Search This Blog

Saturday, May 15, 2021

பாண்டிச்சேரி வில்லியனூர் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமி ஜீவ சமாதி

 

பாண்டிச்சேரி வில்லியனூர் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமி ஜீவ சமாதி

ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள் புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் சுல்தான் பேட்டை திருப்பத்தில் வலப்புறத்தில் ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சமாதி மேடையில் மீதுள்ள மாடத்து கற்பக அறையில் இராம பரதேசி சுவாமிகளின் திரு உருவம் அழகாக செதுக்கப்பட்டு உள்ளது.

பௌர்ணமி பூஜை, வியாழக்கிழமை குரு பூஜை

இவர், பாம்பு கடித்து விஷம் தலைகேறி இறந்து கிடந்த விவசாயின் உடலை "ராம் ராம்" என்று அழைத்து அவனை தூங்கி எழுந்தவர் போல எழச்செய்தார். இங்கே பௌர்ணமி பூஜை, வியாழக்கிழமை குரு பூஜை ஆகியவை சிறப்பாக செய்யபடுகின்றன

பரப்பிரும்ம உபதேசம்

ஒரு நாள் அவர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. இவர் தன் இருப்பிடம் விட்டுக் கொஞ்சம் தூர காலாற நடந்து வரும் போது, அங்கு ஒரு முதியவரைச் சந்தித்தார், அந்த முதியவர் ஆசையுடன் இவரை அழைத்தார். “என்ன செய்வது என்று தெரியாமல் இப்படிச் சுற்றிக் கொண்டு இருக்கிறாயே! என் அருகே வா, உனக்கு ஞான ஒளி கிடைக்கும் நேரம் வந்து விட்டது. உனக்குப் பரப்பிரும்ம உபதேசம் செய்கிறேன்” என்று கூறி அவர் காதில் ஒரு மந்திரத்தை உச்சரித்தார்.



வில்லியனூர் திருக்காமீசர் ஆலயம்

பின் அவர் உடல் முழுவதும் தடவினார். உச்சந்தலையில் முத்தம் கொடுத்தார், பின், “நீ பெரும் துறவியாய் வருவாய், போய் வா” என்று சொல்லி விட்டு நகர்ந்து சென்று விட்டார். ரமண மகரிஷியைப் போல் அப்போது அவருக்கு பதினாலு வயதுதான். அன்றைய தினத்திலிருந்து அவர் மாறினார். வெறும் கோவணம் கட்டிக் கொண்டு பசி தாகம் மறந்து தூக்கமில்லாமல் தியானத்தில் அமர்ந்தார். இவர் சென்று பூஜை செய்த ஊர் வில்லியனூர். திருக்காமீசர் என்ற ஈச்வரனும், கோகிலாம்பாள் என்ற திரு நாமமுடைய அம்பாளும் அருள் புரியும் கோயில்தான் அது.

ஜீவ சமாதி

சுவாமிகள் 1838-வது வருடம் மரங்கள் அடர்ந்த சோலை நடுவில் ஜீவபீடக் குழி பறித்து அதில் தான் அமர்ந்த பின், அதை குச்சிகளால் நிரப்பி, பின் மண் போட்டு மூடும்படி கேட்டுக் கொண்டார்.


புதுச்சேரியில் பிரஞ்சு ஆட்சி

புதுச்சேரியில் பிரஞ்சு ஆதிக்கம் வந்த போது, அந்த இடத்தில் ரயில்வே லைன் அமைத்து, அதற்குப் பின் ஒரு கட்டிடம் கட்டுவதற்காக கூலித் தொழிலாளி கடப்பாரையினால் அந்த இடத்தைத் தோண்ட, இரத்தம் பீறிட்டது. தொழிலாளிகள் பயந்து வேலையை நிறுத்தி விட்டனர். பின் மேலதிகாரிகள் வந்து பார்த்த போது, அங்கே ஒரு ரிஷியைப் பார்த்தனர். அவரிடத்திலிருந்து “ராம்ராம்” என்ற ஒலி கேட்டது. அவரது உடல் தங்கம் போல் ஜொலித்தது. எல்லோரும் அவரை வணங்கினர். பின் மருத்துவர் வந்து பரிசோதித்துப் பார்க்கையில் நாடித்துடிப்பு எல்லாம் ஒழுங்காய் இருந்ததாம்.

ஸ்ரீராம் பரதேசி சுவாமி ஜீவபீடம்

அவரை அப்படியே தூக்கி ஒரு கருங்கல் பீடம் அமைத்து அதற்குள் அமர்த்தி விட்டனர். பின் கோபுரம் கட்டி அற்புதமானதொரு ஜீவபீடத்தையும் ஏற்படுத்தி விட்டனர். ஜீவபீடம் உட்புறம் எட்டுக் கோணங்கள் கொண்டது, உள்ளே “மஹாத்மா ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் சாலிவாஹன சஹாப்தம் 1868″ என்ற கல்வெட்டு உள்ளது. கோயிலில் இவருக்கு ஒரு சிலை உள்ளது. நீண்ட ஜடாமுடி, தாடி, நீண்ட கைகள் , வலக்கால் மடக்கி இடக்கால் தொங்கும் நிலை. காந்தச்சுடர் கண்கள், அழகான மேனி, அவரது திருக்கோலத்தைப் பார்த்தால் நம் கை தானாகவே கூப்பி வணங்க முற்படுகிறது,



இன்றும் பௌர்ணமியன்று நடமாடுகிறார்

அங்கே அவ்வளவு சக்தி நிலவுகிறது. இவரைத் தரிசித்தால் பல பிணிகள் அகலுகின்றன. சரும வியாதி நீங்குகிறது. விஷக்கடிகளுக்கு இவரது விபூதி மருந்தாகிறது. பௌர்ணமியன்று அவர் வெளியே வந்து அந்தக் கோயிலை வலம் வருவதாக அங்கிருக்கும் மக்கள் சொல்லுகின்றனர்.

எப்படி செல்வது ?

ஸ்ரீராம் பரதேசி ஸ்வாமிகளின் தபோவனம் புதுச்சேரி வில்லியனூர் சாலையில் சுல்தான் பேட்டை அருகில் மூலக்கடை என்ற இடத்தில் இருக்கிறது.



ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295

No comments:

Post a Comment