வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம் நீக்கும் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில்
 
வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம் நீக்கும் திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில்
போகர் தரும் முக்கியமான வாஸ்து குறிப்புக்கள்
மனை பார்க்க இலக்கினமே சுத்தியாகும்
மனை போட இரண்டு ஏழாம் இடமே சுத்தம்
மனை தனக்கு மரம் வெட்ட மூன்றே சுத்தம்
மரம் தச்சு வேலை செய்ய நாலே சுத்தம்
மனை மாண வாசற்கால் நிறுத்த ஐந்து
வகை உத்திரம் போட ஆறாம் தானம்
மனை கூடம் குலம் தழைக்க ஏழே சுத்தம்
வடிவேலர் இந்நூலைக் குறித்திட்டாரே
குறித்து அலகு கை சாத்தி வைக்க எட்டாம்
குறுக்கும் பட்டைக்கு ஒன்பதாம், ஓடுபத்தாம்
குறித்து அலகு கை சாத்தி வைக்க எட்டாம்
குறுக்கும் பட்டைக்கு ஒன்பதாம், ஓடுபத்தாம்
பெருக்க முடன் இவ்வகையாய் அமர்ந்ததானால்
பேருலகில் மன்னருக்கு மன்னர் ஆவர்
பாடல் விளக்கம்
* வீட்டுக்கான மனையைப் பார்க்கச் செல்லும் நேரத்தில் லக்னம் சுத்தமாக அமையவேண்டும்.
* முதன்முதலாக வேலையைத் துவங்குவதற்கு, 2 மற்றும் 7ம் இடங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.
* வீட்டுக்குத் தேவையான மரங்களை வெட்டி எடுத்துவரவோ அல்லது கடை யில் வாங்கச் செல்லும்போதோ 3ம் இடம் சுத்தமாக இருத்தல் வேண்டும்.
* தச்சு வேலை ஆரம்பிக்க 4ம் இடமும், தலைவாசல் நிலை நிறுத்துவதற்கு 5ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
உத்தரம் பதித்தல் போன்ற விஷயங்களைச் செய்ய 6ம் இடமும், வீட்டின் உள் கட்டமைப்பு வேலைகள் ஆரம்பிக்க 7ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
* மேற்புறம் கூரை அமைப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கு 8ம் இடமும், மேலே குறுக்குப் பட்டைகள் வேலை ஆரம்பிக்க 9ம் இடமும், ஓடு பதிக்க (அ) ஆகாயம் மூடுவதற்கு 10ம் இடமும் சுத்தமாக இருக்க வேண்டும்.
தலைவாசற்கதவு தவிர மற்ற வாயில்களுக்கு கதவு நிலைகால் நிறுத்த 11ம் இடம் சுத்தமாக இருக்கவேண்டும்.
* திங்கள் மற்றும் புதன் கிழமை களில் வீடு குடிபுகும்போது, 12ம் இடம் சுத்தமாக இருக்கும் லக்ன அமைப்புடன் செய்தால், மன்னனுக்கு இணையான சீரும் சிறப்பும் மிக்க வாழ்க்கை அமையும் என்பது போகர் வாக்கு.
திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோவில் வாஸ்து தோஷம், முன்னோர்களின் சாபம், வீடு பிரச்சனை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் தலமாக உள்ளது.
திருவிற்குடி வீரட்டானேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 74ஆவது சிவத்தலமாகும். அட்ட வீரட்டத் தலங்களுள் ஒன்றாகும். இத்தலத்தில் சலந்தரன் சங்கரிக்கப்பட்டான் என்பதும் அவன் மனைவி பிருந்தையைத் திருமால் துளசியாக ஏற்றார் என்பதும் தொன்நம்பிக்கை.
இந்த கோவில் மூலவர் “வீரட்டானேஸ்வரர்.” அம்மன் “பரிமளநாயகி.” பிருந்தை என்னும் சொல்லுக்கு “துளசி” என்பது பொருள். கற்பிற்சிறந்த அப்பெண்மணியின் நினைவாக, துளசி தான் இங்கு தல விருட்சம். இது ஒரு வாஸ்து தோஷ நிவர்த்தி தலம்.
வீடு கட்டும் முன் ஏதும் பிரச்சனை என்றால், இங்கிருந்து கல் எடுத்து சென்று, அந்த கல்லை வைத்து கட்டினால் தோஷ நிவர்த்தி கிடைக்கும்.
முன்னோர்களின் சாபத்திற்கு ஆளாகி, அவர்கள் இறந்து போய் இருந்தால், இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும்.
அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில்
திருவிற்குடி
திருவிற்குடி அஞ்சல்
வழி கங்களாஞ்சேரி
நாகப்பட்டிணம் வட்டம்
ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 7904719295
 
 
 
          
      
 
  
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment