையே அபூர்வமாகவும், அதிசயமாகவும் வளரும் கல்தாமரை மற்றும் பூனைக் காலி,கல் தாமரை,அழுகண்ணி,மற்றும் சாம்பிராணி பூ, கஸ்தூரி மஞ்சள், தேவதாரு போன்ற மூலிகை செடிகள் பல ஆண்டுகளுக்கு பிறகு பொதிகை மலையில் மீண்டும் வளர்ந்து பூத்துக் குலுங்குகின்றன.
கல்தாமரை
கல்தாமரை மலைப்பகுதியில் வளரும் ஒருவகை கொடி இனமாகும். இதன் இலை தாமரை இலை வடிவில் இருப்பதாலும், மலை, கல் நிறைந்த பகுதிகளில் அதிகம் வளர்வதாலும் இதை கல்தாமரை என்கின்றனர். ஆனால் தாமரை இலையை விட சிறியதாகவும் தடித்தும் இருக்கும்.
பாறைகளுக்கிடையே அபூர்வமாய் வளரும் கல்தாமரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஈரப்பசை உள்ள பகுதிகளில் வளரும் பூனைக் காலி நோய்வராமல் பாதுகாக்கவும், பல்வேறு தொற்று நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்கி வருகிறது.
ஆர்தரைட்டிஸ் ( Arthritis)
முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களையும் ஆட்டிப் படைக்கும் நோய்களில் பெரும்பங்கை வகிப்பது ஆர்தரைட்டிஸ் எனப்படும் மூட்டுவலி, அதிகரித்த அடுக்குமாடி குடியிருப்புகளும், சொகுசு வாழ்க்கை முறைகளும், நடை மற்றும் உடற்பயிற்சியின்மையும் கால், இடுப்பு மற்றும் கழுத்து எலும்புகள் மற்றும் தசைப் பகுதிகளில் தேய்மானம் மற்றும் இறுக்கத்தை உண்டாக்குகின்றன.
அகத்தியர் குணவாகடம்
வீரிய விருத்திதரு மெய்குப் பலம்கொடுக்கும்
கூரிய குட்டுதனைக் கோபிக்குங்-காரீயத்தை
நற்றாம் பரமாக்கு நங்காய்! அருக்கலுறை
கற்றா மறைதனைக் காண்
பொருள் - சுக்கிலத்தையும் பலத்தையும் விருத்தியாக்கும். காரீயத்தை செம்பாக்கும்.
உடல் வலுப்பெற
உடல் வலுப்பெற்றால் நோய்கள் ஏதும் அணுகாமல் பாதுகாக்க முடியும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்ற பழமொழிக்கேற்ப உடல் நன்கு பலமாக ஆரோக்கியமாக இருந்தால்தான் சிறந்த வாழ்வைப் பெற முடியும். இத்தகைய உடலை வலுப்பெறச் செய்ய கல்தாமரை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து வைத்துக்கொண்டு காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். அல்லது காய்ந்த கல்தாமரை இலையின் பொடியை நீரில் கொதிக்கவைத்து பனை வெல்லம் கலந்து அருந்தலாம். இவ்வாறு ஒரு மண்டலம் அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இளைத்த உடல் தேறும்.
இடுப்பு வலி , மூட்டு வலி நீங்க
இன்றைய நவீன உணவு மாறபாட்டாலும், போதிய உற்பயிற்சியின்மையாலும் சிலருக்கு மிகக் குறைந்த வயதிலே கழுத்து வலி, இடுப்பு வலி, மூட்டு வலி, என உண்டாகிறது. இப்படி கை, கால், முட்டுகளில் வலி உண்டாவதற்குக் காரணம் மூட்டுத் தேய்மானம் என்பார்கள். இதனைப் போக்க கல்தாமரை சிறந்த மருந்து. கல்தாமரை இலைகளை நிழலில் காயவைத்து கஷாயம் செய்து அருந்தி, கல்தாமரை இலைகள் சேர்க்கப்பட்ட வெளிப்பூச்சு எண்ணெய்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் பூசி வந்தால் மேற்கண்ட பாதிப்புகள் நீங்கும்.
சுமைலாக்ஸ் செய்லானிகம்
சுமைலாக்ஸ் செய்லானிகம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட லில்லியேசியே குடும்பத்தைச் சார்ந்த கல்தாமரைச் செடிகள் அழகுக்காவும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இதன் வேர்மற்றும் இலைகளில் டையோஸ்ஜெனின் என்னும் வேதிப்பொருள் உள்ளது. இது மூட்டுகளிலுள்ள வீக்கத்தை கட்டுப்படுத்துகிறது. இரண்டு அல்லது மூன்று கல்தாமரை இலைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி நீரில் போட்டு கொதிக்கவைத்து கசாயம் செய்து சாப்பிட மூட்டுவலி குறையும், தொடர்ந்து 15 முதல் 30 நாட்கள் இதனை சாப்பிடலாம், இதன் இலைகளை லேசாக வெதுப்பி, இளஞ்சூட்டில் மூட்டுகளில் பற்று அல்லது ஒற்றமிட வீக்கம் வற்றும். கல்தாமரை வேரை கசாயம் செய்து குடிக்க பால்வினை நோய்களால் ஏற்படும் மூட்டுவலி நீங்கும்.
அகத்திய
முனிவர்
இதனை 48 நாட்கள் தொடர்ந்து சூரணம் செய்து சாப்பிட்டு வந்தால் எவ்விதமான நோயும் தாக்காது.உலகில் பல்வேறு நோய் நொடிகள் புதிது, புதிதாக வந்தபோதும் இயற்கை மூலிகைகளால் குணப்படுத்த முடியும் என பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே அகத்திய முனிவர் கண்டுபிடித்துள்ளார். மூலிகை பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததே மூலிகை அழிந்து வருவதற்கான காரணம். இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில் மூலிகை பற்றி பாடத்திட்டத்தில் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குப்பை மேனி ஜூஸ் :
மூட்டு வலிக்கு குப்பை மேனிச் செடி எப்போதுமே சிறந்த நிவாரணம் தருகிறது. குப்பை மேனிச் செடியுடன் எலுமிச்சை சாறு கலந்து செய்யப்படும் இந்த ஜூஸ் மூட்டு வலிக்கு அற்புத நன்மைகளை தரும்.
குப்பை மேனி ஜூஸ் :
தேவையானவை :
குப்பை மேனி இலைகள்
நீர் - 1லிட்டர்
எலுமிச்சை சாறு - 1
தேன்
நீரில் குப்பை மேனி இலைகளைப் போட்டு 20 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். ஆறியதும் வடிகட்டி அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து அதனை குடிக்கவும். தினமும் இப்படி செய்தால் உங்களுக்கு வந்த மூட்டு வலி காணாமல் போய்விடும்.
No comments:
Post a Comment