Search This Blog

Saturday, January 15, 2022

சகட யோகம் ஜாதகத்தில் உள்ள யோகங்களை குறைக்குமா ? என்ன விதி விலக்குகள் ?

 சகட யோகம் ஜாதகத்தில் உள்ள யோகங்களை குறைக்குமா ? என்ன விதி விலக்குகள் ?

சகடயோகம் - ஜாதக அலங்காரம் 

அகடிலாமன்னனுக்கு ஆறுஎட்டொடு வியத்தில் 

இகடிலாமதி எய்தி இருந்திடின் 

சகட யோகம் இதில் பிறந்தார்க்கெலாம் 

விகட துன்பம் விளையும் அரிட்டமே. 

பாடலின் பொருள் 

குற்றமில்லாத குரு நின்ற ராசிக்கு ஆறாமிடமாகிய  ரோகத்தானத்திலாவது , எட்டாமிடமாகிய ஆயுள் தானத்திலாவது , பன்னிரண்டாம் இடமாகிய விரயத்  தானத்திலாவது , வளர்பிறைச்சந்திரன் சென்று இருப்பாரானால் , சகட யோகம் அல்லது தோஷம்.

அவயோகம் 

இவ்வாறான கிரகங்களின் அமைப்பில் பிறந்தவர்களுக் கெல்லாம் யோகம் என்று சொல்லப்படும் நிலையில்லாத அவயோக யோகபலனாக , மிகுந்த துன்பங்களெல்லாம்  ஏற்படும் . மரணபயமும் உண்டாகும் என்பதாம் . 

ஏற்ற தாழ்வு

சகட யோகமானத் ஏற்ற தாழ்வுகளை அளிக்கு மேயன்றி  தோசாசத்தையோ நஷ்டத் தையோ அளிக்காது என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.



 பலதீபிகை

பலதீபிகையில், மந்தரேஸ்வரர் , ‘சகட யோகத்தில் பிறந்தவர்கள் அனைத்தையும் இழந்தால் கூட அவற்றை மீண்டும் பெற்றுவிடுவார்கள் ‘ – எனக் குறிப்பிடுகிறார்

வராஹிமிகிரர்

வராஹிமிகிரர் தனது பிருகத் ஜாதகத்தில் சூரியன் முதல் சனிவரையுள்ள கிரகங்கள் 1 ஆம் இடமென்னும் இலக்னத்தில் இருந்தால் சகடயோகம் ஏற்படும் என்று குறிப்பிடுகிறார். சகடயோகம் உள்ள ஜாதகர் நோயல் வாடுவார், திருமண வாழ்வு போராட்டக்களமாக இருக்கும்.. சிலர் அடிமைத் தொழில் செய்வர் என்று கூறுகிறார். 

பராசர முனிவர்

 பராசர முனிவர்  1 மற்றும் 7 ஆம் இடங்களில் அனைத்தும் கிரகங்களும் இருக்குமானால் சகடயோகம் ஏற்படும் என்கிறார். ஆனால் குருவோ சந்திரனோ மிதுனத்திலோ, தனுசுவிலோ, கன்னியிலோ, மீனத்திலோ இருந்தால் நளயோகம் அல்லது பட்சியோகம் எனக் குறிப்பிடுகிறார்.

 ஜாதகபாரிஜாதம் 

குருவும், சந்திரனும் இலக்ன கேந்திரத்தைத் தவிரவும், மற்ற இடங்களில் 6/8  சஷ்டாஷ்டமாகவும் அமைந்தால் சகட யோகம் ஏற்படும் – எனக் குறிப்பிடுகிறது.இந்த யோகத்தில் பிறந்தவர்கள், அரசனாயினும் அவமானம் அடைவான், உடல் வலிமை அற்றவனாகவும், எப்போதும் கவலை தோய்ந்த முகமுடையவனாகவும் காணப்படுவான். எந்தவொரு வேலையையும் அவனால் முடிக்க முடியாது , என்றும் குறிப்பிடுகிறது.

சுகர் நாடியில் –

 சந்திரனுக்கு 6, 8, 12 இல் குரு இருக்க சகடயோகம் எனக் குறிப்பிடுகிறது. கோசார ரீதியிலும் 6, 8, 12 இல் அசுபக் கிரகங்கள் வரும் போது மேற்சொன்ன தோஷம் அதிகமாகும். அதன் காரணமாக துரதிர்ஷ்ட நிலை ஏற்படும்.

சகட யோகம்

குருவுக்கு 6-8-12-ல் சந்திரன் இருந்தால் சகட யோகம் பயம், பொருள் சேதம், நஷ்டம் ஏற்படும்.

யாரடா தம்பி கோளய் ஆரானுக்கு கீரார் எட்டில்

பாரடா நிலவு நிற்க பயனிலா சகடயோகம்

கூறடா அழியும் செல்வம் குலப்புகழ் உற்றாரபெற்றொர் வேறடா வெறுப்பர் துண்பம் வேரூன்றும் வாழ்நாளெல்லாம் கதித்ததோர் ஆறெட்டாகில் கடினமாய் பலன் அற்பம்

புலிப்பாணி ஜோதிடம் 300

சீரே நீகுருவுக்கு வியமாறெட்டில்

செழுமதியும் மதிலிருக்க சகடயோகம்

ஆரே நீ அமடுபயம் பொருளும் நஷ்டம்

அப்பனேபேர் விளங்கும நிதியுமுள்ளோன்

கூறே நிகுருவுக்குகேந்திரகோணம்

குழவிக்கு நிதி கல்வி மெத்தவுண்டு

பாரே நீபோகருட கடாக்ஷத்தாலே

பாடினேன் புலிப்பாணி பதமாய்த்தானே

குருபகவானுக்குப் பன்னிரண்டு, எட்டு, ஆறு ஆகிய இடங்களில் சிறந்த சந்திர பகவான் இருக்க ஏற்படுவது சகடயோகம் ஆகும். அதனால் ஏற்படும் பலன்கள் என்னவெனின் அமடு, பயம், பொருட்சேதம், எனினும் நற்கீர்த்தியே வாய்க்கும். நிதியும் சிறந்து காணும்.

சகட தோஷம் எப்பொழுது யோகமாக மாறுகிறது ? சகட யோகத்திற்கு விதி விலக்கு 

ஜோதிட மார்த்தாண்டம் – 

எனும் நூலில் சந்திரனுக்கு 6, 8, 12 இல் குரு இருக்க சகடயோகம் ஏற்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது . நவாம்சத்தில் கூட சகடயோகம் ஏற்பட ஜாதகனுக்கு பாதிப்பு இருக்கும். நவாம்சத்தில் குரு, சந்திரன் இணைய அல்லது பரஸ்பர கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருந்தால் சகடயோகம் அடிபட்டுவிடுவதால், செல்வம் சேரும்.

படுஜாதகம் – 

எனும் நூலில் சகடயோகத்தில் இருக்கும் குருவும் , சந்திரனும் தத்தமது சுயவீடுகளில் அல்லது உச்ச வீடுகளில் இருந்தால் சகடயோகம், இராஜ யோகமாக மாறிவிடுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவகேரளீயம் – 

குருவுக்கு 6, 8 இல் சந்திரன் இருக்க அதைச் செவ்வாய் பார்க்குமானால் சகடயோக தோஷம் நீங்கிவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷட்பலம்

வளர்பிறைச் சந்திரன் குருவுக்கு 6, 8 இல் இருந்தால் அல்லது குரு சந்திரனைவிட  ஷட்பலம் அதிகம் பெற்றிருந்தால் இந்த சகட தோஷம் யோகமாக மாறிவிடும் .

கர்கீய ஹோரை

சந்திரன், சுக்கிரனுடன் இணைந்திருந்தாலும், குரிவும், சந்திரனும் பரஸ்பர பரிவர்த்தனை பெற்றாலும் மற்றும் குரு மகரத்தில் நீசம் பெற்று அதற்கு 6, 8 இல் சந்திரன் இருக்குமானால் சகடயோகம் நற்பலன்களை  அளிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு ஜாதகத்தில் சகட தோஷம் இருப்பதால் மட்டும் அந்த ஜாதகம் யோகத்தை அளிக்காது என்று முடிவு எடுக்க முடியாது.  மேற்சொன்ன விதிவிலக்குகள் இருந்தால் சகட தோஷம் யோகத்தை ஜாதகருக்கு கண்டிப்பாக அளிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 

உங்கள் ஜாதகத்தை விரிவாக பார்க்க 

ஜாமக்கோள் ஆரு டம் மூலம் பிரசன்னம் பார்க்க 

ஜோதிட சாகரம் அனுஷம் ஆர் வீ சேகர் 79047 19295


 

No comments:

Post a Comment