கிரகமாலிகா யோகம்
என்றால் என்ன?
ராகு, கேது ஆகிய இரு
கிரகங்களைத் தவிர மற்ற ஏழு கிரகங்கள் ஏழு வீடுகளில் தொடர்ச்சியாக நிற்குமானால், அதற்கு
ஜோதிடத்தில் கிரகமாலிகா யோகம் என்று பெயர்.
ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக
அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது.
லக்னத்திற்கு எந்த
இடத்தில் இருந்து கிரகம் ஆரம்பமாகிறதோ அந்த வீட்டிலிருந்து தொடர்ச்சியாக கிரகங்கள்
இருப்பது சிங்காதன
யோகம் என்றும் அழைக்கப்படும் .இதனால் ஜாதகரின் வாழ்க்கையில்
சகல சம்பத்துக்களும் கிடைக்க பெறும்.
வருகிற 2-7-2022 முதல் 3-08-2022 வரை சனி ,குரு ,செவ்வாய் ,
சுக்கிரன் ,புதன் , சந்திரன் ஆகிய 6 கிரஹங்களும் தங்கள் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று
மிகவும் யோகமான கிரஹமாலிகா யோகம்
ஏற்படுகிறது.
ஜோதிடத்தில் நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படும் ஏற்படும் அறிய நிகழ்வு இது ஆகும்.
இந்த கால கட்டத்தில் பிறக்கும் குழந்தைகள் ராஜ யோகத்தை கிரஹ மாலிகா யோகத்தினால் பெறுவார்கள்.
மேலும் இந்த கால கட்டத்தில் செய்யப்படும் முறையான வேண்டுதல்கள் அபரிதமான பலன்கள் உண்டு
என்று சொலிகிறது சாஸ்த்திரம்.
கிரகங்கள் அனைத்தும் மற்றவற்றுடன் இணையாமல், சுயத் தன்மையுடன்
செயல்படும்போது, கூட்டுபலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகமே ஒரு உயரிய
தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பிக்கும். இது கிரகமாலிகா யோகத்தில்
மட்டுமே சாத்தியமாகும்.
இந்த யோகத்தின்படி பெரும்பான்மை கிரகங்கள் ஒன்றுடன்
ஒன்று இணைந்து அஸ்தமனம், கிரகயுத்தம் போன்று பலவீனங்களை அடையாது.
இந்த யோகத்தைப் பெற்றவர்கள், தங்களின் வாழ்வில் பேரும்,
புகழும், வசதிகள் நிரம்பியவராகவும், உயர்ந்த பதவி, அந்தஸ்துடன் வாழ்வார்கள்.
கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று இணையாமல் வரிசையாக அமர்வதே இந்த
யோகத்தின் சிறப்பு.
எந்த பாவகத்தில்
இருந்து எந்த பாவகம் வரை கிரகங்கள் வரிசையாக அமைந்திருந்தால் அது யோகத்தைக் கொடுக்கும்
என்பதும் ஒன்று. அதன்படி மனிதனுக்கு தேவையற்ற விஷயங்களைக் கொடுக்கும் ஆறு, எட்டு, பன்னிரெண்டாம் பாவகங்களில் தொடங்கி இந்த யோகம் அமையுமானால், அது நன்மைகளைச் செய்வதில்லை.
ஜாதகருக்கு நல்லவைகளை மட்டுமே தரக்கூடிய கேந்திர, திரிகோணங்களில் இருந்து, இந்த யோகம் அமையுமானால் மிகப்பெரிய நன்மைகளைத் தருகிறது.
அஸ்திர யோகம் ஹர்ஷ
யோகம்
6ம் அதிபதியான சனி 6ல் ஆட்சி பெற்று காணப்படுவதால் ஆறாவது
வீடு- மற்றும் ஆறுக்குடையவனும் , ஆறாமிடத்தில் இருந்தால் அஸ்திர யோகம் ஹர்ஷ யோகம் என்று அழைக்க படுகிறது.
எதிரியை வெல்வான்
வலிமை . தீய எண்ணம் உள்ளவர், சாகசமாகக் காரியங்களைச் செய்து வெற்றி பெறக் கூடியவராகவும்
, எதிரிகளை தோற்றோடச் செய்பவராகவும் , தேகத்திடம் , மனோதிடம் , வாக்குதிடம் உள்ளவராகவும்
ஜாதகர் இருப்பர்.
ஹம்ச யோகம்
7ம் அதிபதி குரு 7ல் ஆட்சி பெற்று காணப்படுவது பஞ்ச மகா புருஷ
யோகங்களில் ஒன்றான ஹம்ச யோகத்தை தருகிறது.
ஹம்ஸ யோகம்: ஜாதகத்தில்
குரு லக்னத்துக்கு கேந்திரம் எனப்படும்
4,7,10 -ம் இடத்திலிருந்து, குரு உச்ச பலம் பெற்று நின்றால், இந்த யோகம் ஏற்படும். நல்ல நீதிமானாக இருப்பார். இவர் சொல்லும் வார்த்தைகளுக்கு
மக்களிடம் மதிப்பு இருக்கும்.
ஏழாம் வீடு காம யோகம்
ஏழாமிடமும் , ஏழுக்குடையவன்
பலன் பெற்றிருந்தால் மனைவியால் நிறைவு பெற்ற வாழ்க்கை அடைந்தவராகவும் , எப்போதும் பந்துமித்திரர்களால்
சூழப்பட்டவராகவும் , தனவானாகவும் , தந்தையைவிடச் சிறந்த நிலையை டைந்தவராகவும் இருப்பர்
.நல்ல இறைம் , தந்தையை விட உயர்வு தொழில் வாபம் , அரசு சன்மானம்,ஏகதார விரதனாயிருத்தல்
யோகமுள்ள களத்தில் புத்திர பந்துப் பேறு நல்ல குணம் காமயோக பலன்களாகும்
அசுர யோகம் : லகினதிற்கு
8 ஆம் அதிபதி ஆட்சி
தன் காரியத்துலே கருத்தாக
இருப்பார் . அவப்பெயர் எடுப்பார் . மற்றவர் காரியத்தை கெடுப்பதில் வல்லவர் . கஷ்டங்களையே அனுபவிப்பார் .ஆயுள் பலம் , தீய குணம் , தீயசெயல்
செய்வர்கள்.
சரள யோகம்
நீண்ட ஆயள் உடையவர்கள் எதற்கும் பயம் இல்லாதவர்கள். தன்னம்பிக்கை உடையவர்கள்
. சிறந்த கல்வி மான் .எதிரிகளை வெல்லும் திறம் படைத்தவர்கள்.
ஜோதிட பாடல்
"அற்பமா வாயு
நாதன் சொச்சேத்திருச்சனாக தெற்பமாஞ் சனியுமுச்சமிருந் திடற்றீர் காயத்
தற்பெல லக்கினாதிபதிக்கு
மப்படியே அட்டமந்
தற்பரப்பானு மித்ரஞ்சமமெனு
மாயத்தானே"
(இ-ள்) 8 - ஆம் அதிபதி
ஆட்சி வீட்டிலிருந்து , (அ) உச்சம் பெற்றிருக்க,
சனியும் சுபக்கிரகங்களுடன் இணைந்து உச்சத்திலிருந்தால் தீர்க்காயுள்
பாக்யயோகம் அல்லது லட்சுமி யோகம்
ஒன்பதாம் வீட்டுக்கு ஒன்பதாம் வீட்டை பாக்கிய ஸ்தானம் அல்லது தர்மத்தின்
வீடு என்றும் அழைப்பார்கள்.
ஒன்பதாம் அதிபதி ஆட்சி உச்சம் கேந்திரம்
& கோணத்தில் இருந்தால் பாக்யயோகம் : இந்த பாக்கிய யோகத்தால் எல்லாவித நற்பாக்கியங்களும்
உண்டாகும். ஜாதகர் அதிர்ஷ்டசாலியாகத் திகழ்வார். மதிப்புடையவராவார். செல்வம் சேர்ப்பார்.
வாழ்க்கையில் உன்னதமான, ஸ்தானம் அமையப் பெறுவார். கடவுள் பக்தி, மனிதாபிமானம் அனைத்தும்
நிறையப் பெற்றிருப்பார் மிக அதிர்ஷ்டம் , புகழ் , தந்தை நலம் , பூர்வீகம் , ஆன்மிக
ஈடுபாடு , வளமான வாழ்வு அமையும் .
ஜோதிட பாடல்
"பாக்யாதி ரவியொன்பதி லேயுறப்
பதியு மந்தராசி திரமெனிலோ
பாதவமூ லாதிநிலம் ஞாதிகளால் வாதைஜெயம்
பற்றிப்பிதுர் செல்வத்தால் இருப்பார் .
(இ-ள்)
9 - ஆம் அதிபதி 9 - ல் ஆட்சி பெற்றிருக்க , அந்த வீடானது ஸ்திர ராசிகளான ரிஷபம் , சிம்மம்
, விருச்சிகம் , கும்பமானால் ஜாதகன் பிறந்த வேளையில் அவனது தந்தை தனது முன்னோர்
பத்தாவது வீடு-கியாதியோகம்
:
கியாதி என்றால் புகழ்
என்று பொருள். செல்வம், செல்வாக்கு, வாழ்க்கையில் உயர்நிலையை அடைதல், நாடாளும் தகுதியும்,
நிர்வாகம் செய்யும் ஆற்றலும் ஏற்படும். புனிதப் பணிகளில் ஈடுபடுவார். நல்ல கல்வி அறிவும்,
திறனும் அடைவார். சிறப்பான புகழ் , உயர்பதவி , அரசு சன்மானம் கிடைக்கும்.
பதினொன்றாவது வீடு- சுபரிஜதா யோகம்
:
வரவதிகம் , செல்வம் அடைவார்கள் .
ஜோதிட பாடல்
"லாபதி யுச்சனாய்ப் புங்கவர் மத்தியம்
நண்ணிட லாபத்திற் சுபரிருக்க
நஞ்சாதிகள் பஞ்சாதியில் செஞ்சாலியில் துஞ்சாததி
லாபமா மெத்தொழி ஊதியமே
(இ-ள்) 11 - ஆம் அதிபதி வசம் பெற்றிருக்க , குரு
இணைத்திருக்கால் கபர்கள் இருக்க நன்செய் , புன்செய் பயிர்கள் , விவசாயத் தொழில்கள்
முதல் எல்லா தொழிலையும் செய்து பெரும் லாபம் குவிப்பார்கள் . அதிக செல்வம் அடைவார்கள்
.
லக்ன மாலிகா யோகம்
7 கிரகங்களும் லக்கினத்திலிருந்து ஆரம்பித்து வரிசையாக 7
வீடுகளில் இருந்தால் லக்ன மாலிகா யோகமெனப் பெயர். இவ்வாறு அமைய பெற்றவர்கள் வாழ்க்கையில்
உயர்ந்த பதவி வகிப்பர். பண வசதி நன்றாக இருக்கும். இவர்களுக்கு அரசாளும் யோகம் அமைகிறது.
தன மாலிகா யோகம்
அதே போல 2-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால்
அதற்குத் தன மாலிகா யோகம் என்று பெயர். இந்த யோகமிருந்தால் பண வசதி நன்றாக இருக்கும்.
இவர்கள் லட்சாதிபதி ஆவார்கள்.
விக்கிரம மாலிகா
யோகம்
3-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு
விக்கிரம் மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் மிகுந்த தைரியசாலியாக இருப்பார்கள். மேலும்
தலைமை தாங்கும் குணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். இவர்கள் தான தர்மம் அதிகம் செய்வார்கள்.
சுக மாலிகா யோகம்
4-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு
சுக மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் தர்ம சிந்தனை உள்ளவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில்
பல வித சுகங்களை அனுபவிப்பார்கள். மேலும் தான, தர்மம் செய்வதில் அதிக விருப்பம் உள்ளவர்களாக
இருப்பார்கள்
புத்திர மாலிகா யோகம்
5-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக இருந்தால்
அதற்கு புத்திர மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் தெய்வ நம்பிக்கை அதிகம் கொண்டவர்களாக
இருப்பார்கள். மேலும் புகழ் வாய்ந்தவராகவும் இருப்பார்கள்.
சத்ரு மாலிகா யோகம்
6-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக இருந்தால்
அதற்கு சத்ரு மாலிகா யோகம் என்று பெயர். இவர்கள் மிகுந்த பேராசை குணம் கொண்டவர்களாக
இருப்பார்கள். மேலும் பணம் சம்பாதிக்க மிகுந்த கஷ்டப்படுவார்கள்.
களத்திர மாலிகா யோகம்
7-ம் வீட்டிலிருந்து ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக அமைய
பெற்றிருந்தால் அதற்கு களத்திர மாலிகா யோகம் என்று. இவர்களுக்கு பெண்கள் மேல் அதிக
மோகம் இருக்கும். மேலும் பதவி மேலும் மோகமிருக்கும். பெண்களை வைத்து தொழில் நடத்தி
லாபம் பெறுவார்கள்.
அஷ்டமா மாலிகா யோகம்
8-ம் வீட்டிலிருந்து
ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு அஷ்டமா மாலிகா யோகம் என்று பெயர். அதன்படி இந்த
யோகத்தில் பிறந்தவர்கள் மிகவும் ஏழ்மையானவராக இருப்பார். மனைவிக்குக் கீழ்ப்படிந்தவராகவும்
இருப்பார்.
பாக்கிய மாலிகா யோகம்
9-ம் வீட்டிலிருந்து
ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு பாக்கிய மாலிகா யோகம் என்று பெயர். இவர்களுக்கு
மிகவும் வசதியான வாழ்க்கை கிடைக்கும். தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும்.
கர்ம மாலிகா யோகம்
10-ம் வீட்டிலிருந்து
ஆரம்பித்து வரிசையாக இருந்தால் அதற்கு கர்ம மாலிகா யோகம் என்று பெயர். இவர்களுக்கு
நல்ல மதிப்பான வாழ்க்கை அமையும். எடுக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
லாப் மாலிகா யோகம்
11-ம் வீட்டிலிருந்து
ஆரம்பித்து 7 கிரகங்களும் வரிசையாக அமைந்திருந்தால் அதற்கு லாப் மாலிகா யோகம் என்று
பெயர். இவர்களுக்கு எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நல்ல திறமைசாலிகள்.
விரய மாலிகா யோகம்
12-ம் வீட்டிலிருந்து
ஆரம்பித்து 7 கிரகமும் வரிசையாக இருந்தால் விரய மாலிகா யோகம் என்று பெயர். வாங்கும்
பொருள்களை லாபமான விலைக்கு வாங்குவர். நல்ல விதத்தில் பணத்தை முதலீடு செய்வர். இவர்கள்
அனைவராலும் போற்றபடுவார்கள்.
No comments:
Post a Comment