ஜோதிடத்தில் 7ம் இடம்
என்பது மனைவி, தொழில், கூட்டாளி ஸ்தானம் என்று குறிப்பிடப்படுகிறது.
அதன் காரணமாக திருமண
பொருத்தத்தைப் பார்க்கும் போது இந்த 7ம் இடம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
7ம் இடத்தில் அமைந்துள்ள கிரகத்தைப் பொறுத்து ஜாதகருக்கு எப்படிப்பட்ட மனைவி அமைவார்,
எப்படிப்பட்ட தொழிலில் பங்குதாரர் அமைவார் என்பது தெரிய வரும்.
7ல் சனி பகவான் அமையப்
பெற்ற ஜாதகர், தன் குலத்திற்கு மாறுபட்ட குணமுடைய கணவன் / மனைவி அமையும். இத்தகைய வாழ்க்கையை
அவர் துறவற வாழ்க்கைக்கு சமாக இருக்கும்.
பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு
சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல
தசை நடந்தால் சிக்கல் குறையும்.
7ல் சனி - ஆண்மை குறைபாடு
, காமத்தில் இயற்கைக்கு மாறான வேட்கை ஆகியவற்றை தரும்
7ல் சனி புணர்பூ தோசம்
என்பதால் திருமணம் தடைகள் தாமதங்கள் ஏற்படும்.
இல்வாழ்வில் திருப்தியற்ற
நிலை ஏற்படும்.
7ல் சனி -திருமண தடை,
தாமத திருமணம், பொருந்தாத வாழ்க்கை துணை, மகிழ்ச்சியற்ற இல்வாழ்க்கை இவற்றை தருவதே.
7ல் சனி அஸ்தமனம்
– மிகவும் கொடுமை. ஆயுள் பலமில்லை. வீட்டைப்பற்றி நினைக்கவே அஞ்சுவார்கள்.
எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது
இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
சனி – சூரியனுக்கு 7ல் சனி – இருதயநோய்
7ல் சனி<- 1ல் சூரியன் – களத்திரநாசம்
கடக
லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு
மகரத்தில் ( களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில்
) அமரும் சனிபகவான் ( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும்
கூட ) சச யோகம்
அமையப்பெற்று இருந்தாலும் களத்திர பாவகத்தை 100 சதவிகிதம் கெடுத்து விடுவார்
சிம்ம லக்கின லக்கின அமைப்பை சார்ந்த அன்பர்களுக்கு கும்பத்தில்
(
களத்திர பாவகத்திர்க்கு உட்ப்பட்ட பாகையில் ) அமரும் சனிபகவான்
( சனி இங்கு ஆட்சி பெற்று அமர்ந்தாலும் கூட
) சச யோகம்
அமையப்பெற்று இருந்தாலும்
களத்திர பாவகத்தை 100 சதவிகிதம்
கெடுத்து விடுவார்,
காலத்திரஸ்தானமான
7ம் இடத்தில சனி வக்கிரம்
அடைந்து காணப்பட்டால் - திருமண தாமதம் , தாழ்வு மனப்பான்மை , இல்லற வாழ்வில் திருப்தி
அற்ற நிலையை தரும்
ஜாதகரின் குடும்ப ஸ்தானம் நல்ல நிலையில் இருக்க வேண்டும்
ரிஷப லக்னம்
ரிஷப லக்னத்தை எடுத்துக்
கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். விருச்சிகத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன.
அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.ஏனென்றால் அனுஷம்
சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். ஆனால் ரிஷப லக்கினத்திற்கு
9ம் அதிபதியான சனி பகவான் பாதகாதிபதி ஆவார் . அவர் 7 ம் இடத்தில அமர்ந்தாள் இல்லவாழ்வு
சுரப்பதில்லை
உதாரண ஜாதகம்
துலா லக்கினம் -
அதி யோககாரகர் ஆன சனி பகவான் காலத்திரஸ்தானமான 7ம் இடத்தில நீச்சம். மேலும் குடும்பம்
, மற்றும் காலத்திரஸ்தானாபதி யான செவ்வாய் 10 ம் இடமான கடகத்தில் நீச்சம். சூரியன்
செவ்வாய் சேர்க்கை இணைந்து உள்ளனர். . இடு கதிர் செவ்வாய் எங்கு இணைந்து நின்றாலும்
இரு தாரம்தானே என்கிறது பாடல். இந்த ஜாதகருக்கு
இல்வாழ்வில் பல பிரச்சனைகள் ஏற்பட்டது. விவாகரத்து , வழுக்கு போன்றவற்றால் பாதிப்பு.
இரண்டாம் திருமணம். அதிலும் பிரச்சனைகள் 12ல் கேது மற்றும் சந்திரன் இணைவு. சந்தேக
மனப்பான்மை. . 12ல் கேது இருப்பதால் , லௌகீக வாழ்க்கையில் ஈடுபாடு இல்லை.
மேஷ லக்னத்திற்கு7இல் சனி
மேஷ லக்னத்திற்கு
7இல் சனி உச்சம் பெற்று
இருந்தால் சச யோகத்தை
தந்தாலும் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். மேஷ லக்கினத்திற்கு சனி பகவான் பாதகாதி ஆவர்.
அவர் களத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமைந்தால் , இல்லறவாழ்வே போராட்டமாக இருக்கும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், , அவமதிப்புகள்,
நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.ஜாதகத்தில் மேஷ லக்னத்திற்கு 7 ம்
இடமான களத்திர ஸ்தானத்தில் பாவ கிரகமான சனி கிரகம் இருப்பவர்கள் இந்த பாதாள சனீஸ்வரரை
வழிபடுவது சனிகிரகத்தினால் ஏற்படும் கெடுதல்களுக்கு மிகச்சிறந்த பரிகாரமாகும்.
பாதகாதிபதி கேந்திரங்களில் அமரக்கூடாது. திரிகோணம் ஏறினால் யோகத்தை
கொடுப்பார் என்று சொல்கிறார் புலிப்பாணி முனிவர்.
புலிப்பாணி பாடல்
கேளப்பா மேடத்தில்
செனித்தபேர்க்கு
கெடுதிமெத்த செய்வனடா கதிரொன்பிள்ளை
ஆளப்பா அகம்பொருளும் நிலமும்ஈந்தால்
அவன்விதியும் குறையுமடா அன்பாய்கேளு
கூனப்பா கோணத்தில் இருக்கநன்று
கொற்றவனே கேந்திரமும் கூடாதப்பா
தானப்பா போகருட கடாஷத்தாலே
தனவானாய் வாழ்ந்திருப்பன் திசையிற்சொல்லே
. 7ல்
சனி - குரு சேர்க்கை அல்லது பார்வை
7ல் சனி இருந்து அதனுடன்
குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும்.
இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும்
இறுதியில் இணைந்து விடுவ
பாதாள சனி
பாதாள
சனீஸ்வரர்
கும்பகோணத்திலிருந்து
மயிலாடுதுறை செல்லும் வழியில் உள்ள குத்தாலம் என்னும் கிராமததில் சோழீஸ்வரர் திருக்கோவில்
உள்ளது
7ல் சனி இந்த கோயிலில்
உள்ள பாதாள சனி பகவானை வழிபட்டால் , நம் துயரங்கள் அடி பாதாளத்திற்கே சென்று விடும்
என்பது ஐதீகம்.
இக்கோவிலில் அடி காணமுடியாத பாதாள சனீஸ்வரர்
எழுந்தருளியுள்ளார்.
இவரை அமிர்தகலச சனீஸ்வரர் என்றும் அழைப்பர்.
இவர் சுயம்புமூர்த்தியாக பாதாளத்தில் இருந்து
வந்தவர்.
இவரது பீடம் பழுது பட்டிருந்ததால், திருப்பணி
செய்வதற்காக சனி பகவானின் விக்கிரகத்தை அகற்று வதற்கு பீடத்தின் அடியில் பள்ளம் தோண்டினார்கள்.
சுமார் பதினைந்து அடி வரை தோண்டியும் பீடத்தின்
அடிப் பகுதியைக் காண முடியாததால் அந்த வேலையை அப்படியே விட்டுவிட்டார்கள்.
அடி காணமுடியாத நிலையில் அப்படியே ஒழுங்குபடுத்தி
சீர்செய்தார்கள்.
பாதாள சனி பகவான் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில்
அமைந்துள்ளார்.
இரண்டு கரங்களுடன் பாதாள சனி பகவான் நின்ற நிலையில்
கைகூப்பிய வண்ணம் காட்சி தருகிறார்.
இறைவனை நோக்கி கும்பிட்ட நிலையில் காணப்படும்
இவருக்கு காக்கை வாகனம் கிடையாது.
கூப்பிய கைகளுக்குள் அமிர்த கலசம் உள்ளது.
இவரை "பொங்கு சனி' என்றும் சொல்வர்.
சனி பகவானை வணங்கும்போது நேரிடையாக அவரைப் பார்க்காமல்,
சற்று பக்கவாட்டில் நின்று வழிபட வேண்டும் என்று சாஸ்திரம் சொல்லும்.
ஏனெனில், சனியின் பார்வை நேரிடையாக நம்மீது படுவது
மேலும் துன்பத்தைக் கொடுக்கும் என்பர்.
ஆனால், இங்கு எழுந்தருளியுள்ள பாதாள சனீஸ்வரரை
நேரிடையாக நின்று வழிபடலாம் என்கிறார்கள்.
கைகளில் அமிர்த கலசம் இருப்பதால் நமக்கு அமிர்தமான
வாழ்வினை வழங்குவார் என்பது நம்பிக்கை.
இவரை வணங்கினால், நம்முடைய பாபம், சனிக் கிரகத்தின்
தோஷம் போன்றவை பாதாளத்திற்கே போய்விடுமாம்.
அதனாலேயே இவர் பாதாள சனி பகவான் எனப்படுகிறார்.
பொதுவாக லக்னத்திற்கு 7இல் சனி இருப்பவர்களுக்கு
சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல
தசை நடந்தால் சிக்கல் குறையும்.
அதிலும் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால்
வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத்
தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.
7ல் சனி நின்ற ஆணுக்கு பல பெண்கள் மீது இச்சையும்,
அதிக வயதுடைய பெண்களுடன் உடல் உறவும், விபரீத புணர்ச்சிப் பழக்கங்களும் உண்டாகும்.
மேலும் எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து
சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக
பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
எனவே ஜாதகத்தில் மேஷ லக்னத்திற்கு 7 ம் இடமான
களத்திர ஸ்தானத்தில் பாவ கிரகமான சனி கிரகம் இருப்பவர்கள் இந்த பாதாள சனீஸ்வரரை வழிபடுவது
சனிகிரகத்தினால் ஏற்படும் கெடுதல்களுக்கு மிகச்சிறந்த பரிகாரமாகும்.
சனிக்கிழமை வழிபாடு
சனிக்கிழமைதோறும் இந்த
பாதாள சனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment