ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
ராகு தோஷம் நீக்கும் சென்னையில் உள்ள குன்றத்தூர் திரு நாகேஸ்வரர் ஆலயம்
ஆமே கிரகம் ஏழுமனை
அமர்ந்தால் வீணை யோகம்இனி
தாமே நிபுணன் எழிலுடையவன்
சப்த கீத பிரியமுலான்
தோமில் நாலேழ் ஒன்றிலுற
சொல்லும் அதி யோகபலன்
மாமேல் அரச பிரதாபி
வந்தே ஆண்டு நூறியிருப்பான்
மிக அபூர்வமான வல்லகி யோகம் அல்லது வீனா யோகம்
ஒருவரது சுய ஜாதகத்தில் ராகு, கேது கிரகங்களை தவிர்த்து மற்ற ஏழு கிரகங்களும், ஏழு ராசிகளில், ஒரு ராசிக்கு ஒரு கிரகம் வீதம் இருப்பது வல்லகி யோகத்தை ஏற்படுத்துகிறது. மிக அரிதான யோகமான இந்த யோகத்தில் பிறந்தவர்கள் பெருந்தன்மையும், தன்னம்பிக்கையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நற்குணங்கள் காரணமாக, பல வகை நன்மைகளை வாழ்வில் பெறுவார்கள். சுய முயற்சியால் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்வதுடன், தாம் வசிக்கும் பகுதியில் பிரபலம் பெற்றவர்களாக இருப்பார்கள். பெற்ற அன்னையிடமிருந்து பல உதவிகளை பெறும் யோகமும் இவர்களுக்கு உண்டு. திருமண வாழ்க்கை இனிமையாக அமையப்பெற்றவர்களில் இவரும் ஒருவர்.
உழைப்பால் உயர்ந்து, வீடு, வாகனம், அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து என்று வளர்ச்சி காண்பார்கள். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் கலைத்துறையில் ஈடுபாடு கொண்டதால், சிலர் இசைக்கலைஞர்களாகவும் இருப்பார்கள். சிலர் நாடகம், திரைப்பட துறைகளில் ஈடுபட்டு பொருள் மற்றும் புகழ் பெறுவார்கள்.
ஜாதகத்தில் ராகு பகவானால் ஏற்படும் தோஷம்
ஒருவரின் ஜென்ம ஜாதகத்தில் லக்னம், 2, 7 , 8 ஆகிய இடங்களில் ராகு கிரகம் இருக்குமேயானால் அந்த ஜாதகருக்கு ராகு தோஷம் ஏற்படுகிறது. ஜாதகத்தில் மேற்கூறிய 1, 2, 7, 8 ஆம் வீடுகளில் ராகு கிரகம் இருந்தாலும், அந்த வீடுகள் ராகு கிரகதிற்கு உச்ச வீடாகவோ, அல்லது நட்பு வீடாக இருக்கும் பட்சத்தில் ராகு தோஷம் இல்லை என்பது தெளிவு. ஆனால் மேற்கூறிய வீடுகள் ராகு கிரகதிற்கு நீச்ச வீடுகளாக இருக்கும் பட்சத்தில் ராகு தோஷத்தினால் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
தோஷ சாம்யம்
ஆண் அல்லது பெண் ஜாதகத்தில் லக்கினம், 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு கிரகம் இருந்து, ராகு – கேது தோஷம் ஏற்பட்டிருக்குமானால் இதே போன்று ஜாதக அமைப்பை கொண்ட ஆண் அல்லது பெண் வரனை ராகு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் செய்வதால் ராகு தோஷ நிவர்த்தி உண்டாகிறது.
எந்த மாதிரியான கெடுபலன்கள் ஏற்படும் ?
1.எதிர்பாராத பொருள் இழப்பையும், பூர்வீக சொத்துகளை இழக்கும் நிலையும், உடல் நலக் குறைவு, விபத்து போன்றவையும் ஏற்படும்.
2.வேலையில் பிரச்னைகளைக் கொடுக்கும். சகோதரி, சகோதரர்களுக்குள் பிரச்னை, தேவையான சமயத்தில் உதவிகள் கிடைக்காமை, துணிந்து எதையும் செய்யமுடியாமல் இருப்பது போன்ற பலனைத் தரும்
3.புத்திர தோஷம் ஏற்படும் குழந்தை பிறவாமை அல்லது குழந்தை பிறந்து இறந்து போக கூடிய நிலை ஏற்படும். . நண்பர்கள், பழகியவர்கள்கூட விரோதியாவார்கள். எடுத்த காரியங்களில் தடை உண்டாகும்.
4.எதிரிகளால் பிரச்னை, சிறைவாசம், வீண் விரயங்கள், அரச தண்டனை போன்ற பலன்களைத் தரும்
5.கணவன் மனைவிக்குள் பிரச்னை ஏற்பட்டு விவாகரத்து வரை செல்லும், சிலர் இரண்டாம் திருமணம் செய்து கொள்ளாமல் தெய்வ திருப்பணியில் ஈடுபடுவதும் உண்டு
6. தந்தை மகன் விரோதிகளாக மாறுவர். தந்தையின் சொத்து இவர்களுக்கு கிடைக்காது.
7.தொழிலில் தடை , அலுவலகங்களில் அவமரியாதை ஏற்படும்
8. திருமண தடை , சரியாக வேலை வாய்ப்பு அல்லது தொழில் அமையாமை அல்லது வேலை தொழிலில் எபோதும் பிரச்சனை
ராகு கிரக தோஷ பரிகார பூஜை
ஜாதகத்தில் ராகுவால் மட்டுமே தோஷம் ஏற்பட்டு பாதிப்பிற்குள்ளாகும் நபர்கள் வெள்ளிக் கிழமைகள் மற்றும் ராகு திசை, ராகு புக்தி நடைபெறும் காலங்களில், ராகு காலத்தில் விரதம் அனுஷ்டித்து, ராகு பகவானுக்கு மந்தாரை பூக்களால் அர்ச்சனை செய்து, உளுந்து கொண்டு செய்யப்பட்ட பலகாரங்களை நைவேத்தியம் செய்து ராகு காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபித்து வழிபடுவது, ராகு கிரக தோஷ பாதிப்புகளை குறைக்க செய்யும் சிறந்த பரிகாரம் ஆகும்.
ராகு தோஷம் நீக்கும் சென்னையில் உள்ள குன்றத்தூர் திரு நாகேஸ்வரர் ஆலயம்
பெரிய புராணத்தை இயற்றிய சேக் கிழாரின் அவதாரத் தலமான, குன்றத்தூரில் இருக்கும் திரு நாகேஸ்வரர் கோவில் ராகு பரிகாரத் தலமாக விளங்குகிறது. ராகுவால் வழிபடப்பட்டதால் இத்தலத்து ஈஸ்வரருக்கு ‘திருநாகேஸ்வரர்’ என்பது பெயராகும். இந்த ஆலயத்தில் ராகுவுக்குரிய வழிபாடுகள் விசஷமாக செய்யப்படுகிறது. அம்பிகைக்கு காமாட்சி என்று பெயர். மூலவருக்கு வழங்கப்பட்ட பழைய பெயர் ‘சடையாண்டீஸ்வரர்’ என்பதாகும்.
சர்ப்ப சாந்தி பரிகார ஹோமம்
ராகு பாதிப்பு உள்ளவர்கள், ராகு திசை அல்லது புத்தி நடப்பில் இருப்பவர்கள், இத்தலத்து சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபடுவது வழக்கம். சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப சாபம் போன்றவற்றால், திருமணத்தடை மற்றும் ஆயுள் பாதிப்பு உண்டாகலாம். அதற்கு ராகு கால வழிபாடு செய்வது அவசியம். சர்ப்ப சாந்தி பரிகாரமாக ஹோமமும் செய்து நல்ல பலன்களை பெறலாம்.
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295
No comments:
Post a Comment