கால
சர்ப்ப தோஷம்
ஜாதகத்தில்
ஒருவருக்கு ராகு கேது கிரகங்களுக்கிடையே மற்ற கிரகங்கள் இருப்பின் கால சர்ப்ப தோஷம்
ஏற்படுகிறது. இவர்களுக்குத் திருமண தடை ஏற்பட்டு வயது 35 வரை வாழ்க்கையில் முன்னேற்றம்
இருக்காது. இந்த ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்வில் பல இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும்.முன்கோபம்
அதிகம் கொண்டவராகவும் இருப்பார். விபத்து, இழப்புகள் ஏற்படும் அமைப்பும், மன அமைதி
அற்ற நிலை இருக்கும்
தொழில்,
உத்தியோகத்தில் பிரச்னைகள் ஏற்படும். இளம் வயதில் துன்பங்களும், தொல்லைகளும் சந்திக்க
வேண்டி இருக்கும்.
தொழில்
தொடங்கினாலும் அதில் பெரிய லாபமோ, முன்னேற்றமோ இருக்காது.குழந்தை செல்வம் உண்டாகாது.
அல்லது கால தாமதம் ஏற்படும்.நண்பர்களால் ஏமாற்றம் ஏற்படும்.
எதிரிகளால்
தொல்லையும், வம்பு வழக்கை சந்திக்க வேண்டி வரும் ஒரு சிலருக்கு ஏற்படும்.
இவர்களுக்குத்
திருமண தடை ஏற்பட்டு வயது 35 வரை வாழ்க்கையை வீணடிப்பார்கள்.
1.திருமணம்
ப்ராதம் நகர்ந்து கொண்டே இருக்கும்.
2.
எந்த ஒரு வேலையும் மிகவும் சிரம்மம் கொண்டு முடிக்க வேண்டும் .
3.
நோயின் அறிகுறிகள் கண்டறிய முடியாது.
4.
நம்முடைய உழைப்பு பிறருக்கு உயர்வு தரும்.
5.
குழந்தை பிறப்பு இருக்காது.
6.
சிலருக்கு, ஆண் மட்டுமே அல்லது பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும்.
7.
சிலருக்கு; தலை, முதுகு, கால்கள் பலமற்று இருக்கும்.
8.அதிர்ஷ்டம்,
தரித்தரம், இவைகள் ஏற்படுவது இதனால் தான்.
9.
போதை, களிப்பாட்டம், இவைகள் தான் வாழ்க்கை என்று இருப்பர்.
10.
மன நலம் பாதிப்பு, மாந்த்ரிக பழக்கம், தொல்லைகள் இருக்கும் அல்லது உண்டாகும்
கால
சர்ப்ப தோஷம் 12 வகைகள் -
சர்ப்ப
கிரகங்களான ராகு கேது அமைந்திருக்கும் வீடுகளைப் பொருத்து வகைப்படுத்தப்படுகிறது.
1. அனந்த கால சர்ப்ப தோஷம் :
ராகு
முதல் வீட்டிலும் (லக்கினத்தில்), கேது 7ம் இடத்திலும் இருப்பதால் அனந்த கால சர்ப்ப
தோஷம் ஏற்படுகிறது. இதற்கு விபரீத கால சர்ப்ப தோஷம் என்பார்கள்.
இந்த
ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு வாழ்வில் பல இடையூறுகள், துன்பங்கள் ஏற்படும். இவர்கள்
பல பிரச்னைகளுக்கு மத்தியில் தன் சொந்த முயற்சியால் வாழ்வில் முன்னுக்கு வருவார்கள்.
இவர்களுக்கு திருமண தாமதம் ஏற்படும்.
4. குளிகை சர்ப்ப தோஷம் -
ராகு
2ம் இடத்திலும் கேது 8லும் இருப்பவர்கள் உடல் நல பிரச்சினைகளால் வாழ்நாள் முழுவதும்
பாதிக்கப்படுவார்கள். அதோடு விபத்து, இழப்புகள் ஏற்படும் அமைப்பும், மன அமைதி அற்ற
நிலை இருக்கும்.
பொருளாதார
பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்.
5. வாசுகி சர்ப்ப தோஷம் -
ராகு
3லும், கேது 9ம் இடத்திலும் அமையப்பெற்றிருப்பின் வாசுகி சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால்
தொழில், உத்தியோகத்தில் பிரச்னைகள் ஏற்படும். இளம் வயதில் துன்பங்களும், தொல்லைகளும்
சந்திக்க வேண்டி இருக்கும்
6. சங்கல்ப சர்ப்ப தோஷம் -
ராகு
4ம் இடத்திலும், கேது 10ம் இடத்தில் அமையப்பெற்றிருந்தால் அவர்களுக்கு வேலை வாய்ப்பு
அமைவதில் சிக்கல் ஏற்படும். வேலை கிடைத்தாலும் அதில் சாதிக்க முடியாமல், நிலை தன்மை
இல்லாமல் இருக்கும். தொழில் தொடங்கினாலும் அதில் பெரிய லாபமோ, முன்னேற்றமோ இருக்காது.
7. பத்ம சர்ப்ப தோஷம் -
ராகு
5ம் இடத்திலும், கேது 11ம் இடத்தில் அமைந்திருந்தால் குழந்தை செல்வம் உண்டாகாது. அல்லது
கால தாமதம் ஏற்படும்.
சோதனைக்
குழாய் குழந்தை முயற்சியை மேற்கொண்டாலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படும்.
பேய்,
பிசாசுகளின் தொல்லை ஏற்படும். நண்பர்களால் ஏமாற்றமும், வாழ்நாள் முழுவதும் நோய் பாதிப்பு
ஏற்படக் கூடும்
8. மகா பத்ம சர்ப்ப தோஷம் -
ராகு
6லும் கேது 12ல் இருக்கப் பெற்றால் மகா பத்ம சர்ப்ப தோஷம் ஏற்படலாம். இதனால் வாழ்நாள்
முழுவதும் அமைதியற்ற நிலை இருக்கும். பல இடையூறுகள் ஏற்படக் கூடிய சூழல் இருக்கும்.
6ம் இடத்தில் ஏதேனும் ஒரு கோள் இருப்பின் அதைப் பொறுத்து அவருக்கு உடல் நலம் மேம்படுவதும்,
எதிரிகளின் தொல்லையிலிருந்து விடுபடும் அமைப்பு இருக்கும்.
9. தக்ஷக சர்ப்ப தோஷம் -
கேது
லக்கினத்திலும், ராகு 7ம் இடத்தில் அமையப்பெற்றவர்கள் அவசர கதியில் செயல்களை செய்வார்கள்.
முன் யோசனை செய்யமாட்டார்கள். வரும் செல்வம் முழுவதும் மது, மாதுக்காக அதிகம் செலவு
செய்பவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு
திருமணமானாலும் பல பிரச்னைகள் இருக்கும் அதனால் மன அமைதியில்லாமல் தவிப்பார்கள்.
10. கார் கோடக சர்ப்ப தோஷம் -
ராகு
8ம் இடத்திலும், கேது 2ம் இடத்திலும் அமைந்தால் கார் கோடக சர்ப்ப தோஷம் ஏற்படக்கூடும்.
அவர்களுக்கு தந்தை வழி சொத்துக்கள் இருந்தாலும் கிடைக்க வாய்ப்பில்லை. உறவினர்கள்.
நண்பர்கள் பகையாக மாற வாய்ப்புள்ளது.
2.
சங்க சூட கால சர்ப்ப தோஷம் -
ராகு
9ம் இடத்திலும், 3ல் கேதுவும் இருக்கும் இந்த ஜாதகத்தினர் பொய்களை அதிகம் பேசுவார்கள்.
முன்கோபம் அதிகம் கொண்டவராகவும், அதிக துன்பங்களை அனுபவிக்கக் கூடிய சூழலும், ஏற்றத்தாழ்வுகளைச்
சந்திக்க வேண்டி வரும்.
3. கடக சர்ப்ப தோஷம் -
ராகு
10ம் வீட்டிலும், கேது 4ல் அமையப்பெற்ற இவர்களுக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படும். அதோடு
அரசால் தண்டனைப் பெறுவார்கள்.
10ல்
ராகு இருக்கப்பெற்றவர்கள் இருட்டு தொடர்பான தொழில் அமையும். அதாவது புகைப்படம், எக்ஸ்ரே
போன்ற வேலையை செய்வார்கள். சட்டத்திற்கு எதிரான வேலையை செய்வார்கள். இவர்கள் அரசுக்கு
எதிராகவும், வாழ்வில் மன அமைதி இன்று வாழநேரிடும்.
11. விஷ் தார சர்ப்ப தோஷம் -
ராகு
11ம் இடத்தில் அமைந்து கேது 5ல் அமைந்தால் விஷ் தார சர்ப்ப தோஷம் ஏற்படும். இதனால்
திருமணம் நடந்தாலும் அவர்கள் குடும்பத்துடன் வாழாலும், அடிக்கடி வெளியூர், வெளிநாடு
பயணம் செய்வார்கள். குழந்தைகள் பிறந்தாலும் அவர்களால் துன்பமும், அவப்பெயரும் ஏற்படும்.
வாழ்வின்
பிற்பகுதியான 50 வயதைக் கடந்த பின் நல்ல வாழ்வு கிடைக்கும்
12. சேஷ நாக சர்ப்ப தோஷம் -
ராகு 12ல் அமர்ந்து, கேது 6ம் இடத்தில் இருப்பின்
சேஷ நாக சர்ப்ப தோஷம் உண்டாகும். இவர்கள் கொடிய நோய்க்கு ஆளாவார்கள். எதிரிகளால் தொல்லையும்,
வம்பு வழக்கை சந்திக்க வேண்டி வரும்.
கால்
சர்ப்ப தோஷம் இருக்கக்கூடிய காலம் -
அனந்த்
- 27 வயது
குளிகா
- 33 வயது
வாசுகி
- 36 வயது
சங்கலப
- 42 வயது
பத்மா
- 48 வயது
மகா
பத்மா - 54 வயது
பரிகாரம்
சர்ப்பதோஷ
முள்ளவர் கள் பாம்பு புற்றிற்கு மஞ்சள் பூசி குங்கும பொட்டு வைத்து எலுமிச்சையை புற்றின்
மீது வைத்து புற்றினுள் பால்விட்டு மூன்று முறை வலம் வர வேண்டும். நாகபஞ்சமி அன்று
மட்டும் 9 முறை வலம் வர வேண்டும். குடும்பநலம், மகப்பேறு, சிரமமில்லாத பிரசவம் உண்டாகும்.
ராகு-கேது தசை நடப்பில் உள்ளவர்கள் நோய் நீங்க இந்த வழிபாடு செய்ய வேண்டும்.
பரிகாரம்
கோயில்
ஸ்ரீகாளஹஸ்தி
சென்று அங்கு கோவில் கொண்டிருக்கும் அருள்மிகு ஞான பூங்கோதையம்மை உடனுறை அருள்மிகு
காளஸ்தீஸ்வரரை வணங்கி வழிபட்டு வர நிம்மதி கிடைக்கும்
ஸ்ரீகாளஹஸ்தி
கோயிலில் சர்ப்ப சாந்தி பூஜை தினமும் நடை பெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு கால வேளையில்
சர்ப்ப சாந்தி பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் சர்ப்ப தோஷம் நீங்கி வாழ்வில் வெற்றி
உண்டாம்.
திருப்பாம்புரத்தில்
ராகு மற்றும் கேதுவிற்கு எப்படி பரிஹாரம் செய்வது எப்படி ?
ஜாதகத்தில் கால சர்ப்ப
தோஷம் இருந்தால், 18 ஆண்டு ராகு தசை நடந்தால், 7 ஆண்டு கேது தசை நடந்தால், லக்கினத்திற்கு
2-ல் ராகுவோ கேதுவோ இருந்து லக்னத்திற்கு 8-ல் கேதுவோ ராகுவோ இருந்தால், ராகு புக்தி,
கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம் புத்திர தோஷம் இருந்தா ல் திருமணம் தடைப்பட் டால்,
கனவில் அடிக்கடி பாம்பு வந்தால், பாம்பை அடித்திருந்தால் கடன் தொல்லை இருந்தால் இத்தலத்
திற்கு வந்து ராகு, கேது பகவானை வழிபட்டு பரிகாரம் செய்வது அவசியம்.
ராகு-கேது தோஷ நிவர்த்தி
ராகு-கேது தோஷ நிவர்த்தி
பரிகாரம் செய்து கொள்ள விரும்புபவர்கள் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு
காலத்தில் திருப்பாம்புரம் கோவிலுக்கு வந்து ஆதிசேஷன் தீர்த்தத்தில் நீராடி, விளக்கு
ஏற்ற வேண்டும். சுவாமி, அம்பாளுக்கு தங்கள் பெயரில் அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.
அர்ச்சனை
சர்ப்ப தோஷம் உள்ளவர்கள்
திரும்பாம்புரத்தில் ராகு, கேது சன்னிதியில் அமர்ந்து பூவும், குங்குமமும் வைத்து அர்ச்சனை
செய்து கொள்ள வேண்டும். பின்னர் அதனை வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து
48 நாட்கள் பூஜை செய்ய வேண்டும். பிரார்த்தனை நிறைவேறியதும் மஞ்சள் துணியில் வைத்து
எடுத்து வந்து அதை கோவில் உண்டியலில் போட வேண்டும்.
முன்புதிவு
பரிகாரம் செய்ய விரும்புவோர்
ஆலய அலுவலகத்தில் முன்புதிவு செய்ய வேண்டும்.பரிகாரம் செய்ய செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்
கிழமைகளில் காலை நேரம் உகந்தது.
எப்படி செல்வது
?
மயிலாடுதுறையில் இருந்து
திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது பேரளம் என்ற ஊர். இங்கிருந்து மேற்கே 7 கிலோமீட்டர்
தூரம் சென்றால், திருப்பாம்பு ரத்தை அடையலாம். கும்பகோ ணத்தில் இருந்து காரைக்கால்
செல்லும் சாலையில் கற்கத்தி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து தெற்கே 2 கிலோமீட்டர் சென்றா
லும் திருப்பாம்புரம் திருத்தலத்தை அடைய முடியும். பேரளம் மற்றும் கற்கத்தியில் இருந்து
திருபாம்புரம் செல்ல ஆட்டோ வசதி உள்ளது,
சிவலிங்கம் - கலா சர்ப
தோஷத்திலிருந்து நிவாரணம் பெற சிவ லிங்க வழிபாடு அவசியம்.
ஒரு கோவில் அல்லது ஒரு மத நிறுவனத்திற்குப் பால்
தானம் செய்யுங்கள்.
இதற்கிடையில், ஒவ்வொரு நாளும் சுமார் அரை மணி
நேரம் இறைவனை தியானியுங்கள்.
ராகுவின் ஆளும் தெய்வங்களான சிவன் மற்றும் பார்வதியை
வணங்குங்கள்.
வீட்டில் கல் அல்லது உலோகத்தால் ஆன ஒரு சிறிய
சிவ லிங்க சிலையை வாங்கி வைத்து, ஒவ்வொரு நாளும் ஒரு சிவலிங்கத்தின் முன் “ஓம் நமசிவாய” என்று 108 முறை ஜெபியுங்கள்.
12 ஜோதிர்லிங்க க்ஷேத்திரங்களில் ஏதேனும் ஒன்றிற்குச்
சென்று இறைவனை மனதார வழிபட்டு வாருங்கள்.
ஒவ்வொரு நாளும் 108 காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கவும்
காயத்திரி மந்திரம்:
ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்|
வீட்டில் ஒரு சிறிய நாக ராஜ வெள்ளி சிலை வைத்து
ஒவ்வொரு நாளும் சிறிய பூஜை செய்யுங்கள்.
1. கர்நாடகாவில் உள்ள குக்கே ஸ்ரீ சுப்ரமண்ய
கோயில்
2. ஆந்திராவில் உள்ள கால ஹஸ்தி கோயில்
3. தமிழகத்தில் உள்ள திருநாகேஸ்வர போன்ற கோயிலுக்கு
சென்று சர்ப சம்காரம் நிவர்த்தி பூஜை செய்யவும்.
பரிஹாரம் - சர்ப்ப சாந்தி கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். கோமேதகம் மற்றும் வைடூரியம் மோதிரம் கையில் வாழ்வு நாள் முழுதும் கட்டாயம் அணிய வேண்டும்
பேரையூர் நாகநாத ஸ்வாமி
கோயில்
புதுக்கோட்டை-பொன்னமராவதி சாலையில் புதுக்கோட்டையில் இருந்து 12 கிமீ தொலைவில்
அமைந்துள்ள இக்கோயில் தமிழகத்தில் உள்ள நாகர் கோயில்களில் குறிப்பிடத்தக்க கோயிலாகும்
நாகப்பிரதிஷ்டை செய்து
நன்மக்கட் பேறு பெற்றோர் ஏராளம். நாகதோஷத்தால் தடைபட்டு வந்த திருமணங்கள் பல, நாகநாதனைத்
தொழுதபின் மனமகிழ் புதுமண வாழ்க்கையாக மாறியிருக்கின்றன. நாகநாதருக்கு பாலபிஷேகம் செய்தால்,
பால், வெளிர்நீல நிறமாக மாறிவிடும் அற்புதமும் நிகழ்கிறது!
தினமும் நான்குகால பூஜை நடைபெறுகிறது. காலை 7.30 முதல் 12.00 மணிவரையும், மாலை
5.00 முதல் இரவு 7.30 மணி வரையும் கோயில் திறந்திருக்கிறது. செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில்
மக்கள் அதிக அளவில் வந்து எலுமிச்சை, தேங்காய், பூசணி ஆகியவற்றில் தீபம் போட்டு நேர்ந்து
கொள்வதும், திருமண நிச்சயம், குழந்தை வரம், தாலி பாக்கியம் ஆகியவை பெற்றவர்கள் காணிக்கை
செலுத்திவிட்டுச் செல்வதும் வழக்கத்தில் உள்ளன. அமாவாசை, பௌர்ணமி நாட்களில் வழிபடுவோருக்கு
பித்ருதோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள சுனையில் நீர்மட்டம்
குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக்குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில்
நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற
நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்லை.
நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்தால் பால் நீல நிறமாக மாறுகிறது
No comments:
Post a Comment