ஜாதகத்தில் புனர்பூ தோஷம் என்றால் என்ன ?
திருமண பொருத்தம் பார்க்கும் பொழுது செவ்வாய் தோஷம்
இருக்கின்றதா? நாக தோஷம் இருக்கின்றதா?
களத்திர தோஷம் இருக்கின்றதா?
கேந்திராதிபத்ய தோஷம் இருக்கின்றதா என்று பார்க்கிறோம் ஆனால் புனர்பூ தோஷம் உள்ளதா என்று பார்ப்பதில்லை ?
கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் ஏற்படாமலிருப்பதற்கு புனர்பூ தோஷமே காரண மாகிறது. யோனிப் பொருத்தம் இருந்தாலும் கண பொருத்தம் புனர்பூ தோஷமிருந்தால் கணவன்- மனைவிக்குள் முதலில் ஒற்றுமையாக இருந்தாலும் ஒரு குழந்தை பிறந்தபிறகு வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டுவிடும். ஒருசிலர் வேறுவழியில்லாமல் கணவன் செய்யும் தவறு களை மனைவியும், மனைவி செய்யும் தவறு களை கணவனும் பொறுத் துக்கொண்டு வெளியில் சொல்லாமல் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். சிலர் ரகசியமாக வாழத்தெரியாமல் ஊரைக் கூட்டிவிடுவார்கள். பின்பு நீதிமன்றம் போய் விவாகரத்து பெற்றுப் பிரிந்துவிடுவார்கள். எனவே, பொருத்தம் பார்க்கும்பொழுது செவ்வாய் தோஷம், களத்திர தோஷம் , நாக தோஷம் , கேந்திராதிபத்ய தோஷம் இருக்கிறதா என பார்க்கும்பொழுது, புனர்பூ தோஷமும் இருக்கிறதா என்பதை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும்.
புனர்பூ தோஷம். இதுவும் சனி பகவானால் உண்டாகக்கூடியது.
இந்த தோஷம் இருந்தால் திருமணம் நடக்காது. அப்படியே நடந்தாலும் பின்னர் மணமக்கள்
கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்துவிடும் நிலை உருவாகும்.
புனர்பூ தோஷம் எப்படி ஏற்படுகிறது ?
சனி வீட்டில் சந்திரனும், சந்திரன் வீட்டில் சனியும் இருப்பது. அதாவது , மகரம் , கும்பத்தில்
சந்திரனும் , கடகத்தில்
சனியும் இருப்பது
● சனி நட்சத்திரத்தில் சந்திரன் அல்லது
சந்திரன் நட்சத்திரத்தில் சனி இருப்பது.
சந்திரன் நட்சித்திரம் ரோஹினி ஹஸ்தம் , திருவோணம்
சனி நட்சித்திரம் பூசம் அனுஷம் உத்திரட்டாதி
● இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக்
கொள்வது.
ஜாதகங்களைப்
பொருத்தம் பார்க்கும் பொழுது புனர்பூ தோஷமிருந்தால் ஒதுக்கிவைக்க வேண்டும்.
புனர்பூ
தோஷத்தின் கெடு பலன்கள்
புனர்பூ தோஷம் அமையப்
பெற்றவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகி பின்பு திருமணம் நின்று விடும் அவல நிலை
மற்றும் இரு வீட்டாரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சுவார்த்தை நடை
பெற்று திடீர் என்று ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தடை பெறுவது, திருமணத் தேதி குறித்து பின்பு இருவீட்டாருக்கும்
சண்டை ஏற்பட்டு நின்று விடுவது, மேலும், திருமணம் காலதாமதம் ஆவது.
திருமணத்திற்கு பின் தம்பதியருள் யாருக்காவது உடல் நீலை, அதாவது தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே காலமாவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் திருமணமே நடக்காமல் போவது போன்றவை ஏற்படுகின்றது.
ஒருவர் ஜாதகத்தில் மனோகாரகனான சந்திரனுடன் ஆயுள்
காரகனான சனியும் இணைந்து
எங்கே இருந்தாலும புனர்பூ தோஷம் ஏற்படுகிறது.
சனி சந்திரனை ஏழாம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்ப்பது, சனி மட்டும் சந்திரனை தனது மூன்றாம் பார்வை மற்றும் பத்தாம் பார்வையால்
சந்திரனை பார்ப்பது
, சனி சந்திரன் இணைந்து இருப்பதே புனர்பூ
தோஷத்தை உண்டாக்குகின்றது
சந்திரன் நீசம் பெற்று அதாவது நீசச் சந்திரனை சனி பார்ப்பது அல்லது சனி நீசம் பெற்று அதாவது நீச சனியை சந்திரன் பார்ப்பது, மற்றும் குடும்ப ஸ்தானத்தில் இவ்வாறு அமையப் பெறுவது, அதே போன்று சனி வீட்டில் சந்திரன் இருப்பது அல்லது சந்திரன் வீட்டில் சனி இருப்பது, இவர்களை குரு பார்க்காமல் இருந்தால் நிச்சயமாக கடுமையான புனர்பூ தோஷத்திற்கு ஆளாகின்றார்கள்.
புனர்பூ தோஷத்திற்கு விதி விலக்குகள்
1 குரு பகவான் பார்வை அல்லது சேர்க்கை ஏற்பட்டிருந்தால் தோஷம் பரிஹாரம் ஏற்படுகிறது
2. குரு பகவான் வீடுகளான தனுசு , மீனத்தில் சனி சந்திரன் சேர்க்கை ஏற்பட்டு தோஷம் ஏற்பட்டிருந்தால் பரிஹாரம் ஏற்படுகிறது.
3. சனியின் எதிரிகளான செவ்வாய் மற்றும் சூரியன் அல்லது லக்கினம் மற்றும் ராசியின் யோகாதிபதி இவர்கள் சந்திரன் , மற்றும் சனியின் இடேயே நிற்க புனர்பூ தோஷத்திற்கு விதி விலக்கு ஏற்படுகிறது.
4. சுக்கிரனின் வீட்டில் அமையப்பெற்றால் , தோஷம் நீங்குவதோடு , பெயரும் புகழும் ஏற்படுகிறது.
புனர்பூ தோஷத்திற்கு பரிஹாரம்
பௌர்ணமி தோறும் சத்தியநாராயணா பூஜை மேற்கொண்டால் புனர்பூ தோஷம் விலகும்.
சனி கிழமைகளில் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் புனர்பூ தோஷம் விலகும்.
சனி கிழமைகளில் காகத்திற்கு அன்னம் வைத்து , உடல் ஊனம் உள்ளவர்களுக்கு உதவி செய்தால் புனர்பூ தோஷம் விலகும்.
முத்து மற்றும் நீலம் கொண்ட மோதிரத்தை கண்டிப்பாக
அணிய வேண்டும்
No comments:
Post a Comment