Search This Blog

Sunday, May 1, 2022

ஜாதகத்தில் கோடீஸ்வர யோகம் என்பது உண்மையா அல்லது பொய்யா ?குரு கேது இணைவு ...


குரு கேது இணைவு கோடீஸ்வர யோகம்

. குருவும் - கேதுவும் கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம்.

நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்;

குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர். குரு-கேது பார்வை, குரு-கேது பார்வை சாரபரிவர்த்தனை,

குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும்.

குருவும்-கேதுவும் சேர்ந்து இருந்து, குருவிற்கு ஒன்பதாம் வீட்டில் புதனும் சுக்கிரனும் இருந்தாலும் அல்லது இருவரில் ஒருவர் இருந்தாலும் அந்த ஜாதகர் அவரவர் பூர்வ கர்ம பிராப்தத்திற்கு ஏற்ப மிகப்பெரிய ராஜயோக பலன்களை அனுபவிப்பார்.

ஆன்மிக விஷயங்களில் ஈடுபாடு, கோயில் கட்டுதல், கும்பாபிஷேகம் செய்தல், பெரிய தர்ம ஸ்தாபனம் அமைக்கும் பாக்யத்தை ஏற்படுத்துவார். சங்கீதம், பாட்டு, இயல், இசை, திரைப்படத் துறையில் யோகத்தை தருவார்.

 சிறந்த மருத்துவ நிபுணர்களை உருவாக்கும் வல்லமை குரு-கேதுவுக்கு உண்டு.

ட்விட்டர் விற்பனை

44 பில்லியன் டாலருக்கு எலன்  மஸ்க்கிடம் விற்க ட்விட்டர் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால்  இது குறித்து பராக் அகர்வால் கூறியது என்னவென்றால் ‘‘ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தின் எதிர்காலம் நிச்சயமற்றது. ட்விட்டர் கைமாறும் நிலையில் அது எந்த திசையில் செல்லும் என்று எங்களுக்குத் தெரியாது. 2011ஆம் ஆண்டு அக்டோபரில் ட்விட்டரில் விளம்பரப் பொறியாளராகச் சேர்ந்தார். விரைவில் அந்நிறுவனத்தின் 'சிறந்த மென்பொருள் பொறியாளர்' என்ற இடத்தைப் பிடித்தார். 2018இல் தனது தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக பராக் அக்ரவாலை ட்விட்டர் தலைமை நியமித்தது

 

எலன்  மஸ்க்டிம் ட்விட்டர் நிறுவனம் கைமாறும் பொழுது பராக் அகர்வால் வேலையிலிருந்து நீக்க பட்டால் அவருக்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூபாய் 300 கோடி இழப்பீடு தொகையாக கொடுக்க படும்.

 

இவ்வளவு பெரிய தொகை ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் குருவும் கேதுவும் இணைந்து கோடீஸ்வர யோகம் அமைந்து இருக்கும் என்பதை ஆணித்தரமாக அடித்து சொல்லலாம்.  18 ரிஷிகளால் சொல்லப்பட்ட ஜாதகம் பொய்யில்லை


No comments:

Post a Comment