Search This Blog

Friday, January 15, 2021

திரு எடப்பாடி பழனிசாமி ஜாதகம் மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா ?, அவர் ஜாதகம் என்ன சொல்கிறது ?

 

திரு எடப்பாடி பழனிசாமி ஜாதகம் மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா

அவர் ஜாதகம் என்ன சொல்கிறது ?



பூர்வ ஜென்ம புண்ணியம் 

திரு ஓ பி பன்னேர்செல்வம் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர். அவர்தான் , ஜெயலலிதா விற்கு பிறகு  தமிழக முதல்வராக வந்திருக்க வேண்டும். ஆனால் சசிகளவிற்கு ஒபிஸ் ஐ  பிடிக்காது. மேலும் , சட்டசபையில் ஒபிஸ் ஸ்டாலினிய் பார்த்து சிரித்தது சசிகளவிற்கு அறவே பிடிக்கவில்லை . 

அதனால் , அடித்தது யோகம் எடப்பாடிக்கு. கட்சியில் ஒபிஸ்ஐ  கீழே தள்ளி முதல்வர் பதவியை பிடித்தார். எடபடியார் . இங்குதான் ஜாதகம் வேலை செய்கிறது . நவகிரஹங்கள் தரும் யோகத்தால் இன்று எடபடியார் மூத்தவராக உள்ளார். இந்த தேரத்லில் ஜெயித்து , எடபடியார்  மிண்டும் தமிழக முதல்வர் ஆவாரா?  அவர் ஜாதகம் என்ன சொல்கிறது ?  என்று  பார்க்கலாம் வாருங்கள் ?




திரு எடப்பாடி பழனிசாமி ஜாதகம்



திரு எடப்பாடி பழனிசாமி பிறந்தது ஹஸ்தம்  2ம் பாதம். லக்கினம் ரிஷபம் மற்றும் கன்னி ராசி ஆகும்.

பிறந்த பொழுது சந்திர தசை இருப்பு  4 வருடம் 6 மாதம் 19 நாள்

புதன் தசை புதன் புக்தி 30 -4-2020 வரை

புதன் புதன் தசை கேது  புக்தி 31 -03-2021 வரை

புதன் தசை சுக்கிர  புக்தி 10-04-2023 வரை



ரிஷப லக்கின பலன்கள்

சொல்லப்பா எருதோடு மிதுனத்தோர்க்கு

சுகமெத்த உண்டென்று சொல்லுவார்கள்.

அல்லப்பா அந்தணரும் கேந்திரமேற

அவர் செய்யுங்கொடுமையது மெத்தவுண்டு

தள்ளப்பா தரை பொருளும் தனமும்நாசம்

தார்வேந்தர் தோஷமுடன் அரிட்டம்செப்பு

குள்ளப்பா குருமதியுங் கோணமேற

கொற்றவனே குழவிக்கு நன்மைகூறே

 

அன்பனே! நான் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்பாயாக! ரிஷபம், மிதுனம் ஆகிய லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சுகம் மிகவும் என்றும் உண்டு எனக் கூறுவார். ஆயினும் அந்தணர் எனப்படும் குருபகவான் கேந்திரத்தில் [1,4,7,10 ஆகிய இடங்களில்] நின்றால் அவரால் ஏற்படும் கொடுமை மிகவும் அதிகம்.

எனினும் குருபகவானும் சந்திரனும் 1,5,9 ஆகிய திரிகோண ஸ்தானத்தில் இருப்பார் என்றால் ஜாதகனுக்கு நன்மை பெருகிப் பல்கும் எனவும் கூறுவாயாக

மாளவ்ய யோகம்

ரிஷப லக்கினத்தில் லக்கினாதிபதி ஆட்சி  பெற்று உயர் தரமான மாளவ்ய யோகம் அமைந்துள்ளது. பஞ்ச மஹா புருஷ யோகமான மாளவ்ய யோகம் ஜாதகருக்கு அரசாளும் யோகத்தை தந்துள்ளது.

சுக்கிரன் ஜென்ம லக்கினத்தில் இருந்தால் அழகு, கவர்ச்சியான உடல் அமைப்பு, வசதி, வாய்ப்பு, நல்ல உடல் அமைப்பு, தைரியம் துணிவு, சுக போக வாழ்வு, நல்ல குடும்பம், ஆடை, ஆபரண சேர்க்கை, உண்டாகும்.

எல்லாவிதமான சொத்துகள், கை நிறைய பணம், மாளிகைபோல் வீடு என இருந்தாலும், அவற்றை ஒரு ஜாதகர் அனுபவிக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு சுக்கிரன் வழங்கும் மாளவ்ய யோகம் இருந்தால்தான் முடியும். மேலும் களத்திரக்காரகனாகவும் சுக்கிரன் இருப்பதால் தாம்பத்ய சுகம், வம்சவிருத்தி ஆகியவற்றுக்கும் இவரே காரணகர்த்தாவாகிறார். 

இந்த யோகம் கிடைக்கப்பெற்றவர்கள் தோற்றப்பொலிவு, திடசிந்தனை மற்றும் வைராக்கியத்துடன் செயல்பட்டு எடுத்த காரியங்களில் வெற்றிபெறுவார்கள். அப்படியே தோல்வி கிடைத்தாலும், அதையும் மகிழ்ச்சியாகவும் எளிதாகவும் எடுத்துக்கொள்வார்கள்.

கெளரவ பதவிகளையும், வாகனம், பணியாட்கள் ஆடம்பரமான மாளிகையுடன் கூடிய சொகுசான வாழ்க்கையையும் அளிக்கும் . சுக்கிரன் இன்ப சுகத்தை அள்ளி வழங்கி விடும்

சுக்கின் தனது நட்பு கிரகங்களான புதன், சேர்க்கை பெற்றிருந்தால் சுக்கிர திசையின் போது நற்பலன்களைப் பெறுவார்கள். தற்சமயம் ஜாதகருக்கு  புதன் தசையில் சுக்ர புக்தி நடைபெறுவதால் , நன்மையான பலன்களை பெறுவார்கள்

ஜெயலலிதா ஜாதகத்தில் 10ம் இடத்தில்  சுக்கிரன் உச்சம் பெற்று மாளவ்ய யோகம் அமையப்பெற்றதால் , தமிழக முதலமைச்சராய் , பிரபல நடிகை ஆக ஜொலிக்க முடிந்தது. 

கோடீஸ்வர யோகம்

தன ஸ்தானத்தில் குரு கேது கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம்.
ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்ந்திருந்தால் அவருக்கு கோடீஸ்வர யோகம் வரும். இணைவு  கோடீஸ்வர யோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

யோகினி யோகம்

குரு கேது சேர்க்கை தரும் யோகம்

காமம், குரோதம், மோகம் இவை அனைத்தையும் கடந்து இறுதியாக மோட்சத்தை அடைவதற்கு உதவும் கிரகம் கேதுபகவான். யோகினி யோகம் என்றழைக்கப்படும் யோகமானது, குரு மற்றும் கேது இவர்கள் இணையும் பொழுது கிடைக்கப்படும் யோகமாகும். யோகினி யோகம் உள்ளவர்கள் சிறந்த ஆன்மீகவாதி களாகவும்,சிறந்த நற்காரியங்கள் புரிபவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு உள்ளுணர்வு, பூர்வ ஜென்மத்து வினைகள் போன்றவை இவர்கள் வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருக்கும்.

குருவும், கேதுவும் இணைந்து ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர் பாக்கியசாலியாக திகழ்வார். ரிஷப லக்னத்துடன் தன ஸ்தானம் எனப்படும் 2ம் வீடான மிதுன ராசியில் குருவும், கேதுவும் இருந்தால் அந்த ஜாதகர் கோடீஸ்வரன் ஆவது உறுதி. அந்த யோகம் உள்ள ஜாதகதாரர் 45 வயதுக்கு மேல் பெரிய பதவி வகித்து உயர்வடைவார்.

சூர்யன் உச்சம் பெற்றால்

எடப்பாடியார் ஜாதகத்தில் அயன , சயன போக ஸ்தானமான  12 ம் வீட்டில் ராஜ கிரஹமான சூர்யன் உச்சம் பெற்றுப்பதால் , அவருக்கு முதல்வர் பதவி தேடி வந்தது. பிரதமர் , முதல்வர் பதவிகளை ஒருவர் அடைய வேண்டுமானால் அவர் ஜாதகத்தில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க வேண்டும்

சூரியனின் உச்ச ராசி மேஷம் ஆகும். ஒரு நபருக்கு அவரது ஜாதகத்தில் இந்த மேஷ ராசியில் சூரியன் இருக்க அந்த நபர் திடகாத்திரமான உடலை பெற்றிருப்பார். அவரது உடல், நடை, தோற்றத்தில் ஒரு கம்பீரம் இருக்கும். எதற்கும் அஞ்சாத மனதை கொண்டிருப்பார். சுறுசுறுப்பானவர்களாக இருப்பார்கள். மேஷம் என்பது போர்க்கிரகமான “செவ்வாயின்” வீடாகும். அதில் வெப்பமான சூரியன் உச்சம் பெறுவதால் சண்டை பிரியர்களாக இருப்பார்கள். அது வாய்ச்சண்டையாகவும், அடிதடி சண்டையாகவும் இருக்கலாம். பெரும்பாலும் நியாயமான காரணங்களுக்காகவே சண்டையிடுவார்கள். அதில் ஈடுபட்ட பின்பு அவ்வளவு சுலபத்தில் பின்வாங்க மாட்டார்கள். ராணுவம், காவல் துறை போன்ற பணிகளில் சேர்ந்து வீர சாகசங்கள் அதிகம் புரியும் நபர்களாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சூரியன் உச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகரின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தகப்பனாரின் ஆரோக்கியமும் நன்கு இருக்கும். ஆயுள் பாவமும் பலத்திருக்கும் தகப்பனாருடனான உறவு முறை சுமூகமாக இருக்கும். மதப்பற்று மிக்கவராக இருப்பர். அரசுத்துறையில் பணி புரிவர். ஆசிரியர், மருத்துவர், காவல் மற்றும் இராணுவத் துறையில் பணியாற்றுவர் என்று குறிப்பிடுகின்றது. 

 பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரக மாலை மேட ராசியில் சூரியன் உச்சம் பெற்று இருந்தால் அதிக யோக பலனையும், வித்யா செல்வமும், கீர்த்தியும், பெருமையும், உத்தியோகப் பலனும், வியாபார லாபமும், புகழும், செல்வமும், மேன்மேலும் பெருகி தனந்தான்யத்துடனே வாழ்ந்திருக்கச் செய்வார்.,

சூரியனும்மேஷத்தி லுச்சமானால்
சொல்லொணாயோகத்தை மிகவேதந்து...

எடப்பாடியரின் ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதியான சனி பகவான் உச்சம் பெற்று குரு பகவானால் பார்க்கப்படுகிறார்.



சனி உச்சம்

அதிர்ஷ்ட ஜோதிடக் களஞ்சியம் சனி உச்சம் பெற்றிருந்தால், அந்த ஜாதகர் பேச்சு வன்மை மிக்கவராக இருப்பர். வசதியுடன் வாழ்வார். தீர்க்காயுள் உள்ளவர். வாழ்க்கையில் முன்னேற்றம், மதிப்பு இருக்கும். தைரியம் மிக்கவர். இரும்பு எந்திரம் தொடர்பான தொழிலில் சிறப்பு உண்டு. கன்னிப் பெண்களிடம் ஆசை மிகக் கொண்டவராக இருப்பர் என்றும் குறிப்பிடுகின்றது. 

 பெரிய சோதிடச் சில்லரைக் கோவை - நவக்கிரகமாலை சனி துலாத்தில் உச்சம் பெற்று இருந்தால் மகா திறமையும், மன தைரியமும், உற்சாகமும் பொருந்தி வித்யாபி விருத்தியும், உத்தியோக மேன்மையும், புகழும், தனந்தான்ய செல்வமும், பெருமையும், பொருள் சேர்க்கையும் புத்திர மித்திராதி களத்திராதி லாபமும் கிடைத்து ஆனந்தமாய் இருக்கச் செய்யும்.

குரு மங்கள யோகம்

மங்களன் எனப்படும் செவ்வாயும், அவரது நண்பரான குருவும் இணைவதாலோ, ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளுவதாலோ, தங்களுக்குள் நான்கு, ஏழு, பத்தில் இருவரும் அமர்ந்திருப்பதாலோ இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒருவரின் குரு செவ்வாய்க்கு கேந்திரத்தில் அமையப் பெறுவது. குருவுக்கு கேந்திரமாகிய 4,7,10ல் செவ்வாய் அமைந்திருந்தால் குரு மங்கள யோகம் உண்டாகிறது. இதனால் பூமி, வீடு, வாகனம் போன்றவை சேரும் யோகம். இந்த யோகம் அமைந்த ஜாதகருக்கு வீடு, மனை நிலபுலன்களால் ஜாதகருக்கு அனுகூலமான பலன்கள் ஏற்படும்.

இந்த அமைப்பால் இயற்கைப் பாபக் கிரகமான செவ்வாய் தன்னுடைய பாபத் தன்மையை இழந்து குருவால் புனிதமடைந்து சுபத் தன்மை பெற்று ஜாதகருக்கு நன்மை செய்வார். இந்த அமைப்பினால் செவ்வாயின் சுப காரகத்துவங்களான விளையாட்டு, ராணுவம், காவல்துறை, மருத்துவம், பூமிலாபம் போன்ற அமைப்புகளில் ஜாதகர் சிறந்து விளங்குவார். மேற்கண்ட இனங்களில் ஜாதகருக்கு நன்மைகளும் இருக்கும்.


குரு பார்வை

எடப்பாடியர் ஜாதகத்தில் குரு பகவான் ருண , சத்ரு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் நீண்ட ஆயுள் , அரசியல் எதிரிகளை வெல்ல கூடிய ஆற்றல் ஆகியவற்றை தருகிறது. 

எடப்பாடியர் ஜாதகத்தில் குரு பகவான் ஆயுள் , மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் இடத்தை பார்ப்பதால் , நீண்ட ஆயுள் உண்டு.

எடப்பாடியர் ஜாதகத்தில் குரு பகவான் ஜீவனஸ்தானமான 10 இடத்தை பார்ப்பதால் பதவி இவரை தேடி வரும் . நீண்ட நாட்கள் பதவியில் அமரும் யோகம் உண்டாகும்

கோச்சார கிரஹ நிலை

எடபடியாருக்கு தற்சமயம் கோச்சாரம் மிக அருமையாக உள்ளது . குரு பகவானும் , சனி பகவானும் 5 ம் இடத்தில் சஞ்சாரம் செய்து வருகிறார்கள். சச யோகம் பெற்ற சனிபகவாநும் , நீசபங்க யோகம் பெற்ற குருபகவானையும் , வெற்றியையும் , செல்வாக்கையும்  அள்ளி தருவார்கள் என்பதில் ஐயமே இல்லை.

நடப்பு தசை புக்தி

புதன் தசை சுக்கிர  புக்தி 10-04-2023 வரை

நடப்பு தசை புக்தி

ரிஷப லக்கினத்திற்கு தன பஞ்சமாதிபதியான  புத பகவான் தசை நடை பெறுகிறது. அதிலும் மாளவியா யோகம் பெற்ற சுக்கிரனின் புத்தி 10-04-2023 வரை நடை பெற இருக்கிறது. ஆகையால் , மிக யோகமான பலன்களை இந்த புத தசை மற்றும் சுக்கிர புத்தி இவருக்கு அளிக்கும் என்பதில் ஐயமே இல்லை

தசை புக்தி நட்சத்திர சாரம்

புத பகவான்  கிருத்திகை நட்சத்திரத்தில் சூர்ய பகவான் சாரம் பெற்று தசை நடத்துகிறார். சுக்கிர பகவான் செவ்வாய் பகவான் மிருக சீரிடம் நட்சித்திர சாரம் பெற்று புக்தி நடத்துகிறார்.

நவாம்சம்

நவாம்சம் இல்லை . ஆகையால் துல்லியமாக எதிர்கால பலன்களை கணிக்க முடியவில்லை.

தமிழ்க முதல்வராக எடப்பாடி மீண்டும் வருவாரா ?  வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவாரா மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்குமா ?   எடப்பாடி யார்  ஜாதகத்தில் பஞ்ச மகா புருஷ யோகம் ஆன மாளவிய யோகம் உள்ளது. ராஜ கிரகமான சூரியன் மற்றும் சனி உச்சம் பெற்றுஉள்ளது.  முதல்வர் பதவி வகிக்க வேண்டுமானால் , சூரியன் மற்றும் சனி கிரகங்கள் உச்சம் பெற்றுஇருப்பது  ராஜ யோக பலன்களை தரும். நிச்சயம் அரசியலில் பெரும் பதவிகள் பெற்று தரும். 

எடப்பாடி ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம்,,யோகினி யோகம் .. குரு மங்கள யோகம், தசை புக்தி வலுவாக உள்ளதால் , நல்ல வலுவான கூட்டணி அமைத்தால் , அவர்தான் அடுத்த தமிழக முதல்வர் என்பதால் எந்த சந்தேகமும் இல்லை

 


1 comment:

  1. சித்திரை அப்பன் தெருவிலே சூரியனுக்கு 9ஆம் வீடு அதிபதி 3ல் கேது உடன் தந்தை சுகம் இல்லை , குரு கேது தனத்திற்கு நல்லது பிள்ளைகளால் எந்த பிரோயோஜனம் இல்லை அவர்களால் சமுத்தில் அவமானம் தான் மிஞ்சும் புதன் சுக்ரன் நல்லது செல்வம் செல்வாக்கு சந்திரன் 5ல் 3க்கு உடையவன் அவனை சனி பார்க்கிறான் மறுபடுபாடியும் புத்ரா தோஷம் . இங்கே சனி நீச்சம் அனால் குரு பார்வையால் சரியாகிவிட்டது இல்லை என்றால் உடல் உழைப்பு தொழில்தான் அமைந்து இருக்கும் . இந்த புதன் திசை நன்றாக உள்ளது சனி தசை தான் இறுதி ..

    ReplyDelete